Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

print
வ்வாமை மற்றும் இதர காரணங்களினால் தீராத தோல் நோயினால் சிலர் அவதிப்படுவதுண்டு. என்ன பரிகாரம் செய்தாலும் என்ன மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. சிலருக்கு மறைவாகவும், சிலருக்கு முகம் மற்றும் கைகால்களிலும் பிறர் பார்வையில் நன்கு தெரியும்படியும் இருக்கும். இவர்கள் நான்கு பேருடன் கலந்து பேசவோ, அல்லது பொது இடங்களுக்கு செல்லவோ மிகவும் சங்கடப்படுவார்கள். பாதிப்பு தரும் எரிச்சல் ஒருபுறம், சங்கடம், அவமானம் மறுபுறம் என வேதனையில் தவிப்பார்கள்.

அத்தகையோருக்கு வரப்பிரசாதமாய் ஒரு திருக்கோவிலும் பரிகாரமும் இருக்கிறது.

Thirumangalakkudi Gopuram

மனிதர்களை பாடாய்பாடுத்தும் நவக்கிரங்களையே ஒரு முறை ஒரு சாபம் காரணமாக சரும நோய் பீடித்துவிட்டது. அவர்களுக்காக இறைவன் அசரீரியாக தோன்றி கூறியதே இந்த பரிகாரம். அதாவது தெய்வவாக்கு மூலம் வெளிப்பட்ட பரிகாரம் இது.

ஈரோடு மாவட்டம் திண்டல் என்னும் ஊரிலிருந்து சமீபத்தில் நம்மை தொடர்பு கொண்ட வாசகி ஒருவர் தனது 13 வயது மகளுக்கு முகம் உள்பட பல இடங்களில் சருமத்தில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லமுடியாது அவஸ்தைபடுவதாகவும், மகள் படும் துயரம் காண சகியாது தாங்கள் கண்ணீர் வடிப்பதாகவும் கூறினார். மேலும் வேல்மாறல் நூலை உடனடியாக அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார். அவசரம் கருதி அவர்களுக்கு ‘வேல்மாறல்’ நூலை உடனடியாக அனுப்பிவைத்தோம். மேலும் தாங்கள் வேறு ஏதேனும் செய்யவேண்டுமா என்றும் கேட்டார். வயதுக்கு வந்த பெண் குழந்தை என்பதால் மாந்த்ரீகம் அது இது என்று எங்கும் அழைத்துச் செல்லவேண்டாம். நமது தமிழகத்திலேயே கும்பகோணம் அருகே தோல்நோய்களை விரட்டும் அற்புதமான திருத்தலம் உள்ளது. அங்கு சென்று நாம் கூறும் எளிய பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை அளித்திருக்கிறோம்.

என்ன ஏது என்று பார்ப்போமா?

நவக்கிரகங்களையே பீடித்த தோல் நோய்!

முன் ஒரு காலத்தில் காலமா முனிவர் என்பவர், விதியின் பயனாய் தனக்கு ‘தொழு நோய்’ வரப்போவதை அறிந்து, நவக்கிரகங்களை குறித்து தவமிருந்து பிரார்த்தனை செய்தார். நவக்கிரகங்கள் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க, தனக்கு வரவிருக்கும் தொழுநோய் வராமலிருக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விதியின் பயனாய் ஏற்படுவதை குறைக்கவோ, வராமல் தடுக்கவோ எங்களுக்கு அதிகாரம் கிடையாது  என்று கூற, அது கேட்ட முனிவர் கோபம் கொண்டு, எனக்கு வரவிருக்கும் ‘தொழுநோய் உங்களுக்கும் வரக் கடவது’ என்று சாபம் கொடுத்தார்.

Thirumangalakkudi

தெய்வவாக்கு மூலம் வெளிப்பட்ட பரிகாரம்

சாபத்தின் விளைவாக ‘தொழுநோயால் பீடிக்கப்பட்ட நவகிரகங்கள், சிவபெருமானை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். உடன் வானில் ‘அசரீரி’ தோன்றி நீங்கள் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள மங்கள ஷேத்திரம் அடைந்து அருகில் இருக்கும் வெள்ளை எருக்க வனத்தில் தங்கி, ஸ்ரீ பிராண நாதரை குறித்து தவமிருந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிறு உச்சிக் கால வேளையில் பிராணநாதருக்கு வெள்ளை எருக்கன் இலையில் தயிர் அன்னம் வைத்து நிவேதனம் செய்து சன்னதியில் புசித்தால் நோய் நீங்கும்” என அசரீரி கூறியது.

நவக்கிரகங்கள் அவ்வாறே வழிபட ஸ்ரீ பிராண நாதர் அருளால் நோய் நீங்கி சாபம் நீங்கியது. நவக்கிரகங்கள் ஸ்ரீ பிராண  நாதரை பிரார்த்தனை செய்தார்கள். அவரும் அவர்கள் முன் தோன்றி நீங்கள் தவமிருந்த இடத்தில் தங்கி வரும் பக்தர்களுக்கு ‘அனுக்கிரகம் செய்க’ என்று உத்தரவிட்டார்.  அது கேட்ட நவகிரகங்கள் மகிழ்ச்சி அடைந்து , எங்களுக்கு ஏற்பட்ட நோயையும், சாபத்தையும் நீக்கி அருளியபடி , உங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கும், எங்களால் ஏற்படும் தோஷத்தையும் நிவர்த்தி செய்து அருள வேண்டும் என்று நவகிரகங்கள் கேட்டுக்கொள்ள, ஈசனும் ”அவ்வாறே ஆகட்டும்” என அருளினார்.

ஸ்ரீ பிராண நாதரை தரிசித்த  பின் நவக்கிரகங்களை தரிசித்தால் பூரண பலன் உண்டு என புராணம் கூறுகிறது.  (நவக்கிரகங்கள் தவமிருந்த இடமே ‘சூரியனார் கோவில்’ என்று விளங்குகிறது. இன்றும் சூரியனார் கோவில் சென்றால் அனைத்து கிரகங்களின் சன்னதியையும் காணலாம்.)

தீராத தோல்நோயினால் அவதிப்படும் அன்பர்கள் சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள திருமங்கலக்குடி என்னும் இந்த தலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, அவருக்கு நிவேதனம் செய்யப்பட்ட தயிர் சாதத்தை எருக்க இலையில் வைத்து சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிட்டால் அவர்கள் தோல்நோய் குணமடைந்துவிடும். (எருக்க இலையை ஆலயத்தில் உள்ள விருட்சத்திலிருந்து எடுத்து அவர்களே தருவார்கள். யாரும் எடுத்துச் செல்ல வேண்டாம்.)

எருக்கஞ்செடி
எருக்கஞ்செடி

பரிகாரத்தை செய்ய விரும்புகிறவர்கள்…

எருக்க இலை பரிகாரத்தை செய்ய விரும்புகிறவர்கள் 12 மணிக்குள் திருமங்கலக்குடி கோவிலில் இருக்கவேண்டும். அதற்கு தனி டோக்கன் உண்டு. எத்தனை டோக்கன் வாங்கப்பட்டிருக்கிறதோ அத்தனை இலைகளை தான் நிவேதனம் செய்வார்கள். எனவே 12 மணிக்குள் கோவிலுக்கு சென்று அதற்குரிய சீட்டை வாங்கி (ஒரு சீட்டு ரூ.3/- தான்) கோவிலில் சமர்பிக்கவேண்டும். பகல் 12 மணிக்கு மேல், சூரியன் மறையத் துவங்கியதும், சுவாமிக்கு எருக்க இலையில் சூடான தயிர் சாதம் நிவேதனம் செய்யப்படும்.

சரும பாதிப்புக்குள்ளானவர்கள் சுவாமிக்கு தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து நிவேதனம் செய்யப்பட்ட தயிரன்னத்தை சாப்பிட்டு பெற்று சன்னதிக்கு வெளியே செல்லாமல் சுவாமியை பார்த்துக்கொண்டே சாப்பிடவேண்டும்.

11 வாரம் இது போல செய்யவேண்டும் என்பது ஐதீகம். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் முதல் வாரமும், கடைசி வாரமும் வந்திருந்து இந்த பரிகாரத்தை செய்யவேண்டும். 11 வாரத்துக்கு நீங்கள் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்கள் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்தை தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இறைவன் : ‘பிராணனைக் கொடுத்த’ ஸ்ரீ பிராண நாதேஸ்வரர்

இறைவி : ‘மாங்கல்யம் கொடுத்த’ ஸ்ரீ மங்களாம்பிகை

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது இந்த தலம். (இந்த தலத்தில் அனைத்துமே மங்களம் தான். மங்கள விநாயகர், மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி இப்படி… எனவே ‘பஞ்சமங்கள  ஷேத்திரம்’ என்று சிறப்பு பெற்று விளங்குகிறது.)

இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.

முகவரி : மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரர் திருக்கோவில், திருமங்கலக்குடி – 612102

Thirumangalakkudi 3

எப்படி செல்லலாம் ?

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருமங்கலக்குடியை அடையலாம். ஆடுதுறையிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. இதன் அருகில் தான் சூரியனார் கோவில் உள்ளது.

சமீபத்தில் நவக்கிரக பரிகாரத் தலங்கள் சென்றபோது, இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம்.

இந்த தலத்திற்கு வேறு ஒரு சிறப்பும் உள்ளது. அது அடுத்த பதிவில்…!

===========================================================

Also check :

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

===========================================================
[END]

4 thoughts on “தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

  1. இந்த பதிவின் மூலம் தீராத தோல் நோய் தீர்க்கும் மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்,

    கோவில் கோபுரம் கொள்ளை அழகு. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    நன்றி
    உமா

  2. திருத்தலயாத்திரையை தாங்கள் தொடங்கிய பொழுதே, நாங்கள் அறியாத பல தகவல்களை தருவீர்கள் என நம்பிக்கையுடன் இருந்தேன். முதல் தகவலே எனக்குப்பயன்படும் தகவலாக உள்ளது. மிக்க நன்றி. விரைவில் திருமங்கலக்குடி செல்ல முயற்சிக்கிறேன்.

  3. சுந்தர் சார், அருமையான பதிவு ..மிகவும் அருமையான தலம் நம் திருமங்கலகுடி ..இது போல் தோல் நோய்க்கு அருமையான பரிகாரமாக ஈசனால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருதலம் கும்பகோணம் அருகிலேயே உள்ளது.அதாவது கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் ,ஆவூர் வழியாக சென்றால் ,ஆவூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் “அவள் இவள் நல்லூர் “என்னும் அருமையான சிவதலம் வரும் …இங்கு தை அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு தீர்த்த வாரி நடை பெறும் .அப்போது அங்கு உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி அவள் இவள் நல்லூர் ஈசன் சாட்சி நாதரை நெய் தீபம் ஏற்றி தொழுதால் கண்டிப்பாக தோல் நோய் வெகு விரைவில் நீங்கி விடும் என்பது நம் ஈசன் வாக்கு…தற்போது தை அமாவாசை வருகிற 20-1-15 அன்று வருகிறது ….ஈசனின் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்று ‘அவள் இவள் நல்லூர்’ எனும் ‘அவளிவணல்லூர்’. இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் சாட்சிநாதர் என்பதாகும். சவுந்திர நாயகி என்ற நாமத்தில் அம்பாள் சக்தி ரூபமாக காட்சி தருகிறார்.இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட்டு வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் சுசீலை. இவளை அரசவைப் புலவரின் மகன் மணந்தான். இவன் தல யாத்திரை மேற்கொண்டு பல சிவத்தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்.அப்போது, சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அழகிழந்து, கண் பார்வை இழந்து காணப்பட்டாள். சுசீலையின் தங்கை அழகுடன் இருந்ததால், அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தான். சுசீலையை மனைவியாக ஏற்க மறுத்தான்.இதனால் மனம் வருந்திய சுசீலை இத்தல ஈசனிடம் முறையிட்டாள். ஈசனும் சுசீலையை கோவில் எதிரில் உள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். அதன்படி தை அமாவாசை நாளில் இத்தலத்தில் உள்ள சந்திர புஷ்கரிணியில் நீராடி எழுந்த சுசீலையின் உடலில், அம்மை நோயால் ஏற்பட்டிருந்த தழும்புகள் அகன்றன. அவள் முன்பைவிடவும் அழகாக தோற்றமளித்தாள்.இழந்த அவளது கண்பார்வையும் திரும்பக் கிடைத்தது. அப்போது சுசீலையின் கணவனுக்கு, ஈசன் உமையவள் சமேதராக காட்சியளித்து ‘அவள் தான் இவள்’ என்று சுசீலையை சுட்டிக்காட்டி மறைந்தார்.
    அன்று முதல் இந்தத் தலம் அவள் இவள் நல்லூர் என்றாயிற்று. ஈசன், ‘அவள் தான் இவள்’ என்று சாட்சி சொன்னதால், அவர் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் மூலவர் சுயம்பு லிங்கத்துடன், ஈசன் அம்பிகையுடன் தோன்றி சாட்சி சொன்ன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் தினமும் காலையில் 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்வது சிறப்பு தருவதாகும். ஆலயத்தில் சவுந்திரநாயகி அம்பாள் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    தை அமாவாசை தினத்தில் சாட்சிநாதர், சந்திர புஷ்கரிணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவார். அப்போது பக்தர்கள் புனித நீராடுவார்கள். தை அமாவாசை தினத்தில், இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனையும், அம்பாளையும் ஒரு மண்டலம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தோல் நோய்கள் அகலும். கண் நோய்கள் குணமாகும் .

Leave a Reply to சிவ.அ.விஜய் பெரியசுவாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *