Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

print
ண்பர் அனுப்பிய ‘ரமண திருவிளையாடற் திரட்டு’ படித்து வருகிறோம். நூலை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. சித்து விளையாட்டுக்களில் ரமணர் மிகவும் கை தேர்ந்தவர் என்றாலும் அதை காண்பித்து ஒருபோதும் பக்தர்களை ஈர்க்கவோ தக்கவைத்துக்கொள்ளவோ அவர் முயற்சிக்கவில்லை. அதே சமயம் அவரால் இயலாதது எதுவும் இல்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தன்னை சந்திக்கவரும் அனைவரின் ஆன்மாவையும் விழித்தெழ செய்து ‘நாம் யார்?’ ‘எது உண்மையான பக்தி?’ ‘எது உண்மையான வழிபாடு?’ என்பதை அவர்களுக்கு புரியவைக்கும் நோக்கில் தான் அவரது பெரும்பாலான திருவிளையாடல்கள் அமைந்துள்ளது.

(ரமணர் தொடர்புடைய இந்த ரமண திருவிளையாடல் நிகழ்வுகள் 1950க்கு முன்பு நடைபெற்றவை. ரமணர் 1950 ஆம் ஆண்டு சித்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!)

இந்த வாரம் ‘முத்துக்கள் மூன்று’ போல மூன்று நிகழ்வுகளை பார்க்கலாம்.

பகவானின் இந்த புகைப்படம் மிகவும் விசேஷமான ஒன்று. பார்ப்பதற்கு சாட்சாத் மகா பெரியவாவை போலவே இருப்பார்.
பகவானின் இந்த புகைப்படம் மிகவும் விசேஷமான ஒன்று. பார்ப்பதற்கு சாட்சாத் மகா பெரியவாவை போலவே இருப்பார்.

பரமஹம்சர்!

பெங்களூரில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தர் ஒருவர் இருந்தார். அவரில்லி ராமகிருஷ்ணர் போல மகான் ஒருவர் தனக்கு குருவாக கிடைக்கமாட்டாரா என்கிற ஏக்கம் இருந்து வந்தது.

சில காலங்களாக திருவண்ணாமலையில் ரமண மகரிஷி என்ற ஒருவர் மிக உன்னத ஸ்ததியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டார்.

இருந்தாலும் சென்று தரிசிக்க விரும்பவில்லை.

போலியாக பலர் மகான்களாக பலர் நடித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ராமகிருஷ்ணர் போல உண்மையான மகான்கள் தற்காலத்தில் மிக அரிது என்கிற எண்ணமே அதற்கு காரணம்.

இருந்தாலும், திரும்ப திரும்ப, பலரால் ரமண மகரிஷி பெயர் உச்சரிக்கப்படவே, தானே நேரில் சென்று பார்த்து வருவோம் என்று முடிவு செய்து, தன்னிடம் இருந்த ராமகிருஷ்ணர் படத்தின் முன் பிரார்த்தனை செய்தார்.

“குருதேவா, நீ தான் எனக்கு போற இடத்தோட உண்மையை காட்டித் தரணும்.

உனக்கு சமமானவர்னா எனக்கு காட்டிக்கொடு என்று வேண்டிக்கொண்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.

வந்தவர் இரண்டு முழம் பூ வாங்கிக்கொண்டு பகவானை பார்க்கச் சென்றார்.

பகவானை வணங்கிவிட்டு அப்பூவை சமர்பித்தார்.

பகவான் இரண்டு முழப் பூவை சரிசமமாக அளப்பது போல, அளந்து சிறு கத்தி கொண்டு இரண்டு சரியான அளவுகளாக வெட்டினார்.

இரண்டையும் சேவகரிடம் கொடுத்து “இதை அம்மா கோவிலுக்கு கொடுத்திடு. இன்னொன்னை இங்கே இருக்குற ராமகிருஷ்ணர் படத்துக்கு  போடு!” என்றார்.

சாது லக்ஷணம்

டாக்டர்.கே. சுவாமிநாதனின் தந்தை கிருஷ்ணஸ்வாமி திருவண்ணாமலை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

1927 ல் பகவானை முதன்முதலாக தரிசித்தார். அப்போது பகவானிடம், ‘திருவண்ணாமலையில் எங்கே பார்த்தாலும் சாது சன்யாசியா இருக்கா! யார் அசல்னு தெரிஞ்சிக்கிறது?’ என்று கேட்டார்.

“யாரோட சந்நித்தியத்துலே மனசு முயற்சியில்லாமே அமைதி அடையுறதோ அவா அசல்” என்றார் பகவான்.

ஞானோபதேசம்

பகவானை தரிசிக்க வந்த ஒருவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

ஒரு நாள் அதிகாலையிலேயே பகவானிடம் வந்து, ‘ராத்திரியெல்லாம் நாய் குரைச்சிகிட்டே இருந்தது. ஒரே சப்தம். தியானம் பண்ணமுடியலே!’ என்று புகார் கூறினார்.

பகவான், ‘எந்த நாயும் குரைக்கலே… உம்ம மனசு தான் குரைச்சது!’ என்றார்.

=================================================================

இது ஈசன் திருவிளையாடல்!

வாசகர்களுக்கு வணக்கம். நமது நேற்றைய வெளியூர் பயணம் + திருத்தல தரிசனம் திட்டமிட்டதைவிட மிக மிக சிறப்பாக ஈசனருளால் நடந்தேறியது.

நமது முந்தைய பதிவுகளில் நாம் அளித்திருந்த வேண்டுகோளை பார்த்துவிட்டு வாசக அன்பர் ஒருவர் நமது தளத்திற்காக வழங்கிய மடிக்கணினி (laptop) நமக்கு மிகவும் உபயோகமாய் இருந்தது. அதன்மூலம் தான் நேற்று கரூரில் இருக்கும்போது பதிவளித்தோம். நண்பரின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு பின்னர் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர், பசுபதீஸ்வரர், கருவூரார் சமாதி, பாலசுப்ரமணிய சித்தர் சமாதி ஆகியவற்றை தரிசித்துவிட்டு  கரூரிலிருந்து புறப்படவே மதியம் 2.00 ஆகிவிட்டது. எனவே திட்டமிட்டபடி நேற்று திருவெண்காடு செல்லமுடியவில்லை.

திருவெறும்பூர் எறும்பீசர் கோவில் திருக்குளம்
திருவெறும்பூர் எறும்பீசர் கோவில் திருக்குளம்

நாம் ஒரு கணக்கு போட்டால் ஈசன் ஒரு கணக்கு போடுகிறான். (அப்பன் திருவிளையாடல்!). நமது கணக்கு தவறாக போகும். அவன் கணக்கு? நாம் செய்த பாக்கியம் என்றே சொல்லவேண்டும். திருவெண்காடு, நாகப்பட்டிணம் பயணத்தை இரத்து செய்துவிட்டு கரூரிலிருந்து நேரே திருச்சி வந்து திருச்சியில் திருவெறும்பூர், திருநெடுங்குளம், வயலூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்தோம். எத்தனை அழகான கோவில்கள்… என்ன ஒரு அனுபவம்…. என்ன ஒரு தரிசனம்… பிறவிப் பயனை அடைந்தோம் என்றே சொல்லலாம். முருகன் தான் நமக்கு எப்பொழுதுமே ஸ்பெஷல் ஆயிற்றே. வயலூர் முருகன் ஒரு படி மேலே சென்று நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தான். விபரங்கள் விரைவில்… அத்தனை அழகையும் ஏதோ காமிராவில் இயன்றவரை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.

இத்தனையும் முடித்து இன்று காலை பேருந்தில் சென்னை வரும்போது மணி 4.30 am. நேரே வீ ட்டுக்கு சென்று நமது மொபைல் மற்றும் காமிரா ஆகியவற்றை சிறிது நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, குளித்து முடித்து அங்கிருந்து கடற்கரை பயணம். இன்று மாசி மகா தீர்த்தவாரி என்பதால் சென்ற ஆண்டைப் போலவே பல திருக்கோவில்களின் இறைமூர்த்தங்கள் சமுத்திரத்துக்கு நீராட எழுந்தருளியிருந்தனர். ஒரே நேரம் பல கோவில்களின் மூர்த்தங்ளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

Masimagam
இன்று காலை சென்னை கடற்கரையில்!

இன்று காலை 6.30 க்கு கடற்கரை சென்ற நாம் சற்று நேரத்திற்கு முன்னர் தான் திரும்பினோம். நீங்கள் ஆவலுடன் காத்திருப்பீர்கள் என்பதால் வந்தவுடன் ரமண திருவிளையாடற் திரட்டிலிருந்து சில முத்துக்களை அளித்திருக்கிறோம்.

எதற்கு இதையேல்லாம் சொல்கிறோம் என்றால் நாம் அளிக்கவேண்டிய, அளிக்க நினைத்த, குறிப்பிட்ட சில பதிவுகளை இந்த டைட் ஷெட்யூலில் அளிக்க இயலவில்லை. நம்முடன் நிகழ்வுகளுக்கோ, விழாக்களுக்கோ அல்லது சந்திப்புக்களுக்கோ வரும் வாசகர்கள் / நண்பர்கள் குறிப்பிட்ட அந்தந்த பதிவுகள் வெளியிடுவது தொடர்பாக நம்மை எந்த விதத்திலும் நிர்பந்திக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அது நமக்கு சங்கடத்தை தருகிறது. உரிய நேரத்தில் வரவேண்டிய பதிவுகள் நிச்சயம் வரும்.

ஒரு பதிவு எப்போது வருகிறது என்பதைவிட எப்படி வருகிறது என்பதையே என்றும் கவனத்தில் கொள்ளவேண்டுகிறோம்.

புரிதலுக்கு நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்

=================================================================

Also Check :

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=================================================================

[END]

 

6 thoughts on “ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

  1. வணக்கம்………..

    தங்கம் உருவத்தில் மாறுபட்டாலும் அதன் அடிப்படை குணம் ஒன்றே…..அதுபோல் ரமணர், மகா பெரியவா, ராமகிருஷ்ணர் போன்ற குருமார்கள் உருவத்தில் வேறுபட்டாலும் அவர்களின் சான்னித்தியம் என்னவோ ஒன்றுதான்……….குருவே சரணம்………

    தாங்கள் தரிசித்த ஆலயங்களின் பட்டியலைப் பார்க்கும் போது ஏக்கம்தான் வருகிறது…………கரூருக்கு எத்தனை முறை சென்றாலும் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் மட்டும் இன்னும் கிடைக்கவேயில்லை……….தாங்கள் அளிக்கப் போகும் பதிவுகளின் மூலமாவது எங்கள் ஏக்கம் தீரட்டும்………….

  2. இன்றைய குரு வாரத்தில் ரமணரைப் பற்றிய மூன்று முத்தான கதைகளைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நேற்றைய பயணத்தைப் பற்றிய பதிவை நேரம் கிடைக்கும்பொழுது பதிவு செய்யவும். ரமணர் படம் பார்க்க மகா பெரியவா மாதிரியே உள்ளது.
    நன்றி
    உமா venkat

  3. முத்துக்கள் மூன்று பதிவு அருமை.
    கோவில் குளத்தை நீருடன் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசம்.
    தீர்த்தவாரி இன்று காலை நன்றாக அமைந்தது.
    நாம் நினைத்து என்ன அவர் நினைத்தால் எல்லாம் நடக்கும்.
    உங்கள் வசதி போல பதிவு போடுங்கள் ஒன்றும் எங்களுக்கு கஷ்டமில்லை. படிக்க அல்ல உங்களுடன் எங்களை உங்கள் எழுத்து மூலமாக அழைத்து செல்லும் தல யாத்திரைக்கு.
    நன்றி

  4. அருணமலை குரு ரமணா கருணை எழில் விழி வதனா

    ப.சங்கரநாராயணன்

  5. “முத்துக்கள் மூன்று” பதிவு, முத்தான பதிவு.
    நாம் அனைவரும் நம் மனதினை சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது.

Leave a Reply to Kavitha Nagarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *