Home > மகா பெரியவா (Page 7)

தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!

மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் சர்வசாதரணமாக நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம் அநேகம். அவ்வாறு அவர் நிகழ்த்திய அற்புதம் ஒன்றை தந்திருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே இதை கேள்விப்பட்டிருந்தாலோ அல்லது படித்திருந்தாலோ மீண்டும் ஒரு முறை படியுங்கள். விஷயம் இருக்கிறது. திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம்.

Read More

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்; பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்!

நாளை முதல் நம் அனைவரது தியானம் துவங்குகிறது. குருமுகமாக தியானத்தை துவங்கவேண்டும் என்று கருதுபவர்களுக்கு, இருக்கவே இருக்கிறார் மஹா பெரியவா. அவரை மானசீகமாக பிரார்த்தித்துவிட்டு, உங்களை அவரிடம் ஒப்படைத்துவிட்டு (உங்கள் குறைகளை களைவதற்கு) தியானத்தை துவக்குங்கள். ஆமையானது கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும். பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம், இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம். குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே,

Read More

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் இன்று. ஆம்... ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும். பெரியவரின் அந்து பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம். 1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை

Read More

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

மஹா பெரியவா அவர்கள் மேல் நம் வாசகர்களுக்கு பேரன்பும் அளவிடமுடியாத பக்தியும் இருப்பது நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு சில பல காரணங்களினால் சில சந்தேகங்கள் இருப்பதும் நமக்கு தெரியும். அது பற்றி தனியாக ஒரு பதிவெழுதி நாம் இயன்றளவு  தெளிவுபடுத்திவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள இந்துமதம்' நூலை தற்செயலாக படித்துக்கொண்டிருந்தோம். அந்நூலில் மஹா பெரியவரை பற்றி பல இடங்களில் கவியரசு கண்ணதாசன்

Read More

“கனிவுடன் கடமையை செய்… குருவருளும் திருவருளும் தேடி வரும்!”

சமீபத்தில் நாம் படித்து உருகிய, கலங்கிய, மஹா பெரியவா தொடர்புடைய மகிமை இந்த நிகழ்ச்சி. நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரண புருஷரை நமக்கு அடையாளம் காட்டுகிறார் குரு இந்த சம்பவத்தின் மூலம். இவனுக்கு எதற்கு பிரசாதமும் பூமாலையும்? சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர். ஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சி மடத்துக்கு வந்தார். அதற்கு முன் அவர் மடத்துக்கு வந்தது இல்லை. ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க அவருக்கு ஆசை இருந்தது. வந்தார். ஆரஞ்சுப்

Read More

குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

மஹா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றிய படிக்கும்போது நம்மையுமறியாமல் கண்களில் நீர் கசிந்துவிடுவதுண்டு. எனக்கு பலமுறை அது போல ஏற்பட்டிருக்கிறது. நம் வாசகர்களுக்கும் அப்படியே. ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அந்த கருணைக் கடல் அருள் மழை பொழிந்தது, பொழிந்துவருகிறது. அவரையே கதி என்று சரணடைந்த பக்தர்களுக்காக பல நேரங்களில் இறைவனிடம் மன்றாடி பல மகத்தான விஷயங்களை சாதித்து தந்துள்ளார். இத்தனைக்கும் அந்த மகான் தனக்கென்று இறைவனிடம்

Read More

“அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா?”

கருணைக் கடல் காஞ்சி மஹா பெரியவா தான் ஸ்தூல சரீரத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போது அதிஷ்டானத்தில் இருக்கும்போதும் சரி... ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து வருகிறார் என்பதை உணர்த்தும் மற்றோர் நெகிழ்ச்சியான சம்பவம் இது. மகா பெரியவா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நம்மை நெக்குருகி கண் கலங்க வைப்பது தான் என்றாலும் இது ஒரு படி மேலே. படியுங்கள். நீங்களே புரிந்துகொள்வீர்கள். காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள்

Read More

குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்!

இந்த உலகில் நம்முடைய அறிவுக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், கண்ட்ரோலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோ தினம் தினம் நடக்கின்றன. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது. நம் கையில் எதுவும் இல்லை. காலத்தின் கைகளில் நாம் ஒரு பொம்மை. அவ்வளவே. பொம்மை எப்படி இயங்குகிறது என்பது அதன் கர்மாவை பொருத்தது. "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்று நீங்கள்  சொன்னால் கூட உண்மை இது தான். எனவே

Read More

மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…

இரண்டு நாள் கரூர் பயணத்தில் எக்கச்சக்க அனுபவங்கள். எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. கருவூரார் சன்னதி மற்றும் பசுபதீஸ்வரர் - அலங்காரவல்லி அம்பாளின் தரிசனம், சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளின் சமாதி என்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆத்மானுபவம். ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக எத்தனை விரைவில் பகிர்ந்துகொள்ளமுடியுமோ அத்தனை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். இவை தவிர, மஹாளய ஸ்பெஷல் உள்ளிட்ட வேறு பல விஷயங்கள்

Read More

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

பிறந்த நோக்கம் அறியாது எது எதையதையோ செய்து வாழ்க்கையின் பெரும்பகுதியை தாம் வீணடிக்க நேர்ந்ததாக கண்ணதாசனுக்கு தமது ஆரம்ப கால செயல்பாடுகள் குறித்து ஒரு மனப்புழுக்கம் இருந்து வந்ததுண்டு. ஆம்.... வையம் தழைக்க வந்த அந்த புனிதன் வழி தவறி எங்கெங்கோ அலைந்தான். கோவில் நந்தவனத்தில் துள்ளி குதித்து விளையாட வேண்டிய அந்த மான் குப்பை மேடுகளிலும் இடுகாடுகளிலும் அலைந்தது. ஆண்டவன் அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பானா? இதோ கண்ணதாசன் தன்னிலை உணர்ந்து ஞானத்தின் பக்கம்

Read More

நடக்க முடியாது இருந்த குழந்தையை நடக்க வைத்த தெய்வம்!

கடும் அலுவல் காரணமாக கடந்த சில நாட்களாக பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளபடியால், கூடுதல் நேரம் செலவிட்டு அதை முடிக்க வேண்டியிருக்கிறது. வார இறுதியில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. அதற்குள் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் அளிக்க முயற்சிக்கிறேன். பதிவெழுத முடியாவிட்டாலும் உங்கள் அனைவருக்கும் சௌக்கியத்தையும் சந்தோஷத்தை தரக்கூடிய செயல் ஒன்றை கடந்த வார இறுதியில் நண்பர்களின் உதவியோடு செய்திருக்கிறோம். 'பிரேமவாசம்' - ஆதரவற்ற, ஊனமுற்ற மற்றும்

Read More

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

ஆன்மீகத்தில் மகா பெரியவா அவர்கள் ஒரு என்சைக்ளோபீடியா என்பது நாம் அறிந்ததே. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவர் விளக்கம் தராத சந்தேகங்களே இல்லை. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா கூறியதாக திரு.இந்திரா சௌந்தர்ராஜன் 'தீபம்' ஆன்மீக இதழில் கூறியதை நண்பர் பால்ஹனுமானின் தளம் வாயிலாக அறிந்துகொண்டதை  இங்கு தருகிறேன். நிச்சயம் இதை அனைவரும் படிக்கவேண்டும். பகிர்ந்துகொள்ளவேண்டும் பயனடையவேண்டும். அவரவர் குல தெய்வத்தையும் பித்ருக்களையும் ஆராதிப்போம். நலம் பெறுவோம். ========================================= குல தெய்வ வழிபாடு குறித்து

Read More

மகா பெரியவாவும் தமிழ் புத்தாண்டும்! MUST READ!!

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டை எல்லோரும் வரவேற்று கொண்டாடும் இந்த தருணத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா அவர்கள் தாம் வாழ்ந்தபோது சங்கர மடத்தில் தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடினார் என்று பார்ப்போமா? முக்கிய நாள் மற்றும் விசேஷங்களின்போது நாம் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அதை வைத்தே தெரிந்துகொள்ளலாம். மகா பெரியவா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விதத்தை பற்றி படிக்கும்போது கடந்த ஆண்டுகளில் நாம் புத்தாண்டுகளை

Read More

“கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!” மதயானையை அடக்கிய மகாபெரியவா!

மகாபெரியவாவின் அற்புதங்களை நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம். அள்ள அள்ள குறையாத தங்க சுரங்கத்தை போல, அவரது மகிமைகள் வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் ஒளிந்திருக்கும். திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த விஷயத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். கீழே காணும் இந்த சம்பவம் உணர்த்தும் பாடத்தை கட்டுரை ஆசிரியர் மிக அழகாக இறுதியில் விளக்கியிருக்கிறார். பொதுவாக யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதை அடக்குவது அத்துணை சுலபமல்ல. சர்வ நாசம் செய்துவிட்டு அதுவாக தணிந்தால்

Read More