Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

print
‘சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்’ என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும்.

சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம்.

 

“மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன…?” என்று நீங்கள்  கேட்கலாம்.

குழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில் சூரசம்ஹாரம் செய்துவிட்டான். அசுரர்களை அழிக்க அவன் மிகவும் பிரயத்தனப்படவில்லை. சுலபமாகவே அது  நிறைவேறியது.

சிக்கலில் வியர்வை அரும்புவதன் ரகசியம் இது தான். மனிதர்கள் தங்கள் முகத்தில் வழியும் வியர்வையை எப்படி அனாயசமாக துடைத்துக்கொள்கிறார்களோ, அதே போன்று அசுரர் கூட்டத்தையும் குழந்தை வேலன் அனாயசமாக துடைத்தெறிந்தான்.

சூரபன்மன் சாதாரண அசுரன் அல்ல. அவனது வலிமையையும் கொடுங்கோன்மையையும் கந்தபுராணத்தை முழுமையாக படித்தால் தெரிந்துகொள்வீர்கள்.

“என் அடியவர்கள் தீய சக்திகளை கண்டு ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை. அத்தீய சக்திகளை அழித்தல் என்பது எமக்கு வியர்வையை துடைத்தெறிதல் போல, மிக மிக எளிதான செயலே” என்று கூறுகிறான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். இதே போன்று திருச்செந்தூர் முருகனுக்கும் வியர்வை அரும்புவது உண்டு.

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது.

சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல்  திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை  கண்டார்.

இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.

அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.

அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று  கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.

வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்… அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால்  துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும்.

முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.

உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார்.

அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.

முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803’ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803’ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.

=================================================================

நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்

ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி
ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம்
ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே
ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்

– பிரம்மதேவன் அருளிய சுப்ரமணிய கவசம்

பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமணியரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமணியரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமணியரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமணியரே நமஸ்காரம்.

ஏதேனும் முக்கிய அலுவலாக செல்லும்போது,  நினைத்த காரியம் எவ்வித தடையுமின்றி நிறைவேற இந்த ஸ்லோகத்தை பல முறை உச்சரிக்கவும்.

=================================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

=================================================================

Also check :

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

[END]

15 thoughts on “முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

  1. அண்ணா
    மிகவும் அழகான பதிவு.என் தங்க முருகனை பற்றி.
    நன்றி அண்ணா
    சுபா

  2. நல்லவைகளை கேட்கவும் நல்லவர்களிடம் நட்பு கொள்ளவும் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் எந்த பிற வியில் செய்த புண்ணியமோ கடந்த 3 நாட்களாக பாண்டு ரங்கனின் அருள் மழை மற்றும் செந்தூரன் முருகன் என்று மாறி மாறி அருள் மழையில் நனைந்து கொண்டு இருக்கிறோம் இத்தனை நாட்களாக எனக்கு இருக்கும் பிரச்சினைகளை நினைத்து கண்ணீர் விட்டேன் 3 நாட்களாக அவனினின் அருள் மழையில் நனைந்தும் அதை நினைத்து ஆனந்தக் கண்ணீரும் இதயத்தை பரவசப்படுத்துகிறது. நரசியின் பக்தியில் 1% இருந்தாலும் நாம் எதைப்பற்றியும் கவலை கொள்ளத்தேவை இல்லை ஹே பாண்டு ரங்கா பண்டரி நாதா (இரு பதிவையும் இன்றுதான் படித்தேன்) அழகன் முருகனின் தாள் பணிவோம்

  3. வணக்கம்……

    இறை மூர்த்திக்கு வியர்க்கும் என்ற தகவல் புதுமையாக உள்ளது. சுப்பிரமணிய கவசம் அளித்தமைக்கு நன்றிகள்……

    முருகன் அருள் எங்கும் நிறைக…….

  4. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

    சரவணபவ எனும் மந்திரம் மிக சக்தி வாய்ந்தது. ஓதுவோர்க்கு என்ன கிடைக்கும்?
    ஸ – லட்சுமி கடாக்ஷம் (செல்வம்)
    ர – ஸரஸ்வதி கடாக்ஷம் (கல்வி)
    வ – போகம் (இன்பம்)
    ண – சத்ரு ஜெயம் (வெற்றி)
    ப – ம்ருத்யு ஜெபம் (முக்தி)
    வ – நோயற்ற வாழ்வு

    தமிழ்க் கடவுள் என்பது முருகனையே! மொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்கு விழிகளோ பன்னிரண்டு. அருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு! முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள். முத்தமிழ் மொழியின் மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டு) அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளன. முருகன் கை வேலாயுதம் ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டு. பிற மொழி எதிலும் இல்லாத சிறப்பெழுத்து!

    முகத்திற்கு விழியழகு. மொழிக்கு தமிழ் அழகு. அழகு தமிழுக்கு கடவுளும் அழகன் முருகனே! மொழிக்கு கடவுள் பிற மொழி களில் உண்டா? இல்லையே! அதனால் தானே தமிழ் உயிர்மொழி!

  5. மிகவும் அருமையான பதிவு. சிக்கல் சிங்கார வேலனுக்கு வியர்க்கும் என்று கேள்வி பட்டிருக்கிறோம். திருசெந்தூர் முருகனுக்கும் வியர்க்கும் என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம். திருசெந்தூர் முருகன் போட்டோ மிகவும் அழகாக உள்ளது. ஆகஸ்டு 15 அன்று முருகனைப் பார்த்து தரிசனம் செய்ததே கண்ணுக்குள் நிற்கிறது. மீண்டும் தங்கள் தளம் மூலம் இனிய காலை வேளையில் அருமையான முருகன் தரிசனம். பரவசமாக உள்ளது.

    //என் அடியவர்கள் தீய சக்திகளை கண்டு ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை. அத்தீய சக்திகளை அழித்தல் என்பது எமக்கு வியர்வையை துடைத்தெறிதல் போல, மிக மிக எளிதான செயலே” என்று கூறுகிறான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். இதே போன்று திருச்செந்தூர் முருகனுக்கும் வியர்வை அரும்புவது உண்டு//.

    நம்முடைய தீய சக்திகளையும் அழித்து இறைவன் நம்மைக்க் காக்கட்டும்.

    காக்க காக்க கனகவேல் காக்க.

    லூசிங்க்டன் கதையை இப்பொழுதான் கேள்வி படுகிறோம்.

    காரிய சித்தி மந்திரம் நாம் தினமும் சொல்லி காரியத் தடைகளிலிருந்து விடுபடுவோம்.

    நன்றி
    உமா

  6. முருகனுக்கு வியர்க்கும் அதுவும் அரைத்த சந்தனம் சொதசொத என நனையும் அளவிற்கு என்று கேள்விபட்டுளேன் என்றாலும் உங்கள் எழுத்தின் மூலமாக படிக்கும் போது என்னும் நன்றாக உள்ளது.
    திரு. voltaire சொல்லியது போல சரவணபவ என்று சொல்லுவதால் கிடைக்கும் பலன் என்னற்றது.
    சரவண பவ.

  7. Dear Sundarji,

    Marupadiyum tiruchendur murugan, en appan kandhanai dharisithathil mikka magizhchi. Pudhiya thagavalai kodhuthamaiku mikka nandri.

    Kovilin arugunil koodiya kootangal thalaiya kadal alaiya
    Kuzhandhaigal periavar anaivarai izhuthidum kumaran avan kalai ah

    Thiruchendurin Kadalorathil senthilnathan arasangam!!

    Om Saravana Bhava

    Thanks & Regards
    V.Harish

  8. தயவு செய்து சுப்ர மணிய கவசத்தை தமிழில் தருவீர்களா? சொல்லுவதற்கு இலகுவாகவும் விளக்கமாகவும் இருக்கும்.

  9. முருகா சரணம்.

    சரவணபவ விளக்கம் மிகவும் அருமை.

    பிரம்மன் அருளிய சுப்ரமண்ய கவசம் விளக்கத்துடன் தந்தது அருமை.

    அண்மையில் திருச்செந்தூர் முருகனை தரிசித்தோம். முருகன் திருமேனியில் வியர்வை அரும்பும் விஷயம் தங்கள் பதிவை படித்தபின் தான் தெரிந்தது. மீண்டும் சென்று முருகனை தரிசிக்கும் ஆவலை அதிகரித்து விட்டது.

    நன்றி

    உஷா

  10. இருமுறை திருச்செந்தூர் சென்று வந்த பொழுதும், ஆலயத்தைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் எந்தத் தகவலும் அறிந்ததில்லை, இன்று அறிந்து கொண்டேன் நன்றி!.

  11. Sir,
    I came to know about this web site.
    Now i have entered in the web to know and learn about spiritual aspects.
    Thanks / Regards
    KARTHIKEYAN VELLORE

  12. நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்

    ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி
    ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம்
    ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே
    ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்

    – பிரம்மதேவன் அருளிய சுப்ரமணிய கவசம்

    இது கரிய சித்தி மந்திரமா அல்லது சுப்ரமணிய கவசம? முருகனை வடமொழியில் கும்பிடலாம? முருகன் தமிழ் கடவுள்,அனால் இந்த கரிய சித்தி மந்திரம் வாடா மொழியில் இருக்கிறது.

    1. முருகன் தமிழ் கடவுள் என்றாலும், வடக்கை சேர்ந்த பல ரிஷிகளும் யோகிகளும் கூட வழிபட்டுள்ளனர். பிரம்மன் வேதத்தை அடிப்படையாக வைத்து இயற்றிய இந்த சுப்ரமணிய கவசத்திற்கு தமிழில் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதால், அர்த்தம் புரிந்து உச்சரிக்கலாம் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் தமிழ் கடவுள் என்றால் தமிழில் தான் வழிபடவேண்டும் என்பதில்லையே… இறைவனுக்கு அனைத்து மொழிகளும் புரியுமே…

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *