Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > சனி கொடுத்தால் எவர் தடுப்பர்? இனிதே நடைபெற்ற நமது சிறப்பு வழிபாடு!

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்? இனிதே நடைபெற்ற நமது சிறப்பு வழிபாடு!

print
21/03/2015 சனிக்கிழமை காலை வடதிருநள்ளாறு ஷேத்ரத்தில் நம் தளம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிஷேகமும் விசேஷ அர்ச்சனையும் இனிதே நடைபெற்றது. மேற்படி சிறப்பு வழிப்பாட்டுக்கு கிட்டத்தட்ட 18 வாசகர்கள் தங்கள் பெயர் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர், ராசி, நட்சத்திர, கோத்திர விபரங்களை நமக்கு அனுப்பியிருந்தனர். (மொத்தம் சுமார் 70 பெயர்கள்).

VadaThirunallaaru1

சனிக்கிழமை காலை 6.30 க்கு அபிஷேகம் என்பதால் காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு புறப்பட்டுவிட்டோம். கோவிலுக்கு நாம் செல்லும்போது காலை 6.15 AM. நாம் தான் முதல் நபர். திருமதி.ராஜ்குமார், திருமதி.உமா வெங்கட், அவர் மகன் ஹரீஷ், திருமதி.கீதா ரமேஷ், திரு.ராகேஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நமது வாசகர்கள் ஒவ்வொருவராக வந்துவிட்டார்கள். அனைவரும் பொறுமையாக அபிஷேகம் + அர்ச்சனை முடியும் வரை காத்திருந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.

VadaThirunallaaru2

சனிக்கிழமை என்பதால் ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே அனைவருக்கும் (70 பெயர்கள்) சங்கல்பம் செய்ய இயலவில்லை. உடனே சமயோசிதமாக சிந்தித்து மிக மிக கடுமையான துன்பங்களை அனுபவித்து வரும் நான்கைந்து வாசகர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சங்கல்பம் செய்தோம். மீதமிருந்த வாசகர்களுக்கு என்ன செய்வது? யோசித்தோம். சனீஸ்வரனே ஒரு நல்ல வழியை காண்பித்தார். கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் எடுத்து சென்றிருதோம். அந்த பிரிண்ட்-அவுட்டை சுரேஷ் குருக்களிடம் கொடுத்து சனீஸ்வரரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யும்படி கேட்டுக்கொண்டோம்.

“பெயர் ராசி பட்டியல் இங்கேயே சுவாமி பாதத்தில் இருக்கட்டும். மீதி இருக்குற பெயர்களுக்கு நாளைக்கு சாயந்திரம் பிரார்த்தனை கிளப் நேரத்தில் அவங்க எல்லா பேருக்கும் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்துடுறேன்” என்றார். “ரொம்ப நன்றி சார்… எல்லாரும் ரொம்ப நம்பிக்கையோட பெயர் ராசி விபரங்களை அனுப்பியிருந்தாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறோம்னு ஒரு நிமிஷம் தவிச்சி போயிட்டேன் !” என்றோம்.

VadaThirunallaaru 3

மேலும் பிரார்த்தனை பதிவையும் பிரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தோம். அது தற்போது வேண்டாம் என்றும், இந்த கூட்டத்தில் அதை பாதுகாப்பது சிரமம் என்றும் நாளை காலை கொண்டு வந்து தரமுடியுமா என்றும் கேட்டார். சரி என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம்.

இதற்கிடையே அபிஷேக பால் & தீர்த்தம் அனைவருக்கும் தரப்பட்டது.

பின்னர் அர்ச்சனை செய்த தேங்காய் பூ, பழம் பிரசாதத்துடன் புளியோதரை & சாம்பார் சாதம் ஆகிய பிரசாதங்களை தொன்னையில் தந்தார்கள். வந்திருந்த நண்பர்களுக்கு ஒரு சிறிய பாக்ஸில் அவற்றை கொடுத்துவிட்டு சன்னதியை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு சனீஸ்வரரிடமும், ஆஞ்சநேயரிடமும், கணபதியிடமும் விடைபெற்று கிளம்பினோம்.

நிகழ்ச்சிக்கு நேரில் வந்து சிறப்பித்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அடுத்து கோ-சம்ரோக்ஷனம். கோ-சம்ரோக்ஷனம் தற்போது இரண்டு ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. மற்றொரு ஆலய விபரத்தை தனிப் பதிவில் விரிவாக விளக்குகிறோம்.

Kasi Viswanadhar temple

Kasi Viswanadhar temple bramorchavam

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நாம் ரெகுலராக கோ-சம்ரோக்ஷனம் செய்து வருவது நீங்கள அறிந்ததே. முன்னதாக தீவன மூட்டைகள் ஆர்டர் செய்திருந்தோம். தீவனக் கடையில் சென்று பணம் கட்டிவிட்டு கோவிலுக்கு சென்று காத்திருந்தோம். தீவனம் கொண்டு வந்து இறக்கிவைக்கப்பட்டதும் புறப்பட்டோம்.

 இது யார் தெரிகிறதா? நம்ம 'தேவகி'!
இது யார் தெரிகிறதா? நம்ம ‘தேவகி’!

கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறவிருக்கிறபடியால் விஷேட ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இயன்ற வாசகர்கள் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்.

நமது சனீஸ்வரர் சிறப்பு வழிபாட்டுக்கு ஒரு சில வாசகர்கள், சுவாமிக்கு அர்ச்சனையை பணம் தராமல் செய்யக்கூடாது. சொந்த செலவில் தான் செய்யவேண்டும். எனவே பணம் அனுப்புவதாக சொன்னார்கள். தயவு செய்து வேண்டாம். அப்படி நாம் பெற்றுக்கொண்டால் நமது நோக்கம் சிதறிவிடும். நமது பணிகளில் தொடர்ந்து உதவி வரும் ஒரு சில அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் அனுப்பிய தொகையில் ஒரு சிறிய அளவு மட்டுமே மேற்படி கைங்கரியத்தில் அதுவும் அவர்கள் மனத்திருப்திக்காக பயன்படுத்திக்கொண்டோம்.

மற்றபடி வாசகர்கள் நம்மை அணுக, நமது சேவைகளை பயன்படுத்திக்கொள்ள, அவர்கள் பொருளாதார நிலையோ பணமோ என்றுமே குறுக்கே வரக்கூடாது என்று நாம் கருதுவதாலேயே இந்த வழிபாட்டை பணம் பெறாமல் செய்யவேண்டும் என்று கருதி ஏற்பாடு செய்தோம். மேற்படி சனீஸ்வரர் பூஜைக்கு பணம் கொடுத்தே தீரவேண்டும் என்று நீங்கள் கருதினால், உங்கள் பகுதியில் எவரேனும் பசுமாடு வைத்திருந்தால், அவர்களுக்கு அந்தப் பணத்தில் உங்கள் கைப்பட தவிடு வாங்கி கொடுத்துவிடுங்கள். (தவிடை மனிதர்கள் சாப்பிட முடியாது. கால்நடைகள் தான் சாப்பிடவேண்டும்!) அவர்கள் பாலை வணிக ரீதியாக விற்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. பசுவையும் யானையையும் வளர்த்து தீனி போடுவது சாதாரண காரியம் அல்ல. யோசிக்கவேண்டாம். நன்றி.

(* Please check : நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!)

மறுநாள் அதாவது நேற்று ஞாயிறு காலை மீண்டும் கோவிலுக்கு சென்று சுரேஷ் குருக்களிடம் பிரார்த்தனை பதிவு பிரிண்ட் அவுட்டை ஒப்படைத்துவிட்டோம். அவரும் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களுக்காக மாலை பிரார்த்தித்ததோடு மீதமிருந்த அனைவரின் பெயர்களையும் சங்கல்பம் செய்து அர்ச்சனையும் செய்துவிட்டார். அவருக்கு அனேக கோடி நமஸ்காரங்கள்!

நாம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நாம் தானே அதற்குரிய முயற்சிகளை எடுக்கவேண்டும்? சனீஸ்வரரின் கருணைப் பார்வை உங்களை நோக்கி திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பலன் பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே சனீஸ்வர வழிபாடு என்பது இந்த ஒரு வாரத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து நீங்கள் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். ஏற்கனவே சனிப்பெயர்ச்சி தொடர்பான பதிவுகளில் சனி தசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று எளிமையாக விளக்கியிருக்கிறோம். அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நல்லதே நடக்கும்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்?

=======================================================================

Check similar articles:

வட திருநள்ளாறு – சனிப்ரீதி செய்ய இதோ சென்னையில் ஒரு திருநள்ளாறு!

சனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம்! – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்!

‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!

சனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்?

சனியின் கொடுமை தாளவில்லையா?

ஒரு கனவின் பயணம்!

=======================================================================

[END]

13 thoughts on “சனி கொடுத்தால் எவர் தடுப்பர்? இனிதே நடைபெற்ற நமது சிறப்பு வழிபாடு!

  1. சுந்தர் அண்ணா..

    அபிஷேகமும் அர்ச்சனையும் மிகவும் அருமை.கண்டிப்பாக சனி பகவன் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும். என்னை “right mantra” அலுவலகத்திற்கு அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி. தங்களுடன் இணைந்து செய்த பகவான் தரிசனம் மிக மிக
    அருமை.

    மிக்க நன்றி அண்ணா..

  2. நமது தளத்தின் வாசகர்களுக்காக தாங்கள் எற்பாடு செய்திருந்த இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை சிறப்பான முறையில் நடந்தது அறிந்து மிகவும் மகிழ்வுட்றோம்.

    மிக்க நன்றி

    தேவகி கொள்ளை அழகு.

  3. Dear Mr.Sundar,
    I would like to appreciate u on behalf of all readers for ur sincere service to troubled people from all walks of life.
    May God grant u long life, health n strength to continue this.
    Tks n regards,
    Ranjini.

  4. சுந்தர்ஜி

    மக்கள் சேவை மகேசனின் சேவை..தங்களின் சிறந்த சேவை தொடர வாழ்த்துகள்.
    தேவகி மிகவும் அழகு .

  5. நமது தளம் சார்பாக நடைபெற்ற சனீச்வர பகவான் சிறப்பு வழிபாடு இனிதே நடந்தது அறிந்து மகிழ்ந்தோம்………மேலும் இது போல் சேவைகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துகிறோம்………தேவகி வளர்ந்து விட்டாள்………..

  6. திரு சுந்தர்

    தங்களின் தன்னலமற்ற சேவை தொடர எங்களின் வாழ்த்துகள்.

    ஆண்டவன் பல கோடி பேர்களில் ஒரு சிலரை சேவைகளுக்காக தேர்ந்து எடுக்கிறான். அதில் தங்களின் பெயர் நிச்சயம் இருக்கும்.

    தங்கள் மாதம் ஒரு சண்டே ப்ராத்தனை காஞ்சி மகாஸ்வாமிகளின் ஜீவ சமாதியில் வைத்தல் நன்று. கண்டிப்பாக பிரார்தனை பலிதம் ஆகும்.

    மஹா சுவாமிகள் எங்கும் நிறைந்த மகான். இருப்பினும் அவர் ஜீவிதம் இருந்த இடத்தில் மகிமை அதிகம்.

    தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

    கே. சிவசுப்ரமணியன்

    1. என் முயற்சியை நான் செய்கிறேன். குருவருள் இருப்பின் நடக்கும். ஆலோசனைக்கு நன்றி.

      1. குருவருள் தங்களுக்கு எப்போதும் உண்டு.உங்கள் முயற்சி நிச்சயம் நிறைவேறும்.

  7. வணக்கம் சுந்தர். வாசகர்மேல் உள்ள இந்த அன்பும் கருணையும் என்றும் மாறாமல் இருக்கவேண்டும். குரு ஆசிர்வதிப்பாராக. நன்றி.

  8. சனீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு அர்ச்சனை இனிதே நடைபெற்றது. திருநள்ளாறு செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு இது அருமருந்தாக அமைந்தது. மனதில் அழுத்திக்கொண்டிருந்த பயமும் பாரமும் ஓரளவு நீங்கியதாக உணர்கிறேன்.

    சனீஸ்வரர் பிரசாதமாக கிடைத்த புளியோதரை உண்மையில் தேவாமிர்தம்.

    அங்கு நம் வாசக சகோதர சகோதரிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி. சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தியமைக்கு ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

    தேவகி அழகோ அழகு. அவளை பார்க்கும்போதே மனதுக்கு அமைதியாக இருக்கிறது.

    நன்றி
    உமா வெங்கட்

  9. திரு சுந்தர்

    மன்னிக்கவம். தங்களுக்கு எந்த உதவி புரியாமல் யாருக்கும் எந்த சேவை புரியாமல் தங்களுக்கு அறிவுரை கூறும் என் செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

    தங்களின் எண்ணம், செயல். பேச்சு எல்லாம் ஒன்றாய் வுள்ளது.

    குரு மற்றும் திரு வருள் தங்களுக்கு என்றும் உண்டு.

    தங்கள் வாழ்க்கை நல வாழ்க்கை துணையுடன் சீரும் சிறப்பாக இருக்கும்.

    நம் மஹா சுவாமிகள் ஆசி தங்களுக்கு உண்டு.

    நன்றி.

    கே. சிவசுப்ரமணியன்.

    1. தங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம். வாசகர்கள் அன்பின் காரணமாக கூறும் ஆலோசனைகளை வரவேற்கவோ, உரியவற்றை செயல்படுத்தவோ நான் தயங்கியதேயில்லை. மிக்க நன்றி.

  10. நன்றிகள், சுந்தர். எல்லோரும் நலம் பெற இறைவன் அருள வேண்டும்.

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *