Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

print
லியுகத்தில் கண்கண்ட மருந்தாக விளங்குவது ராமநாமம். எங்கும் எப்போதும் இதைச் சொல்லலாம். இதற்கு எந்த நியம நிஷ்டையும் தேவையில்லை. பகல் இரவு வித்தியாசம் இல்லை. ஆண், பெண் குழந்தைகள் பேதம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்.

திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், அண்ணாமலையார் மீது எந்தளவு பக்தி வைத்திருந்தாரோ அதைவிட அதிகமாக ராமர் மீது வைத்திருந்தார். தன்னை நாடி வருபவர்களிடம் “ராஜாஜி எழுதிய ராமாயணத்தை படியுங்கள். உங்களை எந்த துன்பமும் அணுகாது” என்று அடிக்கடி சொல்லுவார். ராமநாமத்தின் மீது ‘ராம்’சுரத்குமார் அபிமானம் வைத்திருந்ததில் வியப்பில்லையே…!

இராமநாம மகிமையை விளக்கும் விதம் சுவாமி சொன்ன ஒரு சம்பவம் இது.

Ramasurath Kumar

ஒரு தாய் வயிற்று பிள்ளைகளில் ஒருவர் நன்றாக இருக்க மற்றவர் கஷ்டப்படுவது ஏன் ?

ஸ்வாமி ஒரு முறை மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு அய்யர் வந்து ஸ்வாமியை கும்பிட்டுவிட்டுப் போனார். அவர் போகவும், ஸ்வாமி, அருகில் இருந்த ஒரு பக்தரிடம் “இவர் எனக்கு ரொம்ப நாட்களாக பழக்கம். இவர் பெற்றோருக்கு அண்ணன் தம்பி என இரண்டு பிள்ளைகள். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்கள் இருவரும் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். குடும்பம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இவரின் தம்பிக்கு நிறைய பிள்ளைகள். அவர்களும் சரியாக இல்லை. எந்த நேரத்திலும் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடி கஷ்டத்திலேயே காலம் கழித்து வருகிறார். இருவரும் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள். இப்படி வித்தியாசமாக மலையும் மடுவும் போல இருக்கிறார்களே என்று இந்த பிச்சைக்காரனுக்கு எந்த நேரமும் வியப்பாக இருக்கும்.

ஒரு நாள் உண்மை காரணத்தை அறிய வேண்டி இன்று வந்த அண்ணனிடம் ஒரு முறை விபரம் கேட்டேன். அவர், “நான் விபரம் தெரிந்த சிறு வயது முதல் புஸ்தகத்தில் ஸ்ரீ ராமஜயம் எழுதி வருகிறேன். இன்று வரை அதை நிறுத்தவில்லை. ஒரு வேளை அது காரணமாக இருக்கலாம்!” என்று சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை சுவாமி சொல்லிவிட்டு, “ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்… நம்பியே பேருக்கு ஏது பயம்” என்ற பாட்டைப் பாடி அங்கிருந்த மற்றவர்களையும் பாடவைத்தார்.

(உங்களில் எத்தனை பேருக்கு அந்த பழக்கம் இருந்தது? தற்போது இருக்கிறது??)

நீதி :

* இராமநாமம் பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடக்க உதவும்.

* ஒரு குடும்பத்திற்கு தகப்பன் செய்ய வேண்டிய கடமையை இராமநாமம் செய்யும்.

* பிள்ளைகளுக்கு பணம் சேர்க்க முடியவில்லை என்றாலும் புண்ணியம் சேர்த்து வாருங்கள். இராமநாமம் அதற்கு உதவும். அது அவர்களை காப்பாற்றும்.

(இராமநாம மகிமை தொடரும்….)

=====================================================================

Also Check :

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

=====================================================================

14 thoughts on “ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

  1. ராம நாம மகத்துவத்தை விளக்கும் அழகிய பதிவு. நான் 2014ம் ஆண்டு முதல் இன்று வரை 34,000க்கும் மேல் ஒரு டைரியில்ஸ்ரீ ராம ஜெயம் எழுதிஇருக்கிறேன் அந்த டயரியில் இன்னும் 10 பக்கங்களே பாக்கி. இந்த பதிவை படித்ததும் இந்த வருடம் ஒரு லட்சம் ராம ஜெயம் எழுத வேண்டும் என ஆசை என் மனதில் துளிர் விட்டுள்ளது. அந்த ஸ்ரீராமஜெயம் டயரியை எங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லவும். நான் தினமும் ஆசையாக எழுதுவது ஸ்ரீ ராம ஜெயம். அன்பர்கள் இடரை அகற்றிடும் ஸ்ரீ ராம ஜெயம்

    நான் சிறு வயதில் ஸ்ரீ ராமஜயம் 1008 எழுதி மகா பெரியவாளுக்கு காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வெள்ளி டாலர் பெற்று இருக்கிறேன்.

    இந்த பதிவு எல்லோரையும் ராம ஜெயம் எழுதத் தூண்டும் மிக நல்ல பதிவு. ராம நாம மகிமை தொடரை எதிர் பார்கிறேன்.

    //பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீந்தார்
    இறைவனடி சேராதார் //

    ராம ஜெயம் ஸ்ரீ ராம ராமஜயம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. Dear sir,

    Now only i understand the reason behind mahaperiyvar insisting to write sree rama jayam from the young age by encouraging with his own blessings on the note books written with rama nama by the young people. Let this noble mantra may be chanted all over the world and bring peace and solace for the entire people all over the world who realize the value of rama jabam and thapam.

    Yours faithfully

    S.CHANDRA MOULI.

  3. டியர் சுந்தர்ஜி

    ராம் ராம்

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

    நாம ஜபம் செபித்தல் எல்லா பாவங்களையும் போக்கும்

    உங்களது தொண்டே ராமனின் அருள் கிடைக்க வழி கிடைக்கும்

  4. Uma Madam,

    You can send the notebook to the below address.

    Sri Rama Nama Bank,
    “Ramamanthiram”
    No-2, Vinayagam Street,
    West Mambalam, Chennai-33.
    Phone-044-24893736.
    http://www.namalayam.org

    Madam You can Get Notebooks also there to wrote Rama Nama.

    Jai Sri Ram

    With Regards,
    S.Narayanan.

    1. அறிய தகவலுக்கு மிக்க நன்றி திரு நாராயணன் அவர்களே.

      நான் நேரிடையாகவே சென்று என் ராம் நாம நோட்டை கொடுத்து விட்டு அங்கு கொடுக்கும் ராம நாம நோட்டை வாங்கி வந்து எழுதுகிறேன், மற்றவர்களுக்காகவும் வாங்கி வருகிறேன்.

      நன்றி
      உமா வெங்கட்

  5. மிகவும் பயனுள்ள அனைவரும் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய ஒரு சிறப்பான பதிவு
    வரும் ஸ்ரீராம நவமி அன்று ஆரம்பிக்க உள்ளேன்

    ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம்

  6. வணக்கம் சுந்தர் சார்

    ராமநாம திற்கு ஈடுயானது இந்த லோகத்தில் எதுவும் இல்லை ..

    நன்றி

  7. ஸ்ரீ ராம ஜெயம்

    நன்றி சுந்தர் அவர்களே நான் இப்போதே office- லியே, ஸ்ரீ ராம ஜெயம் 108 தடவை எழுதிவிட்டேன், இதை தினமும் தொடர்ந்து எழுதுவேன்.

    திரு. நாராயண் அவர்களுக்கும் “Sri Rama Nama Bank ” விலாசம் அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

    B.D.வெங்கடேஷ்
    பெங்களூரு

  8. இந்த வார துவக்கமே அருமை.
    கட்டாயம் தினமும் செய்ய முயலுவோம்.
    நன்றி

  9. நாங்களும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தொடங்கியுள்ளோம் …………..நன்றி …..

  10. அருமை அருமை! நானும் என் பெரியம்மாக்கள் இருவரும் தினமும் ராம நாமம் எழுதி வருகிறோம். எனக்கு தெரிந்த குழந்தைகள் சிலரும் எழுதுகிறார்கள். ராம நாம மகிமைத் தொடரை எதிர் பார்க்கிறோம்.

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *