Home > ஆலய தரிசனம் (Page 8)

மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

மார்கழி மாத மகத்துவம் பத்தி பதிவு போட்டாச்சு. போட்டா போதுமா? நாம அது மாதிரி நடந்துக்கணும் இல்லையா? அதுனால் எப்படியாவது காலைல 4.30 மணிக்கு எழுந்துருச்சு குளிச்சு ரெடியாகி விஸ்வரூப தரிசனத்துக்கு போய்டணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன். கம்பெனிக்கு யாரை கூப்பிடுறது? யாராவது ஒருத்தர் வந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. எதேச்சையா நண்பர் மாரீஸ் கண்ணன் கிட்டே நைட் பேசும்போது, (நந்தம்பாக்கம் கோவிலுக்கு நம்ம கூட வந்தாரே அவரு தான்!) மார்கழி பதிவு பத்தி பேச்சு

Read More

எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருநீர்மலை. இத்தலத்தில் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார் என்பது விசேஷம். பல்லாவரத்திலிருந்து பத்தே நிமிடங்களில் இந்த கோவிலுக்கு சென்றுவிடலாம். இப்போதைக்கு புகைப்படங்கள் சிலவற்றுடன் எனது புலம்பலை தந்திருக்கிறேன். விரைவில் முழு பதிவு. ஞாயிறு காலை தூக்கம் தொலைத்து துயில் எழுந்து கதிரவனை கண்டு களிப்புற்று வருணனும் வந்து வாழ்த்து தெரிவிக்க நண்பர்களின் இன்முகம் கண்டு புன்முறுவல்

Read More

சென்னையில் உள்ள ஒரு மலைக்கோட்டை – திருநீர்மலை ஆலய தரிசனத்திற்கு நம்முடன் வர விருப்பமா?

திருச்சி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? மலைக்கோட்டையின் கம்பீரமும் அதன் உச்சியில் குடிகொண்டிருக்கும் உச்சிப்பிள்ளையாரும் தானே? திருச்சி சென்றால் மலைக்கோட்டைக்கு செல்லாதவர்கள் அரிதினும் அரிது. மலைகோட்டையின் மீதிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த திருச்சியின் அழகையும் அதன் பசுமையையும் ரசிக்கலாம். சென்னையிலும் அதே போன்று ஒரு மலைக்கோட்டை இருக்கிறது தெரியுமா? சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே அமைந்துள்ள அருமையான மலைக்கோவிலான திருநீர்மலை தான் அது. திருநீர்மலை என்றால் பலர் ஏதோ சைவத் திருத்தலம் அல்லது முருகனின் திருத்தலம்

Read More

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

கோவிலுக்கு போறது பத்தி நாம பதிவெல்லாம் போடுறதுனால நாம முதல்ல கரெக்டா இருக்கணும்னு இப்போ ரெகுலரா கோவிலுக்கு போய்க்கிட்டுருக்கேன். அதுவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கட்டாயம் ஏதாவது பாரம்பரியம் மிக்க பழமையான கோவிலுக்கு செல்வதை இப்போ வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டேன். ஆகையால தீபாவளி அன்னைக்கு நிச்சயம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் பண்ணிடனுங்கிறதுல உறுதியா இருந்தேன். நெருங்கிய நண்பர்கள் பலர் தீபாவளிக்காக அவங்கவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. சென்னையிலிருந்த

Read More

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் பொதுமக்கள் அதிகம் அறிந்திராத நூற்றுக்கணக்கான அழகிய கோவில்கள் இருக்கின்றன. இத்தகைய கோவில்களுக்கு சென்று அந்த அனுபவத்தை ஒரு நான்கு பேரிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் செல்ல ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம். இவைகளில் ஆகர்ஷன சக்தியை தங்களுக்குள் கிரகித்துக்கொண்டு சிறந்த பரிகாரத் தளங்களாக  விளங்குபவைகளும் இருக்கின்றன. விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ போவதற்கு பல முறை யோசிக்க வேண்டியுள்ளது.

Read More

விஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்!

சென்னையில் வடபழனி என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் கோவில் தான். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் பலர் மறக்காமல் செல்லும் கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. ஆனால் அதே வடபழனியில் தொன்மையான சிவாலயம் ஒன்று இருப்பது பலருக்கு தெரியாது. சென்னையில் உள்ள அதிகம் அறியப்படாத கோவில்களில் இதுவும் ஒன்று. வடபழனி சிக்னல் அருகே நூறடி சாலையை ஒட்டி அமைந்துள்ளது சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் சிவன் கோவில். வியாக்ரபாத முனிவர் பல புனித

Read More

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

[dropcap]இ[/dropcap]ந்த தளத்தில் 'ஆலய தரிசனம்' பகுதிக்கு இது ஒரு தொடக்கம் தான். அடுத்தடுத்து நமது ஆலய தரிசனங்கள் குறித்த அனுபவப் பதிவுகள் (புகைப்படங்களுடன்) வரவுள்ளன. இந்த தொடக்கப் பதிவில் மனதில் உள்ளவற்றை வடித்திருக்கிறேன். இவற்றை சீர்படுத்தி தேவையில்லாதவற்றை தவிர்த்து, இன்னும் சுவாரஸ்யமாக சுவையாக எழுதக் கூடிய நடை போகப் போகத் தான் கைகூடும் என்று நினைக்கிறேன். இந்த பதிவு மற்றும் நடை குறித்த உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன். இந்த பதிவின் நோக்கமே இதை படிக்கும் உங்களுக்கும் இத்தகைய செயல்களை

Read More

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….

ஆலயங்கள் என்பவை ஆண்டவனின் அருள் கொட்டிக்கிடக்கும் மகாசமுத்திரம் போன்றவை. அவற்றில் இறங்கி முத்துக்களை அள்ளிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். கிளிஞ்சல்களை வாரிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். வெறும் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். சமுத்திரம் கேட்டதை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது எனும்போது வெறும் கையுடன் திரும்புவது யார் குற்றம்? "கோவில்களுக்கு சென்றேன்; ஆனால் பலனில்லை" என்று புலம்புவர்களுக்கு பதில் இது தான். எதற்குமே ஒரு முறை இருக்கிறது சாரே.... நம்மில் பலர் கோவில்களுக்கு செல்லும்

Read More

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம். ---------------------------------------------------------------------------------------- நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா

Read More

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்!

இது இது தான் இந்தியாவின் பெருமை. உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளும் முன்னேறிய நாடுகளும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட விஷயத்துக்கு பெருமைப்பட நம்மால் மட்டுமே முடியும். கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் ஒருவானால் மட்டுமே தர முடியும். நண்பர் ராஜா அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து... (more…)

Read More