Home > ஆன்மிகம் (Page 3)

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

எப்படி நடக்குமோ என்று எண்ணியபடி எதிர்நோக்கிய பாரதி விழா நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் அடுத்த நாள் திங்கட்கிழமை (நேற்று) காலை குன்றத்தூர் சென்று சுப்ரமணிய சுவாமிக்கு நன்றி தெரிவிக்க நினைத்தோம். முருகன் தயவு இல்லையென்றால் இந்த விழா நடந்தேயிருக்காது. உண்மையினும் உண்மை. விழா நடத்த திட்டமிட்ட நாள் முதல் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் பொருளாதார நெருக்கடிகள் போதாக்குறைக்கு இயற்கை சீற்றங்கள். இப்படிப் பட்ட சூழலில் சென்ற வாரம் ஒரு நாள் ஒரு உறக்கம்

Read More

விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!

அடுத்தடுத்து முக்கிய பதிவுகள் வரவிருக்கின்றன. அதற்கு முன் நீண்ட நாட்களாக அளிக்க நினைத்திருந்த இந்தப் பதிவை அளிக்கிறோம். விதி என்னும் ஊழ்வினை குறித்த சரியான பார்வை நம் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். ஏற்கனவே 'கடவுள் Vs கர்மா' என்னும் தொடரை நாம் அளித்தது நினைவிருக்கலாம். விதியை மாற்ற முடியும் என்று நம்பிக்கை உடையவர்களே அதை மாற்றவும் வல்லவர்களாகிறார்கள். முடியாது என்று நினைப்பவர்களால் நிச்சயம் முடியவே முடியாது. 'முடியும்' என்று நினைக்கும்போது தான் உங்கள் வாழ்க்கை தடைகளை

Read More

விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்!

நாளை (16/12/2016 வெள்ளி) மார்கழி மாதம் துவங்குகிறது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கூறியிருப்பதிலிருந்தே இம்மாதத்தின் மகத்துவத்தை உணரலாம். இது பற்றி நம் தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் மார்கழி மாதத்திற்கே உரிய 'விஸ்வரூப தரிசனம்' பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் தளத்தில் அளித்த பதிவு தான் இது. புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சற்று மெருகூட்டி

Read More

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

சிவபுண்ணியக் கதைகள் உணர்த்தும் நீதிகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பவை. சிந்திக்க வைப்பவை. பாவங்களை பொசுக்க இப்படி ஒரு மார்க்கம் உண்டா என்று வியக்க வைப்பவை. எத்தகைய சிறு செயல்கள் கூட சிவபுண்ணியம் தரும் என்பதை உணர்ந்து பொருளுக்கு அலைந்திடும் இந்த வாழ்க்கையில் இடையிடையே அருளையும் தேடிக்கொள்ளவேண்டும். நாளை ஒரு அமயம் சமயம் என்றால் உங்களுக்கும் சரி உங்கள் பிள்ளைகளுக்கும் சரி உதவிக்கு வரப்போவது இந்த சிவபுண்ணியம் தான். மேலும் சிவபுண்ணியத் தொடரை

Read More

‘அபாயம்’ என்று வந்தவனுக்கு கிடைத்த ‘அபயம்’ – உங்களுக்கும் கிடைக்கும்!!

"கடந்த காலத் தவறுகள் என் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. நானும் மற்றவர்கள் போல நிம்மதியாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன். அனைவர் முன்னிலையிலும் ஜெயித்துக் காட்ட விரும்புகிறேன்... எனக்கு வாய்ப்பிருக்கிறதா? என்னால் முடியுமா?" இந்த சந்தேகம், பரிதவிப்பு பலருக்கு உண்டு. அவர்களுக்குத் தான் இந்தப் பதிவு. மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து சிறை வைத்தான் இலங்கை வேந்தன் இராவணன். அவன் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை எடுத்துக் கூற துணிவின்றி அவனது ராஜசபையில்

Read More

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

இன்று ஆங்கிலத் தேதிப்படி நம் பிறந்தநாள். பொதுவாக தமிழ் மாதத்தில் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்தநாளைத் தான் நாம் கொண்டாடுவது வழக்கம். அது ஆன்மாவுக்கு. இது ஊர் உலகிற்கும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும். உங்கள் வாழ்த்துகள் மேன்மேலும் இந்த எளியோனின் பணியை சிறக்க செய்யவேண்டும். அதுவே நம் பிரார்த்தனை. இன்று பெற்றோரிடம் ஆசி, ஆலய தரிசனம், பின்னர் நம் கடமை - இவை தான் நமது ஷெட்யூல். மாலை விழித்திறன் சவால்

Read More

அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!

வாழ்க்கைக்கு பிரயோஜனம் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் ஆப் / ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலோ எத்தனையோ பேரின் கருத்துக்களை நாம் பார்க்க பார்க்க நேரிடுகிறது. அமங்கலச் சொற்கள் நெகடிவ்வான வார்த்தைகள் அவற்றில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன. எந்த சூழ்நிலையிலும் அவற்றை நீங்கள் பகிரக்கூடாது உச்சரிக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம். அமங்கலச் சொற்களை மறந்தும் கூட கூறக்கூடாது என்பது குறித்து நாம் சில ஆண்டுகளுக்கு

Read More

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

'கோவில் சொத்து குல நாசம்' என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியை பலர் கூறக் கேட்டிருப்போம். அதன் பொருள் என்ன? ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா? ஒரு கதையையும் ஒரு உண்மை சம்பவத்தையும் பார்ப்போம். அம்பாளின் முத்துமாலை....  ஒரு கோவிலின் தர்மகார்த்தாவாக இருக்கும் ஒருவருக்கு அம்பாளின் முத்தாரம் மீது ஆசை ஏற்பட்டுவிடுகிறது. அதை எப்படியாவது அடையவேண்டும் என்று துடித்தவர் அதைப் போன்றே ஒரு போலி முத்துமாலையை தயார் செய்து வைத்துக்கொண்டு பொக்கிஷ அதிகாரியை தனது வீட்டுக்கு விருந்துக்கு

Read More

சுவாமியின் குறை தீர்ப்பு முகாம்!

நாட்டில் போதிய மழை பெய்து உயிர்கள் இன்புற்று வாழ திருக்கோவில்களில் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் மிக மிக முக்கியமானது பிரம்மோற்சவம். பெயரே குறிப்பிடுவது போல படைப்புக் கடவுளான பிரம்மாவே, தான் படைத்த உயிர்கள் நலமோடு வாழ இறைவனுக்கு எடுக்கும் விழாவே பிரம்மோற்சம். எனவே மற்ற எந்த விழாக்களையும் விட பிரம்மோற்சவம் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பெரிய, புராதனமான சைவ, வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறும். சமீபத்தில்

Read More

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா?  Part 1 அடுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியை பற்றி ஒரு சார்ட் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மிகவும் தீமை, இவர்களுக்கு மிக மிகத் தீமை என்றெல்லாம் சார்ட் போட்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. இதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை. இவர்கள் கிரகங்களையும் புரிந்துகொள்ளவில்லை... தெய்வத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் புரிந்துகொண்டது - மக்களின் அறியாமை மற்றும் கிரகங்கள்

Read More

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு

Read More

உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

நென்மேலி சிரார்த்த சம்ரக்ஷன பெருமாள் கோவில் பட்டர் திரு.சம்பத் பட்டாச்சாரியார் அவர்களை நமது தளத்தின் பேட்டிக்காக சமீபத்தில் சந்தித்தபோது, பல விஷயங்களை நம்மிட பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பேசியிருக்கிறோம் என்றால் எத்தனை விஷயங்களை அவர் கூறியிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அவருடைய வித்தையும், சாஸ்திர சம்பிரதாய அறிவும் நம்மை வியக்க வைத்தன. அப்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தை கேட்டோம். "குலதெய்வ வழிபாடு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு

Read More

சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் இருக்கும் நென்மேலி என்கிற கிராமத்தில் சிரார்த்த சம்ரக்ஷண பெருமாள் என்று ஒரு தலம் உண்டு. பித்ரு காரியம் செய்ய கயைக்கு ஈடான தலம் இது. ஆதரவற்றவர்களுக்கு யார் வேண்டுமானால் சிரார்த்தம் செய்யலாம். பெண்களும் இங்கு பித்ரு கர்மாக்களை செய்யலாம். இந்த ஆலயம் பற்றி ஏற்கனவே நம் தளத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவு வெளியானது. இவ்வாலயத்தை மிகச் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வரும் திரு.சம்பத்

Read More

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு!

நம் வாசகர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் நாட்டின் இரு பெரும் இதிகாசங்களான மஹாபாரதம், இராமாயணம் இரண்டையும் படிக்கவேண்டும். இவற்றில் இல்லாத நீதிகளே இல்லை. ராமாயணம் மஹாபாரதம் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல. உண்மையில் நடைபெற்றவை. (இதிகாசம் என்றாலே இப்படி நடந்தது என்று தான் பொருள்!) ராமாயணமும் மஹாபாரதமும் நடைபெற்ற பல இடங்கள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறன. சரி விஷயத்திற்கு வருகிறோம்... மஹாபாரதத்தில் வரும் அற்புதமான கருத்தாழம் மிக்க சம்பவம் ஒன்றை

Read More