Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

print
இதுவரை நாம் பார்த்த காணொளிகளில் மிகச் சிறந்த காணொளி இது என்று அடித்துக் கூறுவோம். இதை நம் முகநூலில் சமீபத்தில் பகிர்ந்திருந்தோம். தளத்தில் வெளியிட்டால் பலரும் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.காட்டெருமை கூட்டத்தை குறிவைத்து சிங்கம் ஒன்று பாய்கிறது. நடந்த  களேபரத்தில் அப்போது தான் பிறந்த காட்டெருமை குட்டி ஒன்று தாயிடம் இருந்து பிரிந்துவிடுகிறது. பசியோடு பாய வரும் சிங்கம், எழுந்து நிற்க கூட முடியாத குட்டியை பார்த்து இரக்கம் கொள்கிறது. தன் பசியை மறந்து எருமைக் குட்டியை அரவணைக்கிறது. வாஞ்சையுடன் நக்கி கொடுக்கிறது.

பின்னர் குட்டி தாயிடம் சேரட்டும் என்று விட்டுவிடுகிறது. பசியோடு தாயை தேடி அலையும் கன்றை மற்ற எருமைகள் ஏற்க மறுக்கின்றன. “நீ என் பிள்ளை அல்ல… எங்களிடம் வராதே!” என்று அதை துரத்துகின்றன. கன்றை வேட்டையாட வேண்டிய சிங்கம் அதை அரவணைப்பதும் அரவணைக்க வேண்டிய மற்ற எருமைகள் கன்றை விரட்டுவதும்… உள்ளத்தை உருக்கும் காட்சியாகும். ஒரு பக்கம் கன்று தாயை தேட, தாயோ கன்றை தேடி அலைகிறது. நெடிய தேடலுக்கு பின் இறுதியில் தன் தாயிடம் அந்த குட்டி சேரும் காட்சி… ஒரு கவிதை!

எல்லா சந்தர்ப்பங்களிலும் இது போல நடப்பதில்லை. இருப்பினும் கொடிய மிருகங்களிடமும் கூட சில சமயம் கருணை உள்ளத்தை பார்க்க முடிவது சாதாரண விஷயமா என்ன?

ஒரே பாய்ச்சலில் குட்டியை அடித்து சாப்பிடக்கூடிய சிங்கம், எருமைக் கன்றை கொல்லாதது ஏன்? இயற்கை இறைவனால் கட்டுப்படுத்தபடுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
(* அலுவலகத்தில் பார்க்க முடியாதவர்கள் வீட்டில் பின்னனி இசையுடன் பார்க்கவேண்டும்!)
Lioness saves Buffalo calf – Video

[END]

5 thoughts on “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

  1. வணக்கம்…..

    தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமல்ல…….பெண் சிங்கங்களிடமும் (எல்லா விலங்குகளிடமும்) உள்ளது என்று உணர்த்துகிறது இந்த நிகழ்ச்சி….

    நன்றிகள்….

  2. இறைவன் 5 அறிவு படைத்த விலங்குகளிடத்திலும் தாய்மை உணர்வை அளித்துள்ளார். தாய்மையை போற்றுவோம்

    நன்றி
    உமா

  3. வணக்கம் சுந்தர் சார்

    ஆறறிவு மனிதர்களை விட ஐந்து அறிவு ஜீவன்களை மேல் சார்

    GREAT SIR

    நன்றி

Leave a Reply to Thamarai Vengat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *