Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > குருவின் பெருமையும் குருவின் திருவடி பெருமையும் – குரு பூர்ணிமா சிறப்பு பதிவு!

குருவின் பெருமையும் குருவின் திருவடி பெருமையும் – குரு பூர்ணிமா சிறப்பு பதிவு!

print
ன்று குரு பூர்ணிமா. குரு பூர்ணிமா என்பது ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி. இந்த நாள் அன்று சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.

இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் இந்த குரு பூர்ணிமா அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், வேதங்களுக்கு விளக்கங்கள் எழுதிய ஆதி சங்கரர், மத்வர், இராமானுசர், ஸ்ரீ ராகவேந்திரர், காஞ்சி மகன் என்று அன்போடு அழைக்கப்படும் மகா பெரியவா போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். பௌத்தர்களும் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

இந்த நன்னாளில் நிச்சயம் நம் தளத்தில் ஏதேனும் ஒரு பதிவை அளிக்கவேண்டும் என்று கருதி கீழ்கண்ட இந்த பதிவை அளிக்கிறோம். குரு பூர்ணிமா அன்று வெளியிட இதை விட பொருத்தமான பதிவு இருக்க முடியாது.

குரு, சிஷ்ய உறவின் பெருமை!

குரு மற்றும் ஆச்சாரியர் என்பதற்கு இடையே நுட்பமான வேறுபாடு உள்ளது. ஜகத் குரு, சற்குரு, ஞான குரு என்ற நிலைகள் உள்ளன.

ஆச்சாரியர் என்பவர் சீடர்களுக்கு எதை வழி நடத்தி செல்கிறாரோ, அதை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். வைணவத்தில் குரு சிஷ்ய உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குருகூரில் நம்மாழ்வார் பிறந்ததும் அது ஆழ்வார்திருநகரி என்ற முக்கியத்துவம் பெற்றது. பெருமாள் கோயில் இருந்தும், ஆழ்வார் முக்கியத்துவம் பெற்றுவிட்டார்.

ராமானுஜர் காவிரி ஆற்றைக் கடந்து சென்ற போது, பாதரட்சையை கழற்றி சீடரிடம் கொடுத்தார். மறுகரை வந்ததும் திரும்பிப் பார்த்த ராமானுஜர் அதிர்ச்சியடைந்தார். அவருடைய பாதரட்சையை சீடர் தான் சுமந்து வந்த பெருமாள் விக்ரக பெட்டியின் மீது வைத்திருந்தார். சீடரிடம் கேட்டபோது, உங்களுக்கு தான் பெருமாள் ஒசத்தி, எனக்கு நீங்கள் தான் ஒசத்தி என்றார். ஆச்சாரியர்களை பகவானை காட்டிலும் உயர்வாக சீடர்கள் வைத்திருந்தனர்.

16_01_2011_120_003-773148 copy

ராமானுஜரை விஷம் வைத்துக் கொல்ல பார்க்கின்றனர் என்ற தகவல் கிடைத்ததும், அவருடைய குரு திருகோஷ்டியூர் நம்பி அவரை தேடி வந்தார். குரு தன்னை பார்க்க வருவதை தெரிந்ததும் ராமானுஜர் அவரை வரவேற்கச் சென்றார். காவிரி ஆற்றங்கரையில் குருவை கண்டதும் சிறிது தூரத்தில் வரும்போதே ஆற்றங்கரை மணலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சுட்டெரிக்கும் மணலில் ராமானுஜர் விழுந்து கிடந்தார். குரு எழுத்திரு என்று சொல்லும் வரை சீடர் எழக்கூடாது என்பது வைணவ மரபு.

திருகோஷ்டியூர் நம்பி ஏதும் பேசாமல் நின்றிருந்தார். அங்கு வந்த ராமானுஜரின் சீடர், சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்று மணலில் படுத்திருந்த ராமானுஜரை தன் கைகளில் தூக்கியவாறு, திருக்கோஷ்டியூர் நம்பியிடம், பூமாலையை இப்படி நெருப்பில் இடலாமா எனக் கேட்டார்.

குரு மீது அக்கறையுள்ள உம்மைப் போன்ற சீடரை தேடித்தான் காத்திருந்தேன். ராமானுஜரை உம்மிடம் ஒப்படைக்கிறேன் என திருக்கோஷ்டியூர் நம்பி பதிலாக கூறினார்.

குருகுலத்தில் கிருஷ்ணரும், குசேலரும் படித்த காலத்தில் சுள்ளி சேகரிக்கச் சென்றபோது, மழையின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டதால் சீடர்களை தேடி சென்று அவர்களை குரு அழைத்து வந்தார். குரு சிஷ்ய உறவு என்பது பெருமை மிக்கது.

குருவை தேடி சென்று நமது பிரச்னைகளுக்கு நேரடியாக தீர்வு கண்டு வர வேண்டும் என்பது அவசியமில்லை. அவருடைய அனுகிரகம் கிடைத்தாலே நமது கஷ்டங்கள் தீர்ந்துவிடும். குரு பார்வை விஷேசமானது.

gita-132

குரு ஏன் அவசியம் ?

கோடிக்கணக்கான ஜீவராசிகள் இந்த உலகத்தில் வாழ்கின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்று. மனிதன் பாவமும் செய்கிறான். புண்ணியமும் செய்கிறான். பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி அடுத்தடுத்துப் பிறவி அனுபவங்கள் வந்து வாய்க்கின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மனித நிலையைக் கடந்து மேலும் முன்னேறி, பரம் பொருளோடு ஜக்கியமாகிவிட வேண்டும். அதற்குத் தக்கபடித் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தெய்வ நிலையை அடைய வேண்டும்.

முக்தி – வீடு பேறு தான் முடிவான லட்சியம்

தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ. அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி! அதுவே மோட்சம்! அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள்.

நாமோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என மனம் போன போக்கெல்லாம் வாழ்ந்து, பாவ புண்ணியங்களைச் செய்தபடிச் செத்துச் செத்துச் பிறந்து கொண்டே இருக்கிறோம். இப்படியே பிறவிச் சக்கரமும் சுழன்று கொண்டே வருகின்றன.

பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி உலக அனுபவங்கள்

பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம். பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டுமாம். அதனால் தான் இந்தப் பூமியைக் ’கரும பூமி’ என்கிறார்கள்.

ஏதோ ஒரு யுகத்தில் எப்படியாவது இந்த உயிர் மோட்சம் பெற்றே ஆக வேண்டும். அது வரை பிறவிகளும் தொடர்கதை! நமது பயணங்களும் தொடர்கதை. இவற்றையெல்லாம் தெளிந்து அறிந்து செயல்பட வைக்கத்தான். இந்த ஆறாவது அறிவுள்ள இந்த மனிதப் பிறவி.

Guru Maha Periyava

நாம் கடந்த பிறவிகளில் செய்த பாவங்களில் பலன்கள் நம்மைத் துன்புறுத்தினாலும் இந்தப் பிறவியிலாவது கரையேற வழி தேட
வேண்டும்.

இந்த நுட்பமான ஆன்மிக உண்மைகளையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கரையேற்ற குரு ஒருவர் தேவை. தெய்வத்தை நமக்குக் காட்டிக் கொடுப்பவர் குரு. நம்மைக் கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் சக்தி பெற்றவர் குரு. நாம் பரிசுத்தமான ஆன்மாக்களாக ஆனால் மட்டுமே மோட்சம் பெற முடியும் அப்படிப் பரிசுத்தமாகாத நம்மைச் நம்மைச் சுத்தப்படுத்துபவர் ஆன்மிக குரு.

அதனால் தான் குரு மூலமாக ஞானம் பெற்றுப் பரிசுத்தம் அடைந்து, அதன் பிறகு என்னிடம் வா! என்று ஆதிபராசக்தி ஆன்மிக உலகில் ஒரு சட்டம் போட்டு வைத்திருக்கிறாள். குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்று நம் அன்னை ஆதிபராசக்தியே அருள்வாக்கில் சொல்லிக் காட்டியிருக்கிறாள்.

கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பவர் குரு. தெய்வமே குருவாக நம்மிடம் வந்திருப்பது நம் அதிர்ஷ்டம்.

குருவை விட குருவின் திருவடிக்கே மதிப்பு அதிகம்.

நம் இஷ்ட தெய்வமே குருவடிவாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வரவேண்டும். குருவையும் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பவனுக்கு எளிதில் முக்தி கிடைக்காது. பல பிறவிகள் எடுத்து அலைய வேண்டியது தான். ஆன்மிக உலகில் உள்ள ரகசிய உண்மை இது

குருவின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டால் சகலமும் கிடைக்கும் காரணம் குருவின் திருவடிச் சிறப்பு அத்தகையது.

குருவடி சரணம்! திருவடி சரணம்!! என்கிறோம். குருவின் திருவடிகளே நம் இஷ்ட தெய்வத்தின் திருவடி.

Guruvin Thiruvadi

நம் கண்களுக்குப் புலப்படாத இறைவனின் திருவடிகளை நம்மால் பற்றிக் கொள்ள முடியாது. அவனே மானிடமாக ஆன்மிக குருவாகத் தன்னைஒளித்துக் கொண்டும், பக்தி மிக்கவர்க்கு பக்குவம் கொண்டவர்கட்கு தன்னை வெளிப்படுத்தி கொண்டும் நாடகமாடி வருகிறார்.

திருவடி பெருமை !

ஆதி சங்கரர் அம்மாவின் திருவடிகளை செளந்தர்யலகரியில் புகழ்ந்து போற்றுகிறார்.

“அம்மா! உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன.உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்? கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ! உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.

குருவடி என்பது அவரவர் இஷ்ட தெய்வத்தின் திருவடி! இது தான் சூட்சமம்! ரகசியம்! புரிந்து கொள்ளுங்கள்.

விடியலில் படுக்கையை விட்டு எழுகிற போதும்… அன்றாடக் கடமைகளை முடித்து இரவு உறங்கச் செல்லும் முன்பும் உங்கள் குருவின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துங்கள். மூலமந்திரமோ 108 போற்றியோ சொல்லும் போது மானசீகமாகத் திருவடிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

குருவை இறுகப் பற்றிக் கொள்வது இப்படித்தான்…

வேதங்களின் முடிவாக இருப்பது திருவடி

நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்?
நாலு மறைமுடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி!
– என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நால் வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார்.

ஆண்டவனையும், குருவையும் திருவடிகள் என்னும் பாதுகைகள் மூலம் வழிபடுவது ஒரு ஞான மரபு! இது அருவுருவ பூஜை!

குருகீதை சொல்வது

“தியானத்திற்கு மூலம் குருவின் “மூர்த்தி! பூஜைக்கு மூலம் குருவின் பாதம்”. மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம் [1-74]

குருவின் பாத பூஜை தீர்த்தம்

‘குருவின் பாத பூஜை தீர்த்தத்தைப் பருகி மிகுதியைத் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்’

“அஞ்ஞானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், காமத்தையும் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ஞானம் பெற வேண்டியும், வைராக்கியம் வர வேண்டியும் ஒருவன் பருக வேண்டும்” – என்றெல்லாம் குரு கீதை சொல்கின்றது.

குருவின் பெருமையையும் அவரின் திருவடி பெருமையையும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு ஒரு பதிவு போதுமா?

(தயாரிப்பில் உதவி : திரு.சுகிசிவம் அவர்கள் கோவை ஸ்ரீசாரதாம்பாள் கோயிலில் நிகழ்த்திய சொற்பொழிவு மற்றும் www.adhiparasakthi.co.uk)

[END]

9 thoughts on “குருவின் பெருமையும் குருவின் திருவடி பெருமையும் – குரு பூர்ணிமா சிறப்பு பதிவு!

  1. குருவடி சரணம் திருவடி சரணம் இதை எத்தனை முறை கூறினாலும் நம் பெரியவ பற்றி எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
    மிக நீண்ட பதிவாக இருந்தாலும் எல்லாமே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விபரங்கள்.
    குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் என்றும் குகுவின் திருவடி நமக்கு எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்றும்
    பல விசயங்களை எடுத்து கூறிய உங்களுக்கு என் நன்றிகள் பல.
    உங்களால் நாங்கள் பல விசயங்களை தெரிந்து கொண்டோம்.
    எங்கள் வாழ்க்கையையே rightmantra முன் rightmantra பின் என்று பார்க்க தூண்டுகோலாக இருந்தவர் நீங்கள்.
    உங்கள் மூலமாக மகா பெரியவா, சாய் பாபா , ராகவேந்திர் போன்ற பல குருவின் திருவடிகளை சரணம் பண்ணினோம்.
    இந்த மாதிரி செய்யவேண்டும் இப்படி செய்யகூடாது என்று சொல்லிகொடுத்த உங்களை எங்கள் ஆசான் என்று கூறிகொள்வதில் உங்கள் வாசகர்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
    மிகவும் நன்றி சார்.

    1. கடவுளும் , சாத்தானும்/ God vs Demon ……
      நல்லதும் கெட்டதும் செய்யக்கூடிய மனிதனுக்குள் நல்லதை செய்ய தூண்டும் கடவுள் மட்டும் இல்லை. கெட்டதை செய்யத் தூண்டும் சாத்தானும் உண்டு . கடவுள் படைத்த சாத்தானை கடவுளால் மட்டுமே அழிக்க முடியும்.அச்சாத்தானை அழிக்கும் ஒரே வழியானது தவம். அத்தவத்தை குருவின் வாயிலாக ப்ரம்மத்தோடு சரணடைந்து அச்சாத்தானை அழித்து பிறவாவரம் எய்தலாம்.இல்லையெனில் சாத்தான் உன் கடவுளை வென்று மீண்டும் மறு பிறவி எய்திவிடும்.)

      .      இறையருள் வாசி சித்தர்.
      ப்ரம்ம உபதேச மெய்ஞானசபை.
                    திருவண்ணாமலை

    2. மரியாதை மட்டும் போதும்.
      …………………………..
      தாய் தந்தை மற்றும் பெரியவரிடத்தில் அன்பு பாசம் காட்டவேண்டாம் . அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது மறியாதை மட்டும்தான். அதை கொடுங்கள் போதும். உங்களுக்காகவே வாழும் அவர்கள் நோய் நொடி இல்லாமல் , மன நிம்மதியோடு நீண்ட ஆயுலோடு வாழ்வார்கள்.(இல்லையெனில் பின்னாளில் வருத்தப்பட்டு எந்த வித பரிகாரமும் தேடமுடியாது.)…………இறையருள்

  2. குரு பூர்ணிமா அன்று குருவைப்பற்றிய பதிவை படித்து பரவசமானோம். குரு சிஷ்யனை பற்றிய உறவு அழகாக சித்தரிக்கபட்டுள்ளது.

    பகவான் ராமர் கிருஷ்ணர் முதலிய அவதாரங்கள் வாழ்கையில் வசிஷ்டர் , சாந்திபினி முதலியோரிடம் தன்னை அறிவதற்காக சரணடைந்தார்கள். குருவின் உபதேசத்தினால் பரமார்த்தம் அடையபடுவது என்றும் நம்பிக்கையும் பொறுமையும் அத்தகைய முன்னேற்றத்திற்கு தேவையான நற்பண்புகள் என்று சாய் சரிதத்தில் பாபாவே குறிபிட்டிருக்கிறார். 2வது அத்தியாயத்தில் குருவின் அவசியத்தை மிக அழகாக தெளிவு படுத்தி இருக்கிறார்.

    இந்த அருமையான நன்னாளில் அனைவரும் குரு சரித்திரம் படித்து குருவின் அன்புக்கு பாத்திரமாவோம்.

    மகா பெரியவா படம் கொள்ளை அழகு.

    இந்த அழகான பதிவை கொடுத்த தங்களுக்கு நன்றிகள் பல

    குருவருளும் திருவருளும் இருப்பதால் தான் இந்த மாதிரி பதிவு கொடுப்பதற்கு சாத்தியமாகிறது

    நம் தளம் ஆன்மிக கோவிலாக மாறிவருகிறது

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா

  3. குருபூர்ணிமா தினமாகிய இன்று சிறப்பான பதிவு
    குருவடி சரணம் திருவடி சரணம்
    குரு நம்மை காக்கட்டும்

  4. அருமையான பதிவு ….அப்பனுக்கு பாடம் சொன்ன சுவாமிமலை சுப்பையா முருகபெருமானின் திருவடி போற்றி..மதுரை திருகோயிலில் எல்லாம் வல்ல் சித்தராய் தனி சந்நிதியில் அருளும் சொக்கநாதர் திருத்தாள் போற்றி …சிவாய சிவ ….

  5. The purest relationship in this world is that between GURU & Shishya because it is UNCONDITIONAL one unlike others!!In all other relationship’s there is some motive for its existence..
    –All cant become GURU—We must choose someone who is QUALIFIED as GURU..!! For some GURU is already destined!!Be carefull as to whom we choose as GURU—because we are submitting our entire self to him!!
    –GURU’s love and guidance has no boundaries and irrespective of what we are and what we do, GURU will continue to save us from miseries!!
    –Nothing in the materialistic world can come close to the bliss you receive in presence of your GURU..
    GURU is someone who without any selfish motives, will want his disciples to grow bigger and better than him.
    GURU will not give us the answer to our problems but he will show us the way to tackle our problems!!
    GURU is ETERNAL and so is his affection and guidance!!
    –GURU comes only when the Shishya is ready—dis might take even years or ages!!

    Sharanam Gurudev!!Sharanam!!
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *