Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > All in One > மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

print
மார்கழி மாத மகத்துவம் பத்தி பதிவு போட்டாச்சு. போட்டா போதுமா? நாம அது மாதிரி நடந்துக்கணும் இல்லையா? அதுனால் எப்படியாவது காலைல 4.30 மணிக்கு எழுந்துருச்சு குளிச்சு ரெடியாகி விஸ்வரூப தரிசனத்துக்கு போய்டணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்.

கம்பெனிக்கு யாரை கூப்பிடுறது? யாராவது ஒருத்தர் வந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு.

எதேச்சையா நண்பர் மாரீஸ் கண்ணன் கிட்டே நைட் பேசும்போது, (நந்தம்பாக்கம் கோவிலுக்கு நம்ம கூட வந்தாரே அவரு தான்!) மார்கழி பதிவு பத்தி பேச்சு வந்தது. பதிவுல நான் சொல்லியிருந்த பூவிருந்தவல்லி வரதராஜ பெருமாள் கோவில் பத்தி விசாரிச்சாரு.

“நீங்களும் வர்றீங்களா?”ன்னு கேட்டேன்.

கொஞ்சம் யோசிச்சாரு. “வர்றதை பத்தி ஒன்னும் இல்லே… அவ்ளோ சீக்கிரம் எழுந்திருச்சு வரமுடியுமான்னு தெரியலே….” கொஞ்சம் இழுத்தார்.

வர்றதுக்கு ஆசை இருக்கு. எழுந்திருக்க முடியுமான்னு அவர் தயங்குறது புரிஞ்சது.

“பூவிருந்தவல்லி வேண்டாம். நாம ஏற்கனவே போயிருந்தோமே உங்க ஏரியாவுக்கு பக்கத்துல இருக்குற நந்தம்பக்கம் கோவில்… அங்கே போவோமா?”ன்னு கேட்டேன்.

மறுபடியும் தயங்கினார். “அட மாசம் முழுக்க வரவேண்டாம்…. மார்கழி முதல் நாள் மட்டுமாவது வாங்க… காலைல 5 மணிக்கு கோவில்ல இருக்கணும். 4.45 AM உங்க வீட்டுல இருப்பேன்…” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் சொன்னேன்.

“சரி ஒ.கே. சுந்தர்” என்றார்.

நான் தினமும் வேலையெல்லாம் முடிச்சிட்டு படுக்குறதுக்கு எப்படியும் மிட்நைட் 12 ஆயிடும். காலைல 5 இல்லே 5.30 க்கு எழுந்துருச்சுடுவேன். இப்போ இன்னும் சீக்கிரம் எழுந்திருக்கணும் என்பதால் சீக்கிரம் படுத்துட்டேன்.

மொபைல்ல அலாரம் வெச்சு காலைல எழுந்திருச்சதும், முதல் வேலையா நண்பருக்கு ஃபோன் போட்டு அவரும் எழுந்துட்டாரான்னு உறுதிபடுத்திக்கிட்டேன். அவரும் எழுந்திருச்சிருந்தார். “ரெடியா இருங்க… குளிச்சிட்டு அரை மணிநேரத்துல வந்துடுறேன். இராமாபுரம் கிட்டே மெயின் ரோட்டுல வெயிட் பண்ணுங்க”ன்னு சொல்லி நானும் குளித்து முடித்து தயாராகி 4.45 AMக்கெல்லாம் கிளம்பிட்டேன்.

கிளம்பும்போது மறக்காம கோவில்ல கொடுக்கிறதுக்கு நம்ம தளத்தோட காலண்டர் எடுத்துகிட்டேன். (நம்ம பாரதியா விழாவுல வந்தவங்களுக்கு கூட கொடுத்தோம்). அதை அழகா சுருட்டி பைக்ல வெச்சுகிட்டு கிளம்பினேன். கொஞ்ச தூரம் போனதுக்குப்புறம் தான் தெரிஞ்சுது அது வழியில எங்கேயே விழுந்துடிச்சுன்னு.

பதறிப்போய் வந்த ரூட்லயே திரும்ப வந்து பார்த்தேன். எங்கேயும் இல்லை. வீட்டுக்கு திரும்ப வந்து ரெண்டு காலண்டர் எடுத்துகிட்டு போனேன். அந்த நேரத்துல நம்ம கிளம்பினதுல ஏதோ தோஷம் இருக்கு போல. அதுக்காகத் தான் இப்படி நடந்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

திரும்பவும் கிளம்பி மெயின்ரோட்டுக்கு வந்தேன். பரபரப்பா இருக்கும் மவுண்ட்-பூந்தமல்லி சாலை டிராஃபிக்கே இல்லாம வெறிச்னு இருந்தது. போரூர் தாண்டி எஸ்.அண்ட் எஸ். சிக்னல் பக்கத்துல வரும்போது ரோட்டுல ஒரு நாய் அடிபட்டு கிடந்தது. அப்போ தான் அடிபட்டிருக்கு. உயிர் இல்லே. பாவமா இருந்திச்சு. பைக்கை நிறுத்தி ‘ராம்…ராம்….’ சொல்லிகிட்டே அதை ரோட்டுல ஓரமா இழுத்து போட்டேன். (பெரும்பாலும் இது மாதிரி பார்த்தா வண்டியை நிறுத்தி அதை அப்புறப்படுத்திட்டு தான் போறது என் வழக்கம். அனாதை பிணங்களை அடக்கம் செய்யவும் எரியூட்டுவதற்கும் உதவுவது அஸ்வமேத யாகம் செய்வதற்கு சமம். நான் இதை புண்ணிய காரியமா நினைச்சு செய்யுறதில்லே. என் கடமையா நினைச்சு தான் செய்வேன். நீங்களும்  செய்யனும்னு  தான் இங்கே அதை சொல்றேன். தவிர அதை கவனிக்காம வர்றவங்களுக்கு அதுமேல வண்டி ஏத்தினா ஆபத்து இல்லையா?)

ராமாபுரம் பஸ்-ஸ்டாப்ல மாரீஸ் கண்ணன் வெயிட் பண்ணிக்கிட்டுருந்தார்.

நாங்க கோவிலுக்கு போகும்போது 5.20 AM இருக்கும். அந்த தெருல இருக்குற வீட்டுல எல்லாம் பெண்கள் எழுந்திருச்சி ரெடியாகி வாசல் பெருக்கி கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஏரியாவே மங்களகரமா இருந்தது.

கோவில் மெயின் கதவு திறந்து மைக் செட்டில் பாட்டு ஓடிகிட்டுருந்தது. கோவிலை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிகிட்டுருந்தாங்க.

மூலவர் சன்னதி இன்னும் திறக்கலே.

“எத்தனை மணிக்கு திறப்பாங்க?”ன்னு கோவில் பணியாள் ஒருத்தர் கிட்டே கேட்டேன். “மத்த நாள்ல 6.30. மார்கழி என்பதால் இன்னைல இருந்து 5.30 க்கு திறப்பாங்க” என்றார்.

ஆண்டாள் படம் ஒன்னை அழகா மண்டபத்துல அலங்காரம் பண்ணி மாலையெல்லாம் போட்டு வெச்சிருந்தாங்க. நெறைய பேர் அந்த படத்துக்கு முன்னால இருந்த விளக்குக்கு வந்து எண்ணெய்  விட்டாங்க.

கொஞ்ச நேரத்துல பசுமாட்டை கன்றோட கூட்டிகிட்டு வந்து மூலஸ்தானத்துக்கு எதிரே கருடாழ்வாருக்கு முன்ன தூண்ல கட்டினாங்க.

கோ-மாதாவோட பின்புறம் சுவாமி சன்னதி நோக்கி திரும்பி நிற்குமாறு அதை நிற்க வெச்சாங்க. மாடு குளிப்பாட்டப்பட்டு அலங்காரமெல்லாம் பண்ணியிருந்துச்சு. (எந்தக் கைகள் அந்த புண்ணியம் செஞ்சதோ).

நாங்க போகும்போது ஒரு 20 பேர் தான் நின்னுகிட்டு இருந்தாங்க. ஆனா 5.30 மணிக்கெல்லாம் எங்கிருந்து தான் வந்தாங்களோ தெரியலே…. நல்ல கூட்டம் கூடிடுச்சு. மார்கழி மகத்துவம் இத்துனை பேருக்கு தெரிஞ்சிருக்கிறதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.

கொஞ்ச நேரத்துல மூலஸ்தானம் திறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அந்த நேரத்துல மைக்கில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டது. “கௌசல்யா சுப்ரஜா” என்று அந்த கீதம் காதில் தேனாக பாய்ந்து நாடி நரம்பெல்லாம் மார்கழி குளிரிலும் முறுக்கேற்றியது. சுப்ரபாதத்தை கோவில்ல கேக்குறதுக்கும் வீட்ல கேக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதை உணர்ந்தவங்களுக்கு தெரியும்.

பெருமாளோட விஸ்வரூப தரிசனம் பார்த்தபிறகு…. வெளியே வந்த அர்ச்சகர் கோ-பூஜை பண்ணினார். கோ-பூஜை பார்ப்பது என்பதே விசேஷம். அதுவும் மார்கழி முதல் நாள் காலை பார்ப்பது என்றால் அதை விட விசேஷம். Because, கோ-பூஜையின் போது உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ரொம்ப பவர்ஃபுல்.

கோ-பூஜை முடிந்த பிறகு பட்டாபிஷேக ராமர், அப்புறம் தாயார், ஆஞ்சநேயர் என ஒவ்வொரு சன்னதியிலும் தீபாராதனை காட்டப்பட்டது.

அனைவருக்கும் தீர்த்தம் தரப்பட்டு சடாரி வைக்கப்பட்டது. இறுதியில் குங்குமப் பிரசாதம் தந்தார்கள்.

அர்ச்சகரிடம் மறக்காமல் நமது தளத்தின் மகாலக்ஷ்மி காலண்டர்களை தந்து, கோவிலில் மாட்டி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் உச்சரித்துக்கொண்டே பிரகாரத்தை வலம் வந்து நமஸ்கரித்தோம். பின்னர் அனைவரும் அமர்ந்து கூட்டாக திருப்பாவை படித்தார்கள். அவர்களுடன் அமர்ந்து ஆண்டாள் அருளிய திருப்பாவை படித்தோம்.

மார்கழி அதிகாலை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குபவர்களை ஆண்டாள் என்ன நயமாக எழுப்புகிறாள் தெரியுமா? அப்பப்பா… ஒவ்வொரு பாடலுக்கும் தான் எத்தனை எத்தனை அர்த்தம்.

திருப்பாவை முடிந்து, கிளம்புகையில் வெண்பொங்கல் பிரசாதம் ஒரு தொன்னையில் தந்தார்கள். அதை சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.

கோவில் கோபுரத்தை பார்த்தேன். நேத்தைக்கு நைட் வரைக்கும் பூவிருந்தவல்லி வரதராஜ பெருமாளை பார்க்கிறதா தானே இருந்திச்சு. எப்படி இங்கே வந்தோம்னு யோசிச்சு பார்த்தேன்.

“இதுக்கு முன்ன வரும்போது பரிவட்டம் வீசிட்டு என்னை தூங்கப் பண்ணிட்டு போனே. நீ பாட்டுக்கு போய்ட்டே… வந்து எழுப்பனுமோ இல்லையோ? அதக்கு தான் இன்னைக்கு சுப்ரபாதம் பாட வெச்சு விஸ்வரூப தரிசனம் தந்தேன்!” அப்படின்னு ஸ்ரீனிவாசப் பெருமாள் சொல்வது போலிருந்தது.

“இதுக்கு முன்ன வரும்போது பரிவட்டம் வீசிட்டு என்னை தூங்கப் பண்ணிட்டு போனே. நீ பாட்டுக்கு போய்ட்டே… வந்து எழுப்பனுமோ இல்லையோ? அதுக்கு தான் இன்னைக்கு சுப்ரபாதம் பாட வெச்சு விஸ்வரூப தரிசனம் தந்தேன்!” அப்படின்னு ஸ்ரீனிவாசப் பெருமாள் சொல்வது போலிருந்தது.

“ஐயா… என்னை மன்னிச்சிடு ஐயா….” அப்படின்னு சொல்லி துவிஜஸ்தம்பம் (கொடிமரம்) முன்னால இன்னொரு தரம் விழுந்து கும்பிட்டேன்.

இனி மார்கழி முழுக்க என் பயணம் நந்தம்பாக்கம் கோவில் தான் தினமும்.

வெளியே வந்த பிறகு நண்பர் என் கிட்டே சொன்னது தான் ஹை-லைட்.

“சுந்தர், மார்கழி முழுக்க டெய்லி நீங்க வர்றீங்களோ இல்லையோ நான் நிச்சயம் வருவேன்…”

இதை…இதை…இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

(இந்த ஃபோட்டோஸ் எடுக்கும்போது 6.30 AM இருக்கும்.)

[END]

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Also Check :
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

3 thoughts on “மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

  1. சுந்தர் அவர்களே காலேண்டர் கீழே விழுந்தது தோஷம் இல்லை கடவுள் அந்த காலேண்டர் வேறு யாருக்கோ சேர்க்க வேண்டும் என்று நினைத்து இருப்பார் அது போய் சேர்ந்து இருக்கிறது அவ்வளவுதான்.

  2. ஹலோ சுந்தர்ஜி மனிதன் நினைபதொன்று கடவுள் நடதுவதொன்று என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆனாலும் வரதராஜர் பூந்தமல்லி கோவில் பூவிருந்தவல்லி தாயார் மற்று ஒரு ரங்கநாதர் …நமது திருநீர்மலை கோவில் போலவே …எல்லாரும் சுந்தரின் வணக்கத்துக்கு உரியவர்கள் தவற விட வேண்டாம் 2008இல் ஒரு மார்கழி காலை தரிசனம் குடும்பத்துடன் கிட்டியது …நாகராணி சென்னை

Leave a Reply to Srinivas Cancel reply

Your email address will not be published. Required fields are marked *