Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

print
து நடந்தது 1976 ஆம் ஆண்டு. ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வந்தார் அந்த மாணவர். நன்றாக படிக்கக் கூடிய மாணவர் அவர் என்றாலும் கல்லூரி மாணவர்களுக்கே உரிய விசேஷ சொத்தான அரியர்ஸ் அவருக்கும் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு தாள்கள் அரியர்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் இறுதியாண்டு தேர்வுக்கும் முந்தைய அரியர்ஸ் பேப்பர்களுக்கும் அந்த மாணவர் தயாராகிகொண்டிருந்தால் அனைத்தும் நல்லபடியாக முடித்து நாம் பாஸ் செய்வோமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

Maha Periya gayathri

இவரின் மிகவும் நெருங்கிய சக மாணவர்கள் இருவரின் குடும்பத்தினர் காஞ்சி மகானின் தீவிர பக்தர்கள். அதில் ஒருவர் கன்னட பிராமின். மற்றொருவர் மலையாள பிராமின். இவர் நாயுடு வகுப்பை சேர்ந்தவர்.

நடமாடும் தெய்வம் அப்போது கலவையில் முகாமிட்டிருந்தார். எங்கெங்கிருந்தோ வந்து அவரை சந்தித்து ஆசிபெற்றுச் சென்றுகொண்டிருந்தனர். சாரை சாரையாக படையெடுத்த மக்கள் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று ஆசிபெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர்.

அவரை சந்தித்து ஆசிபெற மேற்படி பிராமண குடும்பத்து நண்பர்கள் புறப்பட, இவரையும் அழைத்தனர்.

“பெரியவாவை தரிசனம் பண்ணப் போறோம்… நீயும் வாயேண்டா அம்பி…”

“நிச்சயமா…!” என்று கூறி இவரும் அவர்களுடன் கலவைக்கு சென்றார்.

சக நண்பர்கள் இருவரின் தாயார் மற்றும் இவர் ஆக மொத்தம் ஐந்து பேர் பெரியவாவை தரிசனம் செய்ய சென்றனர். அதில் ஒரு மாணவனின் தந்தை கோபால் ராவ் என்கிற மிகப் பெரிய அட்வகேட். ஆற்காடு ஜில்லாவிலேயே மிகப் பிரபலமான வக்கீல் அவர்.

பெரியவாவை தரிசித்து ஆசி பெற வளைந்து நெளிந்து காணப்பட்ட மிக நீண்ட வரிசையை பார்த்தவுடன் “அப்படி என்ன விசேஷம் இருக்கு இவர்கிட்டன்னு தெரியலியே…” என்று வியப்பு மேலிட நின்றுகொண்டிருந்தார் இவர்.

இவர்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் ஒவ்வொருவராக தீர்த்தப் பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றுவிட இவர் முறை வந்தது.

இவருக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார் பெரியவா. அவரை வணங்கி வாங்கி அருந்திவிட்டு நகர எத்தனிக்க, பெரியவா தனது தொடையை தட்டுகிறார்.

சிப்பந்திகளிடம் சைகையில் “அந்த பழத்தை இவருக்கு கொடு……….!” என்று கூற, அவர்கள் அங்கே எதிரே தாம்பாளத்தில் இருந்த ஆப்பிள்களில் ஒன்றை எடுத்து தர, இவர் அதைப் பெற்றுக்கொண்டு ஒரு வித பரவசத்துடன் அந்த புனிதரை பார்க்கும்போது, அவர் கையை தூக்கி ஆசீர்வதிக்கிறார்.

இவருக்கு ஒரே சந்தோஷம். இவர் நண்பர்களுக்கோ அதிர்ச்சி.

“பாரும்மா… பாரும்மா… அவனுக்கு மட்டும் பெரியவா பழம் கொடுத்திருக்கார். நமக்கு கொடுக்கலே…” என்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தினர். நமக்கு கிடைக்காவிட்டாலும் நம்முடன் வந்த தங்கள் நண்பனுக்காவது கிடைத்ததே என்று கடைசியில் திருப்திபட்டுக்கொண்டனர். இவர் தனக்கு கிடைத்த ஆப்பிளை நறுக்கி ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்க அனைவரும் நிகழ்வை அசைபோட்டபடி சாப்பிடுகிறார்கள்.

அடுத்த சில மாதங்களில் பரீட்சை முடிந்து ரிசல்ட் வந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக இவர் அரியர்ஸ் உட்பட அனைத்தையும் பாஸ் செய்துவிட, நன்றாக படிக்கும் அந்த நண்பர்கள் ஒரு பேப்பரில் ஃபெயிலாகி இருந்தனர். ஒரு மாணவனின் தாயார் இவரிடம், “பெரியவா உனக்கு மட்டும் பழம் கொடுக்கும்போதே தெரிஞ்சுது… ஏதோ விஷயம் இருக்குன்னு. இப்போ தான் அது புரியுது!”

(இருந்தாலும் அடுத்த அட்டெம்ப்டில் இருவரும் அரியர்ஸை கிளியர் செய்துவிட்டு அதற்கு பிறகு நல்ல உத்தியோகத்துக்கு சென்றுவிட்டனர்.)

ஏற்கனவே அரியர்ஸை வைத்திருந்து பெயிலாக இருந்த நிலையில் பெரியவாவின் தரிசனத்தில் ஆப்பிளை பிரசாதமாக பெற்று ஒரே மூச்சாக பாஸ் செய்த அந்த மாணவர் வேறு யாருமில்லை… தற்போது திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில் மானேஜராக பணியாற்றும் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்.

Thiruninravur balakrishnanசமீபத்தில் ஒரு நாள் ஒரு ஞாயிறு மாலை, பெங்களூரில் இருந்து வந்த நண்பர் ஒருவர் திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோவில் (இது ஒரு வைப்புத் தலம். பூசலார் நாயனாரின் அவதாரத் தலம்) செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாமும் அங்கு உழவாரப்பணி செய்வது தொடர்பாக ஏற்கனவே அந்த ஆலயத்தின் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேசியிருந்தோம். “ஒரு நாள் நேர்ல வாங்களேன்… ப்ரீயா பேசலாம்” என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நண்பரும் அழைக்கவே அவருடன் திருநின்றவூர் சென்றிருந்தோம்.
________________________________________________________________

* நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி இங்கல்ல. பிப்ரவரி 15 ஞாயிறன்று திருமழிசையை அடுத்துள்ள சித்துக்காடு என்னும் ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெறும். அதற்கடுத்த உழவாரப்பணிகளில் ஒன்று தான் இங்கு (திருநின்றவூரில்) நடைபெறும்.
________________________________________________________________

சுவாமியை தரிசித்துவிட்டு பாலகிருஷ்ணணன் அவர்களை அவர் அலுவலகத்தில் சென்று சந்தித்தபோது, அங்கே அவரது இருக்கைக்கு எதிரே நடமாடும் தெய்வத்தின் படம்.

பெரியவா பக்தர்களுக்கு அவர் படத்தை எங்கு பார்த்தாலும் ஒரு வித பரவசம் ஏற்படுவது இயல்பல்லவா? நமக்கு மகிழ்ச்சியில் இதயம் பூரித்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நண்பரையும் அவரிடம் அறிமுகம் செய்துவைத்து நாங்கள் பேசவேண்டிய விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.

பின்னர்…. “சாருக்கு மகா பெரியவாவை பிடிக்குமோ?”

“பிடிக்குமா… என் வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சதே அவர் தாங்க!” என்று கூறிய அவர், என்ன கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்… என்று நாம் கேட்டுக்கொண்டபோது விவரித்தது தான் மேலே நாம் சொன்ன அரியர்ஸ் பாஸ் சம்பவம்.

Thiruninravur temple office

“பெரியவாவை பார்க்கும்போது ஏதாவது அவர் கிட்டே பேசினீங்களா? அவர் ஏதாவது சொன்னாரா?”

“பேசறதா… அவரை பார்க்குறதே பெரிய விஷயம். இதுல எங்கே பேசுறது. பெரியவா யார் கிட்டேயும் தேவையில்லாம எதுவும் பேசமாட்டார். அளந்து அளந்து தான் பேசுவார். நாங்க போன போன அன்னைக்கு யார் கிட்டேயும் பேசலே. மௌனவிரதம்னு நினைக்கிறேன்.”

“இன மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் கலவைக்கு படை எடுத்து அவரிடம் ஆசி பெற்று செல்வதை பெரிய பாக்கியமாக கருதினர். பார்வையினாலேயே பாவங்களை பொசுக்கிய புண்ணியர் அவர். வேறு என்ன சொல்வது அவரைப் பற்றி… இன்றைக்கு நான் நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான். அதனால் தான் என் எதிரிலேயே அவர் படத்தை வைத்து தினசரி தரிசித்து வருகிறேன்.” என்று முடித்துக்கொண்டார் பாலகிருஷ்ணன்.

மகா பெரியவா ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமே தலைவர். அவர்களுக்கே அனுகூலமாக இருப்பவர் என்கிற சிலரின் வறட்டுவாதத்திற்கு சம்மட்டியடி கொடுக்கும் மற்றுமொரு நேரடி சாட்சி இது.

சூரியன் எல்லாருக்கும் போதுவானதன்றோ…! அதுவும் இந்த சூரியன் அறியாமை எனும் இருளை அகற்ற வந்த ஞானசூரியன் ஆயிற்றே!

Irudhayaleeswarar 2

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியே ஒரே பரபரப்பு… அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமியை பக்தர்கள் தூக்கி வர… மரத்தில் இருந்த பறவைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த தருணம் இருக்கிறதே.. அப்பப்பா…. இப்படி ஒரு சுவாமி புறப்பாட்டை இதுவரை நாம் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள்….!

இதில் வியப்பு ஒன்றுமில்லை. காரணம்… ஆறறிவு மனிதர்கள் நம்மைவிட ஐந்தறிவு விலங்குகள் அல்லவா அவன் மீது தன்னலமற்ற பெரும் பக்தி கொண்டுள்ளன.

(அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தை புகைப்படங்களுடன் வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்….)

Check….

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

================================================================

Also check from our archives…

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

6 thoughts on “பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

  1. இந்த பதிவை படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது. மகா பெரியவாவின் அருட் பிரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்ற திரு பாலக்ருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அந்த நடமாடும் தெய்வத்தை பற்றி படிக்க படிக்க மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது.தாங்கள் எங்கு சென்றாலும் மகா பெரியவா தங்களுடன் பயணிக்கிறார் ……

    பிரதோஷம் பற்றிய மெய் சிலிர்க்கும் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    குருவே……சரணம்

    மகா பெரியவா … கடாக்ஷம் …

    நன்றி
    உமா வெங்கட்

  2. Dear Sundar

    Srimathey Ramanujaya namaha
    Ramanujar thiruvadigalay charanam
    periyava thiruvadigalay charanam
    Really this is super. Thanks for the same

  3. வணக்கம்………..குருவின் மகிமைக்கு எல்லையே இல்லை………..இருதயாலீஸ்வரர் மூலம்தான் எனக்கு ரைட்மந்த்ரா தளத்தின் அறிமுகம் கிடைத்தது, அவருக்கு எம் நன்றிகள்…..திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் வணக்கங்கள்……..இருதயாலீஸ்வரரை தினந்தோறும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்…………அவரிடம் இறைவனின் திருவிளையாடல் காரணமாக சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம்……..இப்போது அவரின் குரு தரிசனத்தை அறிந்து மகிழ்கிறோம்……….விரைவில் நமக்கும் இறைவனின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யும் வரம் கிடைக்கட்டும்…………

  4. சுந்தர்ஜி
    சூப்பர்

    உங்கள் படைப்பு அனைத்தும் ஒவ்வொரு முத்துகள். முத்துகள் கோர்த்து ஒரு மாலையாக நம் பெரியவா அவர்களுக்கு சமர்ப்பணம்

  5. சிறப்பான பகிர்வு சார். நடமாடிய தெய்வத்தின் தெய்வத்தின் அருளைப் பெற புண்ணியம் செய்தவர் .திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் அவருக்கு என்னுடைய வணக்கங்கள். மிக்க நன்றி.

  6. நான் எப்பொழுதும் பெரியவாளிடம் பக்தி கொண்டுஇருப்பவன் 1986 வருடம் என் பணி நிமித்தமாக காஞ்சிபுரம் செல்ல வேண்டிய சமயம் நான் பெரியவளிடம் தியானம் செய்து உங்களை விடியலில் தரிசிக்க வேண்டும் என கேட்ட போது அவர் அதற்கு காலை 5.30 மணிக்கு மடத்திற்கு வந்து விடு நாம் சந்திப்போம் என தியானம் மூலமாக பதில் சொன்னார் நானும் மறுநாள் காலை சரியாக 5.15 மணிக்கு மடத்து வாசலில் நின்றபோது மடத்து ஊழியர் நீங்கள் கால் சட்டை அணிந்து இருப்பதால் உங்களை விட முடியாது என்று சொன்னார் ஆனால் சரியாக 5.27 ஒரு சிறு பையன் உள்ளிருந்து வந்து பெரியவா இவரை அழைத்து வர சொன்னார் என என்னை உள்ளே அழைத்து சென்றார் உள்ளே சென்ற நான் ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் அந்த தெய்வத்து முன் நின்றேன் என்ன சரியாய் 5.30 மணி ஆயிற்றா என கேட்டு என்னை திக்கு முக்கு ஆக்கிவிட்டார் அப்போது அவர் துளசி பூஜை செய்து கொண்டிருந்தார்

Leave a Reply to k sampathkumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *