Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ? Rightmantra Prayer Club

வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ? Rightmantra Prayer Club

print
கால்நடை செல்வத்திற்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பொருளாதாரம் சரிந்துள்ள நாடுகளை பாருங்கள்… நிச்சயம் கால்நடை செல்வங்கள் அந்நாடுகளில் வற்றியிருக்கும். நம் நாட்டின் பொருளாதார சரிவிற்கு கூட கால்நடை செல்வங்கள் குறைந்துகொண்டே வருவது ஒரு முக்கிய காரணம். (பொதுப் பிரார்த்தனையில் புகைப்படத்துடன் பட்டியல் தரப்பட்டுள்ளது).

சாலையிலோ அல்லது வேறு எங்கோ பசுவைப் பார்த்தீர்கள் என்றால், அது பசு அல்ல, ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு தங்கக் கட்டி என்று எண்ணிக்கொள்ளுங்கள். அது தான் உண்மை. ஆகையால் தான் கால்நடைச் செல்வங்கள் சிறப்பாக இருக்கும் நாடுகளில் பொருளாதாரம் ஓங்கி இருக்கிறது.

கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் ஒரு நாட்டின் இன்றியமையாத பொக்கிஷங்களாகும். அவற்றை பேணி பராமரித்து போஷிப்பதால் பசுமை செழிக்கும். விளைச்சல் அதிகரிக்கும்.

உலகப் பொதுமறை எனக் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் பசுவை பற்றிய குறிப்புக்கள் வருகிறது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (குறள் 560)

இதற்கு பொருள் என்ன தெரியுமா?

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

நாகங்குடியில் சுகந்தா மாமியின் இல்லத்தில் உள்ள தொழுவம் இது...
நாகங்குடியில் சுகந்தா மாமியின் இல்லத்தில் உள்ள தொழுவம் இது…

பசுவை மிஞ்சிய செல்வமில்லை. பஞ்ச காலத்திலும்கூட ஒரு பசு, ஒரு முருங்கை இருந்தால் தாக்குப் பிடித்துவிடலாம் என்கிறார்கள். ‘பாலுக்கு மிஞ்சிய பாக்கியம் இல்லை. நூலுக்கு மிஞ்சிய மானமும் இல்லை’ என்பது பழமொழி. ஆனால், காவலன் முறையாக ஆட்சி செய்து காப்பாற்றாத தேசத்தில், பசுக்கள் அழிந்து பால்வளமும் குறையும். அது மட்டுமன்று. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் முதலிய அறுவகைத் தொழிலைச் செய்யும் அந்தணர்களும் வேதநூல் படிப்பதை மறந்துவிடுவார்கள் என்கிறது இக்குறள்.

பசுவைப் பேணுவதை மிகப்பெரும் தர்மம் என்ற அடிப்படையில் தான் வள்ளுவரும் சொல்லியுள்ளார். பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன.

யோசித்தால், இன்று பசுக்கள் இறைச்சிக்குரிய உயிராகி விட்டன. அதனால் வரும் பயனும் குறைந்துவிட்டது. அந்தணர்களும் வேதம் ஓதுவதை விட்டுவிட்டு என்னென்னவோ தொழில்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பசுக்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் கெட்டழியும் நிலையை மிகவும் வருத்தத்திற்குரிய நிலையாக திருவள்ளுவர் ஏன் குறிப்பிடுகிறார் என்பதை நீங்களே யோசிக்கலாம்.

பசு தான் ஒரு காலத்தில் செல்வத்தின் அடையாளம். ஒருவரிடம் இருக்கும் பசுமந்தையின் அளவை வைத்துத்தான் அவரது செல்வம் மதிப்பிடப்பட்டது.

பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றா?

பசுவை மற்ற விலங்குகளோடு ஒப்பிட்டுப் பேசுவதே பாபமாகும். மரங்களில் வில்வ மரத்திற்கென எப்படி தனிச்சிறப்பு உள்ளதோ அதே  போல விலங்குகளில் பசுவுக்கென தனிச்சிறப்பு உண்டு.

நம் அன்னை யார் என்று கேட்டால், நமக்கு மட்டுமல்ல இந்த ஜகத்துக்கே அன்னை, கோமாதா தான் என்பார் காஞ்சி பெரியவர்.

பசுக்களை போஷிப்பதையும், பசுக்களை போஷிப்பவர்களை போஷிப்பதையும் அனைவரும் அறமாகவே மேற்கொள்ளவேண்டும்.

பித்ரு ஆனவர் ‘வைதரணி’ என்ற ஆபத்தான நதியைக் கடந்து தான் சொர்க்கம் போக வேண்டும். வைதரணி என்பது ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் கொண்ட ஒரு நதியாகும். நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடக்கும் பாவிகள், அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகள் முதலியோர் அந்நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பெரும்பாலானோர் தெரிந்தோ தெரியாமலோ மேற்கண்ட பாவங்களை செய்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் கோ-சம்ரோக்ஷனம், கோ-தானம் முதலியவற்றை செய்திருந்தால், தேவலோகப் பசுவானது அந்நதி மீது வந்து, அவர்களுக்கு தன் வாலை நீட்டும். அந்த வாலை பிடித்துக்கொண்டு வைதரணியிலிருந்து கரையேறலாம் என்று கருட புராணம் சொல்கிறது. வைதரணி மீது நடந்து செல்லும் ஆற்றல் பசுவுக்கு மட்டுமே உண்டு.

தோஷமற்ற விலங்கு என்று ஏதாவது இருக்கிறதென்றால் அது பசு தான்.

பசுவானது ஒப்பற்றது, உயர்வானது, உன்னதமானது!

(நேற்றைக்கு நம் கனவில் பசுவும் கன்றும் வந்ததையடுத்து தான் இந்த பசு புராணம்!)

==================================================================

Also check (from our archives):

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனத்தில் கோ-சாலையை பராமரித்துவரும் திரு. ராஜேந்திரன்.

நாம் சென்ற மாத துவக்கத்தில் கோவிந்தபுரம் தபோவனத்திற்கு சென்றிருந்தபோதுதான் திரு.ராஜேந்திரனை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தபோவனத்தின் கோ-சாலையை பார்த்துக்கொள்ளும் பாக்கியசாலி இவர்.

கோவிந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு தபோவனத்தின் கட்டுமானப் பணிகள்  துவங்கும்போது அங்கு வேலையாளாக சேர்ந்தார். தபோவனம் கட்டிமுடிக்கப்பட்டு கோ-சாலை ஏற்படுத்தப்பட்டவுடன் கோ-சாலையை பராமரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டு அங்கேயே தொடர்ந்து பணியிலிருக்கிறார்.

Govindapuram Ko sala 2

பசுக்களை குளிப்பாட்டுவது, அலங்காரம் செய்வது, வைக்கோல் உள்ளிட்ட தீவனம் வைப்பது, நைவேத்தியத்திற்கு பாலை கறப்பது என அனைத்தும் இவர் தான்.

இவருக்கு இரண்டு மகளும் இரண்டு மகனும் உண்டு.

கோவிந்தபுரம் தபோவனத்தில் உள்ள பசுக்கள் இரண்டுமே பார்க்க கொள்ளை அழகு. ஒன்று நமது நாட்டு பசு. மற்றொன்று குஜராத்தி பசு.

இரண்டும் பரம சாது. தத்தங்கள் குட்டிகளோடு கோ-சாலையில் ஜொலிக்கின்றன.

Govindapuram Ko sala

நாம் சென்றிருந்தபோது, கோ-சாலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அன்றைய பிரார்த்தனை கிளப்பின் கோரிக்கை சமர்பித்திருந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம்… கோ சாலையில் செய்யப்படும் பிரார்த்தனை பல்லாயிரம் மடங்கு பலன் தரவல்லது என்று.

Govindapuram Rajendhiran

நாம் சென்றபோதே, திரு.ராஜேந்திரன் அவர்களிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி “அடுத்து வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வாரத்திற்கு நீங்கள் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்று, பிரார்த்தனையை நடத்தித் தரவேண்டும். அந்நேரம் இங்கு கோ-சாலையில் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவருக்கு இது பற்றியெல்லாம் புரியவில்லை. அப்போது நம்முடன் இருந்த தபோவனத்தின் வாலண்டியர்களில் ஒருவரான திரு.சந்தானம், “நீங்கள் எனக்கு அலைபேசியில் யாருக்கு பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற விபரத்தை சொல்லுங்கள். நான் இவருக்கு அதை சொல்லி, அந்நேரம் இவர் இங்கு பிரார்த்தனை செய்யுமாறு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்!”

“ரொம்ப நன்றி சார். நீங்களும் அவருடன் அது சமயம் இணைந்து எங்களுக்காக பிரார்த்திக்கவேண்டும்!” என்று கேட்டுக்கொண்டுள்ளோம். நிச்சயம் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார் திரு.சந்தானம்.

ராஜேந்திரன் அவர்களுக்கும் சந்தானம் அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றி.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

“உன்னை விட துன்பப்படுபவர் இந்த உலகில் எப்போதும் உண்டு” என்று கூறுவார்கள். அதற்கு உதாரணம் தான் முதல் பிரார்த்தனையை சமர்பித்திருக்கும் அந்த சகோதரியின் நிலை.

அவர் மகளுக்கு ஏற்பட்டிருக்கும் CEREBRAL PALSY என்பது, மூளையின் முக்கிய நரம்பு பகுதி பாதிப்பால் உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தியை மூளை இழந்துவிட்ட தன்மையாகும். என்னதான் மருத்துவம் வளர்ந்துவிட்டாலும் மனித உடலில் தோன்றும் சில பாதிப்புக்களும் அவற்றுக்கான தீர்வுகளும் மருத்துவ துறைக்கே புரியாத புதிராகவே உள்ளது.

நம் தளத்தை தொடர்ந்து பார்த்துவருபவர் என்பதால் வேல்மாறல் பாராயணத்தை துவக்கிவிட்டதாக கூறுகிறார் அந்த சகோதரி. விரைவில் நல்லது நடக்கவேண்டும்.

இரண்டாவது கோரிக்கையை அனுப்பியிருக்கும் வாசகி திருமதி.கவிதா நாகராஜன் தனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழி ஒருவரின் குழந்தைக்காக கோரிக்கையை அனுப்பியிருக்கிறார்.

திரு.நாகராஜன் மற்றும் திருமதி கவிதா நாகராஜன் இருவருமே தளத்தின் தீவிர வாசகர்கள், நமது பணிகளில் துணை நிற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

==================================================================

அந்த வாசகியிடம் இருந்து வந்த உருக்கமான ஒரு கடிதம் இது. ஆங்கிலத்தில் அவர் அனுப்பியதை அவரின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.

என் குழந்தையை காப்பாற்ற யாருமே இல்லையா….

என் கதையை கேளுங்கள். எனக்கு ஐந்து வயதில் இரு மகள் இருக்கிறாள். அவளால் சிரிக்கவோ, உட்காரவோ, நடக்கவோ இது வரை இயலவில்லை. அவளுக்கு CEREBRAL PALSY என்னும் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நான் தென்காசியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். என் பெற்றோரே எனக்கு ஆதரவாக இல்லை. பேசாமல் உன் மகளை கொன்றுவிடு என்று என்னிடம் சொல்கிறார்கள்.  அவர்கள் மீது கோபம் வந்து அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு என் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வசிக்கிறேன். கடந்த மூன்று வருடங்களில் ஒரு நாள் கூட என் குழந்தையை அவர்கள் மருந்துக்கு கூட வந்து பார்க்கவில்லை. அல்லோபதி, சித்தா என்று நான் முயற்சிக்காத மருத்துவமே இல்லை. இதுவரை அவள் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போதைக்கு என் மாமியார் தான் என் குழந்தையை பார்த்துக் கொள்கிறார்கள். உனக்கு சீக்கிரமே பைத்தியம் பிடித்துவிடும் என்று என் கணவர் சொல்கிறார்…

தினமும் அவளை பிசியோதெரப்பிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். தற்போது வீட்டிலேயே பிசியோதெரப்பி சிகிச்சை அளித்துவருகிறோம். மனோத்தத்துவ சிகிச்சைக்கு கூட முயற்சி செய்துவிட்டேன். எதிலும் நோ யூஸ்…

சிகிச்சைக்காக கேரளா, சென்னை, மதுரை என பல இடங்களுக்கு தனியாக என் குழந்தையுடன் சென்றிருக்கிறேன். யாரும் எனக்கு சரியான வழிகாட்டுதலை செய்யாதது எனக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த அன்பும் ஆதரவும் இல்லாமல் நானோ என் குழந்தையோ இந்த உலகில் எப்படி காலம் தள்ள முடியும்?

என் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால், தினமும் தூக்கமின்றி தவிக்கிறேன். இறைவனை தினமும் பிரார்த்திப்படி இருக்கிறேன். என் குழந்தை மீது அவன் கருணை காட்டி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வரமாட்டானா?

என் அண்டைவீட்டுக்கார்கள், அவளை ஏதேனும் ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்க்கும்படி கூறுகிறார்கள். ஆனால், நான் பல இடங்களில் முயற்சித்துவிட்டேன். எங்கும் சேர்க்க முடியவில்லை. கோவில் குளம் என்று சுற்றி வருகிறேன். என் குழந்தைக்காக தேவாரம் படித்து வருகிறேன்.

என் குழந்தைக்காக பிரார்த்தனை செய்யவும் ப்ளீஸ்…

– பெயர் வெளியிட விரும்பாத வாசகி

==================================================================

Tumour in kidney for 1.5 year old child

Dear Rightmantra family & Sundarji,

My colleague Mrs. Rohini Roy’s 1.5 year old daughter (at Bangalore) has been diagnosed with a cancerous tumor in one of her kidneys. She will be undergoing surgery on Monday 8-Dec to remove the tumor and the kidney. Could you please ask our Rightmantra friends to pray for the child and her speedy recovery?

Thanks.

Regards,
Kavitha Nagarajan,
Chennai

==================================================================

நண்பர் ஹாலாஸ்ய சுந்தரம் அவர்களுக்காக இந்த பிரார்த்தனை அவசரம் கருதி இந்த வாரம் சேர்க்கப்பட்டுள்ளது.

அன்னை நலம் பெறவேண்டும் !

நெல்லையை சேர்ந்த நம் முகநூல் நண்பர் ஹாலஸ்ய சுந்தரம் அவர்களின் தாயார் லக்ஷ்மி அம்மாள் (75) திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அச்சப்பட எதுவும் இல்லையென்றாலும், அவர் விரைவில் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்ப அனைவரையும் பிரார்த்திக்குமாறு கேட்டுகொள்கிறோம். நன்றி.

– சுந்தர்
http://www.rightmantra.com

==================================================================

பொது பிரார்த்தனை

நம் நாட்டில் ஒவ்வொரு 1000 பேருக்கும் எத்தனை பசுக்கள் இருந்தன என்பதை விளக்கும் அட்டவணை!
நம் நாட்டில் ஒவ்வொரு 1000 பேருக்கும் எத்தனை பசுக்கள் இருந்தன என்பதை விளக்கும் அட்டவணை!

கால்நடைச் செல்வங்கள் பெருகவேண்டும்!

இந்திய பொருளாதரத்தில் பசுக்களின் பங்கினை மிகைப்படுத்திக் கூறமுடியாது. உலகில் கால்நடைகள் வளர்ப்பில் இந்தியா, 7வது பெரிய நாடாக உள்ளது. இங்கு, 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான இனங்கள், அழிவை எதிர்நோக்கியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கால்நடைச் செல்வங்கள் (ஆடு, மாடுகள்) அழிய அழிய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். விலைவாசி  உயரும்.

நம் பாட்டன் அவர் காலத்தில் ஒரு லிட்டர் பாலை நாலணா கொடுத்து வாங்கினார். என் தந்தை அவர் காலத்தில் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கினார். தற்போது ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். நம் வாரிசுகள் வளர்ந்து ஆளாகி நிற்கும் காலகட்டத்தில் ஒரு லிட்டர் பால் விலை எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்…!

பால் உற்பத்தி பெருக பெருக, சாணம், மற்றும் அதன் மூலம் கிடைக்கும் இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் என பல  பொருட்கள் இலவசமாகவே கிடைக்கும். இதன்மூலம் பொருளாதாரம் உயரும். ஆனால் நடப்பது என்ன? கால்நடைகளை கொல்ல நவீன இறைச்சி கூடங்களை ஏற்படுத்தி PINK REVOLUTION செய்துகொண்டிருக்கிறோம்… அதாவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டு அதற்கு REVOLUTION என்று பெயரை வேறு வைத்து வேடிக்கை பார்த்துவருகிறோம்.

quotes-1

இந்நிலை மாறவேண்டும். கால்நடைச் செல்வங்கள் பெருகவேண்டும். பசுமை தழைக்கவேண்டும்.

இதுவே இந்த வார பொதுப் பிரார்த்தனை!

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

தென்காசியை சேர்ந்த நம் வாசகியின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள CEREBRAL PALSY பாதிப்பு நீங்கி, அக்குழந்தை நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும், தாயும் மகளும் தங்கள் துயர் நீங்கி நல்வாழ்வு பெறவும், பெங்களூரை சேர்ந்த ரோகினி ராய் அவர்களின் 1.5 வயது குழந்தைக்கு செய்யப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அந்த பாதிப்பு நீங்கி அக்குழந்தை சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் வாழவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பர் ஹாலாஸ்ய சுந்தரம் அவர்களின் அன்னை விரைவில் நலம் பெற்று வீடு திரும்பவும் பிரார்த்திப்போம். நம் நாட்டில் கால்நடைச் செல்வங்கள் மற்றும் பசுக்கள் பல்கி பெருகி, பொருளாதாரம் மேம்படமும் கிராமப்புற மக்களின் உயரவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு  தலைமை ஏற்கும் திரு.ராஜேந்திரன் அவர்கள் தம் மனைவி மக்களோட பல்லாண்டு காலம் சௌக்கியமாகவும் ஷேமமாகவும் வாழவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 7, 2014 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மகா பெரியவா தொண்டர் திரு.சாணு புத்திரன்

[END]

6 thoughts on “வைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது ? Rightmantra Prayer Club

  1. பசுவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை. பசு செல்வத்தின் அதிபதி.
    பசுவும் கன்றும் சேர்ந்து கனவில் பார்த்தல் நல்லது என்பார்கள்.
    நம் அன்னை யார் என்று கேட்டால், நமக்கு மட்டுமல்ல இந்த ஜகத்துக்கே அன்னை, கோமாதா தான் என்பார் காஞ்சி பெரியவர்.
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவரும் ஒரு கோ சாலை பாரமிப்பவரே.
    தென்காசியை சேர்ந்த நம் வாசகியின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள CEREBRAL PALSY பாதிப்பு நீங்கி, அக்குழந்தை நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும், தாயும் மகளும் தங்கள் துயர் நீங்கி நல்வாழ்வு பெறவும், பெங்களூரை சேர்ந்த ரோகினி ராய் அவர்களின் 1.5 வயது குழந்தைக்கு செய்யப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அந்த பாதிப்பு நீங்கி அக்குழந்தை சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் வாழவும், நம் நாட்டில் கால்நடைச் செல்வங்கள் மற்றும் பசுக்கள் பல்கி பெருகி, பொருளாதாரம் மேம்படமும் கிராமப்புற மக்களின் உயரவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராஜேந்திரன் அவர்கள் தம் மனைவி மக்களோட பல்லாண்டு காலம் சௌக்கியமாகவும் ஷேமமாகவும் வாழவும் பிரார்த்திப்போம்.

  2. பெரியவா சரணம்.

    பாலூட்டும் பிராணிகள் பலவுண்டு இவ்வையகத்தில் என்றாலும் பசுவிற்கு மட்டும் எப்படி வந்தது அவ்வளவு தெய்வீகம்..? கலியுக தெய்வம் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் மிகவும் அற்புதமாக ந்தனை விளக்கியுள்ளார்கள். பசுக்களைத் தவிர ஏனைய பிராணிகளெல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றனவாம். ஆனால் பசுக்களோ இவ்வுலகத்து ஜீவிதங்கள் எல்லாவற்றிற்கும் உதிரத்தைத் திரித்து உயிரோட்டம் அளிப்பதால் தாய்க்கு ஈடாக்கியுள்ளனவாம் நம் சாஸ்திரங்கள். கோசம்ரக்ஷணம் குலம் காக்கும் என்பதாக நாம் அறிகிறோமல்லவா!

    சமீபத்தில் ஓலக்குடியிலுள்ள கோமடம் பற்றிய ஒரு விபரத்தை ஒரு வலைதளத்தில் கண்டேன். 29 வயது நிரம்பிய ஒரு வாலிபன் கசாப்புகடைக்கு இட்டுச்சென்ற பசுக்களை வாங்கி (அவற்றின் உயிர்காத்து), ஒரு கோசாலை அமைத்து அவற்றைப் பராமரித்து வருவதாக! ைவ்வுலகில் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமானால் நமக்கு மனமிருந்தால் மட்டும் போதுமா என்றால்… பத்தாது என்பதே விளங்குகிறது. அந்த நல்ல காரியங்களைச் செய்கையில் பற்பல இடையூறுகள்.. இதனில் சுற்றியுள்ள விஷமிகளின் குத்தல்களும் கூட! சமீபத்தில் ஒரு நண்பர் மூலமாக அந்த இளைஞர் படும் துயரங்கள் அறிந்து ஸ்ரீபரமாச்சார்யாளிடம் மனதார ப்ரார்த்தித்தேன். கண்கள் குளமாயின. இன்றைய ப்ரார்த்தனை க்ளப்பில் அந்த பசுமடம் நன்றாக போஷிக்கப்பட வேண்டியதாகிய உதவிகளும், பெரியோர்களின் வழிகாட்டுதலும் அந்த இளைஞனுக்கு கிட்டி, அவருக்கு உள்ளபடியான தொந்தரவுகள் அனைத்து நீங்கி அவர் ஆற்றும் பணி சிறக்கவும் ப்ரார்த்திப்போம். சத்யமேவ ஜயதே! சத்தியம் ஜெயிக்கும்.

    இந்த வார ப்ரார்த்தனை க்ளப்பில் எந்தன் ஆன்மாவும் உங்கள் அனைவரோடும் சேர்ந்து ப்ரார்த்திக்கும் பாக்கியம் கிட்டியமைக்கு ஸ்ரீமஹாஸ்வாமிகளுக்கு நன்றி கூறி, எங்கெல்லாம் தர்மங்கள் காக்கப் படுகின்றனவோ அங்கெல்லாம் பகவானின் சமீபம் நிறைவாயிருக்கும் என்பதால், எல்லா இடங்களிலும் பகவான் நிறைந்திருக்க வேண்டியும் எந்தன் ப்ரார்த்தனைகள் அனுதினமும் தொடர்கிறது.

    பெரியவா கடாக்ஷம்

    நமஸ்காரங்களுடன்
    சாணு புத்திரன்.

  3. கோ சம்ரோச்க்ஷனம் பற்றிய மிகவும் அழகாக பதிவு அளித்து இருக்கி கிறீர்கள். பசுவும் கன்றும் தங்கள் கனவில் வந்தததால் இனி வரும் காலம் நல்ல காலமே. அந்த கோ மாதவே தங்களுக்கு நல்லாசி வழங்கி இருக்கிறார்கள்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு ராஜேந்திரனுக்கு வணக்கங்கள் பல. கோவிந்தபுரம் கோசாலா பசுக்கள் அழகாக உள்ளது.

    இந்த வார பிராத்தனையின் கோரிக்கை படிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றன. மகா பெரியவா தான் நல்லபடியாக குழந்தைகளை ஆரோக்கியத்துடன் வைக்க வேண்டும்.

    கால் நடை செல்வங்களை காப்பாற்றுவது ஒவொரு குடிமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

    //துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
    சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
    பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
    ஆரிடமும் பலி தேர்வர்
    அணி வளர் கோல மெலாஞ் செய்து பாச்சி
    லாச்சி ராமத் துறைகின்ற
    மணிவளர் கண்டரோ மங்கையை வாட
    மையல் செய்வதோ இவர் மாண்பே//

    லோக சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  4. வணக்கம்……

    குருவருளாலும், திருவருளாலும் குழந்தைகள் விரைவில் குணமடையவும், நம் நாட்டில் கால்நடைகளின் வளம் பெருகவும் பிரார்த்தனை செய்வோம்……….

  5. இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு. ராஜேந்திரன். அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

    தென்காசியை சேர்ந்த நம் வாசகியின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள CEREBRAL PALSY பாதிப்பு நீங்கி, அக்குழந்தை நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும்,

    பெங்களூரை சேர்ந்த ரோகினி ராய் அவர்களின் 1.5 வயது குழந்தைக்கு செய்யப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அந்த பாதிப்பு நீங்கி அக்குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பவும்,

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பர் ஹாலாஸ்ய சுந்தரம் அவர்களின் அன்னை விரைவில் நலம் பெற்று வீடு திரும்பவும் பிரார்த்திப்போம். நம் நாட்டில் கால்நடைச் செல்வங்கள் மற்றும் பசுக்கள் பல்கி பெருகி, பொருளாதாரம் மேம்படமும் கிராமப்புற மக்களின் உயரவும், மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

    பாதிக்கப்பட்டவர்கள் வைக்கவேண்டியது பிரார்த்தனையின் மீது நம்பிக்கை மட்டுமே. அனைவரும் விரைவில் நலம் பெறுவார்கள்.

    வாழ்க வளமுடன்..

  6. படித்த உடனேயே பிரார்த்தனை செய்து கொண்டேன் கண்ணீருடன். இனி எல்லாம் சுகமே. நம்புங்கள். நடக்கும்.

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *