Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

print
ல யுகங்கள் கண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கும் தமிழர்க்கும் உண்டு. ஆனால் சில நூறு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லை. அவற்றில் ஒன்று தான் ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவது. நாம் உண்மையில் கொண்டாடவேண்டியது தமிழ்ப் புத்தாண்டு தான். நாளை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு.

இதையொட்டி தமிழகத்தில் முருகனின் சில குறிப்பிட்ட தலங்களில் பின்பற்றப்படும் அருமையான நடைமுறை ஒன்றைப் பற்றி பார்ப்போம். தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒரு நல்ல விஷயத்தை உங்கள் மனதில் பதியவைக்கவேண்டி நாம் அளிக்கும் சிறப்பு பதிவு இது.

Vallimalai 4

நேற்று நாம் (ஞாயிறு 12/04/2015) வள்ளிமலைக்கு திடீர் பயணம். ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய தினம் வள்ளிமலையில் படி உற்சவம் நடைபெறும். வள்ளிமலை என்பது வள்ளி பிறந்த இடம். வேலூரிலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது வள்ளிமலை. முருகன் வள்ளியை மணம் புரிந்த இடம் வள்ளிமலை. முருகப் பெருமானின் திருப்பாதம் அதிகம் தோய்ந்த இடங்களுள் வள்ளிமலையும் ஒன்று. இந்துக்கள் அனைவரும் குறிப்பாக முருகனடியார்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் வள்ளிமலையை சென்று காணவேண்டும் என்பது வாரியார் ஸ்வாமிகள் வாக்காகும்.

Vallimalai Subramaniya Swamy
வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, வள்ளிமலை

ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளும், தமிழ் புத்தாண்டுக்கும் முந்தைய தினமும் (ஏப்ரல் 13) வள்ளிமலையில் படி உற்சவம் நடைபெறும்.

Vallimalai 2
நேற்று மாலை (12/04) நடைபெற்ற கதிரேச ஓதுவார் அவர்களின் திருப்புகழ் கச்சேரி

Vallimalai 3

படி உற்சவம் என்றால் என்ன?

மலையை சுற்றி திருப்புகழை பாடிக்கொண்டே கிரிவலம் வந்து பின்னர் அடிவாரத்தில் முதல் படியில் துவங்கி மலையில் உள்ள ஒவ்வொரு படிக்கும் கற்பூரம் ஏற்றி, தாம்பூலங்கள் வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு திருப்புகழை பாடிக்கொண்டே மலை மீது ஏறுவார்கள். மலையுச்சியில் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமியை சென்று தரிசிப்பார்கள். இது தான் படி உற்சவம்.

இந்த படி உற்சவம் வள்ளிமலை மட்டுமல்லாது அறுபடை வீடுகளிலும் பிற்பாடு பிரபலமாகியது. நமக்கு இதை அறிமுகப்படுத்தியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், பிரபலப்படுத்தியது கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

தை மாதம் நடைபெற்ற படி உற்சவத்திலும், இன்று பங்குனி 30 – வருடத்தின் கடைசி நாள் – நடைபெற்ற படி உற்சவத்திலும் கலந்துகொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. நேற்றைக்கு மதியம் வேலூர் புறப்பட்டு சென்றோம். நண்பர் ராகேஷ் உடன் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து வள்ளிமலைக்கு பயணம். நேற்றிரவு வள்ளிமலையில் தங்கி, காலை சீக்கிரம் எழுந்து நீராடிவிட்டு படி உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை சென்னை திரும்பினோம். (தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்டவைகளை பற்றி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விரிவாக சொல்கிறோம்.)

சென்னை திரும்பியவுடன் நேரே அலுவலகம் வந்துவிட்டோம். பின்னர் இந்த பதிவு தயார் செய்து அளிக்கப்பட்டது.

===============================================================

படி உற்சவம் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. அது பற்றி பார்ப்போம்.

அந்த துரைக்கு பதில் இந்த துரையை பாருங்க!

ழனியில் கல்லுக்கட்டி சாமியார் என்று அழைக்கப்பட்ட கணபதி சுவாமிகள் என்ற ஒருவர் இருந்தார். அவரோடு மைசூர் அரண்மனையில் சமையற்காரராக வேலை பார்த்த ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்செயலாக ஒரு நாள் கல்லுக்கட்டி சாமிகள் திருப்புகழை பாடும்போது அதை இந்த சமையற்காரர் கேட்டார். மெய்மறந்தார். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்த சமையற்காரர் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.

சமையற்காரரின் சொந்த ஊர் திருச்செங்கோடு. ஆனால் மைசூருக்கு பல ஆண்டுகள் முன்பே சென்றுவிட்ட குடும்பம். அரண்மனை சமையற்காரர் என்றால் சும்மாவா? கைநிறைய பொருளை சம்பாதித்தபோதும் அதில் ஏனோ மனநிறைவு ஏற்படவில்லை. அப்படியே புறப்பட்டு பழனி வந்தவர் கணபதி சுவாமிகளிடம் திருப்புகழ் கேட்டார். திருப்புகழின் சந்தமும், ஓசை நயமும் கருத்துக்களும் பொருட்செறிவும் அவரை கவர்ந்தன. திருப்புகழுக்கு அடிமையானார்.

அதை தாம் அனுபவிப்பதிலும் பிறரை அனுபவிக்கச் செய்வதிலும் நிபுணரானர். பழநியிலிருந்து திருவண்ணாமலை வந்து, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளைச் சந்தித்து பின்பு வள்ளிமலையை அடைந்தார். பின்பு மலைமேல் ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வள்ளிமலை சுவாமிகளாக அங்கேயே தங்கிவிட்டார். அங்குள்ள மக்களுக்கு திருப்புகழ் பாடல்களைக் கற்பித்து வந்தார். மலைமேல் பொங்கி அம்மனுக்கு கோயில் ஒன்றும் அமைத்து வழிபட்டு வந்தார். 1950ஆம் ஆண்டு ஆஸ்ரமக் குகையில் மகா சமாதி வாய்க்கப் பெற்றார்.

வள்ளிமலை ஸ்வாமிகளை பலர் காணச் சென்றனர். திருப்புகழின் வீச்சு அவரது பேச்சால் பரவத் தொடங்கியது. வரும் அனைவருக்கும் உணவளித்தார். இதன்பொருட்டு 20 க்கும் மேற்ப்பட்ட கறவை பசுக்களை வாங்கினார்.

எப்போதும் கூட்டம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதிகாரிகள் பலர் வரத்தொடங்கினர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டம் அதிகமில்லை. சுவாமிகள் ஏன் என்று கேட்டார். அன்று ஜனவரி ஒன்று. ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் அனைவரும் தங்கள் மேலதிகாரியை பார்க்கச் சென்றுவிடுவர் என்று பதில் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புது வருடப் பிறப்பன்று அரசுப் பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகளை பழங்கள் மாலைகளுடன் சந்திப்பது வழக்கம்.

“எல்லோருக்கும் மேலதிகாரி முருகன் அல்லவா? வெள்ளைக்கார துரையை எதுக்கு போய் கால்கடுக்க நின்னு சந்திக்கணும்?? அதுக்கு பதில் இந்த துரையை பாருங்க. இவனைக் கேட்டீங்கன்னா எல்லாமே கொடுப்பான். ஏன்னா இவன் ராஜதுரை!” என்று மக்களுக்கு உரைத்து இறைவனை வணங்குவதற்காக வள்ளிமலை சுவாமிகளால் 31-12-1917 மற்றும் 1-1-1918 ஆம் ஆண்டுகளில் திருத்தணித் திருப்புகழ் படித்திருவிழா ஆரம்பிக்கப்பட்டது.

Vallimalai 5

திருப்புகழ் ஓதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் பெருமாளே
பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல்
திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ் அருள்வேளே

என்ற அருணகிரிநாதர் திருத்தணித் திருப்புகழ் பாடலின்படி, இந்த படித் திருவிழாவை வள்ளிமலை சுவாமிகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

Vallimalai 6

Vallimalai 7பின்பு திருப்புகழ் மணி டி.எம். கிருஷ்ணஸ்வாமி, தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை முதலியோரால் பிரபலப்படுத்தப்பட்டு, தற்சமயம் நூற்றுக் கணக்கான சபைகள் இந்த படித் திருவிழாவில் பங்கு கொண்டு திருப்புகழ் பாடல்களைப் பாடிக்கொண்டு மலையேறி தணிகேசனைத் தரிசித்து வருகின்றனர்.

Vallimalai 9

Vallimalai 10கருவறையில் தணிகைப் பெருமான் இடக்கரத்தை தொடையில் வைத்தும் வலக்கரத்தில் வேலைத் தாங்கியும் நின்ற வண்ணமாகத் தனித்து காட்சி தருகின்றார். இவர் “ஞான சக்தீதரர்’ ஆவார். இங்கு மயிலுக்குப் பதில் யானை வாகனமாக உள்ளது. இந்த ஐராவத யானை இந்திரன் சீதனமாக வழங்கியது. இது முருகப் பெருமானை நோக்காமல் கிழக்கு (எதிர்) நோக்கிய வண்ணம் உள்ளதால் தேவலோகத்தைப் பார்த்தவாறு இருப்பதாக ஐதீகம். தென் பகுதியில் வள்ளி நாயகியும் வடபகுதியில் தேவசேனா தேவி சந்நிதிகளும் உள்ளன.

Vallimalai 11

Vallimalai 12Vallimalai 16Vallimalai 18Vallimalai 19இங்கு முருகன் திருமார்பின்மீது அணிவிக்கப்பட்ட சந்தனம் (ஸ்ரீபாதரேணு) பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் 1008 பால் குடங்கள் அபிஷேகம் நடைபெறுகிறது.

Vallimalai 15

Vallimalai 20பழநி, குன்றத்தூர், சுவாமிமலை, திருக்கழுக்குன்றம், மயிலம், சோளிங்கபுரம், ஞானமலை, குரோம்பேட்டை குமரன் குன்றம் முதலிய திருக்கோயில்களிலும் படி உற்சவம் நடைபெறுகின்றது.

வாரியார் ஸ்வாமிகள் இதை வள்ளியின் பிறப்பிடம் என்று தெளிந்து ஏற்றுக்கொண்டார். அதனால் மலையை வலம் வரும்போது கூடை நிறைய பூக்களை வைத்துக்கொண்டு அர்ச்சித்துக்கொண்டே திருப்புகழ் பாடிக்கொண்டே, கூடவே விரிவுரை சொல்லிக்கொண்டே நடப்பார்.

படிவிழா பங்குனி மாதம் கடைசி நாளன்று நடக்கும். அதாவது ஏப்ரல் 13 அன்று. 12 ஆம் தேதியே சுவாமிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வள்ளிமலைக்கு வந்துவிடுவார்கள். கச்சேரி நடக்கும். மதுரை மாரியப்ப ஸ்வாமிகள், பெங்களூர் ரமணியம்மாள், என பலரின் கச்சேரி நடக்கும். வள்ளிமலையே திமிலோகப்படும்.

Vallimalai 14

இன்று நடைபெற்ற படி உற்சவத்தில் இதே போன்று படியை வணங்கிக்கொண்டே திருப்புகழ் பாடிக்கொண்டேபடிக்கு தாம்பூலம் இட்டு, சூடம் ஏற்றிக்கொண்டே ஏறினர். நாமும் நம்முடன் வந்திருந்த நண்பர் ராகேஷும் குழுவினருடன் சேர்ந்து திருப்புகழை பாடிக்கொண்டே படி ஏறினோம்.

படி உற்சவத்தில் ஆர்வமுடன் ஒரு குழந்தை பங்கேற்று, தானும் தன்னால் இயன்ற பணியை சேர்ந்து செய்து வந்தது. பார்க்கும்போது மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது. இந்தக் காலத்தில் கூட குழந்தைகளை இப்படி படி உற்சவம் போன்ற வைபவங்களிலெல்லாம் பழக்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டோம். இந்த சுட்டிப் குழந்தையின் பெயர் பூர்ணாஸ்ரீ.

Vallimalai 17

படி உற்சவத்தை பற்றி ஒரே பதிவிலோ விளக்கமுடியாது. சென்ற தை பிறப்பின்போது நாம் கலந்துகொண்ட படி உற்சவம் குறித்து இந்த தொடரில் ஒரு பதிவு வரும். அதில் மேலும் பல சுவையான செய்திகள், கிரிவலப் புகைப்படங்கள் என பல புதிய தகவல்கள் இடம்பெறும்.

புத்தாண்டு தினத்தில் திருத்தணி அல்லது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்வோமாக!

Valli Umapathi amma

திருமுறை திருப்புகழ் சுடர்மணி திருமதி.வள்ளி உமாபதி அவர்கள்
திருமுறை திருப்புகழ் சுடர்மணி திருமதி.வள்ளி உமாபதி அவர்கள்

நாம் பங்கேற்ற இந்த படி உற்சவமானது, 67 ஆம் ஆண்டு படி உற்சவமாகும். வேலூர் வள்ளி மணாளர் திருப்புகழ் பாராயண சங்கம், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் ஆகியவை இணைந்து நடத்திய வைபவமாகும். இந்த வைபவத்தில் திருப்புகழை பாடி, படி உற்சவத்தை நடத்தி தந்தவர்களுள் ஒருவர் திருமதி.வள்ளி உமாபதி என்பவராவார். திருப்புகழும் திருமுறைகளும் பாடுவதில் வல்லவர் இவர். இவரது திருப்புகழ் இசை விருந்து நாளை மாலை 6.30 – 8.30 அளவில் சைதை காரணீஸ்வரர் கோவிலில் நடைபெறவிருக்கிறது. (ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை). இயன்றோர் காரணீஸ்வரரை தரிசித்துவிட்டு அப்படியே இந்த இசைவிருந்தையும் பருகலாம். புத்தாண்டு அன்று இதைவிட சிறப்பான ஒன்று கிடைக்குமா என்ன?

Vallimalai 21

இந்த படி உற்சவமானது இரண்டு முறை நடத்தப்படுகிறது. தை பிறக்கும்போது சில குழுவினர்களாலும், தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் சில குழுவினர்களாலும் நடத்தப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு அன்று நடத்தாமல் முந்தைய தினம் நடத்துவது ஏன் தெரியுமா?

ஆண்டு முழுதும் அருள் மாரி பொழிந்தமைக்கு அந்த குமரக்கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனி வரக்கூடிய ஆண்டை மிகச் சிறப்பானதொரு ஆண்டாக தரும்படி அவனிடம் வேண்டிக்கொள்ளவுமே தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் இந்த படி உற்சவம் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு நமது தளம் சார்பாக நமது குழுவினருடன் வள்ளிமலையில் படி உற்சவம் நடத்தவேண்டும் என்று விரும்புகிறோம். முருகப் பெருமான் அருள்புரியவேண்டும்.

Vallimalai 1
வள்ளிமலை சுப்ரமணிய சுவாமி அருட்பிரசாதம்

இந்த வார பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களுக்காக சுப்ரமணிய சுவாமி சன்னதியில் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஒவ்வொரு கோவிலிலும் சுழற்சி முறையில் ஒரு சில வாசகர்களின் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்வது வழக்கம். இங்கும் அப்படி சில வாசகர்களின் பெயர்களுக்கும் அவரது குடும்பத்தினர் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. நிச்சயம் நல்லது நடக்கும்! நல்லதே நடக்கும்!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவில் கூறியுள்ள படி இன்று அனைவரும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் முருகப் பெருமானை அவனது திருக்கோவில் நாடி தரிசிப்போம்.

===============================================================

சாதுக்கள் பசிதீர்க்கும் அருணகிரிநாதர் ஆலயம்!

வள்ளிமலை அடிவாரத்தில், ஒரு சில படிகள் ஏறியவுடன் அருணகிரிநாதருக்கு சிறிய ஆலயம் ஒன்று காணப்படுகிறது. வாரியார் ஸ்வாமிகள் இதை ஸ்தாபித்ததாக  கூறுகிறார்கள். திரும்ப வரும்போது அந்த சன்னதியில் சிறுது நேரம் செலவிட்டோம்.

Vallimalai Arunagiri Nadhar

அந்த ஆலயத்தில் பூசாரியிடம் பேசும்போது, அங்கு தினமும் வல்லிமலையை சுற்றியுள்ள சாதுக்களுக்கு, யாசிப்பவர்களுக்கு அன்னதானம் நடைபெறுவதாக குறிப்பிட்டார். ரூ.5000/- கொடுத்தால் 108 பேருக்கு வடை பாயசத்துடன் சாப்பாடு போடுவோம் என்று கூறினார். கண்டிப்பாக இங்கு ஒரு முறை மேற்கூறிய சிறப்பு அன்னதானத்திற்கு நாம் உதவுவதாக கூறியிருக்கிறோம். அதுசமயம் நாமே வந்திருந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டு நம் கையாலேயே பறிமாறலாம் என்று கூறினார்கள். நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதால் ஏதேனும் செய்யவிரும்புவதாக கூறினோம். சில மளிகை பொருட்களை வாங்கித் தரமுடியுமா என்று கேட்டார்கள். அங்கு கடை எதுவும் இல்லை. அடிவாரத்தில் தேர்முட்டி அருகே ஒரு மளிகை கடை உள்ளதாகவும் நம்முடன் ஒரு நபரை அனுப்புவதாகவும் அவரிடம் வாங்கித் தந்துவிடும்படியும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பருப்பு, சமையல் எண்ணை, மிளகு, கடுகு, சீரகம் முதலியவற்றை வாங்கித் தந்தோம். தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறு அறப்பணி இது.

நாளை விசேட நாள் கிழமைகளில் நாம் செய்யும் வழக்கமான அறப்பணிகள் உண்டு. ரைட்மந்த்ரா அலுவலகமும் இயங்கும்.

Vallimalai Arunagiri Nadhar 2

===============================================================

வள்ளிமலையில் வாரியார் ஸ்வாமிகள் தொடர்பான பல அற்புதங்கள் நடந்துள்ளது. அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இனி வருவன : தை பிறப்பின்போது நாம் கலந்துகொண்ட படி உற்சவம், வள்ளிமலை, வள்ளிமலை தோற்றம், வழியில் உள்ள சித்தர் மண்டபம், அங்கு வாரியார் முன்னிலையில் நடைபெற்ற அதிசய சம்பவம், மலையுச்சியில் குகையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி சன்னதி, வள்ளிமலை ஸ்வாமிகள் ஆஸ்ரமம், வள்ளி நீராடிய சூரியன் காணா சுனை, வள்ளியம்மை பூஜித்த திருமால்கிரீஸ்வரர், உள்ளிட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

வள்ளிமலை – அதிசயங்களுக்கு குறைவில்லை, சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check :

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

=============================================================

[END]

13 thoughts on “புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

  1. Sundarji,
    I am Expecting Monday Spl from Morning Onwards. I opened many times rightmantra sites, but fortunately at 8 pm this Muurgan sites was published. Every Interesting article. You have proved that you are an excellent photographer. All photos are Excllent. Hatts off to You.

    MY TAMIL PUTHANDU WISHES TO ALL RIGHTMANTRA VIEWERS.

    With Warm Regards,
    S.Narayanan.

  2. ரைட் மந்ரா வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இன்றைய பதிவு அறியாத பல தகவல்களை அறியத் தந்தது. மேலும் வர இருக்கும் பதிவுகளையும், அதில் பொதிந்துள்ள கருத்துகளையும் அதிசயங்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். மிக்க நன்றி.

  3. வணக்கம்………… வள்ளிமலை படி உற்சவ பதிவு அருமை…….. நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு…….. நம் தளம் சார்பாக படி உற்சவம் நடத்த அருள் புரியுமாறு ராஜதுரையை வேண்டிக் கொள்கிறோம்……….

    சுப்ரமணிய சுவாமி அருட் பிரசாதத்தை கண்களால் தரிசித்துக் கொண்டோம்………

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்………

  4. சுந்தர் சார்.

    அனைவருக்கும் மன்மத வருடம் வள்ளி மலை முருகன் அணைத்து நலன்களையும் அருள praarthikkiren

    பாஸ்கரன்

  5. சுந்தர் அண்ணா..

    நம் தள வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    மிகவும் அருமையான பதிவு அண்ணா..சுந்தர் அண்ணாவின் ஒவ்வொரு பதிவும் மலை பிளத்தல் போன்ற செயல்..இந்த செயலில் அடியேன் ஒரு சிறு துரும்பாய் அமைய காரணமாய் இருந்த இறைவனுக்கு நன்றி.என்னை அழைத்து சென்று,சுந்தர் அண்ணா பட்ட பாடு… அடுத்த பதிவில் விளக்குவார் என்று கருதுகிறேன்.

    மிகவும் இனிமையான இறை தரிசனம். வள்ளி மலை புகழ் ஓங்குக.

    சுந்தர் அண்ணாவின் கருணை உள்ளதை எடுத்து காட்டிய சம்பவமும் (நாய் ஒன்று மிகவும் பட்டினியால் கண்ணில் அடிபட்டு கோவில் கொடிமரத்தின் அருகே இருக்க, சுந்தர் அண்ணன் உடனே..அந்த ஜீவனின் பசி பிணி போக்கி, அன்பு செய்தார்) மறக்க முடியாத ஒன்று.

    சுந்தர் அண்ணனுடன் சேர்ந்த வள்ளிமலை அனுபவம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
    சுந்தர் அண்ணா ..அந்த அனுபத்தை பதிவாக இடவும்.

    வள்ளிமலை அழகனுக்கு அரோகரா..

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என
    உளத்தில் உறை நடத்து குஹன் வேலே.

    மிக்க நன்றி அண்ணா..

    1. ராகேஷை வள்ளிமலைக்கு உடன் அழைத்துச் சென்றது இனிமையான அனுபவம். அவருக்கு படி உற்சவத்தில் பங்கேற்க கொடுத்து வைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். நாம் இழுத்த இழுப்பிற்கு வளைந்து ஓட்டமாய் ஓடி அனைத்திற்கும் உறுதுணையாய் இருந்தார். அவர் குறிப்பிடும் ‘சுந்தர் அண்ணா பட்ட பாடு’ குறித்து அவர் கூறியது போல அடுத்த பதிவில் விளக்குகிறேன். (ஆக்சுவலா நம்முடன் வந்ததால் அது நான் பட்ட பாடு என்று அவர் சொல்லியிருக்கவேண்டும்!)

  6. திரு சுந்தர் அவர்கள்
    ரைட் மந்த்ரா வாசகர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் மன்மத வருடம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வணங்குகிறேன் . வள்ளிமலை படி உற்சவம் பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி .அனைவருக்கும் இனிய தமிழ்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் ,

  7. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  8. வாழ்க வளமுடன்

    வள்ளி மலை படி உற்சவம் பதிவு அருமை

    தை மாத படி உற்சவத்தின் பதிவை எதிர் நோக்கி இருந்தேன்

    சித்திரை பெண் தை , தை என்று முந்தி கொண்டால்

    எல்லாம் அவன் செயல்

    அவன் லீலைகளை யாரறிவார்

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    நன்றி

  9. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டில் புதிய தவல்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி

  10. வணக்கம் சுந்தர். முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இந்த ஆண்டு எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய அந்த வள்ளி மணாளனை பிராத்திக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை . ஒரு முறை முருகன் அழைப்பான் என நம்புகிறறேன். வாழ்த்துக்கள். அழகிய படங்களுக்கும் கட்டுரைக்கும் நன்றி.

  11. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    படி உற்சவம் பதிவு மிகவும் அருமை
    நேரில் பார்த்தது போல இருக்கிறது . நம் எல்லா பதிவுகளுமே படித்த உடன் அந்த இடத்திற்கு உடனே செல்லதொன்றும்
    முருகன் என்றால் ninaithaudan சந்தோசம் தருபவர். இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் முருகன் எல்லா சந்தோசங்களையும் அருள வாழ்த்துக்கள்

  12. happy New Year to everyone. Superb article. As per your wish, next year,youv will do padi pooja. we will participate. All the photos are fantastic.

    Regards

    UMA Venkat

Leave a Reply to Parimalam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *