Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு கனவின் பயணம்!

ஒரு கனவின் பயணம்!

print
பிப்ரவரி 1, 2015. ஞாயிறு காலை சுமார் 10.15 மணி. ‘இராமநாம மகிமை’ நாடக புகழ் திருமதி.பாம்பே ஞானம் அவர்கள்  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே நமது அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ரிப்பன் வெட்டுகிறார்.

நம்மை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம். இப்போது நினைத்தாலும் அனைத்தும் ஒரு கனவு போலவே இருக்கிறது.

திறப்பு விழாவுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். “எப்படிஜி இப்படி ஒரு அருமையான இடத்தை பிடிச்சீங்க? அதுவும் ஹார்ட் ஆஃப் தி சிட்டில…?”

“என் கையில் ஒண்ணுமில்லை. கனவு காணுங்கள்னு பெரியவங்க சொன்னாங்க. நான் கண்டேன். கடவுள் அதை நிறைவேற்றி தந்தார்!” என்றோம்.

RM Inauguration

“சில நேரங்கள்ல பணத்தை கையில கட்டு கட்டா வெச்சிகிட்டு தேடுறவங்களுக்கு கூட அவங்க தேடுற மாதிரி அவங்க பிசினஸ்க்கு ஏத்தமாதிரி ஒரு இடம் கிடைக்கிறது கஷ்டம்.  ஆனா உங்க விஷயத்துல… இது நிச்சயம் GOD’S GRACE தான்” என்றார்.

நண்பர் சொல்வது உண்மை தான்.  கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் மனையோ மனைவியோ நன்றாக அமைவது அத்தனை சுலபமல்ல. ஆனால், நம் ரைட்மந்த்ராவின் அலுவலகம் இப்படி ஒரு இடத்தில அமைந்தது ஆண்டவனின் அருள் தான்!

சற்று பின்னோக்கிச் செல்வோம்…

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (குறள் 720)

உங்கள் சேவையின் மதிப்பை உணராதவர்களிடம் அதை நீங்கள் செய்வது என்பது கிடைப்பதர்க்கரிய அமிழ்தத்தை குப்பையில் கொண்டு போய் கொட்டுவதற்கு சமம்.

துரோகிகளால் சிதைக்கப்பட்டு யாருக்கும் எந்தப் பயனும் இன்றி, நமக்கும் ஒரு அங்கீகாரம் இன்றி வீணாகிக்கொண்டிருந்த நமது ஆற்றலை உன்னதமான விஷயங்களை நோக்கி திருப்ப வேண்டியே இந்த தளத்தை துவக்கினோம். இன்று நாம் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சி என்பதை 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாம் துவக்கியபோது கற்பனை கூட செய்து பார்க்காத ஒன்று. யார் படிக்கிறாங்க…. எத்தனை பேர் படிக்கிறாங்க என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை… நல்லதையே எழுதுவோம்… பலன் கிடைக்கிறதோ இல்லையோ புண்ணியமாவது கடைசியில் புண்ணியமாவது மிஞ்சும் என்கிற ஒரு நம்பிக்கையில் தான் இந்த தளத்தை துவக்கினோம். நமக்கு அப்போதிருந்த மனநிலையில் ஒரு டைவர்ஷன் தேவைப்பட்டது.

ஏனோ தானோ என்று எதையும் செய்யும் வழக்கம் நம்மிடம் எப்போதும் இருந்ததில்லை. நாம் எதைச் செய்தாலும் அதில் நம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்து ஒரு வித தவம் போல செய்வோம். அது நம் உதிரத்தில் ஊறிய ஒன்று.

இந்த தளத்தின் ஒவ்வொரு பதிவையும் அப்படி எண்ணியே அளித்தோம். அளித்துவருகிறோம். தளம் மெல்ல மெல்ல படிப்படியாக சீராக வளர்ந்தது.

எந்த ஒரு தளத்தின் வெற்றியும் பெருமையும் அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை பொருத்து வருவதல்ல. யார் அதை பார்க்கிறார்கள் என்பதை பொருத்தே அது அமையும். நம் தளத்தை பொருத்தவரை, நமக்கு கிடைத்திருப்பது தரமான வாசகர்கள். QUALITY READERS. நல்ல விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும், படிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் தான் இங்கே வரவே செய்வார்கள். அதாவது தேடல் உள்ள தேனீக்களே இங்கே வருவார்கள். கண்ட இடத்தில உட்காரும் ஈக்களுக்கு இங்கே வேலையில்லை. பூக்களில் மட்டுமே அமரும் இயல்புடையவை தேனீக்கள். அந்த வகையில் நமது தளம் மிகப் பெரியதொரு வெற்றியை இறைவன் அருளால் பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல.

இதனிடயே…

நாம் வேலை பார்த்த அலுவலகத்தில் கணினி முன்பு அமர்ந்து கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் மீண்டும் கணினி முன்பு ரைட்மந்த்ராவுக்கு பணிகள் நடக்கும். கண்களுக்கு ஓவர் ஸ்ட்ரெயின் ஏற்பட்டது. கடந்த மூன்றாண்டுகளும் இப்படித் தான் இந்த தளம் நடந்துவந்தது.

ஒரு கட்டத்தின் மேல் இனி நிச்சயம் நமது தளத்திற்கு என்று தனியாக ஒரு அலுவலகம் தேவை என்கிற அவசியம் ஏற்பட்டபோது, அதற்கான பணிகளில் இறங்கினோம்.

நண்பர்கள் சிலரிடம் பேசியபோது, “உங்களால் என்ன முதல் போடமுடியும்?” என்றார்கள்.

நாம் சொன்னோம் : “நம்பிக்கை!”

“பேசுறதுக்கு நல்லா இருக்கும். பிராக்டிக்கலா எந்தளவு சரிப்படும்? எதுக்கும் ஜோசியர் கிட்டே கன்சல்ட் பண்ணுங்க… ஜாதகம் பாருங்க…”

கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான் அப்படிங்கிற பழமொழியில நமக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.

“சாமி.. அதெல்லாம் பணத்தை கையில வெச்சிகிட்டு பிசினஸ்ல இறங்கறவன் செய்யவேண்டியது. ஏன்னா இருக்குறதை இழந்திடக்கூடாது. ஆனா நான் மிச்சம் வெச்சிருக்கிறது நம்பிக்கை ஒன்னு தான். என்கிட்டே வேற ஒன்னும் இல்லே இழக்கிறதுக்கு!” என்றோம்.

“நம்பிக்கை ஒன்னு போதுமா ஜெயிக்கிறதுக்கு?”

“என்ன அப்படி சொல்லிட்டீங்க. அந்த ஒரு வார்த்தை தாங்க இன்னைக்கு இருக்குற மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்களின் ஒற்றைக் கல் அஸ்திவாரமா இருக்கு!” என்றோம்.

RM Inauguration6

ஆம்.. நமக்கு நம் வாசகர்களாகிய உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மகா பெரியவா மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் உள்ளிட்ட நம் குருமார்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.  இவற்றுடன் சேர்ந்து நிச்சயம் நம்மால் முடியும் நாம் ஜெயித்தே தீருவோம் என்கிற  தன்னம்பிக்கை இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல் வேறு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது இறைவன் மீதுள்ள நம்பிக்கை. அது சற்று அதிகமாகவே நமக்கு உண்டு. ஏனெனில் அவன் விரும்பும்படியான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணத்தை துவக்கிய ஒருவன் திக்கு தெரியாமல் பாதி வழியில்  நிற்கும்போது வழி காட்டவேண்டியது அவன் கடமையல்லவா? அதை அவன் மறுக்க முடியுமா? கண்டும் காணாமல் இருக்கமுடியுமா?

ரைட்மந்த்ராவுக்கு அலுவலகம் துவங்க ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் அது. முதலில் மார்கெட் பல்ஸை தெரிந்துகொள்வோம் என்று கருதி அங்கே இங்கே விசாரித்ததில்… சில இடங்களில் கூறிய வாடகையும் அட்வான்ஸும் கேள்விப்பட்டு தனியாக அலுவலகம் வைக்கும் எண்ணமே நமக்கு போய்விட்டது.

இருந்தாலும் மூழ்கி முத்தெடுக்கனும்னா கடல்ல குதிச்சே ஆகணும். ஆனா அலை எப்போ ஓயுறது? கடல்ல எப்போ குதிக்கிறது…? – இது தான் நமது நிலை.

இதனிடையே வேலை பார்த்த அலுவலகத்தில் பணிச் சுமையும் அதிகரித்தது. நம்மால் நமது பணி மற்றும் ரைட்மந்த்ரா இரண்டுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்படியே எத்தனை நாளை கழிப்பது? மகிழ்ச்சியாக ஒருமுகமாக மனதை செலுத்தி எழுத வேண்டிய நம் தளத்தின் பதிவுகளை இரவு கண் விழித்தும் காலை சீக்கிரம் எழுந்தும் ஒரு வித நெருக்கடியில் செய்வது கடினமாக இருந்தது.

மனச்சோர்வு ஏற்படும் நேரங்களில் விவேகானந்தரின் நூல்களை பொன்மொழிகளை படிப்பதை ஒரு வாடிக்கையாகவே நாம் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் தான் நாம் முன்பு பதிவொன்றில் அளித்த விவேகானந்தரின் அந்த குறிப்பிட்ட பொன்மொழி கண்ணில்பட்டது. பாறையில் இடுக்கில் வரும் வேரைப் போல, மனதின் ஓரத்தில் நம்பிக்கை பிறந்தது.

RM Inauguration2

நாம முயற்சிகளில் இறங்குவோம். நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தோம். பல இடங்களில் அலைந்து திரிந்தோம். சில இடங்களில் ஒரு மாத வாடகை புரோக்கர் கமிஷன் கேட்டார்கள். அதில் நமக்கு விருப்பமில்லை. உடன்பாடுமில்லை. அந்த பணத்துல நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்ய முடியுமே…

ஆனால் முயற்சியை மட்டும் நாம் நிறுத்தவில்லை. உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அதற்கே அற்பணித்திருந்தோம். தேடல் தேடல் தேடல் தான். கிட்டத்தட்ட பல நாட்களாக பல இடங்களில் ஏறி இறங்கியிருப்போம். இதற்காக நேரம் ஒதுக்கி தேடமுடியவில்லை என்றாலும் அலுவலகத்திற்கு போகும்போதும் வீட்டுக்கு ரிடர்ன் வரும்போதும், இப்படி கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் விசாரித்தபடி இருந்தோம்.

swami-vivekananda8 copy copy

சென்ற டிசம்பர் மத்தியில் ஒரு நாள்… நாம் வழக்கமாக கோ-சம்ரோக்ஷனம் செய்யும் காசி விஸ்வநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு அன்று விசேஷ கோ-சம்ரோக்ஷனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

கிரகங்களின் பெயர்ச்சிகளின் போது நமது பலன் எப்படி இருந்தாலும் நாம் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நல்ல காரியம் செய்ய ஒரு வாய்ப்பு என்று கருதி அன்றைக்கு ஏதேனும் நல்ல விஷத்தை செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்போம்.

அன்று ஏனோ மனதை ஒரு வித பாரம் அழுத்திக்கொண்டிருந்தது. காசி விஸ்வநாதரிடம் நமது பாரத்தை இறக்கி வைத்தோம். “ஐயனே… அயராமல் உழைப்பது எனக்கு பிடிக்கும் என்றாலும் இதற்கு மேல் என்னால் முடியாது. என் அறிவும் ஆற்றலும் என் முன்னேற்றத்துக்கும் இந்த சமூகத்தின் நன்மைக்கும் முழுமையாக பயன்படுமாறு நீ தான் எதையவாது செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தோம்.

இவன் சோதிக்கிறதுல எக்ஸ்பர்ட். நாமளோ ஏற்கனவே நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறோம். எதுக்கும் அம்மாகிட்டே ஒரு வார்த்தை போட்டுவைப்போம் என்று விசாலாக்ஷி அன்னையிடம் சென்று, “அம்மா… நல்லதோர் வீணையை நலம் கெட புழுதியில் எறிந்துவிடாதவாறு பார்த்துக்கொள்வது உன் கடமை. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை!” என்று பிரார்த்தித்துவிட்டு புறப்பட்டோம்.

RM Inauguration4

அப்போது நம்முடன் கோ-சம்ரோக்ஷனத்துக்கு நண்பர் ராஜா வந்திருந்தார். அவரிடம் நாம் ரைட்மந்த்ராவுக்கு என்று தனியாக அலுவலகம் பார்த்துக்கொண்டிருக்கும் தகவலை சொல்லி, CHEAP & BEST ஆ ஒரு இடம் பார்க்கணும் ஜி. என்னால் அட்வான்ஸ் வாடகை எல்லாம் ரொம்ப கொடுக்க முடியாது என்று நமது கனவை விவரித்தோம்.

நாம் வாடகை ரூ.4000/- டு ரூ.4500 குள்ளே இருக்கணும். லொக்காலிட்டி டீசண்ட்டா இருக்கணும். நாலு இடம் சட்டுன்னு போய்ட்டு வர்ற மாதிரி இருக்கணும். சிட்டிக்குள்ளே இருக்கணும். காத்தோட்டமா இருக்கணும். இப்படி ஏகப்பட்ட ‘கணும்’, ‘கணும்’ களை அடுக்கினோம்.

“தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு…. நாளைக்கு வாங்க பார்ப்போம் ஜி…” என்றார்.

இன்று செய்யக்கூடிய பணிகளை நாளை வரை ஒத்திப்போடக்கூடாது. இன்றே செய்துவிடவேண்டும் என்பது நம் கொள்கைகளுள் ஒன்று. இருந்தாலும் இது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயாமாயிற்றே… எதற்கும் கேட்டுப்பார்ப்போம்… என்று கருதி அவரிடம் “நாளைக்கா? இப்போ போய் பார்க்கமுடியாதா?”

சற்று யோசித்தவர்.. “சரி வாங்க…” என்று கூறி அழைத்து சென்றார். நேராக நாம் வந்த இடம் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் உள்ள முருகன் காம்ப்ளக்ஸ். (பேரைப் பார்த்தீங்களா?)

அந்த லொக்காலிட்டி நமக்கு பிடித்துவிட்டது. மேலும் காசி விஸ்வநாதருக்கு அருகில் வேறு. அதுமட்டுமல்ல நாம் அடிக்கடி செல்லும்  இடங்கள் அனைத்துக்கும் அருகில். இது போதாதா…?

காம்ப்ளக்ஸை சுற்றிப் பார்த்தோம். காம்ப்ளக்ஸின் இரண்டாவது மாடியில் ஒரு அறை காலியாக இருந்தது.

RM Inauguration3

அளவில் சிறிய ஆனால் நல்ல காற்றோட்டமான அறை. நல்ல சூரிய வெளிச்சம் வரக்கூடிய அறை. எதிரே நிழல் தரும் மரம். இறங்கி வந்தால் மெயின்ரோடு. இப்படி அனைத்து அம்சங்களும் ஒன்றாக இருந்தது.

நமது அலுவலக அறை எப்படி இருக்கவேண்டும் என்று நாம் விஷூவல் செய்தோமோ அதைப் போன்றே இருந்தன. அன்னை விசாலக்ஷி காட்டிய இடமாயிற்றே…..

“இந்த ரூமே போதும் ராஜா. எப்படியாவது இதைப் பேசி முடிச்சுடுவோம்…”

நாம் சென்ற நேரம் காம்ப்ளக்ஸ் மானேஜர் இல்லை. அடுத்து நாள் காம்ப்ளெக்ஸ் மானேஜரிடம் பேசினோம். வாடகையை சற்று குறைத்துக்கொள்ளச் சொன்னோம். நமது தளத்தின்  விசிட்டிங் கார்டை கொடுத்து  நமது தளத்தை பற்றியும் நமது இதர பணிகளை பற்றியும் எடுத்துக்கூறினோம்.

“சரி… ஓனர் கிட்டே பேசிப் பார்க்குறேன்….” என்று கூறியவர் அடுத்த நாள் பேசும்போது வாடகையிலும் அட்வான்சிலும் சற்று குறைத்துக்கொள்ள ஓனர் ஒப்புக்கொண்டதாக சொன்னார்.

“சார்… ரொம்ப நன்றி. ஆனா…. என்னால உடனே OCCUPY பண்ண முடியாது. கொஞ்சம் டயம் வேணும் எனக்கு” என்றோம்.

“ஒரு சின்ன அமௌண்ட் டோக்கன் அட்வான்ஸ் மாதிரி கொடுங்க போதும். நாங்க வெயிட் பண்றோம்.” என்றார்.

RM Inauguration5

அடுத்தநாள்….. ஒரு சிறிய தொகையை கொடுத்து அறையை உறுதி செய்துவிட்டோம். பாக்கி  தொகைக்கு சற்று அவகாசம் கேட்டு அதில் பாதியை கொடுத்துவிட்டோம். மீதி அடுத்த மாதம் தரவேண்டும்.

நமக்கு தேவையான கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொண்டு பிறகு வரலாம் என்றால் அதற்கு மாதக்கணக்கில் ஆகிவிடும். இப்போதைக்கு யாராவது பவித்ரமான புண்ணியாத்மா ஒருவரை வைத்து விளக்கேற்றி பிள்ளையார் சுழி போட்டு விடுவோம். அப்புறமா ஒவ்வொண்ணா ஏற்பாடு செய்துக்கலாம். எல்லாம் ரெடியான பிறகு தான் வேலையை ஆரம்பிப்போம்னு நினைக்கவேண்டாம். பெட்ரோல் பங்க் பாலிஸியை அப்ளை செய்வோம் என்று நமக்கு நாமே கூறிக்கொண்டு அலுவலகத்தை திறக்க சரியான நபரை தேடிவந்தோம்.

(அதென்ன பெட்ரோல் பங்க் பாலிஸி? பெட்ரோல் பங்க் ஒரு இடத்தில் புதிதாக வரவிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்…. முழுமையாக கட்டி முடிக்கும் வரை வெயிட் பண்ணமாட்டார்கள். ஜஸ்ட் மண்ணை போட்டு நிரவி ரெண்டு மெஷினை இன்ஸ்டால் செய்து பிசினஸை ஸ்டார்ட் செய்துவிடுவார்கள். ஒவ்வொன்றாக அதற்கு பிறகு தான் நிர்மாணிப்பார்கள். ஒரு பக்கம் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும். மறுபக்கம் பிசினஸ் நடந்துகொண்டிருக்கும். பல பங்க்குகளில் மேற்கூரையே பல மாதங்கள் கழித்து தான் போடுவார்கள். இது தான் பெட்ரோல் பங்க் பாலிஸி!)

அலுவலகம் திறக்க ஒரு நல்ல பொற்கரத்தை தேடியபோது மனதுக்கு தோன்றியவர் தான் பாம்பே ஞானம் அவர்கள். இவரை விட ஒரு தகுதியான நபர் ரைட்மந்த்ரா அலுவலகத்தை திறந்துவைக்க நமக்கு கிட்டியிருக்க முடியாது.

அவரை தொடர்புகொண்டபோது….

…. அடுத்த பதிவில் தொடரும் !

===========================================================

Also check articles related to above post:

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

===========================================================

[END]

18 thoughts on “ஒரு கனவின் பயணம்!

  1. நாங்களும் கனவு காணத் துவங்கியிருக்கிறோம்……..

  2. டியர் சுந்தர்

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா ; லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹா

    உங்கள் பயணம் வெற்றி பயணமாக தொடரட்டும் ; உங்களது கட்டுரைகளை படிதானே ; இனிமையிலும் இனிமை ; நான்உங்களது கட்டிட திறப்பு விழாவிற்கு வந்ததற்கு பெருமைபடுகிரனே ; வாழ்த்துக்கள்

  3. சார் வணக்கம்

    தங்கள் பயணம் இனிதை என்றும் தொடர இனிய நல்வாழ்த்துக்கள்

    நன்றி

  4. கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான் . நீங்கள் நிருபீத்து காட்டி விட்டர்கள். வாழ்த்துக்கள் சுந்தர்

  5. கனவு காணுங்கள் என்னும் பொன்மொழிக்கேற்ப உங்கள் கனவி மெய்பட வாழ்த்திகிறோம்.
    தேடல் உள்ள தேனிக்களுக்கு என்று உங்கள் வாசகர்களை பற்றி போட்டுள்ள பாராவில் எங்களின் நாடித்துடிப்பை நன்றாக அளந்து எழுதி உள்ளீர்கள்.
    உங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்து ஒரு வித தவம் போல நீங்கள் அளித்த எல்லா பதிவுகளும் சரியான பாதையில் பயணித்து சரியான மக்களை சென்றடைந்து 2015-ல் கடவுள் கிருபையால் தனி அலுவலகம் திறக்க காரணமாக அமைந்தது.
    உங்கள் எல்லா கனவுகளையும் நீங்கள் காண காண இறைவன் நிறைவேற்றித்தருவார்.
    நன்றி

  6. வாழ்த்துக்கள் சுந்தர் . அடுத்த 5 ஆண்டுகளில் “Right Mantra” மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். ஆன்மிகம் என்றால் “Right Mantra” என்று பெரிய அளவில் நீங்கள் பேசப்படுவீர்கள். எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  7. தங்கள் கனவு நனவாவதை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது., தங்கள் கனவை திறம்பட நனவாக்குவதற்கு அந்த நடமாடும் தெய்வம் தங்கள் அருகில் இருக்கும் பொழுது உங்களுக்கு கவலை எதற்கு. இன்னும் பல அறிய சாதனையாளர்களையும் , ஆண்மிகவாதிகளையும் சந்தித்து நம் தளத்திற்கு அறிமுக படுத்த வேண்டும். தொன்மையான கோவில்களை பற்றிய அறிய நிகழ்ச்சிகளை முழு coverage உடன் நம் வாசகர்களுக்கு அளிக்க வேண்டும். தேடல் உள்ள தேனிக்கள் நம் தளத்திற்கு வந்து கொண்டு தான் இருப்பார்கள். மிகவும் அருமையான இடத்தில் தங்கள் அலுவலகம் அமைந்திருப்பது தங்கள் குலதெய்வம் முருகன் அருளால் தான். அதனால் தான் அந்த காம்ப்ளெக்ஸ் பெயரே முருகன் காம்ப்ளெக்ஸ் என்று இருக்கிறது. தாங்கள் மேலும் மேலும் மிக பெரிய கனவு காண வேண்டும். அதை நடத்தி கொடுக்க ஆண்டவன் இருக்கிறான். தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்/ எங்களின் பயணமும் தங்களுடன் தொடரும்/ நான் ரைட் மந்த்ரா வாசகராக இருப்பதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன்.

    ஆபீஸ் opening ceremony போட்டோவை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    நன்றி
    உமா வெங்கட்

  8. Dear sundar,
    Wish you all the best for ur divine job. God bless you always. Wishing you this website is going to be the best spiritual site. Let your dreams come true.

  9. உங்கள் முன்னேற்றத்துக்கு முழுமையான வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுடன்.

  10. பெரும் பயணத்தின் முதல் படி !
    வாழ்த்துக்கள் சுந்தர்.

    அருமையான அணி அமைய வாழ்த்துக்கள் !

    http://youtu.be/GMWFieBGR7c

  11. சார்
    தங்கள் கனவு நனவாவதை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.,உங்கள் முன்னேற்றத்துக்கு முழுமையான வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுடன். –
    ஆல் தி பெஸ்ட்
    SELVI

  12. சுந்தர்ஜி,

    வாழ்த்துக்கள். தாங்கள் எந்த ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மகா பெரியவா ஓடோடி வந்து நிறைவேற்றி விடுவார். குரு இருக்க பயமில்லை.
    தாங்கள் மென் மேலும் முன்னேறி வாசகர்களாகிய எங்களையும் நல் வழி படுத்துவீர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. பயணம் தொடரட்டும்.

  13. இது ஒரு தொடக்கமே
    சிலர் பயணத்தை ஆண்டவன் தீர்மானிப்பான்
    சில பேர் பாதையை தீர்மானிப்பார்கள்
    அனால் உங்களுக்கு இரண்டையுமே ஆண்டவனே தீர் மானிக்கிரான்

Leave a Reply to Nithya krishnamurthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *