Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

print
“பசுவிடமிருந்து நீங்கள் பாலை எப்படி அடைகிறீர்களோ அதே போல மிகுந்த பக்தியுடன் நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கு பூரண அனுக்கிரகம் கிடைக்கும்”. இது சேஷாத்ரி சுவாமிகளின் சூட்சும அருள் மொழியாகும். உண்மையான, திடமான, மாறுபாடில்லாத நிரந்தரமான பக்தியையும் பிரார்த்தனையையும் செய்யும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் மகான்கள் வாழ்கிறார்கள். உள்ளத்திலிருந்தே உள்ளுணர்வை கிளப்பி கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி உதிக்கத் தவறுவதில்லையோ அதே போல உண்மை பக்தர்களுக்கு அருளாசி வழங்க மகான்கள் தவறுவதில்லை.

Seshadri Swamigalதிரு.வெங்கட்ராமன் என்பவர் திருவண்ணாமலையில் இருக்கும் டேனிஷ் மிஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஒரு நாள் தமக்கு உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படும் என்று அவருடைய மனதில் தோன்றியது.

மிகுந்த கவலையுடன் திரு.வெங்கட்ராமன், பூத நாராயணர் கோவிலை தாண்டிச் செல்லும்போது சேஷாத்ரி ஸ்வாமிகள் தன் முன் நிற்பதை அவர் பார்த்தார். உடனே திரு.வெங்கட்ராமன் தன் காலணிகளை கழற்றி வைத்து மகானை வணங்கினார்.

சேஷாத்ரி ஸ்வாமிகள் திரு.வெங்கட்ராமனுடைய காலணிகளாலேயே அவருடைய தலையில் அடித்துவிட்டு தன் வழியில் சென்றுவிட்டார். ஏற்கனவே கவலையில் இருந்த திரு.வெங்கட்ராமன் செருப்படி வாங்கியதில் இன்னும் வேதனை அடைந்தார்.

மகானே தன்னை கைவிட்டுவிட்டாரே என்று அனாதை போல உணர்ந்தார். அவர் பள்ளியை சென்று அடைந்தார். அவர் பயந்தபடியே அவர் மேஜை மீது ஒரு கடிதம் இருந்தது.

அவர் “எதற்காக அதைப் பார்க்க வேண்டும்? அதிலிருக்கும் கெட்ட செய்தியைத் தான் அறிவோமே….” என்று எண்ணினார்.

மிகுந்த தயக்கத்துடன் அந்த கடிதத்தை எடுத்து அதிலிருக்கும் வாசகங்களை படித்தார். அதிசயத்திலும் அதிசயமாக அச்செய்தி அவர் கற்பனைக்கு முற்றிலும் மாறாக இருந்தது.

அச்செய்தி என்னவென்றால், அவர் தலைமை ஆசிரியராக பணி உயர்வு கொடுக்கப்பட்டுவிட்டார் என்பதே. அவரது கண்களை அவரால் நம்பமுடியவில்லை. மகான் செருப்பால் அடித்த புண்ணியம், தலையெழுத்தே மாறிவிட்டது.

மிகுந்த சந்தோஷத்துடன் சேஷாத்ரி சுவாமிகளின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு அவரை தேடிக்கொண்டு சென்றார். கண் சிமிட்டும் நேரத்தில் அவர் துக்கம் சந்தோஷமாக மாறியதை எண்ணி வியப்படைந்தார்.

அன்னையின் அம்சமாக அம்மகான் இருப்பதால் அடித்தாலும் அணைத்தாலும் கருணை தானே பொங்கும்?

– இன்று சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி தினமாகும்.

(‘ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியம்’ என்கிற நூலிலிருந்து…)

=====================================================================

Also check from our archives…

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

 

8 thoughts on “குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

  1. சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி அன்று அவரை பற்றிய பதிவை படித்து நான் செய்த பாக்யம்.குரு அடித்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்குறது என்பதை அறிந்துகொண்டேன்.ஒரே நாளில் 3 பதிவு சூப்பர் .

    சேஷாத்ரி சுவாமிகள் நமஹ,

    நன்றி

    உமா வெங்கட்

  2. சேஷாத்ரி சுவாமிகளுக்கு நம் வணக்கங்கள்………….அவரைப் பற்றியும் அவரது மகிமைகளையும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்………

  3. நம் நாட்டில் தான் எத்தனை புண்ணிய ஆத்மாக்கள் தோன்றி, சித்தர்களாக யோகிகளாக ஞானிகளாக நாம் கடைத்தேறுவதற்கு வழிகாட்டி இருக்கிறார்கள்!! அப்படிப்பட்டவர்களைப்பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளோம். தொடர்ந்து இப்பதிவுகளை அளித்து வாருங்கள்.

    நன்றி.

    குருவே சரணம்!! ஓம் நம சிவாய!!

  4. தங்களின் ஒவ்ஒவ்வரூ பதிவும் விலை மதிப்பற்ற
    பொக்கிஷங்கள். தொடரட்டும் தங்கள் இறைபணி

  5. அருமையான பதிவு . மிக்க நன்றி

    மோகன் பா
    வேளச்சேரி
    சென்னை

Leave a Reply to ராஜாராம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *