Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

print
காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் –  மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. (இனி ஒவ்வொரு குரு வாரமும் மகா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய மெய்சிலிர்க்கவைக்கும் மகிமைகள் பதிவிடப்படும்!)

கடந்த செவ்வாய் ஜூன் 17 அன்று வெளியான தினமலர் ஆன்மீக மலரில் கண்ட பரவச அனுபவம் இது. படித்தவுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி, குருவாரமான இன்று பதிவு செய்கிறோம்.

பூனையாலே வந்தது பூனையாலே போனது !

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.

“தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.

Maha Periyava 3

பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.

முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

(As told by : தங்கமணி சுவாமிநாதன் to Dinamalar | எழுத்துரு உதவி : periva.proboards.com)

[END]

15 thoughts on “உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

  1. சுந்தர்ஜி,

    கரும்பு தின்ன கூலியா வேண்டும்? அவர் மகிமைகளை கேட்க கேட்க பரவசமாக உள்ளது. அவர் நம் காலத்தில் இல்லாது போய் விட்டாரே என்று மனம் ஏங்குகின்றது.
    அவரிடம் சரண் அடைந்தவர்களை அவர் நிச்சயம் கை விட மாட்டார்.

    ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர.

    1. அவர் நம்முடன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்…

      1. ஆம் மகாபெரியவர் என்னும் நம்முடன்தான் வாழ்கிறார். நம் வேண்டுதலை அவரிடம் முறையிட்டால் போதும் அவர் கண்டிப்பாக தீர்த்து வைப்பார் . குருவே சரணம்

  2. குரு வாரத்தில் குருவை பற்றிய பதிவை படித்து மெய் சிலிர்த்தோம். குருவின் ஸ்பரிசத்தால் அந்த குழந்தை தக்ஷினாமூர்த்தி சன்னதியில் மீண்டும் மறு பிறவி எடுத்திருக்கிறது.

    வாரா வாரம் குருவின் மகிமையை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மகா பெரியவா தம் வாழ்வில் நடத்திய மகிமைகளை ரைட் மந்திரா மூலம் பதியவைக்கும் தங்களுக்கு, குருவின் அனுக்ரஹதால் மேலும் மேலும் உயர் நிலையை அடைய வாழ்த்துகிறோம்

    நன்றி

    உமா

  3. சுந்தர் சார்,
    உண்மையிலேயே மெய் சிலிர்க்கும் அனுபவம். அவரது பூத உடல் மறைந்தாலும் , சர்வ வியாபியாக நிற்று அனைவருக்கும் அருள் புரிவராக….

  4. சார் ரியல்லி அருமை. மஹா பெரியவ வின் மகிமையே மகிமை

  5. சிலிர்க்க வைத்த பதிவு!………………ஒவ்வொடுமுறை மகாபெரியவரைப் பற்றிப் படிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகும் . இந்த ஆணந்தத்தை வாரந்தோறும் தர இருக்கும் உங்களுக்கு நன்றிகள்!.

  6. குருஅருள் இல்லையேல் திரு அருள் இல்லை என்பதற்கு இந்த அற்புத நிகழ்வு ஒரு சான்று.

    நன்றி ஜி

    ப.சங்கரநாராயணன்

  7. வணக்கம் சுந்தர் சார்

    மிக அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.

    மகா பெரியவா மகிமையை என்னவென்று சொல்லுவது.

    ராஜாமணி

  8. சார்,
    குரு வாரத்தில் குருவின் மகிமையை பார்த்து கண்ணீருடன் கூடிய பரவசம். சொல்ல வார்த்தை இல்லை.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள். இந்தக் காலத்தில் அவர் இல்லையே என்ற கவலைதான். இருந்தாலும் அவர் பாதம் பற்றி வணங்குவோம்.

  9. இன்றும் அவர் நம்மோடு உள்ளார் என்று நினைத்து முழுமனதோடு பிராத்தனை செய்தல் நிச்சயம் பலன் உண்டு
    ஜய ஜய சங்கரர் ஹர ஹர சங்கர

    நன்றி

    ச.ஜெயந்தி

  10. குரு பார்த்தால் கோடி நன்மை..

    பூனை மீட்டிய வீணை இசையில்
    பூ ஒன்று மலர்ந்தது
    பூவுலகில் தான் பார்க்கும் முதல் தெய்வம்
    குருவாய் அமைய
    கருவிலே கடுந்தவம் செய்தானோ!!
    ஆஹா
    இதைவிட பேரின்பம் ஏதுமுண்டோ?
    குருவின் கருணைப் பார்வை
    குறை தீர்க்கும் மாமருந்தே !!!

Leave a Reply to தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *