Home > சுய முன்னேற்றம் (Page 13)

லூயி ப்ரெய்லி – சோதனைகளை சாதனைகளாக்கிய உத்தமர்கள் (1)

நாம் இன்று அனுபவித்து வரும் ஒவ்வொரு சௌகரியமும் வசதியும் எத்தனையோ ஆத்மாக்களின் அயராத உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் நமக்கு கிடைத்தவை. தமக்கு ஏற்பட்ட  துன்பங்களுக்கும் தடைகளுக்கும் விதியின் மீது பழிபோடாது மதியை பயன்படுத்தி அந்த உத்தமர்கள் வாழ்ந்து காட்டியதாலேயே நாம் இன்று சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆய்வுக்கூடத்தில் எடிசன் தன்னை வருத்திக்கொண்டு இரவு பகலாக உழைக்கவில்லை எனில் நமக்கு மின்விசிறியேது? மின் விளக்கேது ? இன்று - ஜனவரி 4 - லூயி

Read More

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டு குணங்கள்

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய குணங்கள் : பொறுமை + சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் தான். நேர்மையாக நடந்துகொள்பவர்கள் தோல்வியடைவதும் தீயவர்கள் வெற்றி பெற்று சந்தோஷத்தில் திளைப்பதும் - இரண்டுமே தற்காலிகமான ஒன்று தான். ஆகவே தவறான வழிகளில் சென்று நம்மை நிரூபிப்பதை விட நேர்மையான வழிகளில் சென்று நமது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். "நேர்வழியில் தான் செல்கிறோமே..... ஆரம்பத்திலேயே நமது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாதா? ஏன் அதை இறைவன் தாமதப்படுத்துகின்றான்?" என்றால்....

Read More

பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்!

குறுக்கு வழிகளில் சென்று காரியங்களை சாதித்து கொள்பவர்கள் புத்திசாலிகள் என்றும் நேர்மையாக நடந்து காரியம் சாதித்துக்கொள்ள சிரமப்படுகிறவர்கள் ஏமாளிகள் என்றும் ஒரு அபிப்ராயம் பொதுவாக பலருக்கு இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல, குறுக்கு வழிகளில் சென்று அற்பமான காரியங்களை தான் சாதித்துக்கொள்ளமுடியுமே தவிர மகத்தான காரியங்கள் எதையும் நிச்சயம் சாதிக்க முடியாது. மேலும் கஷ்டப்படாமல் ஒரு காரியத்தை சாதிக்கும் மனோபாவம் என்பது நாளடைவில் நம்மை முடக்கிபோட்டுவிடும். நமது திறமையும் விடாமுயற்சியும் நமக்கே

Read More

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ். மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது.

Read More

நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?

இந்த தளத்தை ஆரம்பிக்கும் சமயம், எனது இன்ஸ்பிரேஷன்களில் ஒருவரான திரு.நாராயணசாமி (Shivatemples.com) அவர்களை சந்தித்து ஆசி பெற சென்றேன். அப்போது வாழ்த்திய அவர், "இந்த தளம் எல்லாவித தடைகளையும் தாண்டி, வெற்றிகரமாக அமைய சிவன் உங்களுக்கு அருள் புரிவார்" என்று கூறி வாழ்த்தினார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. "உங்கள் ஆசி கிடைத்ததில் சந்தோஷம் சார். ஆனால், நான் இப்போ தான் நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறேன். இங்கேயும் தடைகள் அது இது

Read More

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

'பர்சனாலிட்டி' அதாவது 'ஆளுமை' என்பது ஏதோ தோற்றத்தையும், நிறத்தையும், டிப் டாப் உடைகளையும், ஆங்கில FLUENCY யையும் வைத்து மட்டும் வருவதில்லை. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும். தோற்றம் உங்கள் உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தும். பர்சனாலிட்டி உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும். அது தான் விஷயம். எனவே பர்சனாலிட்டியில் சிறந்து

Read More

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நண்பர்களே, நமது தளத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா மிக மிக எளிமையாக அதே சமயம் நிறைவாக நடைபெற்றது. ஏழையின் கல்வி, அச்சமின்மை, மகிழ்ச்சி, மனதுக்கு நிறைவு, வளம், கொடை, வள்ளுவன் புகழ், தமிழன்னை, பசுமை என பாரதி கனவு கண்ட ஒவ்வொரு விஷயத்தின் முக்கிய அம்சங்களையும் எங்கள் சக்திக்கு இயன்றவரையில் நேற்றைய விழாவில் செயல்படுத்தினோம். பாரதி ஆன்மா நிச்சயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்! சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்து நிகழ்ச்சியை நல்லபடி நடத்திக்கொடுத்தனர். இப்போதைக்கு ஆவலுடன்

Read More

உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!

நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம். இன்று மாலை கே.கே.நகரில் நாம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியின் அருமை உணர்ந்து இந்த தளத்தின் வாசக நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் அவசியம் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து வரவேண்டும் என்றோ பிரின்ட்-அவுட் எடுக்கவேண்டும் என்றோ அவசியம் இல்லை. உங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மன நிறைவை தரக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த விழா

Read More

இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!!

நண்பர்களே, மகாகவி சுப்ரமணிய பாரதி அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு  நமது RIGHTMANTRA.COM தளம் சார்பாக நடைபெறவிருக்கும் பாரதி பிறந்தநாள் விழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம் தளம் சார்பாக நடைபெறும் முதல் பொது நிகழ்ச்சி இது. முதல் நிகழ்ச்சியே ஒரு கோவிலில் நடைபெறுவது நாம் செய்த பாக்கியம். ஆன்றோர்களும் சான்றோர்களும் வருகை தரும் இவ்விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரத்துடன்

Read More

சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு!

இணையத்தில் கண்ட சுவாரஸ்யமான தகவல் இது. நண்பர் ஒருவர் என்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நிலாவுல காலடி எடுத்து வெச்சதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ என்று ஆச்சரியப்படுவீர்கள். நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி

Read More

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

ஆளுமை வளர்ச்சியில் நம்முடைய அணுகுமுறைகளை மாற்றிகொள்வது, பிறரிடம் பழகும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளுமை வளர்ச்சியில் மிக மிக மிக முக்கிய பங்கை வகிக்கும் TIME MANAGEMENT பற்றி அதாவது நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது பற்றி பார்ப்போம். மேலே படிப்பதற்கு முன்னர் நான் ஒன்றை சொல்லிக்கொள்ளா ஆசைப்படுகிறேன். கடந்த காலங்களில் நான் நேரத்தை நிறைய வீணடித்திருக்கிறேன். அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பதிவு.

Read More

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1

பர்சனாலிட்டி அதாவது ஆளுமை என்பது ஒருவரது தோற்றம் மட்டும் அல்ல. பழகும் பண்பு, நாகரீகம், பொது அறிவு, இன்சொல், சுத்தம், பொறுமை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது தான் ஒருவரது ஆளுமை. தோற்றத்தில் மட்டும் வசீகரத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் குப்பை மலையாய் இருப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒருவரது வெளிதோற்றத்தை வைத்து மட்டும் வரும் மதிப்பீடானது நிரந்தரமாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு. Your personality can open any

Read More

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்! RightMantra Exclusive!!

"நீங்கள் எந்தளவு அதிர்ஷ்டசாலி?" என்ற தலைப்பில் சென்ற வாரம் பதிவு ஒன்றை அளித்திருந்தேன். அதில் கருத்து தெரிவித்த நண்பர் ஒருவர், "அதான் கவிஞர் ஒரே வார்த்தையில் சொல்லிட்டாரே... உனக்கும் கீழே உள்ளவர் கோடி"ன்னு என்று கூறியிருந்தார். அந்த பாடலைப் பற்றி ஒரு தனி பதிவே தருகிறேன் என்று நான் சொல்லியிருந்தேன். இதோ அந்தப் பதிவு! கவியரசு கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை தந்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம்

Read More

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

அதிர்ஷ்டத்துல உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ அதை விடுங்க. இந்த நிமிஷம் பெரிய அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா? அட நீங்க தாங்க! எப்படி தெரியுமா? மேலே படிங்க.. உங்களுக்கே புரியும். * உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். * வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.  (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!) * உன்னிடம்

Read More