Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

print
தில்லையில் உள்ளவர் ‘நடராஜர்’ என்றால் நம் மஹா பெரியவா ஒரு ‘தஸராஜர்’. ஆம், தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களிடம் தான் பத்து அடி எடுத்து வைக்கும் தஸராஜர். நம்மிடம் திடீர் திடீரென சில வாசகர்களும் அன்பர்களும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குறைகளை, பகிர்ந்து கொள்வார்கள். நம் வாராந்திர பிரார்த்தனை கிளப்பில் வெளியிட பிரார்த்தனையை சமர்பிப்பார்கள். அவற்றை முறைப்படி நமது பிரார்த்தனை கிளப்பில் வெளியிட்டு உரிய பரிகாரங்களும் தெரிவித்து வருகின்றோம்.

வேறு சிலர் தங்கள் பிரச்னைகளை சொல்லும்போது, ‘உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் வெளியிடுகிறேன்’ என்று சொன்னாலும் சமாதானம் ஆகமாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாகவாவது மன அமைதி பெறவேண்டும் என்று கருதி, “நீங்கள் பேசாமல் காஞ்சி சென்று மகா பெரியவரின் அதிஷ்டானத்தை தரிசித்துவிட்டு வாருங்கள், எல்லாம் சரியாகிவிடும்!!” என்று அவர்களை மகா பெரியவாளிடம் டைவர்ட் செய்து நாம் தப்பித்துக்கொள்வோம்.

மகான்களின் அதிஷ்டானங்களில் நமது காலடி பட்டால் தான் சில பிரச்சனைகளுக்கு தீர்வே கிடைக்கும்.

சரி… அதற்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களோ?

அது கடைசியில் புரியும். முதலில் இதை படியுங்கள்.

ஸ்ரீ மடம் பாலு அவர்கள் எழுதிய வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பிலிருந்து ஒரு உண்மை சம்பவத்தையும், அதே போன்று நம் வாசகர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவத்தையும் விவரித்திருக்கிறோம்.

=================================================================

ஒரு மாப்பிள்ளைக்கு திருமணத்தன்று இதை விட பெரிய பரிசு கிடைக்குமா?

அந்த மணமக்களுக்கு காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம். பத்து மணிக்கு சாப்பாடு.

மாப்பிள்ளை திடீரென பெரியவாளிடம் பக்தி அலைமோதியது. பஞ்ச கச்சமும், கூரைப் புடவையுமாக தமபதிகள் காஞ்சியில் மகா பெரியவாள் முன்பு ஆஜர்.

மணமகனுக்கு ஒரே மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள் காலையில் கையைப் பிடித்து மூன்று மணி நேரத்துக்குள் பெரியவாள் தரிசனத்திற்கு வந்திருக்கப் போகிறார்கள்?

Mahaperiyavaa_Darisanam

பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள், ‘பாருங்கோ… இந்தபையனுக்கு என்ன பக்தி… கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே தரிசனத்துக்கு வந்துவிட்டான்! காசி யாத்திரையை நிறுத்திவிட்டு, காஞ்சி யாத்திரை  வந்திருக்கான்! என்று பாராட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு!

அரை மணி நேரம் நின்றான். கால் கடுத்தது.

பெரியவாள் வேறு யார் யாரிடமோ பேசுகிறார்கள். பிரசாதம் கொடுக்கிறார்கள். – இவனைத் தவிர.

மனம் தவிக்க ஆரம்பித்தது.

மூன்று மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட்  இருந்தது. பியூட்டி பார்லர் !

ஒரு சிஷ்யனை கண் அசைவினால் அழைத்தார்கள், பெரியவாள்.

“இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிகிட்டு போய் தம்பதிகளா உட்கார வெச்சு, விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சுண்டு போ!”

இளந்தம்பதிகள் கொல்லா  சத்திரம் போய்விட்டு இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் தரிசனத்துக்கு வந்தார்கள். பெரியவாள் பிரசாதம் கொடுத்துக்கொண்டே கூறினார்….

“விவாஹ மந்த்ரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது – வேத மந்த்ரம்…”

பிரசாதம் பெற்றுக்கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்த போது மணி ஏழு.

எதற்கும் நேரமிருக்கவில்லை.

நேரே வரவேற்பு மேடைக்கு சென்று வி.ஐ.பி. நாற்காலியில் அமர்ந்துகொண்டார்கள். உடை மாற்றிக்கொள்ள கூட நேரமிருக்கவில்லை.

பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர் சக பணியாளர்கள் புடை சூழ வந்தார். கைகுலுக்கினார். ஒரு கவரை கொடுத்தார்.

“சத்தியமூர்த்தி அதை திறந்து பாருடா….” என்றார் ஒரு மூத்த பணியாளர்.

“அலுவலகத்தின் மொத்த மொய் தொகையும் ஒரு காசோலையாக இருக்கும்”  எதிர்பார்ப்பில் அலட்சியமாக பிரித்தான் மணமகன் சத்தியமூர்த்தி.

கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ப்ரோமோஷன் + இன்க்ரிமெண்ட் ஆர்டர்!

ஒரு கல்யாண மாப்பிள்ளைக்கு திருமணத்தன்று இதை விட பெரிய பரிசு கிடைக்குமா?

குருவே…சரணம்!

=================================================================

தற்போது இந்த பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்.

படித்தீர்களா?

இப்போது தொடர்ந்து கீழே படியுங்கள்….!

மகா பெரியவா கொடுத்த Termination Order!

அவர் நம் தளத்தின் தீவிர வாசகி. ஒரு சிவில் எஞ்சினீயர். நமது தளத்தில் நாம் கூறிவரும் பல விஷயங்களை நடைமுறைப்படுத்தி வருபவர். அவர் கணவர் பூவிருந்தவல்லி சரகத்தில் போக்குவரத்து காவலராக இருக்கிறார். அவர் வீடு இருப்பது திருவேற்காடு.

ஒரு நாள், நம் தளத்தின் சார்பாக பிரதி மாதம் நடைபெறும் உழவாரப்பணிக்கு வருவது தொடர்பாக நம்மிடம் அலைபேசியில் பேசினார். அவரது தோழி ஒருவருக்காக நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனையை சமர்பித்தவர் பேச்சினூடே தனது உத்தியோகத்தில் நிலவி வரும் கடுமையான சூழல் குறித்து நம்மிடம் தனது கவலையை பகிர்ந்துகொண்டார். நமக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாம் வழக்கம்போல, காஞ்சி மகா பெரியவரை பற்றி கூறி, அவரது அதிஷ்டானத்தை (மகா சமாதி) ஒரு முறை தரிசித்துவிட்டு வாருங்கள். எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்” என்று நைஸாக உம்மாச்சி தாத்தாவை மாட்டிவிட்டுவிட்டு நாம் எஸ்கேப்.

நாம் அப்படி கூறுவதன் காரணம், குருவின் தரிசனம் இருவினையை தீர்க்கும் என்பதாலும், அவரது அதிஷ்டானத்தை வலம் வந்து நமஸ்கரித்தாலே அதுவரை இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டிருக்கும் நவக்கிரகங்களும் ஒழுங்காக போய் சரியான கட்டங்களில் அமர்ந்துகொள்வார்கள் என்பதாலும் தான். அவரவர் செய்த நல்வினை தீவினைகளின் தன்மையை பொறுத்து அவர் அதிஷ்டானத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

Maha Periyava Adishtanam
நாம் மகா பெரியவா அதிஷ்டானம் சென்றபோது கிளிக்கியது

ஆனால் என்ன தான் நாம்  சொன்னாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ‘நாம் காஞ்சி செல்லவேண்டும், அம்மகானின் அதிஷ்டானத்தை தரிசிக்க வேண்டும்’ என்று மனப்பூர்வமாக விருப்பம் இருக்கவேண்டும். விருப்பம் இருப்பவர்களுக்கே அதற்குரிய சூழலும் கனிந்து ப்ராப்தமும் ஏற்படும் என்பது நம் கருத்து.

‘காஞ்சி சென்றால் எப்படி எங்கே இறங்கவேண்டும், எங்கே முதலில் செல்லவேண்டும், அன்னதான நேரம் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவருக்கு விளக்கி கூறி, காஞ்சியில் நமக்கு தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவரின் நம்பரை தருவதாகவும், அவருக்கு ஃபோன் செய்தால் போதும் பேருந்து நிலையம் அருகிலேயே வந்து பிக்கப் செய்துகொள்வார் என்றும், காமாக்ஷி அம்மன்  கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சி சங்கர மடம் மூன்றையும் தரிசிக்க செய்து மீண்டும் பஸ் ஸ்டாண்டிலேயே வந்து இறக்கிவிட்டுவிடுவார் என்றும், மொத்தமாக ரூ.200/- அல்லது ரூ.250/- கொடுத்தால் போதும்’ என்றும் கூறினோம்.

அடுத்து சில முறை காஞ்சி செல்ல முயற்சித்தவருக்கு ஏகப்பட்ட தடங்கல். மூன்றாவது முறையாக முயற்சித்து திட்டமிட்ட படி தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் காஞ்சி சென்றுவிட்டு திரும்பிவிட்டார். அருமையான தரிசனம்.

மறுநாள் வழக்கபோல அலுவலகம் சென்றார்.

மேலாளர் திடீரென டெஸ்க்கை நோக்கி வந்து முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கையில் ஒரு கவரை கொடுத்தார். “இதை பிரித்துப் பார்!” என்று கூற, இவருக்கு திக் திக் என்று இருந்தது. கம்பெனி சற்று சிக்கலான காலகட்டத்தில் இருப்பதால் TERMINATION ORDER ஆக இருக்குமோ? லே ஆஃப் நடவடிக்கை துவக்கிவிட்டார்கள் போல, என்று அச்சப்பட்டுக்கொண்டே சக பணியாளர்கள் மத்தியில் பதட்டத்துடன் கவரை பிரித்தவருக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.

அதில் காணப்பட்டது ப்ரமோஷன் ஆர்டர்.

வாசகியின் வார்த்தைகளிலேயே அவர் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.

“சார், இத்துடன் எனது ப்ரோமோஷன் ஆர்டரை இணைத்திருக்கிறேன். என்னை Assistant Planning Engineer to Executive Planning Engineer ஆக உயர்த்தி ஆர்டர் போட்டிருக்கிறார்கள். நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீரென எம்.டி. என்னை கூப்பிட்டு இதை என்னிடம் வழங்கிபோது எனக்கு பேச்சே வரவில்லை. நிச்சயம் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி இந்த தகவலை என் குடும்பத்தினருக்கு பிறகு உங்களிடம் தான் முதலில் பகிர்ந்துகொள்கிறேன். என்னை காஞ்சி செல்ல தூண்டிய உங்களுக்கு நன்றி. இது அனைத்திற்கும் காரணம் நம் குரு மகா பெரியவா தான். அவரை தரிசித்துவிட்டு வந்த அடுத்த நாளே என்னை ஆசீர்வதித்துவிட்டார். குருவே சரணம்!”

என்று எழுதி, தனது ப்ரோமோஷன் ஆர்டரை இணைத்திருந்தார்.

இதுவும் ஒரு TERMINATION ORDER தான். ஆம், அந்த பக்தையின் பிரச்சனைகளுக்கு மகா பெரியவா கொடுத்த TERMINATION ORDER!

அந்த வாசகி வேறு யாருமல்ல… கடந்த சில மாதங்களாக நமது தளத்தில் தொடர்ந்து தனது கருத்துக்களை பின்னூட்டமிட்டு வரும் திருமதி.தாமரை வெங்கட் அவர்கள்.

பெரியவாளை ஒரு தரம் தரிசித்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த தரிசன பாக்கியம் கிடைத்துக்கொண்டே இருக்கும். அடுத்து ஓரிருமுறை காஞ்சி சென்று திரும்பிவிட்டார் அந்த வாசகி.

இப்போது அம்மகான் தொடர்பாக புதுப்புது நூல்களை படித்து வருகிறார். வீடெங்கும் அரை டஜனுக்கும் மேற்பட்ட மகா பெரியவா படங்கள் அலங்கரிக்கின்றன.

தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களிடம் தான் பத்து அடி எடுத்து வைக்கும் ‘தஸராஜர்’ மஹா பெரியவா என்று நாம் சொன்னது சொன்னது ஏன் என்று இப்போது புரிந்திருக்குமே!

=================================================================

Also check from our archives…

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

7 thoughts on “குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

  1. பெரியவா மகிமையை படிக்க படிக்க மெய் சிலிர்கிறது. அவை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி வைத்து வருவார் என்பதை மேற் சொன்ன உண்மை சம்பவத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

    நமது வாசகி தாமரை வெங்கட் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் மேலும் மேலும் உயர் நிலையை அடைய மகா பெரியவ அனுகிரகம் பண்ணுவார்.

    மகா பெரியவரின் கருணையோ கருணை

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

  2. ‘காஞ்சி சென்றால் எப்படி எங்கே இறங்கவேண்டும், எங்கே முதலில் செல்லவேண்டும், அன்னதான நேரம் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவருக்கு விளக்கி கூறி, காஞ்சியில் நமக்கு தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவரின் நம்பரை தருவதாகவும், அவருக்கு ஃபோன் செய்தால் போதும் பேருந்து நிலையம் அருகிலேயே வந்து பிக்கப் செய்துகொள்வார் என்றும், காமாக்ஷி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சி சங்கர மடம் மூன்றையும் தரிசிக்க செய்து மீண்டும் பஸ் ஸ்டாண்டிலேயே வந்து இறக்கிவிட்டுவிடுவார் என்றும், மொத்தமாக ரூ.200/- அல்லது ரூ.250/- கொடுத்தால் போதும்’

    — நான் காஞ்சிபுரம் போனதில்ல. தாமரை அம்மாக்கு சொன்னத எங்களுக்கும் சொல்லுங்க.

  3. அபார கருணா மூர்த்திம் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திர சேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்…அருமையான நிகழ்வுகள்…வாழ்க ..வளர்க …சுரேஷ் நாராயணன், குவைத்

  4. sir,

    I am really speechless in reading the two articles which shows the divine power of kanchi maha periyavar. It is surprising to see he is still blessing his disciples from the heaven and hearing their grief and coming to their rescue in needy time. I also pray the divine purusha of kanchi to bless me in my needy time and i would like to inform that i have visited the place thrice in the past.

    Thanking you

    S.CHANDRA MOULI.

  5. முதல் அனுபவம் உண்மையில் பெரிய சர்ப்ரைஸ் தான். திருமணத்தன்று தம்பதி சமேதராக பெரியவாளிடம் ஆசி பெறும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். அதுவெ பெரிய பரிசு. அப்படியிருக்க, மணமகனுக்கு உத்தியோக உயர்வு + சம்பள உயர்வு எனும்போது மகிழ்ச்சிக்கு கேட்கவேண்டுமா என்ன?

    மகா பெரியவா ஒரு கற்பக விருட்சம். நமக்கு தகுதியிருந்தால் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நினைத்தாலே போதும். நினைத்தது கிடைக்கும்.

    வாழ்த்துக்கள் தாமரை வெங்கட் அவர்களே.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  6. நினைத்த மாத்திரம் நம்மை நோக்கி ஓடோடி வரும் தெய்வம் நம் குருதேவர்………….அவரின் அனுக்ரஹம் பெற்றது அடியவளின் பாக்கியம்……..பெரியவாவை நம்பினார் கைவிடப் படார் என்பது அடியவள் கண்டு கொண்ட உண்மை…………என்றென்றும் குருதேவரின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்க விருப்பம்………வாழ்த்திய நண்பர்களுக்கும் பெரியவாவை அறிமுகப் படுத்திய ரைட் மந்த்ரா தளத்திற்கும் நன்றிகள் பல…….குருதேவரின் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்………..குருவே சரணம்………..

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *