Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > All in One > உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

print
ர்சனாலிட்டி அதாவது ஆளுமை என்பது ஒருவரது தோற்றம் மட்டும் அல்ல. பழகும் பண்பு, நாகரீகம், பொது அறிவு, இன்சொல், சுத்தம், பொறுமை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது தான் ஒருவரது ஆளுமை.

தோற்றத்தில் மட்டும் வசீகரத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் குப்பை மலையாய் இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருவரது வெளிதோற்றத்தை வைத்து மட்டும் வரும் மதிப்பீடானது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. Your personality can open any door. But only your character keeps it open என்று. எத்துனை அருமையான ஒரு வரி…

தோற்றத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதால் தான் பல காதல்கள் முறிந்துவிடுகிறது. பல திருமணங்கள் சில ஆண்டுகளிலேயே ஏன் சில மாதங்களிலேயே கோர்ட் படியேறிவிடுகின்றன.

வெறும் தோற்றத்தில் மட்டும் அழகை வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் தன்னம்பிக்கையும் தைரியமும் இன்றி காணப்படும் ஆண்கள் மண் குதிரைக்கு சமம். அதே போல தோற்றத்தில் மட்டும் அழகு இருந்து நற்குணங்கள் எவையும் இன்றி காணப்படும் பெண்கள் காகிதப் பூக்கள். எனவே நீங்கள் ஆணோ பெண்ணோ காகிதப்பூவையோ அல்லது மண் குதிரையையோ தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

தோற்றத்தில் நன்றாக காட்சியளிப்பவர்கள் தங்கள் ஆளுமையை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அது கெடுவதற்குரிய எந்த செயலையும் (கோபம், பொறாமை, வக்கிர புத்தி, புகை மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவைகளை அறவே தவிர்க்க வேண்டும்) செய்யவேக் கூடாது. தோற்றத்தில் தாங்கள் சுமாராக இருப்பதாக கருதுபவர்கள் அது பற்றிய தாழ்வு மனப்பான்மையை விடுத்து தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் பலரை அவர்கள் தங்கள் பக்கம் ஈர்க்கமுடியும்.

[pulledquote] [typography font=”Droid Sans” size=”15″ size_format=”px”]ஆரம்பத்தில் நாம் அலட்சியமாக கருதி ஒதுக்கும் சிலர் (பெரும்பாலும் தோற்றத்தில் சுமாராக இருப்பதால்) நாளடைவில் நமது அன்புக்கு மிகவும் பாத்திரமாகி விடுகிறார்களே எப்படி? ஒரு கட்டத்தில் அவர்களது புற அழகை பற்றிய சிந்தனையே நமக்கு தோன்றாமல் அவர்களது ஆளுமையை அதாவது அக அழகை மட்டுமே விரும்புகிற மனிதர்களாக மாறிவிடுகின்றோமே…. எப்படி?[/typography] [/pulledquote]

நமது அன்றாட வாழ்க்கையிலேயே பார்த்திருப்போம்…. அலுவலகத்திலோ அல்லது வேறு எங்காவதோ…. உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆரம்பத்தில் நாம் அலட்சியமாக கருதி ஒதுக்கும் சிலர் (பெரும்பாலும் தோற்றத்தில் சுமாராக இருப்பதால்) நாளடைவில் நமது அன்புக்கு மிகவும் பாத்திரமாகிவிடுகிறார்களே எப்படி? ஒரு கட்டத்தில் அவர்களது புற அழகை பற்றிய சிந்தனையே நமக்கு தோன்றாமல் அவர்களது ஆளுமையை அதாவது அக அழகை மட்டுமே விரும்புகிற மனிதர்களாக மாறிவிடுகின்றோமே…. எப்படி? சில சமயம் இத்தகைய ஈர்ப்பு காதலாக கூட மாறிவிடுவது உண்டு. இந்த காதல் பெரும்பாலும் உறுதியாக இருக்கும்.

So, ஒருவரைப் பற்றிய நமது மதிப்பீட்டில் அவரது ஆளுமை (Personality) என்பது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த ஆளுமை என்பது அவரது தோற்றத்தை மட்டும் வைத்து வருவதில்லை என்பதும் புரிகிறதல்லவா…?

சரி… இந்த ஆளுமையை எப்படி வளர்த்துக்கொள்வது….?

அதற்குரிய வழிமுறைகளை விளக்குவது தான் இந்த தொடர். கவனத்துடன் படித்து வாருங்கள். கூடுமானவரை இத்தொடரில் விளக்கப்படுவற்றை பின்பற்றி வாருங்கள். அப்புறம் என்ன… நீங்கள் தான் உங்கள் அலுவலகத்தில் & சுற்றுபுறத்தில் ஒரு நிஜ ஹீரோ…!

தொடரை துவக்கும் முன் சில அடிப்படை விஷயங்கள்…

தங்கள் பர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கூறிய சில அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கவேண்டும்.

Simple tips to improve your personality – 1

* பொது அறிவை நிச்சயம் வளர்த்துக் கொள்ளவேண்டும். நாட்டு நடப்பை தெரிந்துகொள்வது அவசியம். தினமும் ஏதாவது ஒரு செய்தித் தாளை அவசியம் படிக்கவேண்டும். ‘நான் பேப்பர்ல்லாம் படிக்கிறதே இல்லை…’ என்று சிலர் பெருமையாக கூறுவதை கேட்க்கும்போது எரிச்சலாக இருக்கும் எனக்கு. ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள்களை படிக்கலாம். அதே போல… நல்ல தொலைகாட்சி ஒன்றை தேர்ந்தெடுத்து தினமும் நியூசை பார்க்கவேண்டும்.

* தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காம இருக்கிறவங்க… எந்த காலத்துலயும் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவே முடியாது.

* உங்கள் கட்டுப்பாட்டை மீறிய விஷயங்களில் நெகட்டிவான சிந்தனைகளை தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் பாசிட்டிவான விஷயங்களில் உங்கள் மனதை செலுத்துங்கள்.

* உங்கள் எதிரியே ஆனாலும்… அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அதை கண்டு சிரிக்காதீர்கள். மாறாக அவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.

* உங்களது ஆற்றலை நேரத்தை அர்த்தமற்ற பேச்சுக்களிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு வீணடிக்கவேண்டாம். (குறிப்பாக ஃபேஸ்புக்கில்). பிறரை பற்றி வம்பளப்பதை அறவே நிறுத்தவேண்டும் .

* மெலிதான உடற்பயிற்சி அவசியம். ஜிம்முக்கு போகலாம்… அல்லது அருகிலுள்ள பூங்காவில் தினமும் நடைபயிற்சி செய்யலாம்.

* பொறாமைப்படுவது தேவையற்றது. நமக்குள்ளயே எல்லா ஆற்றலும் இருக்கின்றன.

* ஒருவர் தங்களை பற்றி சொல்லும்போது ஆர்வமுடன் கேளுங்கள். உலகம் அத்தகையோரை அதிகம் விரும்புகிறது.

* நீங்கள் பேசுவதை பற்றியே நினைக்காமல். பிறர் பேசுவதை இன்டரப்ட் செய்யாமல் காது கொடுத்து கேளுங்கள். ஏனெனில், உங்களுக்கு தெரிந்ததை தான் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் கேட்பதன் மூலம் புது விஷயங்களை அதிகம் தெரிந்துகொள்ளமுடியும்.

*  கடந்த கால தவறுகளை இப்போது சுமக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் கடந்த கால தவறுகளை தற்போது பெரிதுபடுத்தி பார்த்து நிகழ் கால மகிழ்ச்சியை கோட்டை விடவேண்டாம்.

* மற்றவர்களை வெறுப்பதன் மூலம் வாழ்க்கையை கழிக்காதீர்கள். இந்த வாழ்க்கை மிக மிக சிறிது.

* உங்களது மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. மற்றவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

* உங்களை தவிர உங்களை யாராலும் சிறுமைப் படுத்த முடியாது. PEOPLE WON’T BELIEVE WHAT YOU SAY. BUT THEY WILL BELIEVE WHAT YOU DO.

* இந்த உலகமும் வாழ்க்கையும் ஒரு பள்ளிக்கூடம் போல. அதில் அன்றாடம் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படும் பிரச்னைகள் நமது பாடத்திட்டங்கள் போல. அது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் நமது இறுதி வரைக்கும் உபயோகமாக இருக்கும்.

* அடிக்கடி வாய்விட்டு சிரியுங்கள். புன்னகை சிந்துங்கள். அது உங்கள் அழகை மேலும் அதிகப்படுத்தும். வளவளவென்ற பேச்சு சாதிப்பதைவிட ஒரு மெலிதான புன்னகை அதிகம் சாதித்துவிடும். உதாரணத்துக்கு இக்கட்டான ஒரு நேரத்துல ஐநூறு ரூபாய்க்கு சில்லறை வேணும்னு வெச்சிக்கோங்க. அதே கேட்கும்போது அதை சிரிச்சிக்கிட்டே ஒரு இன்முகத்தோட அவங்க கொடுத்துட்ட மாதிரியே நினைச்சி கேட்டுப்பாருங்க. பெரும்பாலும் உங்களுக்கு சில்லறை கிடைத்துவிடும். (அட்லீஸ்ட் வைத்துகொண்டே உங்களிடம் பொய் சொல்லமாட்டாங்க).

* உங்கள் கருத்தே சரி என்று நண்பர்களுடன் எப்போதும் விவாதம் செய்யாதீர்கள். YOU MAY WIN THE ARGUMENT. BUT WILL LOSE YOUR FRIEND.

* எப்பவும் பளிச்னு சுத்தமா இருக்கணும். யாரையாவது முக்கியமா சந்திக்கப் போறீங்களா.. முகத்தை நல்லா பளிச்னு வாஷ் பண்ணிட்டு பவுடர்ல்லாம் போட்டுக்கிட்டு ஜம்னு போங்க. அழுது வடிஞ்சிக்கிட்டு எண்ணெய் வடியுற முகத்தோட போனீங்கன்னா…. அங்கேயே நீங்க கிளீன் போல்டு.

* டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப முக்கியம். காஸ்ட்லியான ட்ரெஸ் தான் போடணும் என்பதில்லை. கந்தையானாலும் கசக்கி கட்டு என்னும் பழமொழியை போல, சுத்தமான ஆடைகள் அவசியம்.

* அலுவலகம் செல்லும் ஆண்கள்… அவர்கள் எந்த வேலை பார்ப்பதாக இருந்தாலும், தினமும் ஷூ போட்டுக்கிட்டு, நல்லா டக் இன் பண்ணிக்கிட்டு போங்க. மத்தவங்களோட ஜாலியான டீசிங் பத்தி கவலைப்படாதீங்க. உங்களை பார்க்கும் புது மனிதர்களுக்கு உங்கள் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயம் வருவதற்கு இது உதவும்.

இந்த பதிவுல இது போதும்னு நினைக்கிறேன்.

அடுத்த பதிவுல….

இந்த ஆளுமை வளர்சியில பல விஷயங்களை சுருக்கமாகவும் மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தை விரிவாகவும் பார்க்கலாம்…. ஓ.கே.?

……………. TO BE CONTINUED IN PART II

[END]

16 thoughts on “உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

  1. Verithanam!!! I was burning for this kind of episode…Ultimate.. The greatest personality i consider is Superstar RAJINIKANTH & Swami VIVEKANANDA. A lot to learn from them.. Please, Please provide even more valuables about Personaliy development, Sir.

    Thanks a ton!

  2. All are valid and very very useful points. Thanks a lot to start this article. Eagerly waiting for next episode.

  3. Wow!! Thank u so much for the most valuable article anna!! Each & evry point is must to follow… Actually i didn’t even follow 2% also.. Will try to adapt things one by one..

  4. This is really awesome. during the begnining of this site I didn’t expect that you are going to share powerful and value added information like this. Now only I understood that this site is not only for time pass to read but it is creating a great plant form to the readers those who are all lack in the different areas and I am sure this will bring a great a drastic change in the personal life. Keep rocking.

  5. Awesome article..
    நம்மை நாமே திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு..
    முயற்சிக்கிறேன்..

  6. ரொம்ப அருமையான கருத்துக்கள். இன்னும் வேணும் எங்களுக்கு. தயவுசெய்து பதிவு செய்யுங்கள். காத்திருக்கிறோம். இப்படிக்கு ஹரி தயாளன் பெங்களூர்.

  7. இந்த பதிவு மிகவும் உபயோகமானது . பயனுள்ள கருத்துக்கள். எழுதியவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஜி .வினோத் குமார்.. ஊட்டி

  8. என்னை நானே திருத்திக்கொண்டேன்.
    முதன்முதலில் படிக்கும் பொது ஐயோ எவ்வளவு விஷயங்கள் என்று நினைத்தேன்.
    ஆனால் நீங்கள் பட்டியல் போட்ட முத்துக்களில் பல முத்துக்கள் என்னை அறியாமலே என்னிடம் வந்துள்ளது.

  9. மிக்க நன்றி …. என்னை மாத்திக் கொள்ள நல்ல எழுத்துகள் ..
    மிக்க நன்றி

  10. ரொம்ப அழகா இருந்தது நான் இந்த நொடியில் இருந்து என்னை மாற்றி கொண்டேன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  11. மிகவும் பயனுடைய கருத்துக்கள் .சமுதாயத்தில் இது போன்று நல்ல நல்ல குறிப்புகளை பின்பற்றவேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.நல்ல ஆளுமை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் .இதனால் தேவையற்ற பிணக்குகள் மறையும் .சமுதாய சீர்கேடுகள் ஒழியும்.

    வாழ்க வளமுடன்

    கோ.தாமோதரன்.புதுச்சேரி .605110.

Leave a Reply to Chinnathurai.c Cancel reply

Your email address will not be published. Required fields are marked *