Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > தை அமாவாசை – என்னென்ன செய்தால் புண்ணியம்?

தை அமாவாசை – என்னென்ன செய்தால் புண்ணியம்?

print
நாளை ஜனவரி 20 செவ்வாய்க்கிழமை – தை அமாவாசை. அமாவாசை என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால அது மிக மிக ஒரு நல்ல நாள். நிறைந்த நாள் என்கிற பெயர் அமாவாசைக்கு  உண்டு. அருள் நிறைந்த நாள் இது. எனவே தான் ‘நிறைந்த நாள்’ என்று கூறுகிறார்கள்.

இந்து தர்மப்படி அமாவாசை தினத்தில் நம் பித்ருக்கள் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள். இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆசியை பரிபூரணமாக பெற்று வாழ்வில் ஏற்றம் பெறுவோம். அன்று செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்த விரிவான பதிவு சென்ற ஆண்டே அளித்தோம். இருப்பினும் சில புதிய தகவல்களுடன் சற்று சுருக்கமாக பார்ப்போம்.

Thai amavasai 2* நாளை அவசியம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். ஏதாவது சிவன் அல்லது பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்யலாம். நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது மேலும் சிறப்பானதாகும்.

* இந்த அவசர யுகத்தில் தர்ப்பணம் செய்யவெல்லாம் எனக்கு நேரம் கிடையாது என்ன செய்வது என்று குறைப்பட்டுக்கொள்கிறார்கள் சிலர். மாதம் ஒரு முறை வரும் அமாவாசைக்கே இப்படி சொல்கிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம்.

* இவை அனைத்தையும் செய்ய முடியவில்லையா? சரி போங்கள். உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. ஆடி அமாவாசை தர்ப்பணமும், தை அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இவைகளை செய்யத் தவறுவதால் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன.

தை அமாவாசை அன்று வேறு என்ன செய்யலாம்?

* காக்கைகளுக்கு நெய் கலந்த பருப்பு அன்னம் வைப்பது மிகவும் நல்லது.

* ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தருவது மிகவும் பலன் தரும்.

Thai Amavasai

* கோ-சம்ரோக்ஷ்ணம் அவசியம். கோ-சம்ரோக்ஷனம் என்பதற்காக அகத்திக் கீரைகளாக வாங்கி அவற்றின் முன் குவிப்பதற்கு பதில் ஒரு மாறுதலுக்கு கட் செய்த ஆப்பிள், பப்பாளி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை வாங்கி கொடுங்களேன்.

“அகத்திக்கீரை பசு மாட்டுக்கு கொடுத்தா புண்ணியம்” என்கிற செய்தி வலுவாக பரவி விஷேட நாள் மற்றும் கிழமைகளில் அகத்திக்கீரைகளாக வாங்கி அவற்றின் முன்னர் குவித்து விடுகிறார்கள். அவை எவ்வளவு தான் சாப்பிடும்? பல நேரங்களில் பார்க்கவே பரிதாமாக இருக்கிறது.

* பசுக்களுக்கு பால், நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல் மிகவும் சிறப்பு. (பச்சரிசி வெல்லம் கூட தரலாம்.)

* சமுத்திர ஸ்நானம் எல்லா நாளிலும் செய்யக்கூடாது. ஆனால் தை அமாவாசை போன்ற நாட்களில் தாராளமாக செய்யலாம். (சற்று எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக!!).

==============================================================

சென்ற ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு அளித்த சிறப்பு பதிவுக்கு :

‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

==============================================================

[END]

5 thoughts on “தை அமாவாசை – என்னென்ன செய்தால் புண்ணியம்?

  1. சனாதன தருமம், வருணாசிரம தருமம் , மனுதருமம் இருக்கிறது . இந்து தர்மம் என்பது எது ? எங்கே உள்ளது ? அதன் விளக்கங்களை எங்கே பெறலாம் ? உதவ முடியுமா ?

  2. இந்த பதிவின் மூலம் தை அமாவாசையின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன். நம் மூதாதையர்களுக்குச் செய்யும் கர்மா நம் எழேழு தலைமுறைகளை காக்கும். இன்று நல்ல செயல்களை தொடங்கினால் கண்டிப்பாக வெற்றி உண்டாகும்

    //கோ-சம்ரோக்ஷ்ணம் அவசியம். கோ-சம்ரோக்ஷனம் என்பதற்காக அகத்திக் கீரைகளாக வாங்கி அவற்றின் முன் குவிப்பதற்கு பதில் ஒரு மாறுதலுக்கு கட் செய்த ஆப்பிள், பப்பாளி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை வாங்கி கொடுங்களேன்.// – good idea
    இன்று அபிராமி அந்தாதி தோன்றிய நாளும் கூட.

    இன்று நம்மால் முடிந்த உதவியை மற்றவர்க்கு செய்வோம்

    பித்ருக்களுக்கு கர்மா செய்யாமல் இறைவனுக்கு செய்யும் தொண்டை இறைவனே ஏற்க மாட்டார் .

    நன்றி
    உமா வெங்கட்

  3. அவசியமான பதிவு. இன்றைய தலைமுறைக்கு இதுபோல எடுத்து சொன்னாலும் office முக்கியமா தர்ப்பணம் முக்கியமா என்று எடுத்தெறிந்து பேசுவது நானே கண்கூடாக கண்டேன். உமா மேடம் கேட்டதற்கு பதில்!!! நான் வேளுக்குடி கிருஷ்ணசுவாமி அய்யா அவர்கள் உபன்யாசம் கேட்டு இருக்கிறேன். மிகவும் புரியும்படி, அற்புதமாக பேசுவார். குறைந்த விலையில் கிடைக்கிறது. http://www.velukkudidiscourses.com/ புக் படித்து புரிவதை விட, இந்த DVD player இல் போட்டு கேட்டுகொண்டே நம் வேலைகளை பார்க்கலாம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!!

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *