Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு ? – MONDAY MORNING SPL 45

நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு ? – MONDAY MORNING SPL 45

print
வர் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். அந்த ஊரிலேயே கட்டுமான துறையில் பெயர் பெற்று விளங்குபவர். பல முக்கிய இடங்களை வாங்கி அதை பிளாட் கட்டி ப்ரோமோட் செய்து வந்தார். அவரிடம் கட்டுமான பொறியாளராக (Civil Engineer) ஒருவர் நீண்ட காலம் பணியாற்றி வந்தார். பொறியாளரின் நேர்த்திக்காகவும் திறமைக்காகவுமே செல்வந்தர் அவரை பணியில் வைத்திருந்தார். அந்தளவு வேலையில் கில்லாடி அவர். எப்பேர்ப்பட்ட வீட்டையும் குறுகிய காலத்தில் மிக சிறப்பாக கட்டிமுடித்துவிடுவார். ஒரு நாள் பொறியாளர் தான் பணியில் இருந்து ஒய்வு பெறவிரும்புவதாகவும் தன்னை விரைவில் விடுவிக்கும்படியும் தன் முதலாளியிடம் கேட்டுக்கொண்டார்.

Choice

திறமையும் நேர்மையும் மிகுந்த பணியாளர் தம்மைவிட்டு செல்வதை செல்வந்தர் விரும்பவில்லை என்றாலும், அவருக்கு நிச்சயம் ஒய்வு தேவை என்பதையும் உணர்ந்திருந்தார்.

அவர் வேலையைவிட்டு ஒய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தமக்குள்ள இடத்தில்  ஒரே ஒரு வீட்டை தமது விருப்பத்திற்காக கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டார்.

தன் முதலாளியை நொந்தபடி வேண்டா வெறுப்பாக வேலையை ஒப்புக்கொள்ளும் பொறியாளர் மிகவும் மட்டமான மூலப் பொருட்களை கொண்டு, ஏனோ தானோவென்று சும்மா ஒப்புக்கு ஒரு வீட்டை கட்டி முடித்தார்.

வீடு கட்டி முடிந்து அனைத்தும் தயாராக உள்ள நிலையில் வீட்டை பார்வையிட வந்தார் செல்வந்தர்.

வீட்டை சுற்றி பார்த்தவர், தனது பொறியாளரை அழைத்தார். வீட்டின் சாவிகளை அந்த பொறியாளரிடம் கொடுத்து, “இந்த வீட்டை நான் எனக்காக கேட்கலை. இந்தா இந்த வீடு உனக்கு தான். இத்தனை நாள் என்னிடம் விசுவாசமாக நீ வேலை செய்ததற்கு என்னோட பரிசு!” என்று கூறி சாவிகளை ஒப்படைத்துவிட்டு இவர் பதிலுக்கு கூட காத்திரமால் போய்விட்டார்.

பொறியாளர் ஒரு நிமிடம் திடுக்கிட்டார். வெட்கப்பட்டார். “இந்த வீடு நமக்காகத் தான் என்று தெரிந்திருந்தால் மிக மிக நேர்த்தியாக இதுவரை நான் கட்டியதில் பெஸ்ட் என்னும் அளவிற்கு கட்டியிருப்பேனே.. சே…வேண்டா வெறுப்பாக என் வீட்டை நானே கட்டிவிட்டேனே…” தன்னை நினைத்து நொந்துகொண்டார்.

வாழ்க்கையும் அதுப் போலத் தான். இது நம் வாழ்க்கை. நம் விருப்பப்படி இதை நேர்த்தியாக அமைத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. வேண்டா வெறுப்பாக வாழ்க்கையை கழிக்க நேர்ந்தால் அது நம் தவறு தான். மற்றவர்களுடையது அல்ல.

Choice 2

நேற்றைய நமது சிந்தனையும் செயலுமே இன்றைய நமது வாழ்க்கை.

இன்றைய நமது சிந்தனையும் செயலுமே நாளைய நமது வாழ்க்கை.

மொத்தத்தில் உன் வாழ்க்கை உன் கையில். அதை நீங்கள் எப்படி அமைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

நம் தவறுக்கு எவர் மீதும் பழிபோடவேண்டாம். இறைவன் மீதும் கோபப்படவேண்டாம்.

கிடைத்துள்ள ஒவ்வொரு நொடியும் ஒரு செங்கல் போல. அதை வீணாக்காமல் நம் விருப்பப்படியான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துகொள்வோம்.

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================

[END]

9 thoughts on “நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு ? – MONDAY MORNING SPL 45

  1. சுந்தர் சார் வணக்கம்

    தங்கள் பதிவு மிகவும் அருமை

    நன்றி

  2. Dear Sundar,
    Good Morning. The story is very nice. This srory has to be followd by eveyone. As usual monday spl super.
    Thanks and Regards,
    Narayanan.

  3. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    நமக்கு வரும் நல்லது, அல்லது எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு.
    யாரையும் நொந்து பிரயோஜனம் இல்லை.
    ” நம்மை போல பிறரையும் நினைக்க வேண்டும்”

  4. சுந்தர் சார்,
    நல்ல பதிவு. நல்ல விளக்கம்.

    நன்றியுடன்

  5. அருமை..உங்களின் கதை சொல்லும் பாணியும் சிறப்பு …
    சிவாய சிவ

  6. மிகவும் அருமையான பதிவு.

    //வாழ்க்கையும் அதுப் போலத் தான். இது நம் வாழ்க்கை. நம் விருப்பப்படி இதை நேர்த்தியாக அமைத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. வேண்டா வெறுப்பாக வாழ்க்கையை கழிக்க நேர்ந்தால் அது நம் தவறு தான். மற்றவர்களுடையது அல்ல.//

    நம் வாழ்கை நம் கையில்.

    நன்றி
    உமா

Leave a Reply to Narayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *