Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

print
த்தனை தான் விழுந்து விழுந்து, ஓடியாடி சம்பாதித்தாலும், மாட மாளிகை கூட கோபுரங்கள் கட்டி வசித்தாலும், செல்வத்தில் புரண்டாலும், நல்ல விரும்பிய உணவை சாப்பிடும் நிலையில் ஒருவர் இருக்கவேண்டும்; படுத்தவுடன் உறக்கம் வரவேண்டும். இது தான் வாழ்க்கை. ஆனால் இன்று எத்தனை பேருக்கு இது கிடைக்கிறது? இன்றைய நோய்களின் பெருக்கத்திற்குக் காரணம் மேற்கூறிய இரண்டும் இல்லாதது தான். நல்ல உணவு, உறக்கம்.

இப்போதெல்லாம் தலைவலி என்று மருத்துவமனைக்கு சென்றாலே குறைந்தது ஆயிரம் ரூபாய்க்கு செலவு ஏற்படுகிறது. அல்லும் பகலும் பாடுபட்டு சம்பாதிப்பது, மருத்துவச் செலவுக்கே சென்றுவிடுகிறது. மேலும் படவேண்டிய கஷ்டங்கள் அனைத்தும் பட்டபிறகு மறுபிறப்பு வேறு… அதுவும் எத்தனை என்று தெரியாது. இவை அனைத்தையும் நீக்கி பிறவா நிலைக்கு நம்மை இட்டுச்சென்று உய்யும் வழிக்கு வகை செய்வது இறைவழிபாடே. ஆனால் எத்தனை பேருக்கு இது  சாத்தியப்படுகிறது. மேற்கூறியவற்றை நீக்கிகொண்டு அவன் தாளை பணிந்து சுகவாழ்வு வாழ அனைவருக்கும் மனம் உண்டு. இருப்பினும் மார்க்கம் தான் இல்லை.

அத்தகையோருக்கு அருமருந்தாய் விளங்குவது தான் இந்த பதிகம்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் பள்ளியறையில் எழுந்தருளிருக்கும் ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சியும்!
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் பள்ளியறையில் எழுந்தருளிருக்கும் ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சியும்!

இந்த பதிகத்தை படித்தால், நாள் தோறும் உணவும் உறக்கமும் சீராக கிடைக்கப்பெறும். வீண் செலவுகள் ஏற்படாது. இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பிறவா நிலை எய்தி சிவபதத்தை அடைவர்.

உங்களுக்கு தெரிந்தவர் உற்றார் உறவினர் எவரேனும் இயற்கை எய்தினால், அவர்கள் பொருட்டு இப்பதிகத்தை பக்தியுடன் பாராயணம் செய்துவந்தால் அவர்களுக்கு சிவபதம் கிடைப்பதுடன் உங்களுக்கும் குறைகள் நீங்கி இன்பம் பெருகும். அறமும் இன்பமும் உங்கள் இல்லத்தில் தழைக்கும். நோயற்ற வாழ்வுடன் குறைவற்ற செல்வத்தை பெறுவீர்கள்.

திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு ‘நல்லூர் பெருமணம்’ என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த ‘காதலாகிக் கசிந்து’ என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .

நமச்சிவாயத் திருப்பதிகம்

காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தருவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)

கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)

மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே. (11)

Also check :

===============================================================

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

ராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

===============================================================

[END]

6 thoughts on “உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

  1. மிகவும் அருமையான நமக்கு பிடித்த வெகு நாட்களாக படிக்கும் அற்புத பதிகம். இந்த பதிகத்தை அனைவரும் படித்து பயன் பெறுவோம்’

    அருமையான பதிகத்தை பதிவாக கொடுத்த தங்களுக்கு நன்றிகள் பல

    ஓம் நாம சிவாய

    திரு சிற்றம்பலம்

    நன்றி
    உமா

  2. அருமையான பதிகத்தைப் பற்றிய பதிவிற்கு நன்றி.

    ஓம் நம சிவாய

  3. உற்ற நேரத்தில் தேவையான பதிகம்.

    பரிமளம் அவர்களின் கணவர் மணிமாறன் சிவபதம் பெற்று பிறவா நிலையை அடையவும், நமது குறைகள் நீங்கி நலம் பெருகவும் இந்த பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

    எளிமையான ஓதுவதற்கு இனிய பதிகம். நன்றிகள் பல.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. எல்லாம் சரி, தாங்கள் இருக்கும்போது யாருக்கும் உதவாமல், ஏன் தங்களுக்கே கூட உதவிக்கொள்ள்லாமல் பிற்கால சந்ததியினருக்கு சொத்து சேர்க்கும் கூட்டம் பெருகி வருகிறது கவலைகொள்ளத் தக்கது. இந்தப் போக்கிற்கு காரணம் “சுயநலம்” , எவன் எக்கேடு கேட்டுப் போனால் என்ன? என் மனைவி, என் பிள்ளைகள், என் பேரன் பேத்தி, என் குடும்பம் என சுயநலக் கூட்டம் பெருகி வருகிறது. இவர்கள் யாருக்காக சொத்து சேர்த்து வைக்கிறார்களோ அவர்கள் இவர்களின் இறுதிக் காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் தத்தளிக்க வைக்கிறார்கள். பெரும்பாலனவர்கள் அமெரிக்கா போய் செட்டிலாகி இங்கே பெற்றவர்களை தவிக்க விடுகிறார்கள். கொஞ்ச காலம் இந்தப் பெற்றோரும் அங்கே அமெரிக்காவில் இலவச “ஆயா” வேலைக்கு அழைக்கப் படுகிறார்கள். இதெல்லாம் இன்றைய நிதர்சனம், பூனைக்கு யார் மணி கட்டுவது?

    சாகர நேரத்தில “சங்கரா” சங்கரா என சுயநலத்துடன் கூபிடுவதிற்கு பதில், எல்லா நேரத்திலும் அவன் பெயரைக் கூறி பிறருக்கு உதவுபவர்கள் இறைவனின் பரிபூரண அன்பிற்கு பாத்திரமாகிறார்கள்.

Leave a Reply to தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *