Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

print
ன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினத்திற்கு இதைவிட ஒரு பொருத்தமான பதிவை நாம் அளிக்க முடியாது. படியுங்கள்…. உங்களுக்கே புரியும்!!

1964 ஆம் ஆண்டு. பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தனது புதிய படம் ஒன்றுக்காக ஹீரோயினை தேடி மும்பை போய் எதுவும் வொர்க் அவுட் ஆகாமல் தோல்வியுடன் விமானத்தில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அந்த விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த அந்த பெண்ணையும் அவரது பாடி லாங்குவேஜையும் அவருக்கு மிகவும் பிடித்துவிட, “பார்க்க லட்சணமா அழகா இருக்கியேம்மா…. ஹீரோயினா நடிக்கிறியா?” என்று கேட்டார்.

Kadhalikka_Neramillai_posterஅவர் ஏதோ “ஐ…லவ் யூ” சொன்ன ரேஞ்ஜுக்கு வெட்கப்பட்டு கேபினுக்குள் ஓடினார் அந்த பெண். அவரது அழகைவிட அவரது வெட்கம் ஸ்ரீதருக்கு பிடித்துவிட அப்போதே முடிவு செய்துவிட்டார் ‘இவர் தான் நம் அடுத்த படத்தின் ஹீரோயின்’ என்று.

அவரிடம் பேசியதில், அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தாலும் வீட்டில் சம்மதிப்பார்களா என்று தெரியாது என்றார். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன். உன் விருப்பத்தை சொல் போதும்” என்று ஸ்ரீதர் கூற, ஒரு வழியாக நடிப்புலகில் பிரவேசிக்க ஒப்புக்கொண்டார் அந்த ஏர் ஹோஸ்டஸ்.

ரசகொண்டா வசுந்தராதேவி என்கிற அவர் பெயர் சினிமாவுக்காக காஞ்சனாவானது. (அவர் தந்தையார் பெயர் காஞ்சனா சாஸ்திரி).

1964 இல் இவர் நடித்த முதல் படம் ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீசானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஆனால் சினிமா வாழ்க்கை அவருக்கு நிறைவாக இருந்ததா? அதை தெரிந்துகொள்ளும் முன் வசுந்தராதேவியின் (காஞ்சனா) இளமைப் பருவத்திற்கு செல்வோம்…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த காஞ்சனாவுக்கு எல்லா பணக்கார வீடுகளைப் போலவே கேட்டது எல்லாமே கிடைத்தது. அன்பு ஒன்றைத் தவிர. சதாசர்வ காலமும் பணக்கார அப்பாவும் பணக்கார அம்மாவும் சண்டைப் போட்டுக்கொள்வதையே பார்த்து வளர்ந்த காஞ்சனாவுக்கு மனதளவில் அது ஒரு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு டைவர்ஷன் வேண்டி பரதமும் கர்நாடக இசையும் கற்றுகொண்டார். எதிலும் ஆடம்பரம் அகலக்கால் என்று வாழ்ந்ததால் அவர் தந்தைக்கு வியாபாரத்தில் அடி மேல் அடி. சொத்துக்கள் ஒவ்வொன்றாக பறிபோனது.

படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது வசுந்த்ராவிற்கு. வேலை தேடி அலைந்தபோது அவரது எடுப்பான தோற்றத்திற்கும் வசீகரமான முகத்திற்கும் விமானப் பணிப்பெண் உத்தியோகம் கிடைத்தது. குடும்பத்தை காப்பாற்ற அந்த வேலையை ஏற்றுகொண்டார் வசுந்தரா தேவி.

Kanchana then and now

வேலைக்கு சேர்ந்து சில மாதங்களில் பதிவின் தொடக்கத்தில் பார்த்தபடி இயக்குனர் ஸ்ரீதரை விமானத்தில் சந்தித்தார்.

விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து சில ஆயிரங்கள் சம்பாதிப்பதைவிட, மகள் நடிகையானால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாமே என்று வசுந்தராவின் பெற்றோருக்கு தோன்றவே இயக்குனர் ஸ்ரீதருக்கு மறுப்பேதும் சொல்லாமல் தங்கள மகளை நடிகையாக்க சம்மதித்தனர்.

படம் பிய்த்துக்கொண்டு ஓடி, காஞ்சனாவை தேடி தென்னிந்தியா மொழிகள் அனைத்திலும் வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன. தந்தையின் கடனை இராப்பகலாக நடித்து நடித்து அடைத்தார்.

வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருக்கிறதென்றால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை இந்த உலகில் வதைத்திருக்கிறது. அதற்கு காஞ்சனா மட்டும் விதிவிலக்காவாரா என்ன?

ஒரு கட்டத்திற்கு மேல் தான் உணர்ந்தார், தன்னைவிட தான் சம்பாதிக்கும் பணத்தில் தான் தான் பெற்றோருக்கு பிரியம் என்பதை. காஞ்சனாவை கேட்க்காமலே புதிய புதிய படங்களுக்கு அட்வான்சாக வாங்கிக் குவித்தனர் அவர்கள். ஒய்வு ஒழிச்சலின்றி நடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினார் காஞ்சனா. நடிகைகளுக்கே பிரதேயகமாக உரிய தொல்லைகள் வேறு.

அவருக்கு ஒரே ஆறுதலாகவும் துணையாகவும் இருந்த தங்கையும் ஒரு நாள் தான் காதலித்தவரை கரம் பற்றி வீட்டை விட்டு வெளியேறிவிட, தனிமையில் தவித்தார் காஞ்சனா.

தனக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்கிற அக்கறையே தன் பெற்றோருக்கு துளியும் இல்லை என்பதை அவர் உணர்ந்தபோது அனைத்தும் அவருக்கு கசந்தது. போதாக்குறைக்கு இவர் தந்தை இவரைப் போலவே செக்குகளிலும் இதர டாக்குமெண்ட்டுகளிலும் கையெழுத்திட்டு இவரது உழைப்பையும் சம்பாதித்யத்தையும் சொத்துக்களையும் அபகரித்தார்.

பொறுத்தது போதும் என இவர் வெகுண்டெழுந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது. இவரை விட்டு இளமையும் நீங்கியிருந்தது. வீட்டை விட்டு ஒரு நாள் விரட்டப்பட்டார் காஞ்சானா.

அவர் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதலாக செயல்பட்டது அவரது தங்கை மட்டும் தான். பெங்களூரில் தங்கை வீட்டில் வசித்தபடி, தனது சொத்துக்காக நீதிமன்றத்தில் போராட துவங்கினார் காஞ்சனா.

தன் வாழ்நாள் மற்றும் இளமை முழுதையும் குடும்பத்திற்காக அர்ப்பணம் செய்த காஞ்சனாவுக்கு தனக்கென்று ஒரு வாழ்க்கையை குடும்பத்தை அமைத்துக்கொள்ள சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சுமார் 50 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடித்த ஒரு நடிகை, பெங்களூரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழத் துவங்கினார்.

நடிகைகளின் வாழ்க்கையை இஷ்டத்திற்கு மெல்லுவது தான் பத்திரிக்கைகளின் வழக்கமாயிற்றே. அவரவர் காஞ்சனாவை பற்றி தங்களுக்கு தோன்றிய கட்டுக்கதைகளை எல்லாம் எழுதினர்.

தற்செயலாக இவரை பெங்களூரில் ஒரு கோவிலில் எளிமையான காட்டன் புடவையில் இவர் பிரசாதம் வாங்கி சாப்பிடுவதை ஒரு சிண்டு முடியும் பத்திரிக்கையின் நிருபர் பார்த்துவிட, அவ்வளவு தான், கந்தல் துணியை கட்டிக்கொண்டு கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு காஞ்சனா காலம் கடத்துகிறார் என்று பரபரப்புக்காக எழுதிவிட்டார்.

காஞ்சனா அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “கோவிலுக்குப் போகும் பொழுது சாதாரண காட்டன் புடவையுடன் போவதில் என்ன தவறு?  அதை கிழிந்த புடவை என்று கூறி இருப்பது அப்பட்டமான பொய்.  கோவிலுக்குப் போகிற யாரும் அங்கு தரப்படும்  பிரசாதத்தை  பக்தியுடன் வாங்கிச் சாப்பிடுவதுண்டு. அப்படி நான் வாங்கிச் சாப்பிட்டதாலேயே அது தான் என் சாப்பாடு என்று அர்த்தமா? வீதியில் நானே காய்கறி வாங்கினேன் என்பதால் எப்படி துயரமான நிலையாகும்?  பெரிய இடத்துப் பெண்மணிகள் அவர்களே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவதில்லையா?  கறிகாய் கடையில் பர்சில் இருந்து சில்லறை எடுத்து தந்தால் கையில் வேறு ருபாய் இல்லை என்று அர்த்தமா?

எனக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகளை எல்லாம் நீங்கி , பெங்களூரில் நான் சொந்த பிளாட்டில் வசித்து வருகிறேன். என் சகோதரிக்குத் தனியாக சொந்த வீடு உள்ளது. அந்த பத்திரிகையில் கூறி இருப்பது போல நான் பரிதாபமான நிலையில் இல்லை என்பதை நான் ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன்.”

இது நடந்தது மார்ச் மாதம் 2010 ஆம் ஆண்டு.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவர் செய்தது தான் மிகப் பெரிய புரட்சி. யாரும் செய்யத் துணியாத, எவருக்கும் மனம் வராத ஒன்று.

தன்னை குறித்து தன் நிலை குறித்தும் அவதூறு பரப்பிய அனைவர் முகத்திலும் அவர் செயல் டன் கணக்கில் கரியை அப்பியது.

எப்படி?

Kanchana gives all property to tirumala
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் அவர்களிடம் சொத்து பத்திரத்தை காஞ்சனாவும் அவர சகோதரியும் ஒப்படைத்தபோது…!

தனக்கு நியாயமாக சேரவேண்டிய சொத்துக்களை சட்டரீதியாக போராடி மீட்டவர், அதில் இம்மியளவு கூட துய்க்க விருப்பம் இன்றி ஒரு துறவி போல அப்படியே அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதிவைத்துவிட்டார்.

ஆம்… தனது கோடிக்கணக்கான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக கொடுத்துவிட்டு தற்போது ஒரு துறவி போல பற்றின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார் காஞ்சனா. வாழ்வாங்கு வாழ்ந்து பின்னர் அந்த வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல.

இதுவல்லவோ தியாகம்…!

Sri Kala Sudha Telugu Association Awards Stillsஇன்றைக்கு பணம் பலரிடம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? ‘ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்’ என்பது போலத்தான் அவர்கள் விஷயத்தில் நடக்கிறது.

காஞ்சனா அவர்கள் தனது சொத்துக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்தது பற்றி அதன் நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் ஐ.ஏ.எஸ்., அப்போது செய்தியாளர்களிடம் கூறியபோது: ’’காஞ்சனா அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சட்டப்படி தானமளித்த இடத்தை டி.டி.டி.நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த இடத்தின் மதிப்பு ஏறக்குறைய 25 கோடி ரூபாய் ஆகும். இங்கு, முன்பகுதியில் 3 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஓட்டலும், பின்புறம் ஏறக்குறைய இரண்டரை கிரவுண்டு காலி மனையும் உள்ளது.

சிலருடைய ஆக்கிரமிப்பில் இருந்த இந்த இடத்தை, கோர்ட்டு, வழக்கு என்று அலைந்து, ஏறக்குறைய 22 ஆண்டு போராட்டத்துக்குப்பின் திரும்பப் பெற்றுள்ளதாகவும், எனவே, ஏற்கனவே பிரார்த்தித்துக் கொண்டவாறு, இதை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குகிறோம்’ என்றும் காஞ்சனா, கிரிஜா ஆகியோர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற சொத்துக்களை நாங்கள் விற்று பணமாக்கிவிடுவோம். ஆனால், காஞ்சனாவின் வேண்டுகோளை ஏற்று, இங்கு விரைவில் தியான மண்டபம், கலாசார மையம் உள்ளிட்டவை அமைக்கப்படும். அவர் வழங்கிய 4 1/2 கிரவுண்டு நிலமும் எவ்வித சட்டசிக்கலும் இன்றி ஏழுமலையான் கோவிலுக்கு தரப்பட்டுள்ளது. இன்னும் 2 கிரவுண்டு நிலம் இருப்பதாகவும் அதையும் கோவிலுக்கு வழங்க இருப்பதாவும் தெரிவித்துள்ளனர். அதையும் டி.டி.டி. நிர்வாகம் எடுத்துக்கொள்ளும்’’என்றுதெரிவித்தார்.

இது குறித்து காஞ்சனாவின் சகோதரி கிரிஜாவின் கணவர் திரு.பாண்டே, அவர்கள் கூறியதாவது : “காஞ்சனாவுக்கு நியாயமாக சேர வேண்டிய இச்சொத்தின் மீது பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. ஏழுமலையான் அருளால் இவை அனைத்தும் சுமூகமாக நடைபெற்றதாகக் நாங்கள் நம்புகிறோம். எனவே தற்போது இச்சொத்தினை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்குகிறோம். தேவஸ்தானம் இந்த இடத்தில் ஆன்மிகம், மதம், கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கத்திற்காக இந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மேலும் 4,500 சதுர அடி நிலத்தையும் எதிர்காலத்தில் கோயிலுக்கு தானம் வழங்க எண்ணியுள்ளோம்” என்றார்.

Kanchana property @ g n chetty road

Kanchana propertyகாஞ்சனா அவர்கள் தானம் வழங்கிய நிலம் எது என்று நாம் விசாரித்தபோது சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில், ஓட்டல் மீனாட்சி பவன் அமைந்துள்ள நிலமும், அதன் பின்புறம் உள்ள பகுதியும் என்று தெரியவந்தது. எதையும் ஆதாரப்பூர்வமாக தருவது  நமது வழக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இன்று காலை அலுவலகம் வரும்போதே நேரே ஜி.என்.செட்டி சாலைக்கு சென்று குறிப்பிட்ட அந்த இடத்தை புகைப்படத்தை எடுத்து வந்தோம்.

Kanchana property 2

“காஞ்சனா அவர்கள் இதை ஏன் ஒரு பணக்கார சாமிக்கு அளிக்கவேண்டும்? யாரேனும் 20 – 30 ஏழைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுத்திருக்கலாமே?” என்று ஒரு விமர்சனம் அவர் சொத்துக்களை ஒப்படைத்த போது எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

தொண்டு செய்வது எளிது. ஆனால் அதை துய்க்க சரியான பயனாளியை தேர்ந்தெடுப்பது இங்கே அத்தனை எளிதான காரியம் அல்ல. காஞ்சனா அவர்களால் இதையெல்லாம் ஆராய்ந்து செய்துகொண்டிருக்க முடியுமா? காஞ்சனா அவர்கள் வேறு யாருக்கேனும் சொத்துக்களை தானமளித்தாலோ அல்லது கொடுத்தாலோ எதிர்தரப்பினர் நீதிமன்றப் போராட்டத்தை மீண்டும் துவக்கி அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடும். ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்தால் சட்ட ரீதியாக அவர்களால் எதையும் சமாளிக்க முடியும். மேலும் திருமலைக்கு என்று எழுதி வைத்துவிட்ட சொத்தை தங்களுக்கு உரிமை கொண்டாட அத்தனை சீக்கிரம் யாருக்கும் துணிச்சல் வராது என்று அவர் கருதியிருக்கலாம். இதை வணிக ரீதியாக பயன்படுத்தாமல் ஆன்மீக கலாச்சார முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று காஞ்சனா கூறியிருப்பதை கவனிக்கவேண்டும்.

(போட்டோவை கொஞ்சம் உத்துப் பாருங்க. இப்போ கூட இந்த இடத்தை ஆட்டையை போட முயற்சி நடக்கிறது தெரியும்!)

எப்படியோ வைகுண்டத்தில் ஸ்ரீனிவாசனின் திருவடி நிழலில் காஞ்சனா அவர்களுக்கு இப்போதே ஒரு இடம் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது.

பணம், பணம் என்று பணத்திற்காக பேயாய் அலையும் இவ்வுலகில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருமலை தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்துள்ள காஞ்சனா அவர்களின் தியாகத்தை இங்கே பாராட்டுவதுடன், அவரது இந்த தொண்டில் உறுதுணையாய் இருந்து அதை செவ்வனே செய்ய முழு ஒத்துழைப்பை நல்கிய அவர் சகோதரி கிரிஜா மற்றும் அவர் கணவர் பாண்டே அவர்களையும் நாம் இங்கே நினைவு கூர வேண்டும். அவர்களுக்கும் நம் நன்றி.

மகளிர் தின சிறப்பு பதிவாக ஒரு மாதரசியை பற்றிய பதிவை அளித்ததில் பெருமிதம் கொள்கிறோம்.

============================================================

மெகா டி.வி.  ‘மகளிர் தின விருதுகள் 2015’

மெகா டி.வி. சார்பாக இன்று மார்ச் 8, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமரஜார் அரங்கில் ‘மகளிர் தின விருதுகள் 2015’ நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி மெகா டி.வி.யில் நேரலை செய்யப்படுகிறது. நமது அலுவலகத்திற்கே வந்து மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நமக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை ரசிக்கவும் புகைப்படம் எடுக்கவும் மாலை செல்லவிருக்கிறோம்.

விருது நிகழ்ச்சிக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

நேரலை என்பதால் அனைத்தும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.

நம் தளம் சார்பாக நாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறோம். அவ்வளவே. மற்ற விபரங்கள் விரைவில்….!

– ‘ரைட்மந்த்ரா’  சுந்தர்,
ஆசிரியர், www.rightmantra.com

============================================================

Also check :

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

============================================================

[END]

11 thoughts on “சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

  1. அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். காஞ்சனா அவர்களின் கதையைப் படிக்க படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது. இந்த மாதிரி துணிச்சல் மிகுந்த பெண்ணை பற்றி மகளிர் தினத்தன்று பதிவை அளித்து அனைத்து மகளிருக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்கள். ஏழுமலையானின் இணை அடி நிழலில் தங்குவதற்கு காஞ்சனாவிற்கு இடம் கிடைத்து விட்டது. அவர்களின் தியாகதிற்கு தலை வணங்குகிறேன்.

    மெகா டி.வி.யின் விருதுகள் நிகழ்ச்சியை பற்றி பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    நன்றி
    உமா வெங்கட்

    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

      அடுத்த வருடம் நம் தளம் சார்பாக மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும்,….

      நேற்று மெகா டிவி யில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடி கண்டு களித்தேன். மிகவும் அருமை. அதில் விருது வாங்கிய சாதனையாளரான திருமதி பேட்ரீசியாவை தாங்கள் முதலிலேயே நம் தளம் சார்பாக பேட்டி எடுத்து எங்களுக்கு அறிமுகப் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

      நன்றி
      உமா வெங்கட்

  2. வெள்ளித்திரையில் ஒரு வித்தியாசமான, போற்றத்தகுந்த பெண்மணி.

    தங்கள் கூற்றின் படி, காஞ்சனா அவர்களின் சகோதரி மற்றும் அவருடைய கணவரும் மிகுந்த பாராட்டுக்கு
    ஏற்புடையவர்கள்.

    திருமலை வாசனுடைய பேரருள் இவர்களுக்கு நிச்சயம் உண்டு.

  3. சுந்தர் அண்ணா

    மிகவும் அருமையான பதிவு
    மகளிர் தின வாழ்த்துக்கள்

  4. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    மெகா டிவி ன் விருதுக்கள் நிகழ்ச்சி பற்றி ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்

    நன்றி

  5. சுந்தர்ஜி
    பெண்ணின் பெருமையை பரைசாற்றும் இந்த பதிவு சூப்பர்.
    கஞ்சனா அவர்களின் துணிவு போல் நாமும் எப்போதும் துணிவுடன் செயல் பட வேண்டும்.
    மகளிர் தின் வாழ்த்துகள்

  6. வாழ்க வளமுடன்

    மகளிர் தின வாழ்த்துகள்

    எல்லாம் அவன் செயல்

    நன்றி

  7. காஞ்சனா அவர்களின் உதார குணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம்……மாதருள் மாணிக்கம் அவர்…… நேற்று மெகா மகளிர் விருது நிகழ்ச்சி தொலைக்காட்சி நேரலையில் சுந்தர் சார் தெரிகிறாரா என்று தேடினோம்……….பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி….அது பற்றிய பதிவை எதிர் நோக்குகிறோம்……..

    1. நாங்களும் சுந்தர் அவர்களை நிகழ்ச்சி ஆரம்பம் முதல் தேடி கடைசியில் , அனைத்து சாதனையாளர்களையும் ஒரு சேர stage இல் நிற்கும் பொழுது திரு சுந்தர் அவர்கள் கிளிக் செய்த பொழுது பார்த்தோம். மிகவும் அருமையான மகளிர் தின நிகழ்ச்சி

      நன்றி
      உமா வெங்கட்

  8. Really she becomes the role model for all female and male actors in the country. She has taken the right decision to hand over the properties to Devasthanam and the amount has to be spent for the benefit of society either towards medical expenses, educational expenses or any other welfare expenses. May God bless Ms Kanchana

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *