Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

print
சென்ற வாரம், கார்த்திகையின் போது ஒரு நாள் மாலை நாமும் நண்பர் முகலிவாக்கம் வெங்கட்டும் நங்கநல்லூர் பொங்கி மடாலயம் சென்றிருந்தோம். வேல்மாறல் யந்திரத்தை உருவாக்கிய சாதுராம் சுவாமிகளின் திருச்சமாதி இங்கு தான் உள்ளது. அங்கு நம்மிடம் பேசிய வேல்மாறல் மன்றத்தின் நிர்வாகி திரு.ஆதிமூர்த்தி என்பவர், ‘வேல்மாறல்’ பற்றி விசாரித்து தினசரி 10 தொலைபேசி அழைப்புக்களாவது வருகிறது.. தினமும் பத்து பேருக்காவது கூரியர் அனுப்புகிறோம் என்றார். ஒரு மாபெரும் புண்ணியகாரியத்தில் பங்கேற்கும் பேறு நமக்கு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்… சாதுராம் சுவாமிகளும், அவருடைய சகோதரர் திரு.எஸ்.வி.சுப்ரமணியமும் மகா பெரியவா அவர்களால் திருப்புகழ் சகோதரர்கள் என்று பெயர் சூட்டப்பட்டவர்கள். சாதுராம் ஸ்வாமிகள் கடந்த 2000 மவது ஆண்டில் பொங்கி மடாலயத்தில் மகாசமாதி ஆகிவிட்டார்.

அவர் உருவாக்கியது தான் இந்த ‘வேல்மாறல்’ யந்திரம்.

Sadhuram Swamigal

‘வேல்மாறல்’ நூலோடு யந்திரமும் அனுப்பி வருகிரார்கள். சமீபத்தில் நம்மை தொடர்புகொண்ட வாசகர் ஒருவர் “சார்.. யந்திரம் என்று சொன்னீர்கள்.. நான் ஏதோ செப்புத் தகடு வரும் என்று நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் படம் தான் வந்திருக்கிறது!” என்றார்.

எனவே அது குறித்து உங்கள் அனைவருக்கும் ஒரு விளக்கத்தை அளித்து, யந்திர தரிசனத்தையும் செய்துவைத்து விடுவோம் என்று இந்த பதிவை அளிக்கிறோம்.

இந்த நூலோடு அனுப்பப்படும் வேல்மாறல் யந்திரம் என்பது ஏதோ தகடு அல்ல. அது ஒரு அச்சடிக்கப்பட்ட வண்ணப்படம். இந்த யந்திரத்தை உருவாக்கியது தவத்திரு.சாதுராம் ஸ்வாமிகள். எனவே இந்த வேல்மாறல் யந்திரத்தின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது.

அருணகிரிநாதரின் வேல் வகுப்பிலிருந்து வரிகளை எடுத்தாண்டு வேல்மாறலை உருவாக்கியது வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். எனவே ‘வேல்மாறல்’ பாடலின் உரிமை பொதுவானது. எனவே அது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும். ஆனால் இந்த யந்திரத்தின் படம் இவர்களிடம் மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த நூலுக்கு  என்று தனிச்சிறப்பு உள்ளது. பல பாராயண சுலோகங்களும் இதில் உண்டு.

அதை வாங்கி லேமினேட் செய்து உங்கள் பார்வையில் அடிக்கடி படும்வகையில் வைத்துக்கொள்ளவும். (இரண்டாக வாங்கி பூஜையறையில் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் சரி வீடும் சரி சுத்த பத்தமாக இருப்பது அவசியம்).

நூலுடன் கிடைக்கும் யந்திரத்தை தனியாக லேமினேட் செய்து பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்!

* நம் தளத்தின் விருப்ப சந்தாதார்கள் மற்றும் பணிகளில் துணை நிற்கும் அன்பர்களுக்கு இந்த நூல் தேவை என்றால நாம் அனுப்புகிறோம். ஏனைய அன்பர்கள் நங்கநல்லூரில் பொங்கி மடாலயம் தெருவில் உள்ள மடாலயம் அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

==========================================================

(வேல்மாறல் மன்றம் வெளியிட்டிருக்கும் ஸாதுராம் ஸ்வாமிகள் அருளிய ‘பெங்களூர் திருப்புகழ்’ என்ற நூலில் இருந்து…)

‘வேல்மாறல்’ – யந்திரம் உருவான வரலாறு!

எங்கள் குல தெய்வமான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அம்சமாகத் தோன்றிய  சாதுராம் சுவாமிகளைப் பற்றி எழுதுகிறேன்.  அவரைப் பற்றிக் கூற / சொல்ல எழுத்தில் அடங்காது.  எனக்குத் தெரிந்த அளவு எழுதுகிறேன்.

Velmaral Yantra

நாங்கள் சுவாமிகளை 1972 ல் சுவாமி அண்வாநந்தாவுடன் Bangalore Indian Express Guest House இல் தங்கியிருக்கும் போது சந்தித்தோம் .  திரு சுவாமிநாதன் (International Instruments Ltd)  அவர்கள் வீட்டில் ஸ்வாமிகள் தேவேந்திர சங்க வகுப்பை நடத்தினார்.  அதற்கு . எங்களை அழைத்தார்.  நாங்கள் சுவாமிகளை ஸ்ரீ அண்வா நந்தாஜி ஆசிர்வாதத்துடன் எங்கள் இல்லத்திற்கு அழைத்து வந்தோம்.  அருகில் உள்ள “சங்கர த்யான கேந்திரா”” வில் சுவாமிகளின் திருப்புகழ் பஜனை நடைபெற்றது.  பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தார்கள்.  அன்றைய தினத்திலிருந்து ஸ்வாமிகள் எங்கள் இல்லத்தில்  எல்லா இடங்களிலும் பல நிகழ்சிகள் (பஜனை , பூஜைகள்) நடத்தினார்.

ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்  உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து திருப்புகழ் பாராயணம் செய்திருக்கிறார்கள்.  1976 இல் எங்கள் இல்லத்தில் வேல் மாறல் வரைபடம் (சக்கரம் ) மாடியில் தயாரிக்கப்பட்டது.   சக்கரம் அல்சூர் முருகர் தேவஸ்தானத்தில் பிரதிஷ்டை  செய்யப்பட்டது. ( கிருத்திகை அன்று) மற்றும் ஆறுமுகத்திற்கு ஸ்ரீ ஷண்முக ஷட் சஹஸ்ரநாம அர்ச்சனை , திரிசதி அர்ச்சனை, அஷ்டோத்திர சத நாம அர்ச்சனை, பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன.  வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று 6000 உறுப்பினர்கள் உதவியுடன் அன்னதானம் நடைபெற்றது.  வேல் மாறல் மன்றம் , எங்கள் ”ஸரஸ்” இல்லத்தை விலாசமாகக் கொண்டு தொடங்கப் பெற்றது.  என் கணவர் செயலராகப் பணியாற்றினார்.  திருமுல்லைவாயில்  ஸ்தாபகர் ஸ்ரீ சுவாமி அண்வாநந்தா தலைவராகவும், ஸ்ரீ சாதுராம் ஸ்வாமிகள் உப தலைவராகவும் இருந்தனர்.  புகழ் பெற்ற அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வர தேவஸ்தானத்தில் ஸ்வாமிகள் 63 நாயன்மார்களை பற்றியும் சொற்பொழிவு (பெரிய புராணம்) நடத்தினார்.  சுவாமிகளின் ஆசியுடன் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

அவர் எங்கு சென்றாலும், எல்லா நிகழ்சிகளிலும் பக்தர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து அவரைத் தரிசித்து அவரின் ஆசியைப் பெற்றார்கள்.

ஸ்வாமிகள் 1976 லிருந்து 1981 வரை எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து தங்கியுள்ளார்.

இப்படிக்கு
ஜெயலக்ஷ்மி ஜெயராமன்
பெங்களூர் 8

==========================================================

அடுத்து…

* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?

* திரு.சாதுராம் ஸ்வாமிகள் என்பவர் யார் ?

அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 7

==========================================================

Also check :

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

5 thoughts on “‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

  1. இந்த பதிவின் மூலம் வேல்மாரல் உருவான வரலாறு பற்றி தெரிந்து கொண்டோம். வேல் மாறல் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெங்களூர் அல்சூர் முருகன் கோவிலுக்கு நான் 5 முறை சென்றிருக்கிறேன்.

    //வேல்மாறல் மன்றத்தின் நிர்வாகி திரு.ஆதிமூர்த்தி என்பவர், ‘வேல்மாறல்’ பற்றி விசாரித்து தினசரி 10 தொலைபேசி அழைப்புக்களாவது வருகிறது.. தினமும் பத்து பேருக்காவது கூரியர் அனுப்புகிறோம் என்றார். ஒரு மாபெரும் புண்ணியகாரியத்தில் பங்கேற்கும் பேறு நமக்கு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது//

    வேல் மாறல் பற்றி எல்லோருக்கும் நம் தளம் மூலமாக தெரிவித்த தங்களுக்கும் , திரு வெங்கட் அவர்களுக்கும் கோடானு கோடி புண்ணியம் கிடைக்கும். தாங்கள் இருவரும் ஒரு கருவியாக இருந்து செயல் பட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி

    அனைவும் வேல் மாறல் படித்து பயன் பெறுவோம்.

    கந்தன் இருக்க கவலை எதற்கு

    திருசெந்தூர் முருகன் துணை

    நன்றி
    உமா

  2. தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை.

    ///நீங்களும் சரி வீடும் சரி சுத்த பத்தமாக இருப்பது அவசியம்///

    வேல்மாறல் யந்திரம் வீட்டில் வைக்க கட்டுபாடுகள் ஏதேனும் உள்ளதா?. அசைவம் சாப்பிடுபவர்கள் வேல்மாறல் யந்திரம் வீட்டில் வைக்கலாமா?. யந்திரத்துக்கு பூ, பொட்டு வைத்து பூஜை செய்யலாமா?

    1. வேல்மாறல் யந்த்ரம் என்பது முருகனின் படம் போன்றது தான். சுவாமி படம் இருந்தால் அந்த அறையில் எப்படி நடந்துகொள்வீர்களோ அதே போன்று தான் வேல்மாறல் யந்த்ரம் இருக்கும் அறையிலும் நடந்துகொள்ளவேண்டும். யந்த்ரத்துக்கு பூ, பொட்டு வைக்கலாம்.

      அசைவம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

      ஓட்டையை அடைக்காமல் தண்ணீரை நிரப்பினால் எவ்வாறு குடம் நிரம்பும்? நமது புண்ணிய பாத்திரத்தில் ஓட்டை போன்றது அசைவம் உண்பது.

      ‘புலால் மறுத்தல்’ என்கிற அதிகாரமே வள்ளுவர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

      அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
      உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள் 259​)

      பொருள் : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒரு உயிரைக்கொன்று தின்னாதிருத்தல் நல்லது.

      புலால் உண்ணாமல் இருப்பது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பதை இதைவிட அழகாக எவராலும் சொல்ல முடியுமா?

      – சுந்தர்

  3. வணக்கம் ஐயா, எனக்கும் வேல்மாறல் யந்திரம் வேண்டும். எப்படி விண்ணப்பம் செய்வது?

Leave a Reply to Kirthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *