Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

print
கவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும். அது தான் நம் அனைவருக்கும் ஜீவநாடி. வேதமே அனைத்து தர்மத்திற்கும் அடிப்படை அனைத்து சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. தர்மமே அனைத்து உலகத்தையும் நிலைநிறுத்தக்  கூடியது என்றும் வேத சப்தத்தால் தான் இவ்வுலகத்தை இறைவன் படைத்தான் என்றும் இவ்வுலகின் ஸ்ருஷ்டிக்கும், ஸ்திதிக்கும், வளர்ச்சிக்கும் வேதங்களே முக்கிய காரணமாக உள்ளது என்றும் உபநிஷத்துக்கள் கூறுகின்றன.

திருபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீசர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம்
திருபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீசர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம்

இறைவனது மூச்சுக் காற்றாகவே வேதங்கள் இருந்து வருகின்றன. ஆகையால் இப்படிப்பட்ட  வேதங்களை அனைத்து அந்தணர்களும் வேதத்தின் ஆறு அங்கங்களுடன் அதனுடைய அர்த்தத்துடன் அவசியம் கற்க வேண்டும் என்று ஸ்மிருதி வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது . ஆகவே வேத அத்யாயனம்  செய்தவர்கள் தான் இறைவனது ப்ரதிநிதியாக இப்பூவுலகில் வேத தர்மத்தை பரப்பும் ப்ரச்சாரகர்களாக விளங்குகிறார்கள். அதனாலேயே வேதமே சிவன், சிவனே வேதம் என்னும் வார்த்தை உண்மையாகிறது. இப்படிப்பட்ட வேதங்களை காப்பாற்ற கடந்த காலங்களில் பல மஹான்கள் பலவிதமாக ப்ராத்யத்தனம் செய்து வந்தார்கள். கடந்த நூற்றாண்டில் நம்மிடையே இறைவனுடைய அவதாரமாக தோன்றிய காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தனது தபசக்தியால் வேத தர்மத்தை அபிவிருத்தி செய்தார்கள்.

ஒரு மழைக்காலத்தில் திருக்கழுக்குன்றம் மலை மீதிருந்து அடிவாரத்தின் தோற்றம்
ஒரு மழைக்காலத்தில் திருக்கழுக்குன்றம் மலை மீதிருந்து அடிவாரத்தின் தோற்றம்

சிவனுக்கு மட்டுமல்ல சிவமைந்தன சரவணனுக்கும் வேதத்துக்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. முருகா என்றால் மனம் உருகும். ஓடிவருவான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.

வேதமாதா சிவனுக்காக ஒரு ருத்ரத்தையும், திருமாலுக்காக ஒரு புருஷஸுக்தத்தையும் வைத்து ஸ்தோத்திரம் செய்துள்ளாள். ஆனால் ஸுப்ரம்மண்யத்தை அதுபோல் அணுக முடிய வில்லை.

எனவே, உரத்த குரலில் மூன்றுமுறை சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! என்று அழைப்பதோடு நிறுத்திக் கொள்கிறாள், “மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எது?” என்பார் தாயுமானவர். இங்கு வேத மாதாவின் வாக்கிலேயே தட்டி நின்றது முருகனின் திருநாமம் என்றால் “சுப்ரம்மண்யனை மிஞ்சிய தெய்வ மில்லை” என்னும் பாமரர் வாக்கு உண்மைதானே! சிவதத்துவமானவன் சுப்ரம்மண்ய உபாசனை சிவதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது.

வித்யாரண்யர் வேத பாஷ்யம் எழுதியவர். அவர் வேதங்களைக் காப்பாற்ற வந்த மூர்த்தி சுப்பிரம்மண்யம் என்கிறார். வேதங்களையே காக்க வந்தவரை சுப்ரம்மண்யோம் என்று மும்முறை உரக்க கூறியது பொருத்தம் தானே! இறைவனின் மூச்சுக்காற்றே வேதம். அதன் சாரமே பிரணவம் என்கிற ‘ஓம்’ அகர, உகர, மகாரம் இணைந்த பிரணவ ரூபமான சுப்பிரம்மண்யமே பிரம்ம, விஷ்ணு, ருத்ர வடிவமாகிறார். இவரே வேதத்தின் முடிவும் பொருளுமாவார்.

“மக்கள் விரும்புவதைக் கொடுக்க எத்தனையோ தெய்வங்கள் உள்ளன. மிகவும் துயருற்றவனுக்கும் விரும்பியதை தரும் குகன் என்னும் சுப்ரம்மண்யன் இருக்கிறானே. அவனைவிட வேறு தெய்வத்தை நான் அறியேன்” என்கிறார் சுப்ரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர்! வள்ளலார், சுத்த அறிவே சுப்ரம்மண்யம் என்கிறார். சுத்த அறிவைத்தான் திருவள்ளுவரும் ‘வால் அறிவு’ என்கிறார். ஆக வேதம் கற்பதும் கந்தனை வழிபடுவது போலத்தான்.

Learnng vedas 2

வேதம் கற்பவர்களை ரட்சிக்கவேண்டும்!

“இந்த காலகட்டத்தில் லௌகீகக் கல்வி பயிலுதலே நிறையப் பணம் சம்பாதிக்க வழி என்று அனைவரும் எண்ணும் காலம். வேத அத்யயனம் செய்பவனுக்கும், தான் சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே? ஆகவே அவர்களும் செல்வம் பெற்று வாழ விரும்பினால், அதைத் தவறு என்று கூற வாய்ப்பில்லை. புரோஹிதர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும். நாமே பொருளும் ஊக்கமும் தராமலிருந்தால், அவர்கள் எப்படித்தான், வேத அத்யயனம் செய்யவேண்டும் என்று இறங்குவார்கள்? ஆகவே, நாம் வேதம் கற்றுத் தருபவர்களை மரியாதையுடன் நடத்தி, ஆதரவளிக்க வேண்டும். மேலும், அவர்களும் கர்வத்திற்கும் பேராசைக்கும் இடங்கொடாமல் சிரத்தையோடு வேத அத்யயனம் செய்வதில் உதவ வேண்டும்”  –  சிருங்கேரி ஆச்சார்யாள்  ஒரு முறை கூறியது.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது : மேற்கு மாம்பலம் ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்ற யஜூர் வேத பாடசாலையில் வேதம் பயின்று வரும் மாணவர்கள்.

மேற்கும் மாம்பலம் கிட்டு பார்க் அருகே, ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இந்த யஜூர் வேத பாடசாலையில் பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து மாணவர்கள் அங்கேயே தங்கி படித்துவருகிறார்கள். குருராமன் என்கிற மிகச் சிறந்த அத்யாபகரைக் கொண்டு சாகை, சம்ஹிதை, பதம், கிரமம், கணம் முதலிய வேத அத்யயணம் செய்விக்கப்படுகிறது. சமீபத்தில் தான் சுமார் 10 மாணவர்கள் இங்கு படித்து முடித்து ‘கணம்’ பட்டம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ப்ரும்ம ஸ்ரீ ராஜா வாத்யார் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது இந்த பாடசாலை.

(வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!)

veda vidya ashram

கடந்த தீபாவளியின் போது இந்த மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக வஸ்திரங்கள் பரிசளித்ததும், மேலும் இந்த ஆஸ்ரமதிற்கு தேவையான சில பொருட்கள் வாங்கித் தந்ததும், மாணவர்களுக்கு ‘ஜகத் குரு ஸ்ரீ ஆதிசங்கரர்’ என்னும் திரைப்படம் ப்ரொஜெக்டரில் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1)

இந்த காலத்தில் வேதத்தை அழியாமல் காக்கவேண்டிய கடமையில் இருப்பவர்களே அதை சரிவர செய்வதில்லை. தங்கள் பிள்ளைகளை வேதம் படிக்க எந்த பெற்றோரும் அனுப்புவதில்லை. அப்படியே பெற்றோர் அனுப்ப விரும்பினாலும் பிள்ளைகள் அதற்கு ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், பெற்றோரே விரும்பி அனுப்பி, பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்று வேதம் படித்து வருகிறார்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.

இந்த பாடசாலையை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராஜா வாத்யாரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி இந்த வார பிரார்த்தனைக்கு இந்த மாணவர்களே தலைமை தாங்கவேண்டும் என்று  கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் ஸ்ரீ ராஜா வாத்யார். அவருக்கு நம் நன்றி.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் பிரார்த்தனைக்கான கோரிக்கை கனடாவில் வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் வாசகியிடமிருந்து வந்துள்ளது. பெயர் உள்ளிட்ட சில விஷயங்களை அவர் அனுமதித்துள்ளபடி தான் வெளியிடுகிறோம்.

ஒரு தங்கையாக தனது சககோதரரின் நலனை வேண்டி அவர் அனுப்பியுள்ள இந்த கோரிக்கை படிப்போர் உள்ளத்தை உருக்கும் என்பது நிச்சயம். “எங்களுக்காக உழைத்துக் களைத்த என் அண்ணனுக்கு நான் ஒன்றும் செய்ய இயலவில்லை. அட்லீஸ்ட் இந்த பிரார்த்தனையையாவது செய்கிறேன்” என்று கூறியிருக்கும் இடம் கண்களில் நீரை வரவழைக்கிறது.

நிச்சயம் இவரின் கோரிக்கைக்கு பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும். அவர் குடும்பத்தினரும் அவர் சகோதரரின் குடும்பத்தினரும் சகல விதமான ஷேமங்களையும் பெற்று எல்லாம் வல்ல குன்றத்தூர் குமரன் அருளால் வாழ்வாங்கு வாழ்வார்கள். அவர்கள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி சுகவாழ்வு சித்திக்கும் பட்சத்தில் பாழடைந்துள்ள ஏதேனும் முருகன் கோவில் ஒன்றை தேர்ந்தெடுத்து திருப்பணி செய்ய உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கோரிக்கை… மயிலாடுதுறையை அடுத்துள்ள நாகங்குடியை சேர்ந்த பெரியவர் குருமூர்த்தி மற்றும் சுகந்தா மாமி ஆகியோரின் குடும்பத்தினரின் நலன் வேண்டி நாம் சமர்பித்திருப்பது. அவர்கள் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் தற்போது பெரியவர் குருமூர்த்தி அவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்த குடும்பத்தினருக்காக நாம் நிச்சயம் மகா பெரியவாவிடமும் குன்றுதோறாடும் குமரனிடமும் பிரார்த்திப்பது அவசியம். நமது பிரார்த்தனையின் எண்ண அலைகள் அனைத்து ஒன்று சேர்ந்து இக்குடும்பத்தை ரட்சிப்பதில் உதவவேண்டும்.

* அப்புறம் ஒரு முக்கிய விஷயம்: நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்றிருந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேறியிருப்பதாக சம்பந்தப்பட்ட அன்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கின்றனர். அதில் ஒன்று உண்மையில் நம்ப முடியாத அற்புதம்! விபரங்கள் விரைவில்…!

==================================================================

Please pray for my brother who was the pillar of our family!

Dear Sir,

I am Sathana living in Canada. Recently I heard about Rightmantra.com.  I usually go through this website.  Very important and useful articles are published here.  I have a problem.  I want to join the this Prayer club.

I lost my father when i was 16.  He was shot by SriLankan Army in 1985.  When my father expired my brother whose name is Mathyvathanan was just 11 years old. He is 4th child in my family.  We are 3 elder sisters. From his 11th age onwards, he supported our Mother to build our family strong.  Now we are ok. But my brother who worked hard for us  is having economic problem.

He has 3 children depending on him. His children are very young in age in schooling now. Even though he is younger, he has done everything for us like  a father.

All i want is my brother to settle down financially. To build a own house. Also due to continuous family problems he is addicted to drinking. I want him to get rid of that habit and also lead a healthy life.

I don’t know Tamil typing.  I am very very anxious about him. There are lot of problems. I couldn’t help him.  I can do only praying for him.

Please sir make a prayer for him.  I beleive that the prayer will provide positive results.  If I made any mistake pardon me.

I am waiting for the prayer.

Thank you very much.

Sincerely,
Sathana
Canada

==================================================================

மகா பெரியவாவின் கருணைக்கு ஒரு சோதனை…

மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடியை சேர்ந்த குருமூர்த்தி சுகந்தா தம்பதியினரை நம்மால் மறக்க முடியாது. மகா பெரியவாவையே சுவாசித்து வரும் குடும்பம் அது.

சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டங்களில் மகா பெரியவா நாகங்குடி வந்திருந்தபோது அந்த ஊர் பிரச்னை ஒன்றை மிக சுலபமாக தீர்த்துவைத்த நிகழ்வை அறிந்திருப்பீர்கள்.

பெரியவா நாகங்குடியில் தங்கியிருந்த காலகட்டங்களில் இவர்கள் தற்போது வசித்து வரும் வீட்டில் ஒரு அறையில் தங்கி தான் அம்பாளுக்கு பூஜை செய்து வந்தார். அதற்கு பல ஆண்டுகள் கழித்து அதாவது 1962 இல் இவர்கள் அந்த வீட்டை வாங்கியபோது, காஞ்சி மகான் தங்கியிருந்த காரணத்தினாலேயே அந்த அறையை  எந்த வித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

மகா பெரியவா தங்கியிருந்த அந்த அறை
மகா பெரியவா தங்கியிருந்த அந்த அறை

இவர்கள் வீட்டிற்கு நேரெதிரே பெரியவா அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய இடத்தில் தற்போது ஒரு வில்வ மரம் தானாக முளைத்திருக்கிறது.

குருமூர்த்தி-சுகந்தா தம்பதியினரின் மகள் திருமதி.மகாலக்ஷ்மி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, BRAIN TUMOUR காரணமாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். திருமதி.மகாலக்ஷ்மி செய்யாத பரிகாரமில்லை. சொல்லாத சுலோகங்கள் இல்லை. கணவரின் தலைக்கு பக்கத்திலேயே மகா பெரியவாவின் படம்  வைத்திருக்கிறார். சதா சர்வ நேரமும் பெரியவாவை பிரார்த்தித்தபடி மிருத்தியுஞ்சய மந்திரத்தை சொல்லி வருகிறார்.

மேலும் சமீபத்தில் சுகந்தா மாமியிடம் பேசியபோது தான் தெரிந்தது… பெரியவர் குருமூர்த்தி அவர்களுக்கு கண்ணில் சதை வளர்ந்து சென்ற வாரம் சென்னை சங்கர நேத்ராலயாவில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள மகன் வைத்தியநாதன் அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் பெரியவர் குருமூர்த்தி அவர்கள். மாமி உடனிருந்து கவனித்துக்கொள்கிறார்.

இத்தம்பதிகளின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைந்து நலம் பெற்று முன்னைப் போல பொலிவுடன் பணியில் ஈடுபடவும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள திரு.குருமூர்த்தி அவர்கள் முற்றிலும் குணமடைந்து சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வும் இறைவனை வேண்டுவோம்.

==================================================================

பொது பிரார்த்தனை

வேத நெறி தழைக்க வேண்டும்!

திருக்குறளில் பல இடங்களில் வேதங்களை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.
பெரியபுராணம் தந்த சேக்கிழார் கூட திருஞான சம்பந்தபர் பற்றிய பாடலில் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்

Learnng vedas 3

ஆனால் இன்று வேதம் இருக்கும் நிலை என்ன? வேதம் படிப்பவர்கள் நிலை என்ன?

ஒரு பருவத்துக்கு குறைந்தது 30 பேர் என்று வருடத்திற்கு சுமார் 150 பேர் படிக்கவேண்டிய ஒரு வேத பாடசாலையில் சரசாரியாக 5 பேர் மட்டுமே படிக்கின்றனர். அந்தளவு ஒரு பரிதாப நிலையில் வேதக் கல்வி இருக்கிறது.

சமூகத்தில் வேதம் படிப்பவர்களின் அந்தஸ்தும் நிலையும் உயரவேண்டும். வேதம் சொல்லித் தரும் அத்யபகர்களின் ஊதியம் மற்றும் சன்மானம் உயரவேண்டும். அவர்கள் வாழ்வாதாரங்கள் பெருகவேண்டும்.

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
– கந்த புராணம்

வேதநெறி சிறந்து விளங்கும் ஒரு சமூகமே அனைத்திலும் தன்னிறைவு பெற்று விளங்கும். அந்நிலையை பாரதம் எட்ட அனைவரும் பிரார்த்திப்போம். அதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgவாசகி சாதனா அவர்களின் சகோதரர் திரு.மதிவதனனுக்கு குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்து நல்லதொரு உத்தியோகமும், பொருளாதார சூழ்நிலையும் அமைந்து அவர் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழவும், பிரார்த்தனையை தனது சகோதரனுக்காக சமர்பித்துள்ள  சாதனா அவர்களும் அவர் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களும் மன அமைதியும் பெறவும், நாகங்குடியை சேர்ந்த பெரியவர் திரு.குருமூர்த்தி & சுகந்தா தமப்தியினரின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  நிலையிலிருந்து மீண்டு பரிபூரண நலம் பெறவும், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள திரு.குருமூர்த்தி அவர்கள் விரைந்து குணம் பெற்று அன்றாட பணிகளில் தொய்வின்றி ஈடுபடவும், எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுவோம்.

வேத நெறி தழைத்தோங்கவும், நான்மறைகள் சிறக்கவும், வேதம் கற்போர், கற்பிப்போர் வாழ்வில் ஏற்றம் பெறவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார் பிரார்த்தனைக்கு  தலைமை ஏற்கும் மேற்கும் மாம்பலம் ஸ்ரீ வேத வித்யா ஆஷ்ரம மாணவர்கள் வேதங்களை குறைவற கற்றுத் தேர்ந்து ல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 11, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சியும் பள்ளியறைப் பாடலையும் பாடும் திரு.ஏழுமலை அவர்கள்.

4 thoughts on “நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

  1. இனிய காலை வணக்கம்

    வேதத்தை அந்தணர்கள் அனைவரும் கற்று கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.

    நாமும் வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு, வேத பாட சாலைகளுக்கு சென்று நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்ய வேண்டும்.

    நம் நாட்டில் வேதம் தழைத்து ஒங்க வேண்டும். எங்கெல்லாம் வேதம் ஒலிக்கிறதோ அங்கே விஷ்ணு பரமாத்மா ப்ரத்யக்ஷமாவார்.

    //வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேத வித் கவி //

    மகா விஷ்ணு வேத வடிவாகியவர். புலன்களுக்கு எட்டாதவர். வேதங்களை அங்கங்களாக உடையவர். வேதங்களை ஆராய்பவர். கண்டறிந்தவர்.

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் வேத வித்யா ஆஸ்ரம குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் , நமஸ்காரங்களும்.

    திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெகு விரைவில் குணம் அடையவும், திரு குருமூர்த்தி அவர்களுக்காகவும், மகா பெரியவா அருள் செய்ய வேண்டும்

    //ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
    ஆதியை அமரர் தொழுதேத்தும்
    சீலந்தான் பெரிதும் உடையானைச்
    சிந்திப் பாரவர் சிந்தை உளானை
    ஏலவார் குழல் ஆளுமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கால காலனை கம்பநேமானைக்
    காணக் கண் அடியேன் பெற்றவாறே //

    திருச்சிற்றம்பலம்

    திரு.மதிவதனன் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை கிடைத்து நல்லதொரு உத்தியோகமும், பொருளாதார சூழ்நிலையும் அமைந்து அவர் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழவும், பிரார்த்தனையை தனது சகோதரனுக்காக சமர்பித்துள்ள சாதனா அவர்களும் அவர் குடும்பத்தினரும் சகல சௌபாக்கியங்களும் மன அமைதியும் பெறவும் பிரார்த்தனை செய்வோம் .

    மற்றும் உலக ஷேமங்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    மகா பெரியவா ………..கடாக்ஷம் ………

    ராம்…… ராம் ………..ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில்
    ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க
    வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! – திருமந்திரம்

    வேதத்தின் சிறப்பை இதைவிட யாரும் எடுத்துக் கூற முடியாது. வேதமே நமது சமயத்தின் உயிர்நாடி.

    வேதபாடசாலை மாணவர்கள் நமக்காக பிரார்த்திக்கிறார்கள் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. சரியான தேர்வு.

    வேதம் படிக்க சிரம்மப்படுவர்கள் திருக்குறள் படிக்கலாம். வேதத்தின் சாரமே திருக்குறள் என்று கூறப்படுகிறது.

    இந்த பிரார்த்தனைக்கு வேண்டுதல் சமர்பித்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறி சுகவாழ்வு வாழ மகா பெரியவாவை வேண்டிக்கொள்கிறேன்.

    ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை செய்த பின்பு கிடைக்கும் மனநிறைவுவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

    பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  3. வேதத்தை அந்தணர்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பதிவு.
    நாகங்குடி பதிவே கண்ணில்நீரை வரவைத்தது.
    பிரார்த்தனையில் மறுபடியும் படித்தது மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
    சாதனா அவர்களின் சகோதரர் அவர்களுக்காகவும் மற்றும் கிருஷ்ணமூர்த்தி,guru முர்த்தி இருவரும் நலம் பெறவும் பிரார்த்திப்போம்.
    மகாபெரியவா அவர்களின் கருணைக்கு ஒரு சோதனையா அல்லது சுனந்தா மாமியின் மகள் தன்னைஅரியமல் செய்த முன்ஜென்ம வினையா. இதற்கு பதில் அந்த கருணா மூர்த்தி தான் இந்த கிருஷ்ணமூர்த்திக்கு பதில் சொல்ல வேண்டும்.
    நம் கிளப்பின் பிரார்த்தனையை ஏற்று திரு.கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்கு மகா பெரியவா அவர்கள் miracle நடத்துவார் என்று காத்துகொண்டு இருக்கிறோம்.
    நன்றி

  4. அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேற குருவருளையும் திருவருளையும் வேண்டுவோம்………….

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *