Home > உழவாரப்பணி (Page 2)

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது உழவாரப்பணி தொடர்பான பதிவுகள் இனி இடம்பெறும். இதுவரை நான்கு கோவில்களில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவுகள் பாக்கியிருக்கிறது. பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில், ஆப்பூர் நித்தியகல்யாணப் பெருமாள், போரூர் பாலமுருகன் கோவில் மற்றும் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவில். இவற்றில் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. ஏனைய கோவில்களும் ஒவ்வொன்றாக இனி அளிக்கப்பட்டுவிடும். இரண்டு சிறப்புக்கள்! எந்த உழவாரப்பணியிலும் இல்லாத வகையில் இந்த பணியில் இரண்டு

Read More

பத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்!

எழுவகைப் பிறப்புக்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனிச் சிறப்பு உண்டு. பாவங்களை அனுபவித்துக் அவற்றை கழிப்பது மட்டுமின்றி அவற்றை அடியோடு துடைத்தெறியும் வாய்ப்பு இந்த மனித ஜென்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கருதித்தான் ஆண்டவன் மறுபடியும் மறுபடியும் நமக்கு ஜென்மத்தை அளிக்கிறான். ஒருவகையில் இது தவறு செய்கிறவனை திரும்ப திரும்ப மன்னிப்பது போலத் தான். எனவே கிடைப்பதற்கரிய இந்த

Read More

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

எத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் 'மங்கள வாத்தியம்' என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு.  சிவாலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு. சுப நிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க

Read More

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு நமது தளம் சார்பாக எளிய கைங்கரியங்கள் செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. வேதம் படிப்பதே அரிதாகி வரும் ஒரு சூழ்நிலையில் வேதம் படிக்கும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக அளித்து சந்தோஷப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தோம். கூடவே இன்னொரு ஆசையும் மனதில் அரும்பியது. நாம் கண்டு ரசித்த 'ஜகத்குரு ஆதிசங்கரர்' என்கிற படத்தை ஏதாவது ஒரு பாடசாலை மாணவர்களுக்கு

Read More

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

சென்ற ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக நங்கநல்லூரில் உள்ள 'நிலாச்சாரல்' என்னும் பார்வைத் திறன் சவால் கொண்ட மாணவிகள் இல்லத்தில் அம்மாணவிகளுக்கு தோடு, மாலை உள்ளிட்ட தீபாவளி பேன்ஸிகிட் மற்றும் புத்தாடைகள்  தானமளித்து கொண்டாடியது நினைவிருக்கலாம். மிகுந்த மனநிறைவை நமக்கும் நமது வாசகர்களுக்கும் தந்தது அது. இந்த ஆண்டும் தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அப்போது தோன்றியது தான் இப்போது நாம் சொல்லவிருக்கும் கைங்கரியம். வேதம் படிப்பவர்களோ

Read More

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

அறங்களில் மிகச் சிறந்ததும் பெரியதும் கோ-சம்ரோக்ஷனமே ஆகும். அம்பிகை வளர்த்த அறங்களில் இதுவும் ஒன்று. பசு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். மேலும் பசுவின் மூச்சுக் காற்று இருக்கும் இடத்தை எவ்வித தோஷங்களும் அண்டாது. தினமும் எண்ணற்றோர் வந்து செல்லும் ஆலயத்திற்கு, தோஷங்கள் ஏற்படுவது இயற்கை. அப்படி ஏற்படும் தோஷங்களை அக்கோவிலில் உள்ள பசுவானது போக்கிவிடுகிறது. எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு மட்டுமே இருக்கிறது.

Read More

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

கோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணி மற்றும் அது தொடர்பாக நடைபெற்ற  மெய்  சிலிர்க்க வைக்கும் நிகழ்வு தொடர்பான பதிவு இது. பொறுமையாக, முழுமையாக படிக்கவும். இராம புத்திரர்களான லவ குசர்கள் பூஜித்த கோவில் இது. இந்த ஆலயத்தை பற்றிய விரிவான பதிவுக்கு http://rightmantra.com/?p=10169. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்த கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெற்றது.  நமக்கு மிகவும் திருப்தியையும் ஆத்ம சந்தோஷத்தையும் தந்த உழவாரப்பணி இது. முதல் முறை

Read More

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

சென்ற ஞாயிறு குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நம் தளம் சார்பாக நடைபெற்ற உழவாரப்பணி இனிதே நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரம் தான் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றதால் இந்த வாரம் எத்தனை பேர் வருவார்கள் என்கிற ஒரு வித பதட்டத்தில் இருந்தோம். ஆனால், சுமார் 12 பேர் வந்திருந்து கைங்கரியத்தை சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்தனர். எல்லாம் அவன் செயல். மணிமண்டபம் சிறப்பான முறையில் பரமாரிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற இடங்களில்

Read More

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நம் தளத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் பல்வேறு அறப்பணிகள் நடைபெற்று வந்தாலும் அவற்றில் மிக முக்கியமானதாக நாம் கருதுவது கோ - சம்ரோக்ஷனம் எனப்படும் பசுக்களின் சேவையை தான். கர்மாவை உடைப்பதில் கோ-சம்ரோக்ஷனத்தின் பங்கு மிக மிக பெரியது. அல்லவை அனைத்தையும் நீக்கி நல்லவற்றை தரவல்லது. நமது அக்கவுண்டில் நாளுக்கு நாள் சேரும் மிகப் பெரும் தொகை போல, நமது புண்ணிய கணக்கில் நாளுக்கு நாள் புண்ணியம் சேர்க்கும் ஒரு

Read More

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஏப்ரல் 27  ஞாயிறு அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். சென்ற முறை திருநீர்மலையில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நம் தளம் சார்பாக 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நம் உழவாரப்பணி நடைபெற்றது. உழவாரப்பணி வெகு சிறப்பாய் நடைபெற்றது. நண்பர்கள் திரளாக வந்திருந்து கைங்கரியத்தை நல்லமுறையில்

Read More

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

கடந்த ஞாயிறு பிப்ரவரி 23 அன்று, நமது தளம் சார்பாக பூண்டி மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணி மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது உழவாரப்பணிக்கு வழக்கமாக வரும் சில அன்பர்கள் வரவில்லையென்றாலும் வேறு சிலரை இறைவன் அனுப்பி வைத்து பணியை சிறப்பாக நடத்திக்கொண்டான். நாம் திட்டமிட்டபடி, ஒட்டடை அடிப்பது, தரையை பெருக்கி அலம்பி விடுவது, பழுதடைந்த பல்புகளை மாற்றி புதிய பிட்டிங்குகளை நிறுவுவது,

Read More

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியின் இன்றைய நிலை… உழவர் திருநாள் SPL!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (குறள் 1031) உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் தான் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. "அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும் பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும் மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும் உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே" என்று வேள்வி முதல் கல்வி வரை, இயற்கை சிறப்பும், அனைத்தும் உழவெனும் உழைப்பின் சிறப்பாலே

Read More

‘சுந்தரகாண்டம்’ நூல் தொகுப்பு கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு….

சுந்தரகாண்டம் நூல் கேட்டிருந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பியாகிவிட்டது. இன்று அல்லது அடுத்த வேலை நாள் அவர்களுக்கு கிடைக்கக்கூடும். நாம் சுந்தரகாண்டம் அனுப்பி அதை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்துவருபவர்கள் பலரது வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அது பற்றி நாம் ஓரிரு பதிவுகள் கூட அளித்தது நினைவிருக்கலாம். வாசகர்களுக்கு 'சுந்தரகாண்டம்' நூலை அனுப்புவதை ஒரு தொண்டாகவே செய்துவருகிறோம். அவரவர் சௌகரியப்படி படிக்க மூன்று நூல்கள் (வால்மீகி, கம்பராமாயணம், மற்றும் பாக்கெட் சைஸ்) ஆகிய மூன்று வடிவில்

Read More

இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

குன்றத்தூர் முருகன் நமக்கு மிகப் பெரிய பேறு ஒன்றை அளித்திருப்பதாகவும் அதை அடுத்த பதவில் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன் அல்லவா? இதோ அந்த பதிவு. கந்தசஷ்டியை முன்னிட்டு சமீபத்தில் குன்றத்தூருக்கு முருகன் கோவிலுக்கு சென்று வந்ததில் அங்கு விளக்குகள் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக தெரிந்தது. (கோவில்களுக்கு அரசு தனது கோட்டாவில் தரும் சொற்ப எண்ணை உண்மையில் எந்தக் கோவிலுக்கும் ஒரு வேளை விளக்கேற்ற கூட போதாது.)  முருகப் பெருமான் ஏன் நம்மை

Read More