Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

print
‘அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை’ என்ற சொல்லுக்கு  உதாரணமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. காமராஜர் தமிழகத்தை ஆண்ட 1954 – 1963 காலகட்டத்தை தமிழகத்தின் பொற்காலம் எனலாம். இன்றைக்கு தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ள பல தொழிற்சாலைகள் மற்றும் பாசன திட்டங்கள் காமராஜரின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே.

10399445_429496210525568_854664718579512558_n

ஊழல்களும், அரசியலில் ஆடம்பரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், ஆணவமும் தலைவிரித்து ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார்!

தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்! இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் ‘பெருந்தலைவர்’ என்று அழைக்கப்பட்டார்.

காமராஜரின் சாதனைகளை அவரது பெருமைகளை ‘காமராஜர் – ஒரு சகாப்தம்’ உள்ளிட்ட முகநூல் பக்கங்கள் & இணையங்கள் மற்றும் பல நூல்களில் இருந்து தேடித் தொகுத்து இங்கு தந்திருக்கிறோம்.

உங்கள் குழந்தைகளிடம் இன்று காமராஜர் பற்றி எடுத்துக்கூறி, அவரது சாதனைகளை உரக்கச் சொல்லுங்கள். தன்னலம் கருதா தலைவனை குழந்தைகள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் ‘கர்மவீரர்’ என்று போற்றப்பட்டார்.

கர்ம வீரர் என்பதன் அர்த்தம் என்ன?

பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்த ஒரு சிறப்புப்பட்டம் கர்மவீரர் காமராஜர் என்பதாகும். கர்மமே கண்ணாகக் கொண்டவர் என்று இதற்கு அர்த்தம். கர்ம வீரர்கள் நடவடிக்கைகள் பற்றி குமரகுருபரர் பட்டியலில் தந்துள்ளார். மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார், செல்வி அருமையும் பாரார், அவமதிப்பும் நாடார் என்பது அது.

அடுக்கு மொழியும் எதுகை மோனையும் கலந்து பேசி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சியினர் தமிழ்நாட்டை இன்று சீரழித்துவிட்டனர்.

ஆனால் 9 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு நூற்றாண்டுச் சாதனைகளை காமராஜர் நிகழ்த்தினார். அது எவ்வாறு மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, அருமை பார்க்காது, அவமதிப்பையும் பொருட்படுத்தாது, எனவேதான் அவர் கருமவீரர் ஆனார். கருமமே கண்ணாக காமராஜர் உழைத்த காரணத்தால்தான் தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் கிராமங்களில் 75 சதவீதம் மின் வசதி பெற்றன.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குழந்தைகள் பள்ளிகூடத்துக்கு படிக்க வரவேண்டும். படித்தால் தான் அறியாமை நீங்கும் நாடு முன்னேறும் அதற்காக அவர்களின் வறுமையை அறிந்து இலவசமாக உண்ண உணவு கொடுத்தார். உடுக்க உடை கொடுத்தார். ஆனால் இப்போது மக்களை சினிமா, மதுவுக்கு அடிமையாக்கி அவர்களின் அறியாமையை பயன்படுத்தி டிவி, மிக்சி, மின் விசிறி என இலவசங்களை அள்ளிவீசி, ஆனால் அவற்றை இயக்க தேவையான மின்சாரத்தை கொடுக்காமால் ஏமாற்றி வருகின்றனனர்.

Kamarajar Tribute

காமராஜரின் ஆட்சி காலம்

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் முன்னிறுத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே
தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி, என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள், 6 உரத் தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்,
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை, கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள், சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.

இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

நாம் தினந்தோறும் சாப்பிடும் நெல், அரிசி இருகிறதே ஐ. ஆர்.20.ஐ.ஆர்.8 பொடி மிளகி, சம்பா நெல் , ரப்பர் சம்பா இது போன்ற பல நெல் ரகங்கள் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது ஜப்பான் , ஜெர்மன் , இன்னும் பல நாடுகளில் இருந்து விமானம் மூலம் 10 படி அளவுகள் மாதிரிக்கு கொண்டு வந்து ஆடுதுறை , தஞ்சாவூர் ஜில்லாவில் சர்க்கார் விதை பண்ணையில் பயிர் செய்து உற்பத்தி செய்து வளர்த்த நெல்கள் என்பது குறிப்பிட தக்கது.விவசாயத்தை பெருக்கி அரிசி பஞ்சத்தை போக்க காமராஜர் தலைமையிலான ஆட்சி பல நடவடிக்கைகள் எடுத்தது என்பதற்கு இதுவே சான்றாகும்.

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே…! காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன).

கற்றவர் மிகுந்திருப்பதே ஒரு மாநிலத்தின் உண்மையான செல்வம் எனக்கருதி திட்டமிட்டு ஒரு சமூகத்தைக் கூர்மைபடுத்தியவர் பெருந்தலைவர்.

ஒரு சமுதாயம் வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வு அவசியம், இதை உணர்ந்த காமராஜர் அவர்கள் அரசு கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல் பட நூலகத்துக்கு இடம், கட்டிடம் நூல்கள், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர் .இதன் காரணமாக நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழகத்தில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப் பட்டன .

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? எது நூறாண்டு பேசும் சாதனை?

அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்… இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..?   இல்லை “இலவச”த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

அன்றும் இன்றும்!

(அரசியல் தொடர்பான கருத்துக்களை இந்த தளத்தில் நாம் பதிவு செய்வதில்லை. இருப்பினும் ஒரு ஒப்பீட்டுக்காக இதை நாம் சொல்லியே தீரவேண்டும் என்று கருதுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் மூன்று விஷயங்கள் என்ன தெரியுமா? 1)டாஸ்மாக் 2)இலவசம் 3)சினிமா மோகம் இம்மூன்றும் தான். இவை என்று ஒழிகிறதோ அன்றைக்கு தான் நமக்கு உண்மையான சுதந்திரம். சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நாம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கே.கே.நகர் பகுதியில ஒரு கட்சியின் தேர்தல் வெற்றி நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பாம். எப்படி தெரியுமா? ‘கலாசலா கலசலா கலாசா கலசலா’ போன்ற குத்து பாடல்களுக்கு நடனம் ஆடிக்கொண்டு!! நான்கு ஆண்களும், சற்று இறுக்கமாக உடை உடுத்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் மேடையில் ஆடிக்கொண்டிருந்தனர். {தமிழகம் முழுக்க நன்றி அறிவிப்பு கூட்டம் இப்படித் தான் நடந்துவருகிறது!}. மக்கள் மின்வெட்டால் தவிக்க இங்கு மேடையும் அந்த வீதியும் விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது. மின்சாரம், மேடை அமைப்பு, நாற்காலிகள் என்று இந்த விழாவுக்கு பல லட்சங்கள் செலவாகியிருக்கும். இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு காவல் துறையினரின் பாதுகாப்பு வேறு! தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதில் தமிழனுக்கு நிகர் தமிழனே!

உங்களுக்காகத் தான் இதை சொல்கிறோம். உங்கள் தலைமுறைக்காகத் தான் இதை இங்கு பதிவு செய்கிறோம்! அறியாமையைவிட மிகப் பெரிய நோய் எதுவுமில்லை!!!)

ஆனால் காமராஜரின் ஆட்சியை ராமராஜ்ஜியம் என்றே கூறலாம்.

தலைமை ஏற்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பல. தன்னலமின்மை, பதவி ஆசையின்மை, தியாகம், நேர்மை, நாணயம், நம்பிக்கை, திட்டமிடல், தீர்மானித்தலை, வழி காட்டல், வழி நடத்தல் இவை போன்று பல பண்புகள் இருக்கவேண்டும். இவை எல்லாம் இருந்தாலும் தியாகம் மட்டுமே மிக முக்கியமான பண்பாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில் தியாக உணர்வு இருப்பரிடம்தான் விட்டுக் கொடுத்தல், தோலவியை ஏற்றுக் கொள்ளுதல், பதவியை விட பதவியளித்தவர்களை மதித்தல, பதவியைத் துறக்கும் துணிவு ஆகியவை இருக்கும்.

இந்திய அரசியலைப் பொறுத்தவரை ஏணிகளாக இருந்தவர்கள் இருவர்தான். பலர் பதவிகளை அடையத் தங்களை படிக்கட்டுக்ளாக்கிக் கொண்டவர்களுள் முதலாமவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி, இரண்டாமவர் நம் பெருந்தலைவர். காந்தியும், கருப்புக் காந்தியம் தங்களை ஏணிகளாக்கித் தலைவர் பதவியடைய விரும்புவோர் ஏறிச் செல்ல ஏதுவாயிருந்தனர்.

Kannadasan with Kamarajar

காமராஜருக்கும் இராமபிரானுக்கும் உள்ள ஒற்றுமை!

அரசராக இருப்பதற்கு ஆளும் தலைமை என்கின்ற தகுதி போதும். அரசர்களை உருவாக்குவதற்கோ பெருந்தலைமை எனும் தகுதி வேண்டும்.

அத்தகுதி பெற்றதால்தான் காமராஜர், பெருந்தலைவர் என்னும் பெருமை பெற்றார்.

காந்தி மகாத்மாவானார். அதுபோல் தலைவர் பெருந்தலைவர் ஆனார்.

தாமே பெரும் பதவிகளை அடைய வேண்டுமென்று துடிப்பவர்கள்தாமே அதிகம். அதிகார வெறிபிடித்து அலைபர்க்ள்தானே அதிகம். ஏறிய நாற்காலியை விட்டு இறங்க மறுப்பவர்கள்தானே அதிகம். இறங்கினாலும் மறுபடியும் ஏறத் துடிப்பதுதானே இப்போது காணப்படும் இயற்கை.

ஆனால் முதலமைச்சர் பதவியை உதறிவிட்டு இறங்கியதால்தான் பிரதமர் பதவி பின்னால் வந்தது. எந்த எதிர்ப்பும் இன்றித்தானே ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தபோதும் அதை ஏக முத்தார், காமராஜர் அதற்குக் காரணங்கள் உண்டு.

‘முதியோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்’ என்று முதல்வர் பதவியையே விட்டுவிட்டவர் பெருந்தலைவர்.

அதேநேரம், பிரதமர் பதவி தயாராக இருந்தபோது தானே ஏறி அமர்ந்து கொண்தால் அது கொள்கைக்கு விரோதமல்லவா? எனவே ஏணியாக மாறினார்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், உந்திரா காந்தியவரகளும் அரசரகளானார்கள் (பிரதமர்கள்) என்றால் அந்த அரசர்களை உருவாக்கிய அரசர் காமராஜர்தான்.

கம்பன் இராமனை ‘இரு கை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்து பேசுவான்.

வேழம் என்றால் யானை. யானையின் கை நீளமானது. பொதுவாகவே ஆள்பவர்ளுக்கு கை நீளம்தான். ஆள்பவரின் கைகள் நீளமாயிருக்கலாம். அவை நீளுமானால் ஆட்சிக் காலம் நீளாது. காமராஜரின் கைகளும் நீளமாயிருக்கலாம். முழங்கால்கள்வரை நீண்டு இருக்கும்.

கம்பன் இராமனை நீண்ட கரங்களை உடையவன் என்று மட்டும் கூறியிருக்கலாம். நமக்கும் புரியும்தான். அதன் பின் ஏன் யானையின் தும்பிக்கை போன்று நீளமான கை என்றான்?

இராமருக்கு பொருந்தியது அப்படியே பெருந்தலைவர் காமராஜருக்குக்கும் பொருந்துவமைக் காணுங்கள்.

யானையின் தும்பிக்கை பாகனை மேலே தூக்கிவிடப் பயன்படும்.

அதுபோல் இராமன் கிஷ்கிந்தையில் வாழ்ந்த சுக்கிரிவனுக்கு முடிசூட்டு மன்ன்னனாக்கி சிம்மாசனத்தின் மேல் அமர வைத்தான். அது மட்டுமன்றி இலங்கை முடியை வீடணனுக்கு சூட்டித் தம்பியைத் தலைவனாக்கினான்.

யானை தன் நீண்ட கரத்தால் பாகனைத் தூக்கித் தன் தலைமேல் அமர்த்துவதைப்போல், இராமனும் இருவருக்கு பலைமைப் தவி பந்து சிறப்பித்தான்.

எனவேதான் கம்பன், இராமனை ‘இருகை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்தான்.

ஆகவேதான் இரமனுக்கும் காமராஜருக்கும் பொருத்தமுண்டு என்பது.

இராமனும் பதவியைத் துறந்து வந்தான். காமராஜரும் பதவியைத் துறந்துவந்தார்.

இராமன் காலத்தின் சூழ்நிலையால் சுக்கிரிவனுக்கும், வீடணனுக்கும் முடிசூட்டி மன்னனாக்கினான். காமராஜரோ அரசியல் சூழ்நிலையால், பாரதத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக்கி நிலை நிறுத்திக் காட்டினார்.

இவ்வாறு அரசர்களை உருவாக்க வேண்டுமானால் அவரிடம் பேரரசர்க்கு உரிய தகுதி இருக்கிறதென்று அர்த்தம். அதனால்மான் தலைவர்களை உருவாக்கியவரை பெருந்தலைவர் என்றனர்.

எவ்வளவு பொருத்தம்!

பட்டங்கள் பலருக்கும் வந்து சேரும்; நின்று பொருந்தாது. ஆனால் காமராஜரைப் ‘பெருந்தலைவர்’ என்றது என்றென்றும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் அஸ்திவாரத்தோடு உருவாக வேண்டும் அத்தகையவர்களால்தான் பலரை உருவாக்க முடியும் என்னும் உயர்ந்த பாடத்தை பெருந்தலைவரிடமிருந்துதான் படிக்கவேண்டும்.

காமராஜரின் சாதனைத் துளிகள்!!

* காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

* காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

* காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.

* காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

* தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

* கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

* 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

* காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

* பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.

* தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

* காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

* காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

* சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

* தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது

* காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

* காமராஜர் அவர்கள் திருநெல்வேலி மக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்

* காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

* காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

* காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

* எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

* காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

* 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

* வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால் `கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.

* சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

* 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

* 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

* காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

* காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது..

* காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

* பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

* கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

காமராஜரின் சாதனை சமுத்திரத்தின் ஒரு சில துளிகளே இங்கு நீங்கள் கண்டது. மக்கள் தலைவனின் பெருமையை பேச ஒரு பதிவு போதுமா என்ன?

இந்த வையம் உள்ளவரை காமராஜரின் புகழ் நிலைத்திருக்கும்.

இப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற காமராஜரின் தங்கை வயிற்றுப் பிள்ளைகள் தற்போது படும்பாடு தெரியுமா?

காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளுக்கு இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். இதில் கடைசி மகன் மோகன். இவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வறுமை மற்றும் நோயில் வாடுவதாக தெரிவித்திருந்தார். மோகன் அடையார் புற்று நோய் மருத்துவமனையில்  பெற்றுவருகிறார். இவர் காமராஜரின் தங்கை மகன் என்று தெரிந்து, அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா இலவச சிகிச்சை அளித்துவருகிறார். தமிழ்நாட்டை ஆண்ட தலைவன், தமிழ்நாட்டை செதுக்கிய படிக்காத மேதையின் வாரிசுகள் படும் வேதனைகள், தமிழ்நாடே வருந்தகூடிய வெட்கித் தலைகுனியக்கூடிய செயலாகும். ஒரு சில நாடார் சங்கங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்து உதவியுள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.

தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
– காமராஜர் மறைந்தது பற்றி கண்ணதாசன்

(காமராஜரின் வாழ்வில் நடைபெற்ற நெகிழ்ச்சியான, சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் வேறொரு பதிவில்!)

=============================================================

Also check:

சென்ற ஆண்டு காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாம் அளித்த பதிவு…

=============================================================

[END]

15 thoughts on “காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

  1. A LEGEND IN TRUE SENSE!!GOD’s form on earth–True Yogi in every aspect!!
    TN was first in power generation then, NOW..???first in TASMAC sales–200 cr sales in Diwali and other festivals!!
    KAMARAJAR AYYA didn’t allow his amma to have a luxury of fan and water connection in his house!!TODAY??? FAMILY developed through POLITICS, thousands of dresses ,shoes etc!!Utilizing people’s poverty for their political ambition’s–people are happy to get food at low costs but they are UNAWARE of the fact that they are precious votes are getting misused!!

    GOD WILLING the next government WILL be a RETURN OF KAMARAJAR DAYS!!TIME WILL PROVE DIS!!

    Regards
    R.HariharaSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”.

  2. இன்றைய தமிழக மக்களுக்கு கர்மவீரர் காமராஜரைப்போல் ஒரு தங்க தலைவன் தேவை இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு அப்படிப்பட்ட தலைவர்களின் value தெரியாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. இன்றைய தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் பொழுதுபோக்கு வெட்டிபேச்சு பிரியாணி டாஸ்மாக் அவ்வளவுதான். அதனால்தான் இவர்களை ஆளும் தலைவர்களும் சுயநலத்தின் அடிப்படையில் ஆட்சி செய்கிறார்கள்.

    பெருந்தலைவர் காமராஜர்போல் ஒரு தலைவன் தமிழகத்தை ஆட்சி செய்ததை நினைத்து சந்தோஷப்படலாம், அவ்வளவுதான்.நிச்சயம் இப்படி ஒரு மக்கள் தலைவர் இனி இந்த ஜென்மத்தில் கிடையாது. இதை நான் அவநம்பிக்கையுடனோ வெறுப்பிலோ சொல்லவில்லை, நன்கு சிந்தித்து தெளிவாக சொல்கிறேன்.

    சுந்தர் என் கருத்து யார் மனதையாவது புண்படுத்தும் விதத்தில் இருந்தால் இதை வெளியிடவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

    அற்புதமான பதிவுக்கு நன்றிகள் கோடி சுந்தர்.

  3. தனியே எனக்கோர் இடம் வேண்டும்
    தலை சாயும் வரை நான் அழ வேண்டும்.
    வானகம் போய்வர வழி வேண்டும்
    எங்கள் மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
    தாயே எனக்கொரு வரம் வேண்டும்
    என் தலைவனை மீண்டும் தர வேண்டும்.
    தமிழே எனக்கொரு மொழி வேண்டும்
    அவன் தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
    இருப்பேன் பலநாள் என்றானே
    எம்மை ஏய்த்தது போல் இன்று சென்றானே
    அவன் சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே
    அந்தத் தேவன் அருகினில் அழைத்தானோ?
    பறக்கும் பறவைக் கூட்டங்களே
    எங்கள் பாரத வீரனைக் காண்பீரோ
    இங்கு துடிக்குங் கோடி உள்ளங்களை
    அந்தத் தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!

  4. படிக்காத தலைவர் ஆனாலும் அனைவரையும் படிக்க வைத்த தலைவர்…. தனக்கென பணம் சேர்க்காத தன்மானம் மிக்க தலைவர்! முதல்வராக இருந்த போதும் ஆடம்பரங்களை விரும்பாதவர்!
    காங்கிரஸ் கட்சியில் கடைசியாக இருந்த நல்ல மனிதர்!!!

  5. சுந்தர் சார்
    அருமையான பதிவு. இன்றைய அரசியல்வதிகள்க்கு ஒரு பாடம். மேலும் ஒன்று தெரியபடுத்த விரும்புகிறேன். பெருந்தலைவர் இறந்த பிறகு அவரிடம் இருந்தது ஒரு சில கதர் சட்டைகளும் சொற்ப பணமும். ஆனால் இன்றைய அரசியல் வாதிகளும் ஆவர்களின் வாரிசுகளின் சொத்து எத்தனை லட்ச்ச் கோடிகள் …………… இருப்பினும் நம் மக்கள் அவர்கைளை கொண்டாடுகிறார்கள். இலவசம் என்ற பெயரில் ஓடுகிறார்கள். தமிழ் மக்கள் என்று திருந்துவார்கள்……..

    R . சந்திரன்
    கட்சிரோல்லி (மகாராஷ்டிரா)

    1. நன்றி நண்பரே. பெருந்தலைவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதியே மேலும் பல விஷயங்களை நாம் சேர்க்கவில்லை.

      பெருந்தலைவரைப் பற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை வாசகர்கள் இங்கு பகிர்ந்துகொள்ளலாமே…

      – சுந்தர்

  6. காமராஜர் பிறந்த நாளில் இவ்வளவு பெரிய பதிவை கொடுத்து அவரை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. இந்த பதிவு தாங்கள் மிக பெரிய தேடுதலுக்கு பின் கிடைத்த பதிவு.

    நாங்கள் கர்மவீரரை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்.

    ராமரையும் காமராஜரையும் ஒப்பிட்டது மிகவும் நன்றாக உள்ளது

    நன்றி
    உமா

  7. நாம் அனைவரும் இப்போ இருக்கும் அரசு அதகரிகளையும் , அரசியில்வதிகளையும் வசை படுகிறோம் ஆனால் நாம் என்ன செய்கிறோம் , செய்துகொண்டிர்கிறோம் ஒன்றும் இல்லை …..நம்மில் எத்தனை பேர் காமரஜர் அய்யா வோட கொள்கையை கடைபிடிகோரம் ஒருவரோ இர்வரோ இல்ல 10% பேர் அவளவுதான் இந்த நாட்டில் …. அவர் வாழந்த வாழ்கை போல் நாமும் சிறது அளவாவது நாமும் நாம் வாழ்கையில் கடைபிடிக்வேண்டும் அப்போது தான் நாம் அவர்க்கு செய்யும் சிறய மரியாதை ….

    வாழ்க தமிழ் வளர்க காமராஜ் புகழ் ….

  8. காமராஜர் ஒரு தீர்கதரிசி பின் வரும் அரசியல் பிச்சைக்காரர்கள் (தலைவர்னு சொல்லறதுக்கு கூட எந்த ஒரு கட்சியிலும் யாரும் இல்லை) நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள் என்று முன்னரே அறிந்ததுனாலதான் தமிழகத்துக்கு 100 வருசத்துக்கு தேவையான அனைத்தையும் அவர் காலத்திலேயே செய்துவிட்டார்.

  9. காமராஜர் பிறந்தநாளில் நல்லதொரு பதிவு.
    அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    இன்னும் எழுதி கொண்டே போகலாம் என்று நீங்கள் சொல்வதை போல நாங்கள் படித்து கொண்டே இருக்க ஆவலாய் இருக்கிறோம்.
    கிரிதரன் சந்திரன் பாபா ராம் எல்லோரும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
    பெருந்தலைவர் மறைவு பற்றி கண்ணதாசன் அவர்களை கவிதை நெகிழ வைக்கிறது.
    நன்றி

  10. காமராஜரைப் போல் ஒரு அரசியல் துறவி இன்று நமக்கு தேவைப்படுகிறார். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறி ஆக்குபவர்களும், சினிமா மோகமும் நம் மக்களை சிந்திக்க விடாமல் ஆட்டிப் படைக்கிறது. சினிமா நடிகர்களின் பிறந்த நாளைக் கொண்டாட இங்கு பெருங்கூட்டம் இருக்கிறது. ஆனால் நாம் கொண்டாட வேண்டியது இவரைப் போன்ற இன்னும் ஏராளமான பெருந்தலைவர்களை…என்று மாறும் இந்த நிலை?….”நெஞ்சு பொறுக்குதில்லையே ……………”

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  11. மிக நன்றான பதிவு.
    மறைந்து போன விலங்குகளை அருங்காட்சியகத்தில் நாம் பார்ப்பது போல, நல்ல தலைவர்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது.
    தற்போதைய அரசியல் வாதிகளின் கையில் சிக்கி சீரழிந்து கிடக்கும் நமது பாரதம் எப்போது மீண்டும் சுபிட்சம் ஆகுமோ?
    நமது ஆதங்கம் எப்போது தணியுமோ?
    தன்னலமில்லாத தலைவரைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.
    இப்படியும் தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது வியக்க வைக்கிறது.
    நம் நாட்டை சுரண்டி, நமது பணத்தை திருடி, swiss bank ல் பதுக்கும் அரசியல்வாதிகள் , நமக்கே அதை இலவசம் என்று நமக்கே பிச்சை போட்டு கொண்டிருகிறார்கள்.
    அதையும் நாம் வாங்கிகொண்டிருக்கிறோம்.
    நாம் எப்போது மாறுவோம்?
    நமது சமுதாயம் எப்போது திருந்தும்?

  12. சார்.. காமராஜர் பற்றி எனக்கு தெரிந்த ஒரு விஷயம். ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் ஒருமுறை முதல்வர் பதவிக்கு நான் வரலாம். ஆனால், காமராஜர் என்னைப் போல ஐ.ஏ.எஸ். ஆபீசராக முடியுமா? என்று கேட்டாராம். காமராஜர் காதுக்கு அது போனதும், அவர் சொல்றது நிஜம் தானே… என்னால ஐ.ஏ.எஸ். ஆகமுடியாது. அவர் நினைச்சா என் போஸ்டுக்கு வந்துடலாம் என்றாராம்.
    selvi

  13. சிறப்பான பதிவு!………படிக்காத மேதை தம்மைப் பற்றிக் காலந்தோறும் படித்துக்கொண்டிருக்கும்படியான சாதனைகளை செய்துள்ளார். அவற்றை மீண்டும் நினைவுரத் தந்தமைக்கு நன்றிகள் பல..

  14. படிக்காத மேதை எமது பெருந்தலைவர். அவரது பெயரை சொல்லி பதவி ஆசை பிடித்தவர் அநேகம் இந்த நாட்டில் உள்ளனர்.

Leave a Reply to parimalam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *