Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > “என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

print
மது தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஏப்ரல் 27  ஞாயிறு அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். சென்ற முறை திருநீர்மலையில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நம் தளம் சார்பாக 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நம் உழவாரப்பணி நடைபெற்றது. உழவாரப்பணி வெகு சிறப்பாய் நடைபெற்றது. நண்பர்கள் திரளாக வந்திருந்து கைங்கரியத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார்கள்.

DSC00914

முன்னதாக காலை சிற்றுண்டி, பொங்கல் மற்றும் கத்திரிக்காய் கொத்சு நமது சொந்த செலவில் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு சென்றிருந்தோம். அனைத்தையும் ஒரு பிடி பிடித்தபின்பு, பணி துவங்கியது.

நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.

DSC01676

முன்னதாக நீர்வண்ணப் பெருமாள் சன்னதியில்; விசேஷ அர்ச்சனை நடைபெற்றது. நமது தள வாசகர்கள் மற்றும் அவர்களது குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

DSC01668

இதுவரை நம் தளம் சார்பாக நடைபெற்ற அனைத்து உழவாரப்பணிகளிலும் தவறாமல் கலந்துகொள்பவர்களை ஒவ்வொரு முறையும் கௌரவித்து வருகிறோம்.

DSC01695

ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் நாம் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன்பு, பசுமாட்டுக்கு கொடுத்துவிட்டு தான் நாங்கள் சாப்பிடுவோம். இதற்க்காக பசு மாட்டை தேடி அலையோ அலை என்று அலைந்த கதையெல்லாம் உண்டு. ஆனால், கடந்த ஓரிரண்டு உழவாரப்பணிகளில் அதற்கு அவசியமே இன்றி பசுக்கள் நம்மை தேடி வந்து நமது கைங்கரியத்தை எளிதாக்குகின்றன.

திருநீர்மளையிலும் பசுக்கள் தேடி வந்தன. அவற்றுக்கு கொடுத்துவிட்டு தான் நாங்கள் சாப்பிட்டோம்.
DSC01685

இந்த முறை, நண்பர் மாரீஸ்கண்ணன்  அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இது வரை நம் தளம் சார்பாக நடைபெற்ற அனைத்து உழவாரப்பணிகளிலும் பங்கேற்றவர் இவர். கோவிலின் அர்ச்சகர் திரு.ராஜூ பட்டர் அவர்கள் மூலம் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நமது தளத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

DSC01690கோவிலில் நீண்டகாலம் கைங்கரியம் செய்துவரும் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ரங்கநாயகி. இவர் பணியில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். இவரது மகள் தான் பராமரிப்பு பணிகள் செய்து வருகிறார்.

நாம் இவரை கௌரவிக்க அழைத்த போது மலைக்கோவிலில் இருந்தார்.

“என்னம்மா ரிட்டயர் ஆகிட்ட பிறகு கூட கோவில்ல வந்து வேலை செய்றீங்க?” என்று நாம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்,சம்மட்டி அடி.

DSC01781
அரங்கன் சேவைக்கு தன்னை அற்பணித்துக் கொண்ட ரங்கநாயகி கௌரவிக்கப்படுகிறார்

 

DSC01784“ஐயா… எனக்கு என்னய்யா இருக்கு இனிமேலே… என் கடைசி காலம் பெருமாளுக்கு சேவை செய்வதில் கழியவேண்டும் என்றே இங்கே வந்து வேலை செய்கிறேன்!” என்றார்.

அரங்கன் மேல் ரங்கநாயகிக்கு இருந்த பற்றை கண்டு கண்கள் கலங்கியது. இதுவல்லவோ பக்தி. இதுவல்லவோ தொண்டு.

அவரது பணியின் மேன்மைகளையும் அவரைப் பற்றியும் எடுத்துக்கூறி, பலத்த கைதட்டல்களுக்கு இடையே அவர் கௌரவிக்கப்பட்டார்.

DSC01787

ரங்கநாயகியின் மகள் வீரம்மாள் புதிதாக நம் குழுவில் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் கௌரவிக்கப்படுகிறார். ஆலய பராமரிப்பில் வீரம்மாளின் பங்கு அளப்பரியது!

அவரது மகள் வீரம்மாளும் கௌரவிக்கப்பட்டார். இருவருக்கும் புடவை மற்றும் இனிப்புக்கள் இரண்டும் வழங்கப்பட்டது.

அடியார்க்கு செய்யும் சேவை சாட்சாத் அந்த அரங்கனுக்கே செய்யும் சேவையாகும்.

தொடர்ந்து துப்புரவு பணிகள் நடைபெற்றது.

மலைக்கோவிலுக்கு ஒரு குழு, கீழே ஒரு குழு என இரண்டு குழுக்களாக பிரிந்து பணி செய்தோம்.

DSC01717

மகளிர் குழுவினர் கோவிலுக்கு சொந்தமான பாத்திரங்கள் மற்றும் விளக்குகள், தூபக்கால், ஆகியவற்றை தேய்த்துகொடுத்தனர்.

மற்றொரு பிரிவினர் ஒட்டடை அடித்து, தரையை சுத்தம் செய்து பின்னர் அலம்பிவிட்டனர்.

DSC01696

DSC01724DSC01726DSC01732அடிவாரத்தில் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த ஆஞ்சநேயர் சிலை, துடைத்து, பின்னர் அலம்பிவிடப்பட்டது. கோவிலின் பிரத்யேக புகைப்பட போர்ட் மற்றும் இதர பலகைகள் தூசி போக துடைக்கப்பட்டது.

DSC01773

DSC01740

மேலே ஒட்டடை அடிப்பது, பெருக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. படிகளும் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது.

DSC01746

DSC01749DSC01754DSC01759திருநீர்மலை போன்ற மிகப் பெரிய ஆலயங்களில் நமது சேவையோ பணியோ ஒன்றுமேயில்லை. மிகப் பெரிய வித்தியாசத்தை நாம் ஏற்படுத்திவிட முடியாது. இருந்தாலும் அவன் ஆலயத்தில் பணி செய்ய அவன் திருவுள்ளம் இருந்தால் மட்டுமே முடியும்.

DSC01768

திருவுளம் கொண்ட அரங்கனுக்கு எங்கள் நன்றிகள். அவன் ஆலயத்தில் பணி செய்து எங்கள் பிறவியின் பயனை அடைந்தோம்.

கடினமான பணி பாத்திரம் தேய்த்த குழுவினருக்கு தான். கடும் வெயிலில்  தேக்க வேண்டியிருந்தது. அங்கு நிழல் இல்லை. இருப்பினும் அரங்கனுக்கு பணி செய்யும்போது, கடும் வெயிலும், குளிர் தென்றலல்லவா?

DSC01769

DSCN2216

DSCN2217கோவில் மடைப்பள்ளியில் எங்களுக்காக புளிசாதமும், தயிர் சாதமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணி முடித்த போது எப்படியும் 12.30 இருக்கும். இருந்த பசியில் நண்பர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். (நீங்க கேட்டா இல்லவே இல்லேம்பாங்க!). அனைத்தும் தேவாமிர்தமாக இருந்தது.

கோவில் மடப்பள்ளியின் உள்ளே போதிய வெளிச்சம் இன்றி பிரசாதம் தயார் செய்ய மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், இரண்டு ட்யூப் லைட் பிட்டிங்குகள் மற்றும் CFL பல்புகள் தேவை என்று மடப்பள்ளி பொறுப்பாளர்கள் கூற, அருகில் உள்ள கடைக்கு சென்று அவற்றை வாங்கி வந்து கொடுத்தோம்.

DSCN2220
கோவில் கழிவறை மற்றும் அதையொட்டிய பகுதிகள் சுத்தம் செய்யப்படுகிறது

மொத்தத்தில் அவன் ஆலயத்தில் பணி செய்து எங்கள் கர்மாவை கரைத்ததோடு புண்ணியமும் தேடிக்கொண்டோம். புண்ணியம் தேடுவது எங்கள் நோக்கமல்ல. அவனுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் இருந்தாலும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டல்லவா?

DSC01789
பணியில் பங்குகொண்டோருக்கு ‘சுந்தரகாண்டம்’ தரப்படுகிறது

DSC01791DSC01792DSC01793இறுதியில் பணிக்கு வந்திருன்ஹா அனைவருக்கும் இராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டம் வழங்கப்பட்டது. அனுமன் முன்பாக வைத்து அது தரப்பட்டதால் அனைவரும் பரவசத்தோடு பெற்றுக்கொண்டனர்.

DSC01797
நண்பர்கள் மதிய உணவை ஒரு பிடி பிடிக்கின்றனர் – கோவில் மடப்பள்ளியில் தயாரான தயிர் சாதம் மற்றும் புளி சாதம்

தனது மனைவி மற்றும் குழந்தையோடு கோவிலுக்கு வந்திருந்த ஒரு அன்பர், நமது பணிகளை பார்த்துவிட்டு நமக்கு நண்பராகிவிட்டார். அவருக்கும் சுந்தரகாண்டம் தரப்பட்டது. தளத்தை ரெகுலராக பார்ப்பதாக கூறியிருக்கிறார்.

DSCN2239

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!

==================================================================
Also check :

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

==================================================================

இது வரை நடைபெற்ற நம் உழவாரப்பணி தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=124

==================================================================

உழவாரப்பணி அறிவிப்பு : நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஞாயிறு ஏப்ரல் 27 அன்று, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். நேரம் காலை 7.00 – 12.00. காலை உணவும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கு பெற விரும்பும் அன்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நகரின் பல இடங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் வசதி உள்ளதால் நேரடியாகவே கோவிலுக்கு வந்துவிடலாம். நன்றி.

– சுந்தர் | www.rightmantra.com  | M : 9840169215  | E : simplesundar@gmail.com, rightmantra@gmail.com

==================================================================

[END]

7 thoughts on ““என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

  1. திருநீர்மலை உழவார பணியில் எங்களை பங்கு கொள்ள வாய்பளித்த அரங்கனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உழவார பணி முடிந்து தொடர்ந்து இரண்டு வாரம் திருநீர்மலை சென்றோம். மூன்றாவது வாரம் பங்குனி உத்திரம் அன்று இறைவனுக்கு கல்யாண உற்சவம் நடந்தது.கல்யாண உற்சவம் கண்டு களித்தோம்.
    இறைவனுக்கு தொண்டு செய்ததால் எங்களுக்கு அந்த வாரமே நல்லது நடந்தது
    நாம் எல்லோரும் இறை பணியில் நம்மை ஈடுபடுத்தி கொண்டு இறை அருள் பெறுவோம்

    நன்றி
    உமா .

  2. சார், தயவு செய்து ஜூன்-2014 மாத உழவர திருப்பணி எந்த கோவிலில் என்ற தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும். நான் உழவர திருப்பணில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். எனது செல் போன் எண் 9445310743.

    1. ஜூன் 8 – சேக்கிழார் மணிமண்டபம், குன்றத்தூர்

      ஜூன் 15 – பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் (நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் ஜூன் 19 முதல் துவங்குகிறது. அதை முன்னிட்டு அங்கு இறைவன் அருளால் ஜூன் 15 அன்று நமது உழவாரப்பணி நடைபெறும். இது அங்கு நமது இரண்டாவது உழவாரப்பணியாகும்.)

  3. I am interested in your Uzhavarapani work Also I a regular reader of your Right Mandra.com my telephone no is 09483465034 9444801414 Thanks a lot for your postings

    Narasimhan

  4. சுந்தர் சார்,

    நமது அடுத்த உழவார பனி எபொழுது மற்றும் எங்கே சார்,

    ஆவலுடன் மாலதி

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *