Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > “எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

print
“உத்தியோகம் புருஷ லட்சணம்” என்று சொல்வார்கள். ஆனால் IDEAL WORKPLACE என்று சொல்லும் ‘கனவுப் பணியிடம்’ ஒருவருக்கு அத்தனை சுலபத்தில் அமையாது. வேலை பிடித்திருந்தால் சம்பளம் கம்மியாக இருக்கும். சம்பளம் அதிகமிருந்தால் வேலையில் நிம்மதி இருக்காது. இரண்டும் இருந்தால் பிரயாணத்திலேயே பாதி நாள் போய்விடும். எல்லாமே கூடி இருந்தால் மேலதிகாரி தொல்லை கொடுப்பார். இப்படி ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. பணியிடத்தில் ஒருவருக்கு கிடைக்கின்ற மனநிறைவு மற்றும் மன அமைதி மிக மிக முக்கியம். ஏனெனில் ஒருவருக்கு பணியிடத்தில் அமைதி கிட்டவில்லை என்றால் அவருக்கு எங்கு சென்றாலும் அமைதி கிடைக்காது.

நம் வாசக அன்பர் ஒருவர். நம் நெருங்கிய நண்பர். அவருக்கு சமீப காலங்களாக உத்தியோகத்தில் கடும் பிரச்னை. தனிப்பட்ட காரணங்களை மனதில் வைத்துக்கொண்டு, அவரது மேலதிகாரி அவரை பணியில் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். இவரைப் பற்றி தப்புத் தப்பாக நிர்வாகத்திற்கு ரிப்போர்ட் அனுப்புகிறார். இவரால் செய்ய முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே ஒரு சவாலான வேலையை இவருக்கு தருகிறார். இவருடைய ப்ரோமொஷனை தடுப்பது முதல் அனைத்தையும் செய்து இவர் நிம்மதியை குலைத்து வருகிறார்.

நண்பர் நம்மிடம் சொல்லி கலங்கியபோது, நமக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“யாருக்கும் எதற்கும் பயப்படாதீர்கள். பயந்தால் இந்த உலகத்தில் இடமில்லை. இளைத்தவனை ஏய்க்கும் இயல்பு பொதுவாக பணியிடங்களில் காணப்படும் ஒன்று. தைரியமாக துணிந்து நில்லுங்கள்.” என்றோம்.

அடுத்து நாம் உடனடியாக சொன்னது 108 ராம நாமத்தை தினமும் எழுதி வாருங்கள். நிச்சயம் ஏதேனும் தீர்வு கிடைக்கும்” என்பது தான்.

இதற்கிடையே பிரச்னை அதிகமாக, “ஜி, நீங்கள் சொல்வது போல ராமநாமாவை எழுதி வருகிறேன். ஆனால் பிரச்னை குறைவதற்கு அதிகரித்து வருகிறது. என் நிம்மதியே போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை!” என்றார்.

“எல்லாம் நன்மைக்கே. அது உங்களுக்கு இப்போது புரியாது. இன்றைய தேதியை ஒரு காலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஒரு இரண்டு வருடம் கழித்து நீங்களே என்னிடம் சொல்வீர்கள்!” என்றோம்.

“ஜி… எனக்கு வேறு ஏதேனும் ஸ்லோகங்கள் பதிகங்கள் சொல்லுங்கள்…” என்றார்.

நண்பருக்கு என்ன தீர்வு சொல்வது என்று புரியவில்லை. இதுபோன்ற நேரங்களில் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை சொல்லிவிடுவது நம் வழக்கம். நாம் ஜாதகம், ஜோதிடம் படித்ததில்லை. அது நமக்கு தெரியவும் தெரியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையை படித்திருக்கிறோம். மனிதர்களை அதைவிட அதிகமாக படித்திருக்கிறோம். இறைவனை அவன் அருள் புரியும் விதங்களை உணர்ந்திருக்கிறோம். அவரவர் கர்மா, பக்குவம், பரோபகார சிந்தனை, தன்னலமின்மை, பக்தியின் நிலை ஆகியவற்றை பொறுத்து இறைவனின் அருள் மாறுபடும்.

பல சமயங்களில் நமக்கு வரும் துன்பங்கள் துன்பங்களே அல்ல. அவை துன்பங்களின் போர்வையில் வரும் வரங்கள். அதாவது BLESSING IN DISGUISE என்று சொல்வார்கள்.

“உங்கள் பிரச்சனைக்கு வேறு ஏதோ தீர்வை இறைவன் வைத்திருக்கிறான். அது என்ன என்று எனக்கு புரியவில்லை. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். என் மனம் இப்போது வேறு விஷயங்களில் PRE-OCCUPIED ஆக உள்ளது!” என்றோம்.

இதற்கிடையே, நண்பர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் அனுப்பினார். அவரது நிலையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டோம். அவருக்கு விரைவில் நல்லதொரு வேலை கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தாலும் அவருக்கு என்ன தீர்வு சொல்வதென்று உண்மையில் புரியவில்லை.

“கவலைவேண்டாம்.. விரைவில் புதிய விடியல் புலப்படும்!” என்று அவருக்கு பதில் அனுப்பினோம்.

ஒன்றிரண்டு நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஏதாவது தீர்வு கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு பணிகளை கவனிக்கலானோம்.

===============================================================

இதற்கிடையே சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி நாம் துவங்கிய தொடர் முதல் பதிவோடு அப்படியே நிற்பது மனதை பிசைந்தது. நாம் எந்தளவு எடுத்த காரியத்தில் தீவிரமாக இருக்கிறோம்… ஏமாற்றங்களை பொருட்படுத்தாது உழைக்றோமா என்று ஸ்வாமிகள் பரீட்சை வைக்கிறாரோ என்று பின்னர் இந்த ஜடத்துக்கு தோன்றியது. (முதல் பதிவே ஒரு வித்தியாசமான பதிவு தான். சோதனை தந்துவிட்டு பின்னர் ஸ்வாமிகள் அருள் புரியும் ஒரு திருவிளையாடல் தான். பார்க்க : குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!)

சில நாட்களுக்கு முன்பு காலை அலுவலகம் வந்து முதல் பதிவை அளித்து முடித்துவிட்டு ஸ்வாமியின் மகிமைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தொடரின் அடுத்த அத்தியாயமாக அளிக்கலாம் என்று கருதி ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியத்தை படித்துக்கொண்டிருந்தோம். அப்போது நமது கண்ணில் பட்டது இது.

Seshadri Swamigal 1அடுத்த நொடி நண்பருக்கு போன் செய்து, “திருவண்ணாமலையில் உள்ள ’தங்கக் கரம் உடைய மகான்’ என்று அழைக்கப்படும் சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரது அதிஷ்டானத்தில் அவரை வணங்குங்கள். அவர் தொடர்புடைய புத்தகங்கள் அங்கு கிடைத்தால் வாங்கி படியுங்கள். முடிந்தால் ஒரு முழு நாள் அங்கு செலவு செய்யுங்கள்! உங்கள் பிரச்சனைகள் யாவும் தீரும்! புதிய பாதை புலப்படும்!!  ஏதோ எனக்கு தோன்றுகிறது!!” என்றோம்.

நாம் கூறியதற்கு எந்த வித மறுப்போ தயக்கமோ இன்றி விரைவில் திருவண்ணாமலை செல்வதாக கூறியிருக்கிறார். அநேகமாக வார இறுதியில் அவர் ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்கு (ரமணாஸ்ரமம்  அருகிலேயே  உள்ளது இது) செல்வார் என்று கருதுகிறோம்.

நண்பரிடம் ஏன் சேஷாத்ரி சுவாமிகளை தரிசிக்க சொன்னோம்?

பின்வரும் சுவாமிகளின் லீலையை படியுங்கள். உங்களுக்கே புரியும்.

மேற்கூறிய நண்பர் மட்டுமல்ல, உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் துன்பத்திற்கு உள்ளாகிறவர்கள் அனைவரும் இதை பின்பற்றி மன அமைதி பெறலாம்.

* நண்பர் எழுதிய ராம நாமம் பலன் தரவில்லையா என்று இதை படிக்கும் உங்களில் சிலருக்கு தோன்றலாம். ராம நாமம் ஒரு போதும் வீண் போகாது. அது தான் நண்பருக்கு இப்படி ஒரு தீர்வை காண்பித்திருக்கிறது என்பது நம் கருத்து.

=====================================================================

“உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

– ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியம்

திரு.சுப்பிரமணிய அய்யர் என்பவர் தாலுகா அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக இருந்தார். அவர் சேஷாத்ரி சுவாமிகளிடம் மிகுந்த பக்தி உடையவர். சுவாமிகளும் அவர் என்ன உணவு கொடுத்தாலும் அதை ஆசையுடன் உண்பார்.  ஒரு நாள் சுப்பிரமணிய அய்யர் காசிக்குப் போவதற்குத் தன்னுடைய அலுவலகத்தில் விடுப்பு எடுத்தார்.  இத்தருணத்தைப் பயன்படுத்தி, அவருடைய மேலதிகாரி காரணமே இல்லாமல் அவர் மேல் திருட்டுப் பட்டம் சுமத்த எண்ணினார்.  அவர் விடுப்பு எடுத்ததற்குக் காரணமே அவர் பணம் திருடியதால் தான் என்று அந்த அப்பாவி மேல் பழிபோட என்ன்னினார்.

Seshadri Swamigal Ashram2

இதையறிந்து கோபமுற்ற சேஷாத்ரி ஸ்வாமிகள் திடீரென்று அவருடைய அலுவலகத்துக்குச் சென்று, நாணயம் இல்லாத அந்த மேலதிகாரியைப் பார்த்து பின்வருமாறு கூறினார். “அந்த அப்பாவியின் மேல் ஒரு குற்றச்சாட்டைத் சுமத்தினாலும், உன் வீட்டில் பிணம் விழும்,  ஞாபகம் வைத்துக் கொள்” என்று மிரட்டினார்.  அந்த மகானின் மிரட்டலைக் கேட்ட அய்யருடைய மேலதிகாரி மிகவும் பயந்து விட்டார்.  மேலும் சுவாமிகளின் மிரட்டலுக்குத் தகுந்தவாறு, அவரும் அடுத்த வாரம் முழுவதும்,  ஜுரத்தினால் படுத்த படுக்கையாய் வீழ்ந்து படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.

திரு.அய்யரின் மேல் பழி போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவரை விட்டு விலகியது.  சேஷாத்ரி சுவாமிகளும், திரு சுப்பிரமணிய ஐயரைப் பார்த்து எச்சரிக்கை செய்தார். “நீ எதற்காக அந்த நாணயம் இல்லாத மனிதரிடம் வேலை பார்க்க வேண்டும்?  ஐந்து மாதத்திற்குள் வேறு வேலைக்கு மாற்றிக் கொள்.  எதற்கும் கவலைப் படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது. அவர் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்!” என்று மேலும் கூறினார்.

சுவாமிகளின் ஆசிப்படி, திரு சுப்ரமணிய அய்யருக்கு  ஐந்து மாதத்திற்குள் திருச்சியில் வேறு வேலை கிடைத்தது.  அவரும் முன் பார்த்த வேலையை விட்டு விட்டுச் சென்றார்.  இந்த நிகழ்ச்சி 1919 ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி ஆபத்தில் அலறிய கஜேந்திரனுக்கு அபயம் அளித்தது போல் உண்மைப் பக்தர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி சேஷாத்ரி ஸ்வாமிகள் அபயம் அளிப்பார்.

ஓம் அருணாச்சலாய  வித்மஹே
ஆத்ம தத்வாய தீமஹி
தந்நோ சேஷாத்ரி  ப்ரசோதயாத்

=====================================================================

குருவின் கீர்த்தி!

மகா பெரியவா ஸ்தூல சரீரத்தோடு நம்மிடையே நடமாடிய காலத்தே அவருக்கு தினசரி தொண்டு புரியும் பாக்கியம் பெற்ற ஒருவர் மகா பெரியவா பற்றி கூறும் அற்புதமான அனுபவங்கள் ஒரு குறுந்தொடராக அடுத்த வியாழன் முதல் நம் தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பற்றிய தொடரும் மீண்டும் துவங்கும். வாசகர்கள் பொறுத்தருள்க!

=====================================================================

For Part 1 of this article:

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

=====================================================================

Also check from our archives…

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

 

17 thoughts on ““எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

  1. குரு வாரத்தில் மிகவும் அருமையான பதிவு நானும் கடந்த ஒரு வாரமாக என் அலுவலகத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். மிகவும் சீரியஸ் ஆக வேறு வேலை தேடலாம் என என் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது, இந்த பதிவு சுவாமிகள் எனக்கு கூறிய அறிவுரை போல் உள்ளது. நல்லதே நடக்கும் என நம்புகிறேன். நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார் நம் ஸ்வாமிகள்’

    எனக்கும் திருவண்ணாமலை சென்று சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஷ்ரமம், ரமணர் ஆஷ்ரமம், யோகி ஆஷ்ரமம் மற்றும் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இறை அருள் இருந்தால் கண்டிப்பாக நடக்கும்

    ராம் ராம் ராம்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ!!
    நன்றி
    உமா வெங்கட்

  2. Sundarji,
    Tell to Guru Honestley. Rest of the things guru wil take cre. This is Honestly Proved in my Life. Excellent Article. Your service to Anmigam may serve well.

    Guru Arul Irundal Thiru Arul Thanaka Varrum.

    With Great Thanks to this Article.
    S.Narayanan.

  3. குருவே சரணம்……நம்மிடம் உண்மையான குருபக்தி மட்டும் இருந்துவிட்டால் எந்த ஆபத்திலும் நம்மை குரு காப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது……விரைவில் சம்பந்தப்பட்ட நம் தள வாசகருடைய பிரச்சினைகள் தீர்ந்து நல்ல வேலை கிடைக்கும்……. குருவே சரணம்……

  4. ராம நாமம் எழுதியதின் பலன்தான், தங்கள் மூலம் ஒரு நல்ல முடிவுக்கான தீர்வை பெற்று உள்ளார்.
    நல்ல செய்தியை, அவர் நம்முடன் பகிரும் நாள் விரைவில் வரும்.

  5. நன்றி. தங்கள் பதிவுக்கு. எண்ணம் போல் வாழ்க்கை அமைய தங்கள் நண்பருக்கும் தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ஜெய் ஸ்ரீ ராம். பிபரே ராம ரசம்.

    கே. சிவசுப்ரமணியன்

  6. நல்லதொரு பதிவு.
    நேற்று மாலை நான் அலுவலகத்தில் இருந்து புறப்படும் போது என் அறையில் fan switch off செய்யாமல் சென்று விட்டேன்.
    இன்று சோதனையாக என் பஸ் சி.ஐ.டி நகர் ஸ்டாப்பில் நிற்காமல் தி.நகர் சென்றுவிட்டது. வேறு பஸ் பிடித்து ஆபீஸ் வருவதற்குள் வழக்கம் போல வேறு ஒருவரை அனுப்பவும் மாட்டிக்கொண்டேன்.
    இத்தனைக்கும் மணி 9.30 தான்.
    ஒரே காச் மூச் கத்தல் தான். அவன் நினைத்திருந்தால் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் எதிரியாயிற்றே என்ன செய்வது ம் எப்போது சந்தர்பம் கிடைக்கும் என்று காத்து கொண்டு இருப்பவர்களுக்கு நம் கஷ்டம் புரியாது, தெரியவும் தெரியாது.
    அதை நினைத்து வேதனை பட்டு கொண்டே வேலை முடித்து பதிவு பார்த்தால் இந்த பதிவு வந்துள்ளது.
    அதிலும் சுவாமிகள் கூறிய அந்த ஐந்து மாதம் ஒரு புள்ளியாய் என் மனதில் பதிந்தது.
    ஏற்கனவே சில நாட்களாக துயர் கொண்ட மனது இன்று காலை மிகவும் விசனத்துடன் இருந்தது.
    ஏதோ நல்லது நடந்தால் போதும்.

    1. வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். காங்கேயநல்லூர் பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று பிற்பகல் சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வெள்ளிக்கிழமை பிரார்த்தனை பதிவு மற்றும் இதர பணிகளுக்காக தற்போது அலுவலகம் புறப்பட்டுகொண்டிருக்கிறேன்.

      காங்கேயநல்லூரில் இரவு முழுதும் நிகழ்சிகள் என்பதால் அனைவருக்காகவும் குறிப்பாக பிரச்சனைகள் அதிகம் உள்ள வாசகர்கள் பலருக்கு பிரார்த்தனை செய்தபடி இருந்தேன்.

      ரைட்மந்த்ரா வாசகர் என்கிற ஒரு தகுதியே உங்கள் அனைவருக்கும் திருவருளையும் குருவருளையும் ஒருங்கே பெற்று தர போதுமானது. காலம் இதை அனைவருக்கும் புரியவைக்கும்.

      வாசகர்கள் அனைவருக்கும் குருமார்களின் பரிபூரண நல்லாசிகளும், வழிகாட்டுதல்களும் நிச்சயம் உண்டு. கவலைவேண்டாம்.

      குருவிருக்க கவலை எதற்கு? தாயினும் சாலப்பரிந்து தயை புரியும் கந்தன் இருக்க கலக்கம் எதற்கு ??

      – சுந்தர்

    2. பரிமளம் நல்ல விசயங்களை நம் தளம் மூலம் அறிந்து செயல் படுத்தும் நமக்கு கவலை எதற்கு.? நம் குருவின் அருள் நம் தள வாசகர்களுக்கு பரிபூர்ணமாக உண்டு. நானும் இந்த ஐந்து மாதத்தை தான் இந்த பதிவை படித்ததும் நினைத்தேன். எதோ ஒரு நல்லது நமக்கு நடக்கப் போகிறது என்று மட்டும் உறுதியாக சொல்வேன். நல்ல காலம் சீக்கிரம் கனியும் …

      நான் 5 நாட்களாக என் அலுவலகத்தில் தாங்கொன்னாத் துரத்தில் இருந்தேன். இன்று இந்த பதிவை படித்ததும் தான் எனக்கு திருப்தி ஏற்பட்டது.

      அதே போல் நம் தள வாசகருக்கும் நல்லது நடக்க இறைவன் அருள் புரியட்டும்., ராம நாமத்தின் மகிமை அளப்பற்கரியது

      குரு …. கடாக்ஷம் …..
      குருவே …. சரணம் ….

      நன்றி
      உமா வெங்கட்

  7. ஜி…!

    தங்களுக்கு மிகவும் நன்றி, மற்ற விபரங்களை தொலைபேசியில் பகிர்ந்து கொள்கிறேன்..! இந்த சூழல் எனக்கு மறு உருவாக்கத்தை நினைவூட்டுகிறது,

  8. Nice write -up
    Guru plays many role in lifting the soul to next level.in the process, whatever
    difficulties come in the worldly life of who surrender to Him , he appears and do the needful… I have experienced similar instances…

  9. வணக்கம் சுந்தர் சார்

    ராம நாம துக்கு ஈடுஇணை வேற எதுவும் இல்லை நம்பிக்கையுடன் செய்யும் எந்த காரியம் வீன் போனது இல்லை

    நன்றி

  10. வாழ்க வளமுடன்

    நீ எதை நினைகிராயோ அதுவாகின்றாய்

    நன்றி

  11. This is first time I have seen this site and I found very interesting, informative and motivating too. Long liver your service through this site.

  12. வணக்கம் சுந்தர் சார்

    நானும் அலுவலகத்தில் சுமார் இரண்டு மாதங்களாக ,
    மேலதிகாரியின் தொல்லையால் மிகுந்த மன உளைச்சல்
    உடன் இருக்கிறேன்.
    விரைவில் திருவண்ணமலை சென்று
    சேசாத்திரி சுவாமிகளை தரிதித்து வர இருக்கிறேன்.
    எப்படி ஒரு நல்ல தகவலை தந்த தங்களுக்கு
    கே
    மிக்க நன்றி.

    raja

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *