Home > பக்திக் கதைகள் (Page 3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

சிவபுண்ணியக் கதைகள் தொடர் நம் தளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நமது பொறுப்பு அதிகரித்துவிட்டது போன்றதொரு உணர்வு. சாதாரணமாக நாம் ஒவ்வொரு பதிவையும் ஒரு தவம் போலக் கருதி தான் தயார் செய்வோம். அப்படியிருக்கையில் 'சிவபுண்ணியம்' பற்றிய தொடர் என்றால் நாம் எடுக்கும் சிரத்தையை கேட்கவேண்டுமா? அவனருளாலே அவன் தாள் வணங்கி! இந்த கதை சற்று வித்தியாசமானது. சிவபுண்ணியம் அதை செய்பவருக்குத் தான் சென்று சேரும் என்றில்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும்

Read More

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

சிவபுண்ணியமும் கர்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கர்மாவை கரைக்கவும் உடைக்கவும் வல்லது சிவபுண்ணியமே என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். முதலில் 'சிவபுண்ணியம்' என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள அது குறித்த முழுமையான புரிதல் தேவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாவத்தை உடைத்து தூள் தூளாக்கிவிடும். அதே நேரம், கடுகளவு சிவநிந்தனை கூட மலையளவு புண்ணியத்தை தகர்த்து நரகில் தள்ளிவிடும். எனவே இது குறித்த முழு புரிதல் வேண்டும். அப்போது தான் அளவற்ற

Read More

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

நமது 'கர்மா Vs கடவுள்' தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. 'ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது' என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் 'அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை' என்று உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள்

Read More

சிரவணம் சர்வார்த்த சாதகம்!

ஆலய தரிசனம் தொடர்பாக நாம் அளிக்கும் பதிவுகளின் முக்கியத்துவம் யாருக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ இது போன்ற ஆலயங்களுக்கெல்லாம் செல்லவேண்டும் என்கிற அவா இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் செல்ல முடியாதவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மேலும் தாய்நாட்டைவிட்டு பல்வேறு காரணங்களுக்காக எங்கோ ஒரு தூரதேசத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு அதை விட அதிகம் தெரிந்திருக்கும். அவர்களை தவிர, மற்றவர்களும் இது போன்ற ஆலய தரிசன / அனுபவ பதிவுகளின் முக்கியத்துவத்தை

Read More

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

நமது தளத்தின் முக்கிய பணிகளுள் ஒன்று கோ சம்ரட்சணம் என்பதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். கோ-சம்ரட்சணம் என்கிற வார்த்தை பரந்து விரிந்த ஆழமான பொருளை உடையது. பசுவுக்கு உணவளிப்பது மட்டுமே கோ-சம்ரட்சணம் ஆகிவிடாது. நமது தளம் ஆற்றிவரும் பல்வேறு கோ-சம்ரட்சணம் தொடர்பான பணிகளை கொண்டு வாசகர்கள் அதை உணரலாம். கலியுகத்தில் தீமைகள் மலிந்திருக்கும் சூழ்நிலையில் கோ-சம்ரட்சணமானது கைமேல் புண்ணியத்தை தரக்கூடிய ஒரு பரம ஔஷதம். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

Read More

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க பலர் விரும்பினாலும் அதன் கடுமையை நினைத்து அஞ்சுகிறார்கள். நாம் ஏற்கனவே பல முறை பல பதிவுகளில் சொல்லியிருக்கிறோம், சிவராத்திரி அன்று உணவு எதுவும் உட்கொள்ளாமல் வயிற்றை காயப்போட்டு கண் விழித்தாலே அதற்கு பலன் உண்டு என்று. அது எத்தனை உண்மை என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட கதையை படியுங்கள்... சிவராத்திரி அன்று கண்விழித்து, தூக்கம் துறந்த திருடனின் கதை - சிவராத்திரி விரத மகிமை! அவந்தி மாநகரில் சிவபக்தியும் ஆச்சாரமும் ஞானமும்

Read More

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும். சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ

Read More

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

இன்றைக்கு பரிகாரங்கள் என்பவை மிகவும் பரவலாக பேசப்படுகின்றன. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து பரிகாரங்களின் தன்மையும் அமைகிறது. பல பரிகாரங்கள் தொன்று தொட்ட காலம் முதல் நிலவி வருபவை. கேட்கும்போதே தலை சுற்றும். அனைத்து சௌகரியங்களும் வாய்க்கப்பெற்று நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி படைத்தோருக்கும் செல்வந்தர்களுக்கு இதெல்லாம் மிகச் சுலபம். ஆனால் வாழ்க்கையே நித்தம் நித்தம் போராட்டம் என்றிருக்கும் சராசரி மனிதர்கள் எங்கே போவார்கள் எப்படி இவற்றை செய்வார்கள் என்று சிலருக்கு தோன்றலாம். நிச்சயம் முடியும்.

Read More

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

சமீபத்தில் அவிநாசி சென்று வந்தது முதல், அவிநாசி திருத்தலம் நமது வாழ்க்கை கோவிலாக மாறிவிட்டது என்று நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். சிவராத்திரி ஸ்பெஷலாக  (மார்ச் 7, 2016 மகா சிவராத்திரி) அவிநாசி அற்புதங்களை தொடராக தருவதாக கூறியிருந்தோம். இதோ தொடரின் முதற்பகுதி. இதுவரை நாம் பல தேவாரப் பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு தலமும் ஒன்றுக்கொன்று அழகில் விஞ்சி நிற்கும். ஆனால் அவிநாசி அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டதொரு தலம். ======================================================== Also

Read More

திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!

நமது 'காலடியை நோக்கி ஒரு பயணம்' தொடரை மீண்டும் தொடர விருக்கிறோம். அடுத்து நாம் சந்திக்கப்போவது பால சங்கரரின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை மகாலட்சுமி தங்க நெல்லி மழை பொழிந்த இடம். அதாவது 'ஸ்வர்ணத்து மனை'. (இந்த இடத்திற்கு சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை அன்று நாம் சென்று வந்தது நினைவிருக்கலாம்!) ஆனால், சரித்திரத்தில் திருமகள் ஸ்வர்ண மழை பொழிந்த வேறு இரண்டு சம்பவங்களும் உண்டு. அவற்றை பார்த்துவிட்டு அதன் பிறகு

Read More

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்!

நண்பர் ஒருவர் தைப்பூசத்திற்கு எதுவும் பதிவளிக்கவில்லையா முருகனை மறந்துவிட்டீர்களா என்று விளையாட்டாக கேட்டார். 'என்ன முருகனை மறப்பதா? பிறவிப் பயனையே முருகன் புகழை எழுதவல்லவா ஒப்படைத்திருக்கிறேன். ஒரு நாள் அவனை மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்' என்றோம் சீரியஸாக. சொற்பொழிவுகளில் குகனின் பெருமையையும் குருவின் பெருமையையும் பேசிவிட்டு பிறகு தான் சொற்பொழிவையே துவக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். 'வள்ளிமலை அற்புதங்கள்' தொடரில் அடுத்த அத்தியாயத்தை இன்று தைப்பூச ஸ்பெஷலாக அளிக்க நினைத்திருந்தோம். ஆனால் அந்த

Read More

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

சேரமான் பெருமான் சுந்தரரை பின்தொடர்ந்து கைலாயம் சென்ற சம்பவம் பல நீதிகளை உணர்த்தும் - அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய - ஒன்று. சுந்தரர் பல்வேறு தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூரில் (இன்றைய அவினாசி) முதலை விழுங்கிய பாலகனை மீட்டுக் கொடுத்துவிட்டு தனது நண்பர் சேரமான் பெருமானை காண திருவஞ்சைக்களம் சென்றார். (Before proceeding please read : பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்! ) கற்றாரை காமுறுவர் என்பது போல, சேரமான் பெருமான்

Read More

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

தீபாவளியன்று குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகருக்கு நமது தளம் சார்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது நினைவிருக்கலாம். அது பற்றிய பதிவை அளிக்க நினைத்து, எழுத ஆரம்பித்தோம். பிள்ளையாரின் பெருமையை விளக்கும் புராணக் கதை ஒன்றை அளித்துவிட்டு அதன் பிறகு விநாயகருக்கு நடந்த அபிஷேகத்தை விளக்கலாமே என்று இந்த கதையை எழுத ஆரம்பித்தோம். கதை சற்று பெரிதாக வந்துவிட்டதால் இதை தனிப்பதிவாக அளிக்கிறோம். திருமுறை விநாயகருக்கு நடைபெற்ற அபிஷேகம் தனிப்பதிவாக அடுத்து

Read More

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள். ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர்

Read More