Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

print
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது மகோத்சவம் மந்த்ராலயத்தில் உள்ள மூல பிருந்தாவனத்திலும் நாடெங்கிலும் உள்ள மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி சென்ற குரு வாரம் நமது தளத்தில் விஷேக பதிவுகளும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திருச்சியை சேர்ந்த நமது வாசகர் சிவக்குமார் என்பவர், நமக்கு ஒரு மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்திருந்தார். அதில், சமீபத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது புதுவையில் உள்ள குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தில் பக்தர் ஒருவர் ஆராதனையின்போது எடுத்த புகைப்படத்தில் ராயரின் உருவம் தெரிந்ததாக கூறி இரு புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.

Ragavendra Swamy Thiruvarur miracle
அபிஷேக நீருக்கு பின்னணியில் ராயரின் முகம்

முதல் புகைப்படத்தில், ராயரின் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. அடுத்த படத்தில் அவரின் திருப்பாதங்கள் காட்சி தந்தன. பரவசத்துடன் கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

இருப்பினும் எதையும் ஆதாரப்பூர்வமாக  அளிப்பதே நமது பாணி என்பதால், மேற்படி குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தின் தொலைபேசி எண்ணை அவரிடம் கேட்டேன். அவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து நமக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால் அந்த எண் வேலை செய்யவில்லை.

சரி… புகைப்படங்களையாவது ராயரைப் பற்றிய பதிவில் நுழைத்து உங்கள் பார்வைக்கு சமர்பித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

இதற்கிடையே நேற்றிரவு மகா பெரியவா தொடர்பான பதிவை தயாரித்துக் கொண்டிருக்கும்போது, புதுவை குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தின் தொடர்பு எண் பற்றி நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு உந்துதலில் தேட, முதல் முயற்சியிலேயே நமக்கு மிருத்திகா பிருந்தாவனத்தின் முகவரியும் அலைபேசி எண்ணும் கிடைத்துவிட்டது.

காலை பிருந்தாவனத்தை தொடர்பு கொண்டு, நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு புகைப்படம் பற்றி கேட்டபோது, அது உண்மை தான் என்றும் முதல் படம், திருவாரூர் பிருந்தாவனத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும், இரண்டாம் புகைப்படம் புதுவை பிருந்தாவனத்தில் நிகழ்ந்த அற்புதம் என்றும் கூறினார்.

புதுவை குரும்பபேட் பிருந்தாவனத்தில் மத்திய ஆராதனை தினத்தன்று நடைபெற்ற *அலங்கார பந்தி நிறைவடைந்தவுடன் அப்போது தரிசனத்திற்கு வந்திருந்த ஒரு வாசகர் பிருந்தாவனத்தை தனது மொபைலில் புகைப்படம் எடுக்க அவர் படத்தில் ராயரின் பாதங்கள் பதிவானதாகவும்  தெரிவித்தார்.

2nd Aradhana
மத்திய ஆராதனையின்போது வீணை அலங்காரத்துடன்

(*அலங்கார பந்தி – மூன்று மாத்வர்களை உட்கார வைத்து அவர்களை அனிருத்த, புருஷோத்தம, வாசுதேவ ஆகியோராக பாவித்து  ஆவாஹனம் செய்து, கற்பூர தூப தீபம் காண்பித்து அவர்களுக்கு பூஜைகள் செய்து நிவேதனம், படைத்து வழிபடுவார்கள். இதற்கு பிறகே அன்னதானம் நடைபெறும். இதுவே அலங்கார பந்தி. எல்லா பிருந்தாவனங்களிலும் மத்திய ஆராதனையின்போது இந்த வைபவம் நடைபெறும்!)

பிருந்தாவனத்தை புகைப்படம் எடுத்த வாசகரின் அலைபேசி விபரங்களை கேட்டபோது அவர் பெயர் ரவிஷங்கர் என்று கூறி அவரது தொடர்பு எண்ணை நமக்கு அளித்தனர்.

Ragavendra Swamys holy feet @ Kurumbabet
ராயரின் பாதங்கள் தெரிகிறதா?

(இரண்டாம் புகைப்படத்தில் பாதங்கள் தெளிவாக தெரியும். முதல் புகைப்படத்தை சற்று உற்று நோக்கினால் தான் ராயரின்  உருவம் புலப்படும். கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல உருவம் காணப்படும். நீண்ட நாசி, வெண்ணிற தாடி… நன்றாக சற்று உற்றுப்பாருங்கள். தெரியவில்லை எனில், மீண்டும் மீண்டும் பாருங்கள். நிச்சயம் தெரிவார்.)

திரு.ரவிஷங்கர்  அவர்களை தொடர்புகொண்டு நமது தளத்தை பற்றி கூறி, அவரது மேற்படிஅனுபவத்தை பற்றி கேட்டப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது…

“எனது பெயர் ரவிஷங்கர். என் மனைவி பெயர் ஹேமா. நான் தஞ்சையை சேர்ந்தவன். ஒரு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ராகவேந்திர சுவாமிகளின் பக்தராக இருந்து வருகிறேன். தஞ்சை வடவாற்றங்கரை பிருந்தாவனத்திற்கும் திருப்பூரில் உள்ள பிருந்தாவனத்திற்கும் பல முறை சென்றுள்ளேன்.

எனக்கு திருமணாகி காயத்ரி என்கிற மகள் உண்டு. அவள் தற்போது 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். எனக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ஏழாவது மாதம் இருக்கும்போதே பிறந்துவிட்டது. (PRE-MATURE BABY). எடை மிக மிக குறைவாக இருந்தது. முன் கூட்டியே பிறந்த குழந்தை என்பதால் அதற்குரிய பாதிப்புக்கள் குழந்தையிடம் இருந்தன. குழந்தைக்கு அரவிந்த் என்று பெயர் வைத்தோம். அரவிந்த் எதையும் லேட்டாக தான் புரிந்துகொள்வான். வளர்ச்சி வேறு சற்று குறைவாகத் தான் இருந்தது. பல மருத்துவர்களிடம் குழந்தையை கொண்டு போய் காண்பித்தோம். “இதற்கு  ஒன்றும் செய்யமுடியாது. காலப்போக்கில் தான் சரியாகும்” என்று கூறிவிட்டனர்.

என் குழந்தையை ராயர் தான் காப்பாற்றவேண்டும் என்று ராயர் மீது பாரத்தை  போட்டுவிட்டு அடிக்கடி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராயரின் பிருந்தாவனம் செல்வேன். என் மனவியின் சொந்த ஊர் புதுவை என்பதால் சென்ற வாரம் அவள் வீட்டுக்கு வந்திருந்தோம்.

அப்போது இங்கு குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை நடைபெறுவதை கேள்விப்பட்டு, ராகவேந்திர சுவாமிகளை தரிசிக்க வந்திருந்தோம். நாங்கள் வந்திருந்த ஆகஸ்ட் 12  செவ்வாய் ராயர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள். அன்று இங்கு மத்திய ஆராதனை நடைபெற்றுகொண்டிருந்தது.

அலங்காரபந்தி முடிந்து அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சன்னதியில் எவரும் இல்லை.

நான் என் குழந்தையை நினைத்து ராயர் முன்பு கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தேன். என் மனைவியும் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு மனமுருகி பிரார்த்தித்துக்கொண்டிருந்தாள்.

ராயரின் பிருந்தாவன அழகு என் மனதை கொள்ளைக் கொண்டது. மொபைலில் படம் பிடித்தால் வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம் என்று கருதி, மொபைலில் சில படங்கள் எடுத்தேன். இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.

அன்று  மாலை மீண்டும் பூஜையை பார்க்க மனைவியும் நானும் வந்திருந்தோம். தீபாராதனைக்கு இன்னும் அரைமணிநேரம் ஆகும் என்றும் சற்று காத்திருக்குமாறும் அர்ச்சகர் கூறினார்.

 மாலை தீபாராதனை காட்டும்போது எடுத்தபடம்

மாலை தீபாராதனை காட்டும்போது எடுத்தபடம்

இந்த தருணத்தில் என் மனைவி, மதியம் எடுத்த புகைப்படங்களை மொபைலில் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது தான் புகைப்படத்தில் ஏதோ வித்தியாசமாக தெரிவதை பார்த்தாள். உடனே என்னிடம் காட்டினாள். நான் “ராகவேந்திரா…” என்று கத்தியே விட்டேன்.

உடனே பிருந்தாவன அலுவலகத்துக்கு சென்று காண்பித்தேன். அவர்களும் அதை பார்த்து, அது ராயரின் பாதங்கள் தான் என்று ஊர்ஜிதப்படுத்தினர்.

“நீ கொடுத்துவைத்தவனப்பா…. மிக மிகப் பெரிய பூஜைகளை செய்தே காட்சி   தராத குருராஜர், உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். அதுவும் ஆதாரப்பூர்வமாக. உன் குழந்தையை குருராஜர்  ஆசீர்வதித்துவிட்டார். இனி குறையொன்றுமில்லை!!” என்றனர்.

எனக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. சந்தோஷத்தில் பரவசத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. என் மனைவி அதற்கு மேல். அழுதேவிட்டாள்.

“இது எதனால் சாத்தியமானது?” என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்.

“எல்லாம் ராயரின் கருணாகடாக்ஷம் தான். பிரத்யக்ஷ தெய்வம் அவர். வேறு என்ன சொல்வது? நான் மிகப் பெரும் பாக்கியசாலி. ஆனால், என் குழந்தையின் மீது இரக்கப்பட்டே ராயர் இதை நடத்திக் காட்டியதாக நான் நினைக்கிறேன்! என் குழந்தை குணமடைந்தால் அது போதும். நான் அவரிடம் கேட்பது வேறு எதுவும் இல்லை!” என்றார்.

வாழ்த்துக்கள் கூறிவிடைபெற்றோம்.

குரும்பபேட் ஆலய தரப்பில் நமது தளத்தை பற்றியும் அதில் வெளிவரும் ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் பற்றியும் கூறியபோது, வரும் ஞாயிறு அவசியம் நம்மை குரும்பபேட் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். பக்தர்கள் வாழ்க்கையில் ராயர் நிகழ்த்திய அற்புதம் பற்றி தகவல்கள் பற்றி கேட்டபோது, “ஒன்றல்ல இரண்டல்ல… எண்ணற்றவை கொட்டிக்கிடக்கின்றன. நேரில் வாருங்கள். ராயரை தரிசித்துவிட்டு சாவகாசமாக பேசலாம்” என்று மடத்து நிர்வாகி ராகவேந்திர பாலாஜி அவர்கள் கூறியிருக்கிறார்.

பிருந்தாவனத்திலேயே நமக்கு தங்குமிடமும், உணவு உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். எனவே வரும் ஞாயிறு குரும்பபேட் செல்கிறோம். ராயரின் அருள் வீச்சு வெளிப்பட்ட எண்ணற்ற அற்புதங்களை அள்ளிக்கொண்டு வருவோம் என்று கருதுகிறோம்.

இப்புகைப்படங்களை நம் கவனத்திற்கு கொண்டு வந்த வாசகர் சிவக்குமார் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

ராகவேந்திர தரிசனம் தொடர் எழுத ஆரம்பித்தவனுக்கு எப்படியெல்லாம் எங்கிருந்தெல்லாம் செய்திகளும் அற்புதங்களும் கொட்டுகிறது பார்த்தீர்களா?

நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்துவைப்பான். ஆனால், ராயரோ நம்மை நோக்கி ஓடிவருவார் என்பதே உண்மை.

திங்கள் முகத்தில் செவ்வாய் மலரும்
சிறப்பில் அற்புத செயல்கள் தொடரும்
வியாழன் தோறும் குருவருள் பரவும்
விடிவெள்ளி தோன்றும் ஞாயிறு பரவும்
அழைத்தால் போதும் அடுத்தக் கணமே
நினைப்பது நடக்கும் அஞ்சேல் மனமே
‘ராகவேந்திர’ என்று சொல்வாய் தினமே
அபயம் தருவது அவர்த் தனிக் குணமே!

===================================================================

Also check :

Articles about Ragavendhra Swami in Rightmantra.com

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை ஸ்பெஷல்!

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

===================================================================

[END]

25 thoughts on “புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

  1. வணக்கம்……

    கண்ணீரை தவிர வேறு வார்த்தைகள் இல்லை……என் கண்களுக்கு மஹா பெரியவரைக் காண்பது போலவே உள்ளது………..

    குருவே சரணம்………

  2. மகான்கள் என்றும் நமக்கு அருள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று.

    குருவே சரணம்

    ஓம் நம சிவாய

  3. என்ன சொல்லுவதுனே தெரியல எனக்கு அழுகையே வந்து விட்டது. குருவே சரணம்.

  4. திரு ,ரவிஷங்கர்.அவர்களின் இந்த அனுபத்தை படிக்கும்போது எனக்கு உடம்பே சிலிர்த்துவிட்டது ..என்ன ஒரு ஆதாப்பூர்வமான உண்மை …
    எங்கோ ஒரு சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் கேள்விபட்டாலும் ,நம் தலத்திற்கும், நமது வாசகருக்கு இது ஒரு பொக்கிஷ பதிவு..

  5. very heart touching article. my eyes are filled with tears. ragavendira swami is still living with us.

    thangal payanam siraaka vaazthukkal

    nandri

    uma

    1. நேற்று இரவு இந்த பதிவை படித்து விட்டு ஸ்வாமிகள் நமக்கு காட்சி தரமாட்டார என்று நினைத்து படுக்கச் சென்று விட்டேன். இரவு எனது கனவில் இரண்டு ருபாய் காப்பர் காயின் அளவில் தரையில் எதோ கிடக்கிறதே என்று எடுத்துப் பார்கிறேன். கையில் எடுத்ப்பார்த்தால் அதில் ராகவேந்திரர் உருவம் உள்ளது. அப்புறம் தான் தெரிந்தது இது கனவு என்று.

      போன வாரம் en அம்மாவை எங்கள் சொந்தக்காரர் ஒருவர் மந்த்ராலயத்திற்கு வருகிறீர்களா என்று கேட்டார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக என் அம்மாவால் செல்ல இயலவில்லை. மனதிற்கில் தாம் செல்லவில்லை ஒன்று கவலை என் அம்மாவிற்கு இருந்தது. போன வாரம் புதன் கிழமை 11 மணி வாக்கில் பூஜை செய்து கொண்டிருந்த பொழுது என் அப்பா எதேச்சையாக பொதிகை டிவியை போட்டு இருக்கிராகர்கள். அப்பொழுது ராகவேந்திறார் மந்த்ராலய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பூஜை செய்து கொண்டிருந்த என் அம்மாவின் காதில் ராகவேந்திரர் என்று கேட்டவுடன் டிவி யை பார்த்தல் அதில் ராகவேந்திரர் நிகழ்ச்சி. என் அம்மாவிற்கு ராகவேந்திரர் பிருந்தாவன பிரவேச நிகழ்ச்சி பற்றி தெரியாது. டிவி நிகழ்ச்சியை பார்த்தவுடன் என் அம்மாவிற்கு மிக்க மகிழ்ச்சி. ‘உன்னை பார்க்க வரா விட்டாலும் நீ எனக்கு காட்சி கொடுத்தாயே’ என்று இறைவனிடம் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியை என் அம்மா என்னிடம் சொன்ன பொழுது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. நான் என் அம்மாவிடம் ‘ அம்மா ராகவேந்திரர் கண் கண்ட தெய்வம்’ என்று சொன்னேன்.

      இந்த நிகழ்ச்சியை இங்கு பதிவு செய்ய ஆசைப்பட்டேன்.

      வாரா வாரம் ராகவேந்திரரின் அற்புதங்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

      நன்றி
      உமா

  6. பதிவை வாசித்ததும் கண்கள் கலங்கி விட்டன. மகானின் அற்புதம் இவை எல்லாம் நாம் வாழும் காலத்தில் தானே நடக்கின்றன. எனக்கும் ராகவேந்திர சுவாமியை பிருந்தாவனம் சென்று பார்க்க மிகவும் ஆவல் இலங்கையில் இருந்து நினைத்தவுடன் நடக்க கூடிய விடயம் இல்லை.நான் மட்டும் நினைத்து என்ன செய்வது என் குடும்பத்தினர் நினைக்க வேண்டுமே.மகானின் அருளை மனதில் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.பதிவு எழுதுவதில் உங்கள் எழுதும் திறமை அபாரம். படிப்பவர் கண்கள் கலங்கும் வண்ணம் லாவகமாக எழுதும் உங்கள் ஆக்கமும் அருமையிலும் அருமை.

    1. மிக்க நன்றி சகோதரி.

      ஒன்று மட்டும் சொல்வேன். விரைவில் ராயரை தரிசிக்கக் கூடிய வாய்ப்பு உங்களை தேடி வரும்.

      உங்கள் மகிழ்ச்சியை அப்போது இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

      GOD IS THE BEST LISTENER. HE LISTENS EVEN THE VERY SILENT PRAYER OF A SINCERE HEART.

      – சுந்தர்

  7. Dear Sundarji,

    Very excited seeing Swamiji pictures.

    Poojyaya Raghavendraya Sathya Dharma Rathayacha Bhajatham Kalpavrikshayacha Namatham Kamadheynave!!!

    Thanks & Regards

    V Harish

  8. Literally heart is filled with tears after seeing these photos
    **
    Even I’m here (in puducherry) for few years as of now. But I haven’t gone to this Ragavendra mutt since I don’t know that this mutt exists here.
    **
    Through Sundar sir, I have got to know this temple. That too, with such a powerful experience before I even go there.
    **
    I’m more existed to join with you on this lovely sunday to experience this divine more and more.
    **
    Good days are about to come for those who suffer as of now.

  9. இன்று ராயரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.

  10. வணக்கம் சுந்தர் சார்

    எந்த ஜென்மதொலோ செய்த புண்ணியம் ராயர் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது சார்

    மெய் சிலிர்த்துவிட்டது சார் பார்க்க பார்க்க பரவசம் சார் ..

    மிக்க நன்றி

  11. அருமையான பதிவு.
    கண்கள் குளமாகி விட்டது.
    என்ன சொல்வதென்று தெரியவில்லை.
    காணும் பொருள் யாகிலும் பரப்ரம்மமே நிரம்பிஉள்ளது.
    அதைக்காணும் பாக்கியம் நமக்கும் கூடிய விரைவில் கிட்டும்.

  12. ராயரின் அற்புதங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை .
    திரு ரவிசங்கர் அவர்களின் உணர்ச்சிபூர்வமான அனுபவம் நம்மை எல்லாம் கண்ணீர் ததும்ப வைத்து விட்டது.
    ராயரின் பாதங்கள் தெரிகிறதா?- புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு கணம் நம்மை சுற்றிவுள்ள எல்லாம் மறைந்து அந்த பாதங்கள் மட்டுமே
    பார்வையில் தெரிய சிலிர்த்துபோனோம்.
    குருவே சரணம்
    நன்றி

  13. வணக்கம் திரு சுந்தர் சார்,
    படித்தவுடன் கண்ணீர வந்துவிட்டது. குரு ராயரின் பாதமே சரணம். நீங்கள் ஒரு தடவை நங்கநல்லூர் ப்ரந்தாவனதுகு வருகை புரிந்து அவரை தரசித்து உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள் .

  14. அற்புதமான பதிவு மகான்கள் வாழும் தெய்வங்ககள் …..

  15. குருவின் பாதகமலங்களை தரிசித்த நாம் எல்லோரும் பாக்கியசாலிகள். நன்கு விசாரித்து ஆதாரங்களுடன் நம் தளத்தில் இதை வெளியிட்ட சுந்தருக்கு மனமார்ந்த நன்றி. பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும் அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

  16. என்ன தவம் செய்தோமோ இந்த பதிவை படிக்க.
    ராயர் அவர்களின் தரிசனம் கண்டு பரவசம் அடைந்தோம்.புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த அற்புதமான காட்சியை பார்க்க இயலும். அந்த வகையில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

    “நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்துவைப்பான். ஆனால், ராயரோ நம்மை நோக்கி ஓடிவருவார் என்பதே உண்மை. ” உண்மையிலேயே அந்த பாத தரிசனம் ஓடி வருவதை போல்தான் உள்ளது. யான் பெற்ற இன்பம் எல்லோரும் பெருக என்று இந்த படைப்பை engakukku வழங்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  17. ராகவேந்திரரின் விருப்பத்தின் பேரில் தான் திரு.ரவிசங்கர் அவர்களின் மொபைலில் அவரது பாதங்கள் பதிந்தன. காரணம், அவர் மூலம் நம் எல்லோரும் பாத தரிசனம் பெறவேண்டும் என்பது அவர் விருப்பம் போலும்.

    தாமரை அவர்கள் கூறியது போலவே மகா பெரியவாவின் திருப்பாதங்களை பார்ப்பது போலவே உள்ளது..!

    மகான்களுக்கிடையே ஏது வேறுபாடு?

    உங்கள் ஒப்பற்ற சேவைக்கு உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நாம!

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  18. ஆசிரியர் சுந்தர் அவர்கட்கு , நன்றி.விரைவில் ராயரை தரிசிக்கக் கூடிய வாய்ப்பு உங்களை தேடி வரும் என்று நீங்கள் சொன்னது நடக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுதலும் கனவும். அந்த நாள் என் மகிழ்ச்சியை நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.

  19. ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனம் கண்டு கண்கள் பெருகிவிட்டன .. குருவருள் கிடைக்க செய்த தங்களுக்கு நன்றிகள் பல…. குருவே துணை ..குருவே சரணம்…

  20. இக்கலியுகத்தில் நான் 700 வருடங்கள் இருந்து என்னை நம்பும் பக்தருகளுக்கு அணுக்ரம் பண்ணுவேன் என்று சொல்லியது உண்மை ஆகி உள்ளது. அழுத்தமான பக்தி ஒன்றே ஆண்டவனை சாரும். ஸ்ரீ குருவே சரணம்.

    வி விஸ்வநாதன்

  21. nanum en kudumbathinarum pathaivai padithu ragaventhar
    arul engalukkm kidaithu vittathu.
    nandri.
    nandri.
    nandri.
    thanks for amezing stills.
    manohar.

  22. காண கண் கோடி வேண்டும். மிக்கவும் மகிழ்ச்சி. நன்றி சுந்தர்.

    j r

Leave a Reply to V Viswanathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *