Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)

மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)

print
நாளை குருவாரத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் இடம் பெறப்போவதால் நாளை அளிக்கவேண்டிய இந்த பதிவை இன்றே அளிக்கிறோம்.

கா பெரியவாவின் அற்புதங்களும் மகிமைகளும் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கம் போல வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொன்றும் ஒரு பாடம். நமக்கு.

மகா பெரியவா அவர்களின் போதனைகளையும் அவர் அறிவுரைகளையும் ஒருவர் பின்பற்றி வாழ்ந்தாலே போதுமானது. வேறு எந்த நீதி நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் அவர்கள் படிக்கவேண்டியதில்லை. அவர் நடத்தும் நாடகங்களிலும், லீலைகளிலும் இல்லாத நீதியா இல்லை போதனையா?

உலகிலேயே சுலபமான காரியம் என்ன தெரியுமா? உபதேசிப்பது.

உலகிலேயே கஷ்டமான காரியம் என்ன தெரியுமா? அந்த உபதேசப்படி தான் வாழ்வது.

ஆனால், மகா பெரியவா தன் உபதேசப்படி வாழ்ந்து காட்டியவர்.

Mahaperiya_kumarakottam

ஆன்மீக வாதிகள் எல்லாம் இன்று எப்படி எப்படியெல்லாம் இருக்கிறார்கள். என்னென்ன சுகபோகங்கள் எல்லாம் அனுபவிக்கிறார்கள்… ஆனால் நம் பெரியவா? கட்டாந்தரையில் படுத்துக்கொள்வார். கோ-சாலையில் கொசுக்களுக்கு மத்தியில் அமர்ந்துகொள்வார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வார்.

இருபதாம் நூற்றாண்டில் இப்படி ஒரு ஆன்மீகவாதி வாழ்ந்தார் என்பதையே வருங்கால உலகம் நம்ப மறுக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை.

இந்த வார தினமலர் ஆன்மீக மலரில் வெளியாகியிருக்கும் மகா பெரியவா அவர்களின் மகிமையை பார்ப்போம்…

காஞ்சிப் பெரியவர் மூலமாக அன்னை மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்!

ஆடிச் செவ்வாய் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள். இன்று மூன்றாம் செவ்வாயை முன்னிட்டு, காஞ்சிப் பெரியவர் மூலமாக அன்னை மாரியம்மன் நிகழ்த்திய அற்புதத்தைக் கேளுங்கள்.

திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் ஒரு சமயம் , மகா பெரியவர் முகமிட்டிருந்தார். அவரைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமத் தலைவரும், மக்கள் சிலருமாக வந்திருந்தனர். கிராமத் தலைவர் பெரியவரிடம், ‘சுவாமி ! நாங்க ரொம்ப ஏழைங்க, எங்க கிராமத்திலே எங்களால் முடிந்த அளவு நன்கொடை வசூலித்து மாரியம்மன் கோவில் ஒண்ணு கட்டியிருக்கோம். ஆனால் கும்பாபிஷேகம் நடத்த பணம் தட்டுப்பாடா இருக்குது! தாங்கள் ஒரு குருக்களை நியமித்து கும்பாபிஷேகம் நடத்திக் கொடுக்கணும். அவருக்கு எங்களால் முடித்த அளவு தட்சணை கொடுத்துடுறோம்” என்றார்.

பெரியவரும், ஒரு சீடர் மூலமாக குருக்கள் ஒருவரை வரவழைத்து , அவர்கள் கிராமத்திற்குச் சென்று கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார். ”அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோ! அகிலாண்டேஸ்வரி (திருவானைக்காவல் அம்பிகை) உனக்கு நிறைய கொடுப்பா” என்று ஆசிர்வதித்தார்.

குருக்களும் கிராமத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை நடத்தினார். கிராமத் தலைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், அந்த குருக்களோ , அது தனக்குப் போதாது என்றும், தான் கொண்டு வந்த பொருட்களுக்கான செலவை விட , பணம் குறைவாக இருப்பதாகவும் வாதிட்டார்.

மகா பெரியவரிடம் தாங்கள் பேசிய விபரத்தை கிராமத் தலைவர் குருக்களிடம் சொல்லியும் அவர் கேட்கிற பாடாக இல்லை. வேறு வழியின்றி , தனது மனைவியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றித் தரச் சொல்லி , அடகு வைத்த கிராமத் தலைவர் அதில் கிடைத்த தொகையை குருக்களிடம் வழங்கினார்.

இது நடந்து சில நாட்களாக குருக்கள் வீட்டில் அவரது மனைவிக்கு இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லை. தன கணவரிடம் , ‘ எனக்கு சரியாகத் தூக்கம் வர மாட்டேங்குது, தூங்கினாலும் , என் கனவில் ஒரு அம்மன் சூலாயுதத்துடன் வந்து உக்கிரமாக காட்சி தருகிறாள்” என்றார்.

குருக்களுக்கு ஒன்றும் புரியவில்லை, இதற்குள் பெரியவர் காஞ்சிபுரம் திரும்பி விட்டதை அறிந்த அவர் , தன் மனைவியுடன் காஞ்சிக்கே சென்று அவரைத் தரிசித்தார்.

”நீ அந்த கிராமத்திற்குப் போ ” யார் சங்கிலியை அடகு வைத்துப் பணம் தந்தாரோ அவரிடமே சங்கிலியை மீட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்” . தன் பிரச்சினை பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று அதிசயித்த குருக்கள் , அந்தக் கிராமத்திற்கு விரைந்தார். கிராமத் தலைவர் அடகு வைத்திருந்த தங்கச் சங்கிலியை மீட்டு, அவரது மனைவியிடம் கொடுத்து மாரியம்மன் முன்னிலையிலேயே அணியச் செய்தார்.

அதன் பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வந்து பெரியவரிடம் ஆசி பெற்றார். பெரியவர் ஒரு தட்டில் வஸ்திரம் மற்றும் அந்த கிராமத்து மக்கள் எவ்வளவு சம்பாவணை தர வேண்டுமோ அந்தப் பணம் ஆகியவற்றை குருக்களிடம் கொடுத்தார். மகிழ்வுடன் திருச்சி திரும்பிய குருக்கள் தம்பதிகள், அந்த மாரியம்மன் கோவிலுக்குச் சென்று , அந்தத் தொகையை கோயிலுக்கே நன்கொடையாக வழங்கி விட்டனர்.

ஆடி மாதத்தில் ,அம்பாள் பற்றியும் , மகா பெரியவா நிகழ்த்திய அற்புதம் பற்றியும் படித்த நமது நெஞ்சங்கள் நெகிழ்ச்சியில் மிதப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!

(நன்றி : தினமலர் ஆன்மீகமலர் | தட்டச்சு : www.rightmantra.com)

==============================================================

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==============================================================

[END]

11 thoughts on “மாங்கல்யம் காத்திடுவார், மகிமைகள் பல புரிந்திடுவார் – குரு தரிசனம் (6)

  1. குருவின் மகிமையை நம் தளம் மூலமாக அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    காஞ்சி பெரியவர் மூலமாக அன்னை நடத்திய அற்புதங்களை படித்து மெய் சிலிர்த்தோம். அவர் எல்லாம் அறிந்த , உணர்ந்த சர்வேஸ்வரன்.

    குருவின் அற்புதங்களை நம் தளம் மூலமாக பதிவாக அளிக்கும் தங்களுக்கு குருவின் அருள் கடாக்ஷம் பரிபூரணமாக உண்டு.

    //தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
    பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
    மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
    முக்திக்கு மூலம் குருவின் கிருபை//

    நாம் பெரியவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி

    உமா

  2. ஆடி மாதத்தில் ,அம்பாள் பற்றியும் , மகா பெரியவா நிகழ்த்திய அற்புதம் பற்றியும் படித்த நமது நெஞ்சங்கள் நெகிழ்ச்சியில் மிதப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது?

  3. குருவடி போற்றி…..மாரியம்மன் திருவடி போற்றி …சிவாய சிவ

  4. குருவே சரணம்….. ஹர ஹர சங்கர ….. ஜெயா ஜெயா சங்கர …..

  5. இந்த வாரம் மிகவும் மனக்கஷ்டம் நிறைந்த வாரமாக அமைந்துவிட்டது.
    நம் பதிவுகளை படிக்கவே நேரம் இல்லை. நான்கு நாட்கள் விடுமுறை கழித்து நேற்று வியாக்ரபாதர் பதிவு படித்தேன்.
    மறுபடியும் இன்று காலை மன சஞ்சலம் அடையும் தகவல் கிடைத்ததால் கவலை பட்டுக்கொண்டு இருந்த பொழுது சுந்தருக்கு ஒரு போன் பண்ணிவிட்டு நம் வெப்சைட் ஓபன் பண்ணினேன்.
    என் கண்ணில் முதலில் பட்ட வார்த்தை மாங்கல்யம் காத்திடுவாள் மகிமை பல புரிந்திடுவாள்-குரு தரிசனம்.
    நம் மகா பெரியவா என் குறை தீர்ப்பார் என்ற நம்பிக்கையில் என் கண்ணில் நீர் வழிந்தது.
    நன்றி

    1. குருவருளும் திருவருளும் என்றும் நம்மோடு இருக்க, கவலை எதற்கு…

      – சுந்தர்

    2. எல்லாம் வல்ல அந்த ஈசன் எல்லாவற்றையம் பார்த்துக் கொள்வார். கவலை பட வேண்டாம். நாமும் திருசெந்தூர் மற்றும் மதுரை வரும் வாரம் செல்லும் பொழுது தங்களுக்காக பிரார்த்தனை செய்வோம்

      நன்றி
      உமா

Leave a Reply to parimalam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *