Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

print
சென்ற மார்கழி மாதம் ஒரு நாள், போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் உள்ள நம் வாசகர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மார்கழி பஜனையில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற அவரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தோம்.

அப்போது அங்கு வந்திருந்தவர்களில் நெற்றி  நிறைய திருநாமம் இட்டுக்கொண்டு காட்சியளித்த ஸ்ரீராமுலு நம்மை மிகவும் ஈர்த்தார். பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம். இருப்பினும் விரிவாக பேச சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

Madhanandhapuram Perumal Temple1

மார்கழி கடைசி நாளன்றும் நாம் பஜனையில் பங்கேற்று பேசவேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுத்திருந்தனர் அவர்கள். நாமும் பங்கேற்றுவிட்டு அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பரிசு ஒன்றை அளித்துவிட்டு (அது உங்களுக்கு இப்போ இல்லே!!!) நமது சிறப்புரையையும் நிகழ்த்திவிட்டு புறப்பட்டோம். நேரம் அப்போது காலை 6.00 இருக்கும். அப்படியே ஏதேனும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். மார்கழி கடைசி நாள் என்பதால் சற்று விசேடமான கோவிலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. விசாரித்ததில் அந்தப் பகுதியில் சந்திரமௌலீஸ்வரர் மற்றும் பார்த்தசாரதி பெருமாள் என்னும் சைவ, வைணவ கோவில்கள் அருகருகே அமைந்திருக்கும் ஒரு ஷேத்ரத்திற்கு செல்வது என்று முடிவானது.

மார்கழி பஜனை ஊர்வலத்தில் தன்னை மறந்து பாடும் ஸ்ரீராமுலு...
மார்கழி பஜனை ஊர்வலத்தில் தன்னை மறந்து பாடும் ஸ்ரீராமுலு…
பன்னிரு திருமுறையை சுமந்து ஊர்வலம் வரும் மார்கழி பஜனையில் நெற்றியில் நாமத்துடன் ஸ்ரீராமுலு!
பன்னிரு திருமுறையை சுமந்து ஊர்வலம் வரும் மார்கழி பஜனையில் நெற்றியில் நாமத்துடன் ஸ்ரீராமுலு!

அங்கு பெருமாளை சென்று தரிசித்துவிட்டு வெளியே வரும்போது ஸ்ரீராமுலு நம் எதிரே வந்து நின்றார். நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு அவர் எதிரே வந்து நின்றது சாட்சாத் அந்த பெருமாளே வந்து நின்றது போல இருந்தது.

ஏற்கனவே மார்கழி பஜனையின் அவரை அந்த சத்சங்கத்தில் பார்த்திருந்தபடியால், அவரை நலம் விசாரித்தோம். அவர் யார் என்ன என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மூலம் நிச்சயம் நமது பிரார்த்தனை கிளபுக்கு அவர் தலைமை ஏற்கச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேவிட்டோம்.

Madhanandhapuram Perumal Temple2

ஸ்ரீராமுலுவின் சொந்த ஊர் வேலூர் அருகே உள்ள வெட்டுவானம். இங்கே சென்னையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிகிறார்.

ஒவ்வொரு வருடமும் தைமாதம் திருவேற்காட்டிலிருந்து திருமலை திருப்பதிக்கு (சுமார் 160 கி.மீ.) நண்பர்கள் மற்றும் இதர பக்தர்களுடன் பாத யாத்திரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். (திருவேற்காடு ஏழுமலையை நன்கு அறிந்துவைத்திருக்கிறார்.)

கடந்த 13 வருடங்களாக இப்படி பாதாயத்திரை சென்றுவருகிறார். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வாக்கில் பூவிருந்தவல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை சென்றுவருகிறார்.

திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குழு ஒன்று...
திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குழு ஒன்று…

நெற்றி நிறைய திருமண் அணிந்தாலும் இவர் சைவ வைணவ பேதம் பார்ப்பதில்லை. இவர் இப்படி நாமம் இட்டுக்கொண்டு சிவாலயங்களுக்கு செல்லும்போது அனைவரும் இவரை வித்தியாசமாக பார்ப்பார்களாம். அதே போல, திருநீறு பூசிக்கொண்டு பெருமாள் கோவிலுக்கு செல்வாராம்.

இவரது நெற்றியில் நாமத்தையும் இவர் திருமலைக்கு அடிக்கடி பாதயாத்திரை செல்வதையும் கேள்விப்பட்ட சில வைணவப் பெரியவர்கள் இவருக்கு தீட்சை அளிக்க முன்வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.

Madhanandhapuram Perumal Temple6

“தீட்சை வாங்கிக்கொண்டால் அந்த மரபுப்படி அந்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும். இப்படி சுதந்திர பறவையாக அனைத்து ஆலயங்களுக்கும் நான் விரும்பும் சின்னத்தை அணிந்துகொண்டு செல்லமுடியாது. விரும்பும் இறைவனை தொழமுடியாது. சிவனும் பெருமாளும் எனக்கு இரு கண்கள் போல. எனவே தீட்சையை ஏற்க மறுத்துவிட்டேன்! அப்பா அம்மா போல நானும் சிவபெருமானும் விஷ்ணுவும் ஒரே குடும்பத்தினராக இருந்துவருகிறோம். எங்களுக்குள் பிரிவு வந்துவிடக்கூடாது” என்கிறார் ஸ்ரீராமுலு.

“நீங்கள் பாதயாத்திரை சென்றபோது நடைபெற்ற அதிசய சம்பவம் ஏதாவது உண்டா? அதாவது ஏழுமலையான் அருள் வெளிப்பட்ட தருணம் ஏதாவது?”

“நிறைய இருக்கிறது சார்….”

“அதில் குறிப்பிட்டு சொல்லும்படி மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததை மட்டும் இங்கே எங்கள் வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்ள முடியுமா?”

Madhanandhapuram Perumal Temple4

“சில ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மொத்தம் 11 பேர் திருமலைக்கு பாதயாத்திரை சென்றோம். எங்கள் பதினொரு பேருக்கும் உணவு செலவை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் ஏற்றுகொள்வது என தீர்மானித்திருந்தோம். உடன் யாத்திரை வந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் ரவுண்டை முடித்துவிட்டனர். கடைசி நாள் என் முறை வந்தது. மேலே மலைக்கு சென்றபிறகு நீ எங்களுக்கு சாப்பாடு வாங்கித் தா என்று என் நண்பர்கள் கூறிவிட்டனர். என்னிடம் அப்போது கையில் பணம் அவ்வளவாக இல்லை. பாதயாத்திரைக்கு என்னுடன் வரும் நண்பர்கள் மனம் கோணாதபடி அவர்கள் பசி தீர்க்க நீ தான் அருள் புரியவேண்டும் என்று ஸ்ரீனிவாசனை வேண்டிக்கொண்டேன். இருப்பினும் இருப்பதை கொடுத்து சமாளிப்போம் என்று எனக்கு நானே தைரியம் கூறிக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் ‘முழங்கால் முட்டி’ என்னும் இடத்தை தாண்டி நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எங்களை முந்திக்கொண்டு ஒரு சுமோ சென்றது. சென்ற வேகத்திலேயே ரிவர்ஸில் திரும்ப வந்தது. அதிலிருந்து இறங்கிய ஆஜானுபாகுவான ஒருவர் என்னிடம் வந்து “ஐயா எங்களிடம் அன்னதானத்திற்காக டோக்கன் இருக்கிறது. நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” என்று கூறி அன்னதான டோக்கன்களை என் கைகளில் திணித்துவிட்டு என் பதிலைக் கூட எதிர்பாராமல் விருட்டென்று வந்த வேகத்தில் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

டோக்கனை எண்ணி பார்க்கிறேன்… சரியாக சொல்லி வைத்தது போல 11 டோக்கன்கள் இருந்தது. என் நண்பர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அதெப்படி சரியாக 11 டோக்கன்கள் அதில் இருந்தது? அதெப்படி நாங்கள் 11 பேர் இருக்க என்னைத் தேடி வந்து அதை தந்தார்?

நிச்சயம் இது அந்த ஸ்ரீனிவாசனின் லீலை தான் என்பதை அனைவரும் உணர்ந்தோம்.

“நீ கொடுத்துவைத்தவனடா… மலைக்கு வந்து நீ எங்களுக்கு அன்னமளிக்க கஷ்டப்படக்கூடாது, உனக்கு செலவு வைக்கக்கூடாது என்று ஸ்ரீனிவாசனே உன்னிடம் வந்து டோக்கன்களை கொடுத்துவிட்டு போயிருக்கிறான்” என்றார்களாம் உடன் வந்தவர்கள்.

இதயத்தின் மெல்லிய குரலை கூட அறிவான் இறைவன். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் என்பது மற்றுமொருமுறை ஸ்ரீராமுலு அவர்களின் மூலம் நிரூபணமாகிவிட்டது.

உடனே சாலை என்றும் பாராமால் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினோம். ஸ்ரீனிவாசனை நேரில் பார்த்தவராயிற்றே….!

பின்னணியில் இவருக்கு மேலே சிவ..சிவ... என்கிற எழுத்து தெரிகிறதா?
பின்னணியில் இவருக்கு மேலே சிவ..சிவ… என்கிற எழுத்து தெரிகிறதா?

“என் வெப் ஸைட்டில் நிச்சயம் இதை பதிவு செய்யவேண்டும். ஃபோட்டோவுக்கு ஒரு போஸ் கொடுக்க முடியுமா சார்?” என்று கேட்டபோது நம்முடன் பேசிக்கொண்டே சிவாலயத்தின் முன்னே வந்து நின்றார் ஸ்ரீராமுலு.

“அடுத்து உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?” என்று கேட்டோம்.

“இப்போ எனக்கு 50 வயதாகிறது சார். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 108 108 திவ்யதேச யாத்திரையை துவக்கவிருக்கிறேன். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் பாதயாத்திரையாக சென்று அங்கிருந்து எனது திருத்தல யாத்திரையை தொடங்குவேன். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசிப்பது என்று இலக்கு வைத்திருக்கிறேன். செல்லும் வழியில் உள்ள  பாடல் பெற்ற சிவாலயங்களும், இதர பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தால் அவைகளையும் தவறாமல் தரிசிப்பேன்.”

“சார்.. தற்போது நீங்கள் பார்த்து வரும் உங்கள் பணி இடையூறாக இருக்குமே…”

“அரசு மற்றும் பொது விடுமுறை நாட்களை இதற்கு பயன்படுத்திக்கொள்வேன். எப்படியும் நான் ஒய்வு பெறுவதற்குள் அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசித்துவிடுவது என்று இலக்கு வைத்திருக்கிறேன். என் பணி பாதிக்காதவாறு என் லட்சியத்தை அடைய அரங்கன் அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!” என்று கூறும் ஸ்ரீராமுலுவுக்கு மஞ்சுளா என்னும் துணைவியும் சரத்குமார் என்னும் மகனும் உள்ளனர். சரத்குமார் தற்போது எம்.சி.ஏ. படித்துவருகிறார்.

“எங்கள் வாசகர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?”

“இன்று நான் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் திருமலைக்கு பாதயாத்திரை சென்று வந்தது தான். பத்து வருடங்களுக்கு முன்னர் நான் இருந்த நிலை வேறு. இன்று நானிருக்கும் நிலை வேறு…!  ஒரு முறை திருமலைக்கு பாதயாத்திரை சென்று பாருங்கள். அந்த அனுபவமே தனி. நீங்கள் பேருந்திலோ ரயிலிலோ செல்வதைவிட பாதயாத்திரையாக சென்றால் ஸ்ரீனிவாசனை தரிசிக்கும்போது அவனை நேரடியாக பார்ப்பது போன்றே இருக்கும். உங்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடும். அப்படியே உங்கள் பிரச்னைகளும்….!” என்றார் உறுதியுடன்.

என்ன வாசகர்களே… கேட்டீர்களா ஸ்ரீராமுலு சொல்வதை?

==================================================================

இது நேற்றைய பதிவில் நாம் அளித்த செய்தி தான். இருப்பினும் தவறவிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல இதை அளிக்கிறோம்.

ஒரு முக்கிய வேண்டுகோள்….

வாசகர்கள் நம் தளத்திற்கும் பதிவுகளுக்கும் தரும் வரவேற்பை பொறுத்தே நமது பதிவுகளின் எண்ணிக்கையை நாம் கட்டிக்காக்க முடியும். வரவேற்பு இருப்பதாக கருதித்தான் நாம் பதிவுகளை அளித்து வருகிறோம். சில நேரங்களில் அப்படிப்பட்ட எண்ணம் தவறோ என்று தோன்றிவிடுகிறது. ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்புக்கு கிடைக்கக்கூடிய RESPONSE என்பது எந்தளவு முக்கியம் என்பது பலருக்கு தெரியவில்லை. அதுவும் வணிக நோக்கமின்றி சேவை நோக்கோடு அளிக்கப்படும்  படைப்புக்கள் எனும்போது அது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. எனவே வாசகர்கள் பின்னூட்டம் (கமெண்ட்), அலைபேசி, மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., முகநூல், வாட்ஸ் ஆப் இப்படி ஏதேனும் ஒரு வகையில் நம்முடன் தொடர்பில் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நம்மைப் பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று எந்தக் காலத்திலும் நாம் நினைத்தது கிடையாது. ஆனால் நாம் அளிக்கும் பதிவுகளில் உள்ள CONTENT பற்றி உங்கள் கருத்துக்கள் எமக்கு அவசியம் தேவை. அது  இந்த தளத்தை யார், எப்படிப்பட்டவர்கள் பார்க்கிறார்கள், எத்தனை பேர் பார்க்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு என்ன, KNOWLEDGE LEVEL என்ன… etc.etc. இதெல்லாம் அறிந்துகொள்ள உதவும். இவை பற்றி தெரிந்தால் நாம் நம் பதிவின் தரத்தை மேலும் உயர்த்த அது துணை செய்யும்.

உங்கள் வேகத்துக்காகவே நாம் சற்று நிதானமாக போகிறோம். நம் வேகத்திற்கு நீங்கள் ஈடுகொடுப்பதானால், ஒரு நாளைக்கு நான்கு பதிவுகள் கூட நம்மால் அளிக்கமுடியும். (இதற்கு முன்பிருந்த நிலையில் கூட). நீங்கள் பதிவுகளை தவறாமல் அதே நேரம் முழுமையாக படிக்கவேண்டும், அதன் கருத்துக்களை உள்வாங்கவேண்டும் என்பதற்காகத் தான் சற்று மெதுவாக செல்கிறோம்.

நான் மிகப் பெரிய பணியை  செய்துகொண்டிருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் எமக்கு பிடித்ததை மனப்பூர்வமாக செய்துகொண்டிருக்கிறோம். அதன் அருமையை உணர்ந்து அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். இதுவே நீங்கள் எமக்கு செய்யும் உதவி.

உங்கள் இணைய நேரம் மிகவும் அரிதானது குறுகியது என்பது நமக்கு  தெரியும். அதை ஆக்கப்பூர்வமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புண்ணியம்  சேர்க்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையற்ற சினிமா செய்திகள், அரசியல் வம்புகள் இவற்றில் செலவிடவேண்டாம். நீங்கள் தேடல் உள்ள தேனீக்கள். கண்ட கண்ட இடத்தில் அமர்ந்து உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளவேண்டாம்!

நன்றி!!

-ரைட்மந்த்ரா சுந்தர், WWW.RIGHTMANTRA.COM

Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com | Facebook (Pers): Rightmantra Sundar | Facebook (Official): Rightmantra | Whats App : 9840169215

================================================================

Also check from our archives…

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

================================================================

[END]

 

17 thoughts on “ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

  1. பதிவை படிக்கும் போழுத்தே அந்த அரங்கனின் கருணையை நினைத்து மெய் சிலிர்க்கிறது, கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஸ்ரீ ராமுலு அவர்களை பார்த்து பேட்டி எடுத்து அதை பதிவாக போட்டு நாங்கள் படிப்பதே பெரும் பாக்கியம் தான். தாங்கள் அவரைப் பார்த்ததே ஈசனின் கருணை தான் ….. ஸ்ரீ ராமுலு விற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பணிவான வணக்கங்கள் …. அவர் நம் பிரார்த்தனை கிளபிற்கு தலைமை ஏற்பது பெருமாளே ஏற்பது போல்.

    அவரை பார்த்தால் பெருமாளே நேரில் நிற்பது போல் உள்ளது ,
    எனக்கும் திருப்திக்கு பாத யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது ., இறைவன் அருள் இருந்தால் நடக்கட்டும்

    காரில் வந்து டோக்கன் கொடுத்தது சாட்சாத் பெருமாளே. தன் பக்தனைக் கை விடுவாரா பெருமாள் . இந்த மாதிரி அதிசயங்கள் கடவுளை பரிபூர்ணமாக கும்பிடுவர்களுக்கு கிடைக்கும். தாங்கள் உரை நிகழ்த்திய சொற்பொழிவை எதிர்பார்கிறேன் பதிவாக . வெகு விரைவில் அளிக்கவும்.

    இன்னும் பல அறிய நபர்களை நம் தளத்தில் அறிமுகப் படுத்த அந்த ஈசன் தங்களுக்கு tஅருள் புரிய வேண்டும்.

    ஓம் நமச் சிவாய
    ஓம் நமோ நாராயணாய

    நன்றி
    உமா வெங்கட்

  2. அருமையான பதிவு.

    “சிவனும் பெருமாளும் எனக்கு இரு கண்கள் போல. அப்பா அம்மா போல நானும் சிவபெருமானும் விஷ்ணுவும் ஒரே குடும்பத்தினராக இருந்து வருகிறோம்” – எத்தனை எளிய, சிறந்த பக்தி!!

    ஓம் நம சிவாய!! ஓம் நமோ நாராயணாய!!

  3. எங்கள் குரு நாதரை பற்றி தளத்தில் எழதியதற்கு நன்றி
    உங்கள் பனி சிறக்க ஈசன் தங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறோம்.

  4. சுந்தர்ஜி

    கடவுளின் உண்மையான பக்தன் எப்படி இருபார் என்றால் நம் ஸ்ரீ ராமுலு அவர்கள் தான். கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைபார்
    இவ்வாறு உங்கள் கட்டுரை படிக்க வாய்ப்பு கிடைத்ததினால் தான் பல பல நல்ல செய்தி நாங்கள் அறிந்து கொள்கிறோம்.
    அரசியல் , சினிமா , கொலை, கொள்ளை, ஆபாசம், வன்மை நிறைந்த
    இந்த காலத்தி ஆன்மிகம், சுய முனேற்றம் ,ஆலய தரிசனம், நீதி கதைகள், பக்தி கதைகள் , மகான்களின் வரலாறு , ரோல் மாடல், மனவளம் , பிராத்தனைகள், உளவாரபணிகள், போன்று ஒவ்வாரு
    நவரத்தினகளாக கோர்த்து ஒரு நல் மாலைகளாக இறைவனுக்கு அனுவித்த பெருமை நம் சுந்தர்ஜி அவர்களை சாரும்

  5. அரியும் சிவனும் ஒன்று என்பதனை நன்கு புரிந்து அதன்வழி நடந்து அனைவருக்கும் வழிகாட்டுகிறார் ஸ்ரீராமுலு அவர்கள். ஸ்ரீனிவாசப்பெருமாளை நேரில் தரிசித்த அடியவரைப்பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  6. அண்ணா
    திருமலை மகிமை மற்றும் ஸ்ரீ ராமுலு அய்யா அவர்களையும் ஒன்று சேர்த்து கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
    சுபா

  7. சுந்தர்ஜி

    நமஸ்காரம்

    பெருமாள் இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி ஓம் நமோ வேங்கடேசாய

  8. வாழ்க வளமுடன்

    காரம்பாக்கம் , போரூர் பகுதி மக்கள் அனைவரும் அறிந்த ஒரு நல்ல ஆத்துமா .BSNL LAND LINE வைத்துள்ள அனைவரும் அவரை நன்கறிவர் . அவருடைய இறை பணி இப்போதுதான் தெரிந்தது. அவரின் எண்ணம் ஈடேற வாழ்த்துகள் .

  9. இறைவன் என்றும் தம் பக்தர்களை கை விட மாட்டார் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.
    இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதற்கும் அவர்களுடைய தெய்வ பக்தியை தெரிந்துகொள்வதர்க்கும் உங்களை ஆண்டவன் எங்களுக்கு ஒரு மின்சக்தியாக பயன்படுத்துகிறார்,
    மேலும் மேலும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

  10. சுந்தர்ஜி,

    தாங்கள் பதிவை நேற்றே எழுதி உள்ளீர்கள் . ஆனால் நான் சனி கிழமை ஆன இன்று பெருமாள்
    பக்தரான ஸ்ரீ ராமுலுவின் பசி தீர்க்க வந்த உண்மை சம்பவத்தை நினைக்கும் போது கண்கள் குளமாகியது .
    அவருக்கு 108 திவ்ய தேசங்களை பார்க்கும் பாக்கியத்தை பகவான் அமைத்து கொடுப்பார்.

    நன்றி

  11. உங்கள் அணைத்து நல் – உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்

    இப்படிக்கு
    கே. ஸ்ரீராமுலுவின்
    (மகன்)

  12. அருமையான பதிவு சார். செய்திகளை எப்படிதான் கிடைக்கிறதோ . நன்றி

  13. உண்மையான பக்தர்!

    உண்மையான பக்தியுடன் அழைத்தால் இறைவன் நம்மிடம் ஓடோடி வருவான்… நம் துயர் தீர்ப்பான் என்பதை உணர்த்தும் மிக அருமையான நிகழ்ச்சி. ஓம் நமோ நாராயணாய!

  14. மிகவும் arumaiana பதிவு. பாத யாத்திரை sella மனம் விரும்பிகிறது.

Leave a Reply to sundari Cancel reply

Your email address will not be published. Required fields are marked *