Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

print
சென்ற ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக நங்கநல்லூரில் உள்ள ‘நிலாச்சாரல்’ என்னும் பார்வைத் திறன் சவால் கொண்ட மாணவிகள் இல்லத்தில் அம்மாணவிகளுக்கு தோடு, மாலை உள்ளிட்ட தீபாவளி பேன்ஸிகிட் மற்றும் புத்தாடைகள்  தானமளித்து கொண்டாடியது நினைவிருக்கலாம். மிகுந்த மனநிறைவை நமக்கும் நமது வாசகர்களுக்கும் தந்தது அது.

DSC05065

நிலாச்சாரல் நிறுவனர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலம் நம் வாசகர்கள் முன்னிலையில் மாணவிகளுக்கு தீபாவளி பேன்ஸிகிட் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அப்போது தோன்றியது தான் இப்போது நாம் சொல்லவிருக்கும் கைங்கரியம்.

DSC05075
நிலாச்சாரலில் மாணவிகளுடன் நம் வாசகர்கள்!

வேதம் படிப்பவர்களோ அவற்றை கற்பிப்பவர்களோ அரிதாகிவரும் இந்த காலகட்டங்களில், வேதம் படிக்கும் மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வேஷ்டி, சட்டை எடுத்துக்கொடுத்து அவர்கள் சிறு சிறு தேவைகளை இருப்பின் அதை நிறைவேற்றித் தந்து இந்த தீபாவளியை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளவேண்டும் என்று விரும்பினோம்.

DSC06906

ஹாலஸ்ய சுந்தரம் என்னும் நம் முகநூல் நண்பர் ஒருவர் அந்த நேரம் பார்த்து, மகா பெரியவா உத்தரவுப்படி ஆரம்பிக்கப்பட்டு மாங்காட்டில் செயல்பட்டு வந்த ஆனால் தற்போது நடக்கிறதா இல்லையா என்பதே கேள்விக்குறியாகி உள்ள பாடசாலை ஒன்றை பற்றி தகவலை பகிர்ந்து அது பற்றி யாரேனும் விசாரித்து சொல்ல முடியுமா என்றும் கேட்டிருந்தார். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் நாமே களத்தில் இறங்கி நேரில் சென்று விசாரித்து அனைத்து தகவலையும் திரட்டித் தந்தோம். (அது தனிப் பதிவாக வரும்). மகா பெரியவா ஆரம்பித்து வைத்த அந்த பாடசாலை இப்போது அங்கு இல்லையென்றாலும், மாங்காட்டில் வேறு ஒரு பகுதியில் காஞ்சி மடத்தின் ஆசியோடு ‘தபஸ் டிரஸ்ட்’ என்கிற அமைப்பு ஒரு பாடசாலை நடத்திவருகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த சுமார் 30 மாணவர்கள் அங்கு தங்கி வேதம் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஹாலஸ்ய சுந்தரம் மற்றும் அவர் முகநூல் நண்பர்கள் இணைந்து நிதி திரட்டி வருகிறார்கள். இதற்காக மாங்காடு பாடசாலையை நடத்தி வரும் தபஸ் டிரஸ்ட் என்கிற அமைப்பின் பேரில் கிராஸ் செய்யப்பட்ட காசோலைகளை சேகரித்து வருகிறார்கள். அவர்கள் காசோலை மூலமே நிதி திரட்டி அளிக்கவிருக்கிறார்கள். இது தனி.

DSC06948

இதனிடையே, நமது தளம் சார்பாக நாம் தீபாவளிக்கு ஏதேனும் செய்ய, நமது சக்திக்கு ஏற்றபடி ஒரு பாடசாலையை தேடி வந்தோம்.

இறுதியில் தேடலுக்கு விடை கிடைத்தது. ஆயுத பூஜையன்று கோ-சம்ரோக்ஷனத்துக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றபோது வழியில் ஒரு பாடசாலை கண்ணில் பட்டது. தேடல் இருந்தால் தான் தேடுவது கிடைக்கும்போல. அதற்கு முன்பு அந்த வழியே பலமுறை சென்றிருக்கிறோம். அது கண்ணில் பட்டது  கிடையாது. பாடசாலையை தேட  ஆரம்பித்தவுடன் அது கண்களில் பட்டது அதிசயம் தான்.

DSC07105

முறைப்படி அனுமதி பெற்று ஒரு நாள் பாடசாலைக்கு நேரில் சென்று அங்கு படிக்கும் மாணவர்களை சந்தித்து உரையாடினோம்.

‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இந்த யஜூர் வேத பாடசாலையில் பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து மாணவர்கள் அங்கேயே தங்கி படித்துவருகிறார்கள். குருராமன் என்கிற மிகச் சிறந்த அத்யாபகரைக் கொண்டு சாகை, சம்ஹிதை, பதம், கிரமம், கணம் முதலிய வேத அத்யயணம் செய்விக்கப்படுகிறது. சமீபத்தில் தான் சுமார் 10 மாணவர்கள் இங்கு படித்து முடித்து ‘கணம்’ பட்டம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

DSC07051

அம்மாணவர்களிடம் பேசியதில், மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வேதம் படித்து வருவதை அறிய முடிந்தது. இவர்கள் இதை படித்தவுடன், புரோகிதம், கும்பாபிஷேகம் போன்றவற்றக்கு சென்று நன்கு பொருளீட்ட முடியும்.

(* எதிர்காலத்தில் புரோகிதம் செய்ய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் இப்போது வேதம் படிப்பவர்களுக்கு வருங்காலத்தில் நல்ல வருவாயும் கிராக்கியும் நிச்சயம் உண்டு!)

சும்மா ஒப்புக்காக இல்லாமல் இம்மாணவர்கள் ஒரு வித வைராக்கியத்துடன் வேதம் படித்து வருகிறார்கள் என்பது அவர்களிடம் பேசும்போது புரிந்தது.

“நீங்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்ததும், குறைந்தது ஐந்து பேருக்காவது வேதம் சொல்லிக்கொடுக்கவேண்டும்!!” என்றோம்.

“நிச்சயம் செய்வோம் அண்ணா” என்றார்கள் கோரஸாக.

(ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் ஐந்து பேரையும் ஐந்து தனி மனிதர்களாக பார்க்கக் கூடாது. இவர்கள் ஐவரும் வேத விருட்சத்தை தழைத்தோங்க செய்யவிருக்கும் ஐந்து விதைகளுக்கு ஒப்பானவர்கள்!)

தீபாவளிக்கு இவர்களுக்கு வேஷ்டி சட்டை உள்ளிட்ட வஸ்திர தானம் செய்யவிருக்கிறோம். இவர்கள் ஐந்து பேரின் சட்டை அளவை குறித்துக்கொண்டு வந்துள்ளோம்.

இங்கேயே தங்கி படிக்கும் இவர்களுக்கு மூன்று வேளை உணவு பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. இவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ள கணேச ஐயர் என்பவரும் அவரது துணைவியார் சந்திரா என்பவரும் இருக்கின்றனர். அவர்களின் மகன் முத்துராமனும் இவர்களுடன் வேதம் படிக்கிறான்.

DSC07056

என்ன தேவைகள் இருந்தாலும் தயங்காமல் நம்மிடம் கூறும்படி கணேச ஐயரை  கேட்டுக்கொண்டோம்.

வாட்டர் ஹீட்டர், ட்யூப் லைட்டுகள் பழுது பார்ப்பு உள்ளிட்ட சிலச் சில எலக்ட்ரிகல் பணிகள் பாடசாலையில் செய்ய வேண்டியிருக்கின்றன என்றார். நாம் உரிய பணத்தை தந்துவிடுவதாக கூறி அனைத்தையும் சரி செய்யச் சொல்லியிருக்கிறோம்.

மேற்கொண்டு உள்ள தேவைகள் குறித்து பேசியதில் மாணவர்களுக்கு உணவை சமைத்தவுடன் அவர்கள் மதியம் அதை சாப்பிடும்போது சூடு ஆறிவிடுவதாகவும் உணவை சூடாக வைக்க, ஹாட் பேக் (பெரியது), மற்றும் கரண்டிகள் ஒரு நான்கைந்து தேவைப்படுவதாக கூறினார்கள். அனைத்தையும் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறோம்.

மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்கள் பூர்வீகம், வேதம் படிக்க வந்த காரணம் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்துகொண்டோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் வேதம் படிப்பது மனநிறைவை தந்தது.

சிங்கப்பூரிலிருந்து வந்து வேதம் படிக்கும் அபிஷேக்
சிங்கப்பூரிலிருந்து வந்து வேதம் படிக்கும் அபிஷேக்

இவர்களில் அபிஷேக் என்கிற மாணவன், சிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து தங்கி படிக்கிறான். அவன் தந்தை அங்கு ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். சிங்கப்பூரில் well-settled குடும்பம் இவர்களுடையது.

“எப்படிப்பா… சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டில் இருந்து, இங்கு வந்து வேதம் படிக்க வேண்டும் என்று தோன்றியது?” என்று கேட்டோம்.

“அது என் அம்மாவின் விருப்பம்!” என்றான்.

அந்த தாய்க்கு நம் நமஸ்காரங்கள்.

பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து எவனோ வெளிநாட்டுக்காரனிடம் அடிமை வேலைக்கு அனுப்புவதற்கு பதில், வேதம் படிக்க இங்கு அனுப்பிய அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

இன்னொரு மாணவன்…. ஸ்ரீராம் என்பது பெயர். சொந்த ஊர் திருவையாறு. அப்பா சமையல் வேலை பார்க்கிறார். தன் மகனை வேதம் படிக்க வைக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பியதை அடுத்து இங்கு வந்து படிக்கிறான்.

“ஸ்ரீராம், இதை முழு மனதுடன் சந்தோஷமாக படிக்கிறாயா? அல்லது அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் படிக்கிறாயா?” என்று கேட்டோம்.

“என் பெற்றோர் எதைச் சொன்னாலும் செய்வேன். அவர்கள் சொல்வதே என் வேத வாக்கு!” என்றான் அந்த ஸ்ரீராமன். “உன் பெயரின் ராசியப்பா அது… !”என்று மனதில் நினைத்துக்கொண்டோம். வயதில் சிறியவன் என்றாலும் அவன் காலில் வீழ்ந்து வணங்கி நம் பாவங்களை போக்கிகொள்ளலாமா என்று ஒரு கணம் யோசித்தோம்.

இந்த காலத்தில் வேதத்தை அழியாமல் காக்கவேண்டிய கடமையில் இருப்பவர்களே அதை சரிவர செய்வதில்லை. தங்கள் பிள்ளைகளை வேதம் படிக்க எந்த பெற்றோரும் அனுப்புவதில்லை. அப்படியே பெற்றோர் அனுப்ப விரும்பினாலும் பிள்ளைகள் அதை ஏற்றுகொள்வதில்லை. இந்த சூழ்நிலையில், பெற்றோர்களின் விருப்பத்திற்காக வேதம் படிக்கும் ஸ்ரீராம் போன்றவர்களின் கால்களில் விழுவதில் என்ன தவறு?

இன்னொருவன், குருமூர்த்தி…. கன்னியாகுமரியை சேர்ந்தவன். இவன் தந்தை அங்கு ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

மற்றொருவன் ஹரிகண்ணன் காரைக்கால். இவன் அப்பா பேருந்து டிரைவராக உள்ளார். அம்மா இல்லத்தரசி. இவன் மகா குறும்புக்கார சிறுவன். இவனிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால், அவன் செய்யும் சேட்டைகளை நீங்களே பாருங்களேன்….

DSC07070
குறும்புக்கார (காரைக்கால்) கண்ணன்!

மாணவர்கள், கொஞ்ச நேரம் நம்முடன் பழகினாலும் மிகவும் அந்நியோன்யமாக பழகிவிட்டார்கள். வேறு ஏதேனும் தேவை இருந்தால் சொல்லுங்கள் என்றேன்… மிகவும் தயங்கி தயங்கி… “கேரம்போர்ட் ஒன்னும் வாங்கித் தர முடியுமா அண்ணா? ” என்றார்கள்.

“தாராளமா… அவ்வளவு தானே? வாங்கித் தந்தா போச்சு. அதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம்? இன்னும் உங்களுக்கு என்னென்ன வேணுமோ சொல்லுங்க…. எங்களால என்ன முடியுமோ வாங்கித் தர்றோம். கூடப் பிறந்த அண்ணனா  நினைச்சிக்கோங்க… எது வேண்டும்னாலும் சொல்லுங்க… என் நண்பர்கள்கிட்ட கலந்து பேசி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறோம்.

ஐந்து மாணவர்கள், மற்றும் இவர்களின் அத்யபகர், இவர்களை கவனித்துக்கொள்ளும் கணேச ஐயர் மற்றும் சந்திரா தம்பதியினர், ஆஸ்ரமத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒரு அம்மா – இவர்கள் அனைவருக்கும்  வேட்டி, சட்டை, துண்டு, புடவை அளிக்கப்படவுள்ளது.

Adi Sankarar movieவரும் ஞாயிற்றுக் கிழமை இம்மாணவர்கள் கேட்ட பொருட்கள் இவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அடியேனும் நம் தள வாசகர்களும் அது சமயம் உடனிருப்பார்கள். வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் வரும் ஞாயிறன்று அம்மாணவர்களுக்கு ‘ஜகத் குரு ஆதிசங்கரர்’ என்கிற திரைப்படத்தை ப்ரொஜெக்டரில் காட்டவிருக்கிறோம். படம் நெடுக ஸ்லோகங்களும் மந்திரங்களும் என பிரமாதமாக இருக்கும். ஞாயிறு இந்த படத்தை அம்மாணவர்களுக்கு ப்ரொஜெக்டரில் போட்டு காண்பித்து, நாமும் அவர்களுடன் அமர்ந்து பகவத் பாதாளின் காவியத்தை தரிசிக்கவிருக்கிறோம்.

இது தொடர்பாக மாணவர்களிடம் கூறியபோது, ப்ரொஜெக்டர் அவர்களுக்கு புதியது என்பதால் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இதற்கு ஒப்புக்கொண்டார்கள். மேலும் படத்தை பார்க்க நம்மை விட மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

DSC07052

இன்னொரு விஷயம்… வரும் ஞாயிறு பொருட்களை ஒப்படைக்க நேரில் செல்லும்போது, சமாராதனைக்கும் (அன்னதானம்) ஏற்பாடு செய்திருக்கிறோம். நம்முடன் வருபவர்கள் ‘ஆதிசங்கரர்’ படத்தை கண்டு ரசித்துவிட்டு மதிய உணவு இடைவேளையில் அம்மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் திரைப்படம் தொடரும்.

(மேற்படி கைங்கரியத்தில் ஞாயிறு காலை நம்முடன் கலந்து கொள்ள விரும்பும் நம் வாசகர்கள் அவசியம் நமக்கு தகவல் முன்கூட்டியே தெரிவிக்கவும். அப்போது தான் உணவை ஏற்பாடு செய்ய சௌகரியமாய் இருக்கும்.)

பாடசாலைக்கு நமது உதவி இத்தோடு நின்றுவிடப்போவதில்லை. மேலும் மேலும் தொடரும்.

இப்பாடசாலையை முற்றிலும் இலவசமாக நடத்தி வருபவர் ப்ரும்மஸ்ரீ ராஜா வாத்யார் என்பவர். அவரின் முயற்சியாலே  தான் இது சாத்தியமாகியிருக்கிறது. தனி நபர் ஒருவர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் எப்படியாவது அவரை சந்தித்து அவரை கௌரவிக்க  விரும்பினோம்.அவரை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிறு சந்தித்தோம்.

ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரம நிறுவனர் ப்ரும்மஸ்ரீ ராஜா வாத்யார்
ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரம நிறுவனர் ப்ரும்மஸ்ரீ ராஜா வாத்யார்

திருவையாறை பூர்வீகமாக கொண்ட இவர், தனது தாய்மாமா பாலு கனபாடிகள் மூலம் வேதம் கற்றுக்கொண்டார். இவரது தந்தை ராமமூர்த்தி ஆசிரியப் பணி  செய்துவந்தார். தாயார் நாகலட்சுமி அம்மாள். (இவரது தாயாருக்கு சர்க்கரை நோய் பாதிப்பினால் இரு கண்களிலும் பார்வை கிடையாது. இவர் அரவணைப்பில் தான் இருக்கிறார். நாம் சென்றபோது ஒரு ஓரமாக அவர் அமர்ந்திருந்தார்.)

நம்மை வரவேற்று  அமரவைத்தவர், பாடசாலை குறித்து பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்.

“எப்படி உங்களுக்கு இப்படி ஒரு பாடசாலையை நடத்தவேண்டும் என்கிற யோசனை உண்டானது?”

“சாமான்ய தர்மம் என்று அனைவருக்கு ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. வேத அத்யபனம். அத்யாயனம். இந்த இரண்டையும் ஒரு பிராம்மணன் அவசியம் செய்யவேண்டும். அதாவது வேதம் படிக்கவேண்டும். அப்படி படித்த வேதத்தை பிறருக்கு கற்பிக்கவேண்டும்! இம்மாணவர்கள் இப்போது படிப்பது போன்றதொரு சூழலில் தான் நானும் வேதம் படித்து வந்தேன் என்பதால், எனக்கு நாமும் அது போல பலருக்கு வேதம் சொல்லித் தரவேண்டும் என்கிற ஆசை என்னுள்  எழுந்தது. எனது விருப்பத்திற்கு ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோர் தங்கள்  நல்லாசிகளை  தந்தார்கள். மேலும் பரனூர் மகாத்மா ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா ஆகியோரின் ஆசியுடன் இந்த வேத பாடசாலையை துவக்கி நடத்தி வருகிறேன்.”

“மகா பெரியவாளை நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா?”

“ஓரிரு முறை தரிசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அப்போது மிகச் சிறிய வயது. ஆனால் அவரின் தரிசன ஸ்பரிஸத்தினாலோ என்னவோ இன்று இப்படி ஒரு பாடசாலையை நிர்வகித்து வருகிறேன் என்று கருதுகிறேன்!”

“நான் கூட காஞ்சி மடம் தான் இந்த பாடசாலையை நடத்துவதாக நினைத்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது ஒரு தனி நபர் நடத்துகிறார் என்று. அப்போது தான் முடிவு செய்தேன் அவசியம் உங்களை நேரில் சந்தித்து உங்களை கௌரவிக்கவேண்டும் என்று!”

“இந்த பாடசாலைக்கான இடத்தை காஞ்சி சங்கர மடம் தான் தந்திருக்கிறது. பாடசாலையை நடத்திவரும் பொறுப்பு என்னை சேர்ந்தது!”

தொடர்ந்து ஸ்ரீராஜா வாத்யாருக்கு பழங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தோம். (அடியேனை தவிர வேறு யாரும் சந்திப்புக்கு வரவில்லை என்பதல நம் படம் இடம்பெற்றுள்ளது.)

“மேன்மேலும் உங்கள் வேத சம்ரோக்ஷனம் தொய்வின்றி நடக்கவேண்டும். மேலும் மேலும் பலர் உங்களிடம் வேதம் படித்து பயன்பெறவேண்டும்!” என்று வாழ்த்தியபடி அவரை கௌரவித்தோம்.

DSC07114

“எப்படி நடத்துகிறீர்கள்? நிறைய செலவு பிடிக்குமே?”

“நன்கொடைகள் வருகிறது. ஆனால் முழுச் செலவுக்கும் போதவில்லை. சில சமயம் என் கையிலிருந்து தான் பாடசாலைக்கு செலவு செய்கிறேன். ஆண்டவன் அருளால் எனக்கு புரோகிதம் மூலம் ஓரளவு வருமானம் வருகிறது. அதைக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறேன்.”

“உங்கள் தொண்டுக்கு உதவுவதாக இருந்தால் எந்த விதத்தில் உதவலாம்?”

“பாடசாலைக்கு தேவையான மளிகை பொருட்கள் பிரதிமாதம் வாங்கித் தரலாம். அல்லது பணமாக தரலாம். சமாராதனைக்கு ஏற்பாடு செய்து அவர்கள் சாப்பாடு செலவை ஏற்றுக்கொள்ளலாம். நன்கொடைகளுக்கு 80G யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு!”

“வேதங்களை  பரிபாலனம் செய்வதின் அவசியம் என்ன?”

“நமது சனாதன ஹிந்து மதத்திற்கு ஆதாரம் வேதங்களே.  வேத மந்திர கோஷத்தினாலேயே வழிபாடுகளில் தேவர்களை / தேவதைகளை / தெய்வங்களை ஆவாஹனம் செய்ய முடிகிறது.  வேத மந்திரங்களால் செய்யப்படுகிற பூஜை, ஹோமம், தர்ப்பணம், ஜபம் இவைகளால் ப்ரீத்தி அடைகின்ற தெய்வங்கள் விரைவாக நம் தேவைகளை / பிரார்த்தனைகளை அனுக்ரஹிக்கிறார்கள்.   வேத மந்திரங்களைக் கொண்ட சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளால் திருப்தி அடைகின்ற பித்ருக்கள் நம் சந்ததிகளுக்கு வம்ச விருத்தி முதலான சகல அபீஷ்டங்களையும் அனுக்ரஹிக்கிறார்கள். வேத மந்த்ரங்களால் செய்யப்படுகின்ற கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளால் கோவில்களில் தெய்வ ஸான்னித்யம் ஏற்பட்டு தெய்வங்கள் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.”

“இதனால் ஏற்படும் நேரடி நன்மைகள் என்ன?”

“வேத பாராயணம் முதலியவற்றால் சாமான்ய ஜனங்களின் மனங்களில் ஏற்படும் காமக் குரோதாதி துர்குணங்கள் குறைந்து தேச அமைதி ஏற்படுகிறது. வேத மன்ற கோஷ ஸ்வரத்தினால் நமது மன அழுத்தம், டென்ஷன் முதலிய சிரமங்கள் குறைந்து மன சாந்தி ஏற்படுகிறது.”

“இன்றைய அவசர யுகத்தில் இதெல்லாம் எந்தளவு சாத்தியம்?”

“வேதத்தில் கூறப்படும் கருத்துக்கள் படி மனிதனால் வாழ இயலாது என்று பூவுலகில் மக்களிடையே அபிப்ராயங்கள் தோன்றியதையடுத்து தான் படைத்த வேதங்கள் கூறுகிறபடி ஒருவனால் வாழ்ந்து காட்டமுடியும் என்று நமெக்கெல்லாம் உணர்த்தவே பகவான் தானே ராம, கிருஷ்ண  அவதாரங்கள் எடுத்து தர்ம ரக்ஷணம் செய்தார்.”

DSCN6913

“வேதங்களை போஷிப்பதால் வேறென்ன நன்மைகள் கிடைக்கும்?”

“வேதத்தின் உட்கருத்துக்களையே இதிகாச, புராண, நாடக, காவ்ய, தமிழ்மறை பாசுரங்கள் மறுபரப்பு செய்கின்றன.  வேதத்தின் கர்ம காண்டங்களை, மந்திரங்களைக் கொண்டு யாகம், ஹோமம். செய்வதன் மூலம் சகல உலக நன்மைகளும், சுவர்க்கம் முதலிய பரலோக நன்மைகளும், மழை முதலிய தேச நன்மைகளும் ஏற்படுகின்றன.  வேதத்தின் ஞான காண்ட அர்த்தாணு சந்தான அனுஷ்டானத்தின் மூலம் சித்த சுத்தியும், ஞான யோக்யதையும் ஏற்படுகிறது.  வேத பாறையான ஸ்ரவணத்தினால் சகல பாபங்களும் விலகுகிறது.  வேத மந்திரங்களே தெய்வங்களுக்கு சாநித்யத்தையும், முனிவர்களுக்கு தபோ பலத்தையும்   , மனிதர்களுக்கு சகல விதமாக ஆயுஷ் ஆரோக்ய, ஐஸ்வர்ய மனோ பீஷ்டங்களையும் கொடுக்கின்றது.”

“இறுதியாக எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?”

“சகல ஷேம லாபங்களையும் அனுக்ரகிக்கக் கூடிய  வேதங்களை ரட்சித்து போற்றி வளர்க்க வேண்டியது நமது அனைவரின் கடமை!” என்றார்.

சந்திப்பு நிறைவடையும் கட்டத்திற்கு வந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வேதபாடசாலை மாணவர்களுக்கு  நம்  தளம் சார்பாக நடைபெறவிருக்கும் வஸ்திர தானம், மற்றும் ஆதிசங்கரர் படத்தை திரையிடுவது பற்றியும் சொன்னோம்.

“ரொம்ப சந்தோஷம்… வேதம் படிக்கிறவாளுக்கு இந்த மாதிரி நீங்க இன்னும் நிறைய செய்யனும்!!” என்றார் மகிழ்ச்சியுடன்.

புறப்படுவதற்கு முன்பு மறக்காமல் ஸ்ரீராஜா வாத்யாரின் பார்வையற்ற அந்த தாயின் கால்களில் வீழ்ந்து வணங்கி அவரது ஆசியை பெற்றோம். நம்மையும் நமது தளத்தையும் ஆசீர்வதித்தார் அந்த தாய்.

===============================================================

இந்த பாடசாலைக்கு பிரதி மாதம் உதவிட விரும்புகிறவர்கள் தாராளமாக உதவலாம். ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமத்தை நடத்திவரும் ஸ்ரீ லோகக்ஷேமா டிரஸ்ட் என்கிற அமைப்பின் வங்கிக் கணக்கு விபரங்களை இத்துடன்  அளித்திருக்கிறோம்.

Name : Sree Lokakshema Trust
A/c No. : 12641152631
Account type : Current Account
Bank : Karur Vysya Bank, Valasarawakkam
IFSC Code : KVBL0001264

பாடசாலை முகவரி : ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரம், # 63, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033.  ஸ்ரீராஜா வாத்யார் : 94440 55444

தங்கள் உதவியை தாங்களே நேரடியாக செய்யவேண்டும் என்று விரும்புகிறவர்கள் பாடசாலையின் மேற்படி வங்கிக் கணக்கில் தங்கள் நன்கொடையை  அளிக்கலாம்.

அதே நேரம் வரும் ஞாயிறன்று நாம் செய்யவுள்ள தீபாவளி வஸ்திர தானம், மற்றும் பாத்திர பண்டங்கள் தானம், பக்திப் படம் திரையிடுதல் போன்றவற்றுக்கு உதவிட விரும்புகிறவர்கள் கீழ்கண்ட நமது தளத்தின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நம் ரைட்மந்த்ரா.காம் தளத்தின் நிர்வாக செலவுகளுக்கு பிரதி மாதம் உதவிட விரும்புகிறவர்கள் தாரளமாக உதவலாம். நமது தளத்திற்கு விளம்பர வருவாய் எதுவும் கிடையாது. முற்றிலும் சேவை நோக்கோடு இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை அறிவீர்கள். (நமது தளத்தின் அறப்பணிகள் மற்றும் இதர பணிகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த முகவரியை பார்க்கவும். http://rightmantra.com/?page_id=7762 )

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். (அலைபேசியில் தொடர்புகொள்ள விரும்புகிறவர்கள் மாலை 7.00 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும்.)

தீபாவளியை முன்னிட்டு பாடசாலை அக்டோபர் 16 முதல் 25 வரை விடுமுறை. மாணவர்கள் அனைவரும் அதுசமயம் பண்டிகையை தங்கள் பெற்றோருடன் கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள். தீபாவளி கழிந்து தான் மறுபடியும் பாடசாலை  இயங்கும். எனவே தான் வரும் ஞாயிறே நமது நிகழ்ச்சியை வைத்துள்ளோம். இன்னும் நான்கைந்து நாட்களே  உள்ளபடியால், மேற்படி சமாராதனை மற்றும் வஸ்திரங்களை வாங்குவதில் தோள் கொடுக்க விரும்பும் வாசகர்கள் விரைந்து உதவும் கேட்டுக்கொள்கிறோம்.

வேதம் தழைக்கட்டும்! புவியில் இன்பம் பெருகட்டும்!!

மிக்க நன்றி!!!

===============================================================

[END]

 

7 thoughts on “வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

  1. வணக்கம்…….

    வேதம் படிப்பதாலும் அதை ஆராதிப்பதலும் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொண்டோம்………தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்……..

  2. வேதத்தை பற்றி இவ்வளவு அழகாக பதிவு தயார் செய்து இருக்கிறீர்கள். வேதம் படிக்கும் மாணவர்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களது கைங்கர்யம் தொடர வாழ்த்துக்கள். இந்த நல்ல விஷயத்தில் நாங்களும் பங்கு கொள்ள ஆசை படுகிறோம்.

    இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது நான் விழுப்புரம் சங்கர மடத்தில் உள்ள பாட சாலை குழந்தைகளை பார்த்த உணர்வு ஏற்படுகிறது ஏனெனில் என் பையனுக்கு விழுப்புரம் சங்கர மடத்தில் தான் பூணல் போட்டோம்

    மிகவும் அருமையான பதிவு அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய உன்னதமாந விஷயம் இந்த பதிவில் உள்ளது

    நன்றி
    உமா

  3. //ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் ஐந்து பேரையும் ஐந்து தனி மனிதர்களாக பார்க்கக் கூடாது. இவர்கள் ஐவரும் வேத விருட்சத்தை தழைத்தோங்க செய்யவிருக்கும் ஐந்து விதைகளுக்கு ஒப்பானவர்கள்!) //

  4. என் மனதிற்கு அதீத மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்த ஒரு உன்னதமான பதிவுக்கு நன்றி சுந்தர்.

    ப்ரும்மஸ்ரீ ராஜா வாத்யார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் நமஸ்காரங்கள்.

    சிங்கப்பூர் அபிஷேக்கின் தாயார் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வேதம் படிக்கும் ஸ்ரீராம் கிடைத்தற்கரிய குழந்தை.

  5. அருமையான பதிவு. எங்கள் சார்பாக (எங்கள் மனதிலும்) உள்ள கேள்விகளை ஸ்ரீ ராஜா வாத்யாரிடம் நீங்கள் கேட்டு தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

    வேதம் தழைக்கட்டும்! புவியில் இன்பம் பெருகட்டும்!!

    ஓம் நம சிவாய

  6. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நான் இன்று வேத வித்யா ஆசிரமத்துக்கு போய்வரும் வரை பதிவை படிக்க நேரமில்லை. இப்பொதுதான் படித்தேன், தெளிந்தேன். தங்களின் தேடுதலும் மெய்யன்பர்களும் இருக்கும் வரை நம் பணி தொடர எல்லாம் வல்ல மகாபெரியவாளின் அருளை வேண்டுகிறேன்.

  7. அன்று சாறோர்கள் எழுதிய வேதங்கள் இன்று அறிவியல் பூர்வமாக நிருபன்மாகுவதை பார்க்கும் பொது சிலிர்கிறது

Leave a Reply to harisivaji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *