Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன?

கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன?

print
வேலைக்கு போவதும், பணத்தை சம்பாதித்து கொட்டுவது மட்டுமே ஆண்களின் வேலை அல்ல. மகிழ்ச்சியான ஒரு இனிய இல்லறத்திற்கு அதற்கு அப்பாலும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் எத்தனை ஆண்கள் அதை புரிந்துகொண்டு நடக்கிறார்கள் என்று தெரியாது.

ஒரு மனைவியானவள் கணவனிடம் உண்மையில் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் எளிமையானவை, இனிமையானவை, யதார்த்தமானவை! எல்லாவற்றுக்கும் மேல் சுலபமாக நாம் நிறைவேற்றக்கூடியவை.

நண்பர் கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்ததை இங்கு தருகிறோம். யார் இவற்றை பின்பற்றுகிறார்களோ இல்லையோ ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும் பின்பற்றி, தங்கள் இல்லறத்தை இனிமையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

Couple

இவற்றை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதன் கீழே உங்கள் கையெழுத்தை போட்டு, உங்கள் கண்ணில் படுவது போல ஒட்டிவைத்துக் கொள்ளுங்கள். இல்லறம் சிறக்க, நல்லறம் தழைக்க வாழ்த்துக்கள்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை’ என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

– நன்றி : கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன்

[END]

 

9 thoughts on “கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன?

  1. கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன என்பதை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் கூடவே மனைவியிடம் கணவன் எதிபார்ப்பது என்ன என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம் சார்..

    1)பக்கத்து வீட்டுடன் கம்பார் செய்ய கூடாது
    2)வாங்கும் சம்பளத்தை முழுவதும் கேட்க கூடாது
    3)நேரம் காலம் தெரியாமல் நகை நட்டுகளை கேட்க கூடாது
    4 )கூட கூட பேசக்கூடாது
    5 )மாமியார் மாமனாரை தன் தாழ் தகப்பன் போல என்ன வேண்டும்
    6.)கணவன் வீட்டார் எவர் வந்தாலும் அன்பாக பார்க்கவேண்டும்
    7.)எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும்
    8.)கணவன் மீது கோபம் என்றால் சாப்பாட்டில் உப்பை அள்ளி கொட்ட கூடாது
    9)குழந்தைகலிடம் கோபத்தை காட்ட கூடாது
    10)அடுத்தவர் முன் கணவனிடம் அன்பாக உரையாட வேண்டும்
    11)சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியவில்லை என்றால் என்ன நடந்ததது என்று அன்பாக விசாரிக்க வேண்டும் ..இது போல நிறைய விஷயங்கள் உள்ளன …

    1. உங்களை மாதிரி குடும்பஸ்தருங்க கிட்டே கேட்டு, அடுத்து அதைப் பத்தி தான் பதிவு போடலாம்னு இருந்தேன்.

      (சார்…மனசுல ரொம்ப நாளா அழுத்தி வெச்சிகிட்டு இருந்த விஷயம் போல… வெடிச்சி தள்ளிட்டீங்க..?)

      – சுந்தர்

      1. காலை வணக்கம் சுந்தர் சார் .

        அருமை. நான் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன்.

        1) எபோதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.

        2) எங்கே போனாலும் நானும் வருவேன்னு சொல்ல கூடாது.

        3) நண்பகளுடன் பொழுது கழிப்பதை தப்பு நு சொல்ல கூடாது.

        4) வெளியில் செல்லும் போது ஓர் கலர் டிரஸ் ல தான் போட வேண்டும் நு சொல்ல கூடாது.

        5) தான் சொல்லுவதே சரின்னு சொல்ல கூடாது.

        6) கணவனிடம் இருக்கும் குறைகளை எபோது சொல்லி கொண்டு இருக்க கூடாது.

        7) கணவனை நம்ப வேண்டும் .

        8) கணவனுக்கும் ஒரு மனசு உண்டுன்னு நினைக்க வேண்டும்
        .
        9) படுத்தி எடுக்க கூடாது.

        இது போல இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன … இபோதுக்கு இது போதும்.

        – ராஜா –

    2. நன்றாக சொல்லி இருக்கிறிர்கள்.

      சேருக.

      முதலில் கணவருடன் அன்பாக பழக வேண்டும்.
      முழுமையாக நண்பனாக பழக வேண்டும்
      மனம் விட்டு பொறுமையுடன் பழகுதல் வேண்டும்
      பேசுவதை கேட்ட பிறகே பதில் சொல்ல வேண்டும்

  2. யாருக்காக இந்த குளிர்ச்சியான தகவல் .

    அப்ப நீங்க ???

    ஆண்கள் பாவத்திற்கு ஆளாகவேண்டாம் …

    “இப்பவே ஆரமிச்சா…..????

    =மனோகர்

  3. ஏம்பா ஏம்பா இப்படி எங்களை ஒரு வழி பண்ணிடனும் என்று முடிவில இருக்கீங்களா .
    யாராவது உங்களிடம் பஞ்சாயத்து பண்ண சொன்னங்களா?
    ராஜா சார், சந்திரசேகர் சார் இருவரும் எப்படி புலம்புகிறார்கள்.
    ஆண்கள் பாவத்தை கொட்டிக்கவேண்டம்
    சரி. இது இப்போது எதற்கு. வரும்முன் காக்கும் யோசனையா?.

  4. 1. தற்போதெல்லாம், கணவனும், ஒரு மனைவியைப் போலவே, தன் தாய் தந்தையாரை பிரிந்து வந்து, வேலை செய்யும் ஊரில் குடித்தனம் செய்யும் போது, மனைவியும், கணவரின் பெற்றோர், உறவினரின் நலத்தில் சிறிய பங்காவது, மனத்தளவிலாவது கண்டு கொள்ளவேண்டும்.
    2. கணவரின் உறவினர்களை முழுக்க முழுக்க எப்படியாவது கத்தரித்துவிட வழிகளை தேடிக் கொண்டே இருக்ககூடாது.
    3. கணவரின் உறவினர் யாராவது, இளமையானவராக இருப்பின், அவர் மேல், ஏதாவது அபாண்டம் சொல்லி அந்த உறவினரை வெட்டி விட எண்ணுதல் கூடாது. மாமானார், கணவரின் சகோதரர் மேல் கூட அபாண்டம் சுமத்த தயங்காதவர்கள் பலர் உள்ளனர்.
    4. சதா சர்வ காலமும், கணவரின் உறவுகளை தாழ்வாகவே நடத்த
    எண்ணுதல் கூடாது.

Leave a Reply to venkat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *