Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

print
வ்வொரு சனிக்கிழமையும் நமது உழவாரப்பணி தொடர்பான பதிவுகள் இனி இடம்பெறும். இதுவரை நான்கு கோவில்களில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவுகள் பாக்கியிருக்கிறது. பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில், ஆப்பூர் நித்தியகல்யாணப் பெருமாள், போரூர் பாலமுருகன் கோவில் மற்றும் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவில். இவற்றில் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. ஏனைய கோவில்களும் ஒவ்வொன்றாக இனி அளிக்கப்பட்டுவிடும்.

இரண்டு சிறப்புக்கள்!

எந்த உழவாரப்பணியிலும் இல்லாத வகையில் இந்த பணியில் இரண்டு சிறப்புக்கள் அமைந்தன. ஹரி, ஹரன் இருவரின் தரிசனமும் கிடைத்தது. மற்றொன்று மகளிர் குழுவினருக்கு அம்பாளின் பிரசாதம் ஒன்று எதிர்பாராத வகையில் கிடைத்தது. விரிவான தகவல் பதிவில் விளக்கப்பட்டுள்ளது. பொறுமையாக படிக்கவும்.

DSCN4533

DSCN4552ஒரு முக்கிய விஷயத்தை இங்கே கூற விரும்புகிறோம். உழவாரப்பணியின் போது நாம் சம்பந்தப்பட்ட கோவில்களில் செய்வதாக ஒப்புக்கொள்ளும் கைங்கரியங்கள் (சிமெண்ட் பெயர்ப் பலகை, லைட் ஃபிட்டிங், புது மின்விசிறி மாட்டுவது, தீப மேடை உள்ளிட்டவை) எப்பாடுபட்டாவது நிறைவேற்றப்பட்டுவிடும். அப்டேட்டுகளோ புகைப்படங்களோ அளிக்கவில்லை என்ற காரணத்தினால் அது குறித்து எவரும் ஐயம் கொள்ளவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.

DSCN4535

DSCN4544

DSCN4540DSCN4588தாத்திரீஸ்வரர் கோவிலைப் பொறுத்தவரை இந்த கோவிலில் உழவாரப்பணி செய்யவேண்டும் என்று கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு வருகிறோம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Check : எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆனால் பிப்ரவரி 15, 2015 தான் அதற்கு சந்தர்ப்பம் அமைந்தது. காரணம் அடுத்த சில நாட்களில் வந்த சிவராத்திரி.

ஒவ்வொரு சிவராத்திரிக்கும் ஏதாவது ஒரு தொன்மையான சிவாலயத்தில் உழவாரப்பணி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் என்பதை நீங்கள அறிவீர்கள். நமது முதல் உழவாரப்பணி (2013) திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி ஸ்பெஷல் உழவாரப்பணியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த ஆண்டு (2014) பூண்டி (திருவெண்பாக்கம்) ஊன்றீஸ்வரர். இந்த ஆண்டு சித்துக்காடு தாத்திரீஸ்வரர்.

DSCN4545

DSCN4546DSCN4548DSCN4562DSCN4571DSCN4566DSCN4617DSCN4619DSCN4594உழவாரப்பணிக்கு கோவிலை தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்மைப் பொருத்தவரை சும்மா கடமைக்கு எந்தக் கோவிலிலும் உழவாரப்பணி செய்வதில்லை. சம்பந்தப்பட்ட கோவிலில் அதற்கான தேவை உண்மையில் இருக்கவேண்டும். அதை நேரடியாக சென்று தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சித்துக்காடு புறநகரில் மிகவும் தொலைவில் உள்ள பகுதி என்பதால் இரண்டு மூன்று முறை இதன் பொருட்டு அங்கு செல்லவேண்டியிருந்தது.

மூன்றாம் முறை செல்லும்போது தான் கோவிலின் பரம்பரை அறங்காவலர் திரு.யுவக்குமார் அவர்களை சந்திக்க முடிந்தது. அவரிடம் பேசி ஒப்புதல் பெற்ற பின்னர் தளத்தில் அறிவித்தோம்.

நேரடி பேருந்து வசதி உள்ள இடமாக இருந்தால் நாம் வேன் ஏற்பாடு செய்வதில்லை. ஆனால் சித்துக்காடு புறநகரில் போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடத்தில் என்பதால் வேன் ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.

DSCN4531

முன்னதாக பிப்ரவரி 15 ஞாயிறு காலை ஐயப்பன்தாங்கலில் இருந்து வேன் காலை 6.30 க்கு புறப்பட்டது. சில உழவாரப்பணி குழு உறுப்பினர்கள் நேரடியாக அங்கேயே ஏறிக்கொள்ள, ஏனையோர் போகும் வழியில் ஆங்காங்கே ஏறிக்கொண்டனர்.

கோவிலை அடையும்போது எப்படியும், 8.30 இருக்கும். முதலில் அனைவருக்கும் நாம் நம் வீட்டில் தயார் செய்து டிரம்மில் கொண்டு சென்ற சூடான பில்டர் காபி தரப்பட்டது.

உழவாரப்பணியை துவக்கும் முன்னர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பிறகு தான் துவக்குவோம். ஆனால் இந்த முறை – இது சுவாதி நட்சத்திர பரிகாரத் தலம் என்பதால் சுவாதி நட்சத்திர வாசகர்களுக்கு விசேஷ அர்ச்சனை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் உழவாரப்பணியை முடித்துவிட்டு புறப்படும் முன்னர் அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்று கோவில் தரப்பில் கூறப்பட்டதை ஏற்றுக்கொண்டு பணியை துவக்கிவிட்டோம்.

நமது உறுப்பினர்கள் சிறு சிறு குழுவாக பிரிக்கப்பட்டு பணி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு குழுவினர், பிரகாரம் முழுக்க மண்டிக் கிடந்த புதர்களை மண்வெட்டி மூலம் அகற்றி, செடிகொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

மற்றொரு குழுவினர் உள் சன்னதியில் ஒட்டடை அடித்தனர்.

மகளிர் குழுவினர் பிரகாரம் முழுக்க பெருக்கி சுத்தம் செய்தனர். இது தவிர அவர்களின் முக்கிய பணி பாத்திரம் தேய்ப்பது. கோவில் பாத்திரங்கள், விளக்குகள் உள்ளிட்டவைகளை தேய்க்கும் பணி. உண்மையில் மிகவும் கடினமான சவாலான பணி இவர்களுடையது தான். அழுக்கும் எண்ணைப் பிசுக்கும் ஏறி தோற்றமே மாறி பொலிவையும் இழந்திருந்த பல விளக்குகள் இவர்களின் கைங்கரியத்தால் புத்தொளி பெற்றது. (பார்க்க படங்கள்!).

DSCN4578

DSCN4597DSCN4607அண்டா, குண்டா, தாம்பாளம் உள்ளிட்ட இதர கோவில் பாத்திரங்களும் தேய்த்து சுத்தம் செய்யப்பட்டன.

12.00 மணி நெருங்கும்போது சிலர் அருகே உள்ள (இதே நிர்வாகத்தை சேர்ந்த) சுந்தரராஜ பெருமாள் கோவிலை பார்க்கவேண்டும், பெருமாளை தரிசிக்கவேண்டும் என்றனர்.

எனவே இங்கே பணிகளை ஓரளவு முடித்துவிட்டு அனைவரும் பெருமாள் கோவிலுக்கு சென்றோம். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் அறங்காவலர் திரு.யுவக்குமார் எங்களுக்கு சுற்றிக்காண்பித்தார்.

DSCN4652

DSCN4634

DSCN4644

DSCN4646DSCN4637இந்தக் கோவிலில் உள்ள மரங்களில் கிளிகளை பார்க்க முடிந்தது. கொஞ்சம் வறட்சி காலமாதலால் மரங்கள் பட்டுப்போயிருந்தன.

இங்கும் விசேஷ அர்ச்சனை நடைபெற்றது. பணியில் பங்கேற்றவர்களுக்கும் நமது விசேஷ அர்ச்சனைக்கு பெயர்கள் அனுப்பியிருந்த அனைவருக்கும் இங்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. அடுத்து ஆண்டாள் சன்னதி.

DSCN4664

இதில் ஆண்டாள் சன்னதியில் அமைந்துள்ள கற்தூணில் கருடக்கொடி சித்தர் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.

இத்திருத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல காலம் வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலம், கண் நோய் என வரும் அடியாருக்கு கண் நோய் மற்றும் பார்வை குறைபாட்டை தீர்க்கும் வல்லமை பெற்ற தலமாக விளங்குகிறது.

DSCN4669

சித்தரின் திருவுருவம் அமைந்த கற்தூணுக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது கண் நோய் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு பலன் பெறுவர்.

பெருமாளையும் தாயாரையும் ஆண்டாளையும் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். அருமையானதொரு கோவில். நிறைவானதொரு தரிசனம்.

மீண்டும் இங்கே தாத்திரீஸ்வரர் கோவிலுக்கு வந்தவுடன் எஞ்சியிருந்த பணிகளையும் முழுவதுமாக முடித்துவிட்டு பொருட்களை எடுத்து வேனில் ஏற்றிவிட்டு பின்னர் தாத்திரீஸ்வரரை தரிசனம் செய்யச் சென்றோம்.

DSCN4677

DSC00925DSC00931கிட்டத்தட்ட அனைவருக்கும் மிக மிக பொறுமையாக நடராஜ குருக்கள் சங்கல்பம் செய்து வைத்து அர்ச்சனையும் சிறப்பான முறையில் செய்தார். நாம் கொண்டு சென்ற பெயர்ப்பட்டியலில் இருந்த நம் வாசகர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.

அதே போல ‘ப்ரசூன குந்தளாம்பிகை’ அம்பாள் சன்னதியிலும் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்தார்.

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.

இந்த உழவாரப்பணியில் பங்கேற்ற மகளிர் குழுவினர் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். காரணம் திருப்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அம்பாளுக்கு வேண்டுதல் செய்து ‘வளையல் மாலை’ போட்டிருந்தனர். அவர்கள் தரிசித்துவிட்டு சென்றதும், நமது மகளிர் வாசகியர் அனைவருக்கும் அம்பாளின் வளையலும், திருமாங்கல்யச் சரடும் பிரசாதமாக கிடைத்தது. நிச்சயம் சம்பந்தப்பட்ட வாசகியருக்கு ஒரு நெகிழ்ச்சியான இனிய அனுபவம். எதிர்பாராமல் கிடைத்த இந்த பரிசால் அனைவரும் திக்குமுக்காடிவிட்டனர். இது இறைவன் தரும் உற்சாகம்.

இது தவிர உழவாரப்பணியில் பங்கேற்கும் நமது குழுவினரை உற்சாகப்படுத்த நாம் ஒவ்வொரு முறையும் சிறு சிறு பரிசுகள் அளித்து அவர்களை கௌரவிப்போம். இந்த முறை ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்லோகம், ஆதித்த ஹ்ருதயம், கனகதாரா ஸ்தோத்திரம், அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், நவக்கிரக காயத்ரி மற்றும் ஸ்லோகங்கள் போன்ற சிறு சிறு ஸ்லோக புத்தகங்கள் வாங்கி அனைவருக்கும் ஆலயத்தின் அர்ச்சகர் திரு.நடராஜ குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் வழங்கப்பட்டது. இது தவிர அனைவருக்கும் கோவிலின் தல வரலாறு புஸ்தகமும் நம் செலவில் வாங்கி தரப்பட்டது.

Thaththireeswarar Temple history

பொதுவாகவே இறைவனின் ஸ்லோகம் மற்றும் பாடல்கள் புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம். ஆனால் நாம் வழங்கும் இந்த புத்தகங்களோ  ஆலயத்தில் தினமும் சிவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்ற ஒருவர் கரங்கள் மூலம் நாம் அனைவருக்கும் தந்ததனால் பன்மடங்கு மதிப்பு பெற்றது. சிவனை தீண்டும் உரிமை பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (திரு.நடராஜ குருக்கள் அவர்கள் நமது பிரார்த்தனை கிளப்புக்கும் தலைமை ஏற்று பிரார்த்தனையை சிறப்பாக நடத்தி தந்தது குறிப்பிடத்தக்கது).

DSCN4681

DSCN4691DSCN4696DSCN4701பரம்பரை பரம்பரையாக இவர்கள் குடும்பத்தினர் தான் தாத்திரீஸ்வரருக்கு பூஜை செய்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக தாத்திரீஸ்வரருக்கு பூஜை செய்து வரும் பேற்றை பெற்றவர்கள் இவர்கள். இவர் தந்தை கன்னிகேஸ்வரர் குருக்கள். திரு.நடராஜ குருக்கள் அவர்களின் மகனும் இங்கு குருக்களாக உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று தனது குடும்பத்தின் சார்பாக அன்னதானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

DSCN4709

DSCN4708

DSCN4710

DSCN4716

DSCN4717DSCN4718DSCN4720DSCN4723DSCN4724DSCN4728தாத்திரீஸ்வரர் கோவிலை பொருத்தவரை தைப்பூசம் மிகவும் விசேஷம். அன்று இவர் குடும்பத்தினர் பால்காவடி எடுத்து இங்கு எழுந்தருளியிருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வார்.

ஒவ்வொரு உழவாரப்பணியின்போதும் நாம் பணி செய்யும் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களை கௌரவிப்பது நம் வழக்கம். எனவே இங்கும் இறுதியில் பிரகாரத்தில் வைத்து நடராஜ குருக்கள் அவர்களுக்கு நம் தளம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. வெற்றிலை பாக்கு, பூ, பழம், வேட்டி, சட்டை, ரொக்கமாக ஒரு சிறு தொகை அவருக்கு வைத்து தரப்பட்டது.

மிகவும் நெகிழ்ந்துவிட்டார் குருக்கள். அனைவருக்கும் எல்லா வித நலன்களும் செல்வமும் கிடைக்க வாழ்த்துவதாக உள்ளம் உருகி கூறினார்.

அது போலவே ஆலயத்தின் அறங்காவலர் திரு.யுவக்குமார் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

நமது வாசக, வாசகியர்களைக் கொண்டே அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியில் மதிய உணவு சாப்பிட்டோம். புளியோதரை + சிப்ஸ் + தயிர் சாதம். பசிக்கு இதைவிட ஒரு அருமையான காம்பினேஷன் கிடைக்குமா?. அனைவரும் ஒரு பிடி பிடித்தனர். (நம்மைத் தவிர!). ஒரு சிலர் பரோட்டா சூரியாக மாறி அனைத்தையும் காலி செய்தனர். அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

வாண்டுகள்!

எந்த உழவாரப்பணியிலும் இல்லாத அளவு இந்த முறை இரண்டு வாண்டுகள் நமது பணியை கலகலப்பாக்கின. (திருமதி.தாமரை வெங்கட் அவர்களின் குழந்தைகள்). தங்களால் இயன்ற வேலையை அவர்கள் எங்களுடன் இணைந்து செய்தது உண்மையில் கண்கொள்ளா காட்சி. குழந்தைகள் மனதில் நல்ல விஷயத்தை பழக்கும் அவருக்கு நம் நன்றி. குழந்தைகள் மட்டுமல்லாது தனது மாமியாரையும் அவர் அழைத்து வந்திருந்தார். உமா வெங்கட் அவர்கள் தனது சகோதரியை (பம்பாயிலிருந்து வந்தவர்) அழைத்து வந்தார். மேலும் புதிதாக சிலர் இந்த பணியில் பங்கேற்றனர். FACE MASK வாங்கித் தந்த விஸ்வநாதன் அவர்களுக்கு நம் நன்றி. உழவாரப்பணியை பொருத்தவரை ஒவ்வொருவரும் முக்கியம் தான். அனைவருக்கும் நம் நன்றி.

DSCN4731

இந்த உழவாரப்பணி மூலம் மற்றொரு மகத்தான காரியம் சத்தமின்றி நடந்தது. தாத்திரீஸ்வரர் ஒருவர் மட்டுமே முழுமையாக அறிவார்! சிவ சிவ!!

முகவரி : அருள்மிகு தாத்திரீஸ்வரர் (சித்துக்காடு) திருக்கோயில்,
திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை – 600 072.

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்,  திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை – 600 072.

செல்லும் வழி : சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. பூவிருந்தவல்லியிலிருந்து ( குறித்த நேரத்தில் மட்டும்) பஸ் வசதி உள்ளது. ஷேர் ஆட்டோவில் செல்வதாக இருந்தால் இரண்டு இடத்தில மாறி செல்லவேண்டும். மேலும் திருமழிசை – பட்டாபிராம் சாலை வழியாகவும் செல்லலாம்.

===============================================================

அடுத்த உழவாரப்பணி!

அடுத்த உழவாரப்பணி மே 17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.​) உழவாரப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்!

நன்றி!

‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215

===============================================================

முக்கிய அறிவிப்பு!

வேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு!!

மிகப் பெரிய ஆலய தரிசன பதிவு ஒன்று தயார் செய்து வருவதால் இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவை அளிக்கவில்லை. சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் அடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.

உங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check articles on  ‘உழவாரப்பணி’

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

=====================================================================

[END]

8 thoughts on “ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

  1. சந்தோஷமான பதிவு.
    இந்த கோவிலில் பணி செய்தது எங்கள் பாக்கியம்.
    பேரம்பாக்கம் செல்லும் போதெல்லாம் சார் திருமணம் என்ற ஊரை பற்றியும் சித்துகாடு என்ற தளத்தை பற்றியும் சொல்லும் போதே அதை பார்க்கும் ஆவல் நமக்கு உண்டாகும்.
    எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பை நாங்கள் நழுவ விடவில்லை.எல்லோரும் குறிப்பாக நிறைய சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள்.
    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே பணியில் இரு கோவில் தரிசனம் கிடைத்தது.
    இரு கோவில்களுமே நாம் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்கள்.
    சித்தர்கள் பலர் தவம் செய்த பூமி நாம் அதை வணங்க புண்ணியம் செய்துள்ளோம்.
    எப்போதும் போல எங்கள் பணியை செவ்வனே சிவன் முடித்து கொடுத்தார்.
    நேரம் சிறிது அதிகம் ஆனாலும் குருக்கள் நின்று நிறைவாக அர்ச்சனை செய்தது எல்லோர் மனமும் நிறைவடைந்தது.
    எப்போதும் மதிய உணவு சாப்பிடும் போது (என்னை தவிர) என்று சுந்தர் சார் போட்டுள்ளது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளது.
    குழந்தைகள் இருவரும் மிகவும் அழகாக எங்களுக்கு உதவி செய்தார்கள். சில பிள்ளைகளை போல அல்லாமல் இவர்களும் சேர்ந்து செய்தது கண் கொள்ள காட்சி தான்.
    உழவர பணி என்பது தான் நமது சத்சங்கம். நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்பது மட்டும் அல்லாமல் நம் உறவை வளர்க்கும் ஒரு ஆணிவேர். அதனால் முடிந்தவரை நம் வாசகர்கள் நமக்காக நாமே முயற்சி செய்து மாதத்தில் ஒரே ஒரு நாள் ஒதுக்கலாமே என்பது என் பணிவான விண்ணப்பம்.
    நம் பணியை நாம் செய்வோம் அதன் பலனை அவர் நமக்கு தருவார்.

    என்றும் அன்புடன்.

  2. அடுத்து வரும் உழவார பணிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். என் பெயரை தற்போதே குறித்து கொள்ள வேண்டும் என்று சுந்தர் அவர்களை கேட்டு கொள்கின்றேன்.

  3. ஹரி, ஹரன் இருவரின் தரிசனம் கிடைக்கபெற்ற நமது
    உ ழவாரப்பணி நண்பர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

    பசுமையே இல்லாத மரத்தில் பச்சைகிளிகள். ஆசிரியரின் புகைப்பட கலை திறமைக்கு ஒரு எடுத்துகாட்டு.

    நிறைவான ஒரு பதிவினை வாசித்த திருப்தி எற்பட்டது.
    நன்றி

  4. வணக்கம்……. சித்துக்காடு கோயில் உழவாரப்பணியில் பங்கு பெற்றது நாங்கள் செய்த புண்ணியம்……….. மிகவும் அருமையான கோயில்கள்….. மிகவும் அருமையான தரிசனம்……..

    சென்ற உழவாரப்பணிக்கும் அடுத்த உழவாரப்பணிக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக உள்ளதுபோல் தோன்றுகிறது………..

  5. தாத்ரீஸ்வரர் கோவில் உழவார பணியில் நான் என் சகோதரியுடன் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர்களுக்கும் இது ஒரு புது அனுபவம்.

    தாமரை வெங்கட் குழந்தைகளுக்கு எனது வாழ்த்துக்கள்

    கோவில் குருக்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    பெருமாள் கோவிலில் தாயார் சந்நிதியில் நான் கனகதார சுலோகம் சொன்னது மறக்க முடியாத நிகழ்வு. எல்லோரும் பொறுமையாக கேட்டதற்கு நன்றிகள் பல .

    மதிய உணவு பசிக்கு விருந்தாக அமைந்தது.

    தாங்கள் பரிசாக கொடுத்த அனுமன் சாலீசா தினமும் மனம் ஒன்றி படிக்கிறேன்.

    அடுத்த உழவாரப் பணியை ஆவலுடன் எதிர்பார்கிறேன். என் தாயாருடன் கலந்து கொள்வேன்.

    நன்றி
    உமா வெங்கட்

  6. வாழ்க வளமுடன்

    என் கடன் பணி செய்தோர் கிடப்பதே

    நன்றி

  7. சுந்தர் அண்ணா..

    இது தான் எனக்கும், நம் தளத்திற்குமான முதல் நேரடி அறிமுகம்..மனம் பதைபதைக்க உழவார பணிக்கு வந்தேன்..அப்புறம் அனைவருடனும் சேர்ந்து,பணி செய்த பிறகு..எப்படி சொல்வதேன்று தெரியவில்லை. புதிய நட்புகள்..குட்டி சந்திரனின் சிரிப்பு,பரிமளம் அம்மாவின் அன்பு..உமா அம்மா அவர்களின் இன்னிசை பாடல் என்று புதிய புதிய அனுபவங்கள்.(பலரது பெயர்கள் தெரியவில்லை..)

    கோடான கோடி நன்றிகள் இறைவா..

    உடலுக்கேற்ற வகையில் உழவார பணியும்
    உள்ளம் உருகிட கிடைத்த இறை தரிசனமும்
    ஒருங்கே கிடைத்தது சுந்தர் அண்ணாவினால்..

    right mantra உறவிற்கு பிறகு இறை பக்தி,கோவில் ஒழுக்க நெறி, சிவலோக அனுபவம்,உழவார பணியின் மகத்துவம், பொங்கி மடாலய சிறப்பு,வேல் மாறல் மஹா மந்திரம், என சொல்லி கொண்டே போகலாம்.

    right mantra தளம் மற்றும் தளத்தின் வாசகர்கள்,அன்பர்கள் என அனைவரும் என் வாழ்வில் திருப்புனையை ஏற்படுத்தி வருகிறன்றனர்.

    மிக்க நன்றி.

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *